அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 30, 2011

ஆஸ்திரேலியாவில் கல்வி !


ஆஸ்திரேலிய இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின்றன. அங்கும் படிக்க அடிப்படையாக ஐ.ஈ.எல்.டி.எஸ். ( I E L T S ) என்னும் ஆங்கிலத் திறனறியும் தகுதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் சேர்க்கை நடைபெறுகிறது. சிலவற்றில் ஜுலை, செப்டம்பர் மாதங்களிலும் நடத்தப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள் மிகக் குறைவு.


முழு விபரங்களறிய உதவும் முகவரி :


IDP Education Australia

28, Crystal Lawn

Wallace Garden 20, Haddows Road 1 Street

Nungambakkam, Chennai - 600 006

Phone: 28233222, 28234932, 28226450, 28204057


மேலும் http://www.india.idp.com/ என்ற வலைதளத்திற்கு சென்று தகவல்கள் அறியலாம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் IDP’s Australian Education Fair நடைபெற உள்ளது. இவை அடுத்த ஆண்டு 31-01-2012 முதல் 15-02-2012 வரை நடைபெறும். இதில் சென்னையில் 11-02-2012 அன்றும், கோவையில் 15-02-2012 அன்றும் நடைபெறும்.

குர்ஆனுடன் முரண்படும் ஸஹீஹான (அறிவிப்பாளர் அடிப்படையில்) ஹதீஸ்களை பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?


குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற ஒரு புது விதியை பிஜே உருவாக்கிவிட்டார் என்று ஹதீஸ் கலை என்றால் என்ன என்பதை அறியாத சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை எவ்வாறு அணுகுவது என்பதை பிஜேவை விட தெளிவாக முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த அறிஞர்களின் கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளது.

பிஜே ஹதீஸ்களை மறுத்துவிட்டார் என்று விமர்சனம் செய்யும் யாரும் பிஜே மறுத்துள்ள ஹதீஸ்களை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது (தேவைப்பட்டால் ஹதீஸ்களின் பட்டியல் வெளியிடப்படும்). ஹதீஸ்களின் பட்டியலை வெளியிட்டால் பிஜே ஹதீஸ்களை மறுக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களின் உண்மை முகம் (ஹதீஸ்களை மறுக்கும் முகம்) தெரியவரும்.

இதற்கு விமர்சனம் செய்யும் சகோதரர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.


மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் புத்தகங்களை படிக்கவும்:

ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

குறிப்பு:

இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இவற்றுக்கு பதில் தர விமர்சனம் செய்பவர்களுக்கு முடியவில்லை.


ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இமாம் ஷாஃபியின் கூற்று:

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

இமாம் குர்துபீயின் கூற்று:

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به.

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று:

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

இமாம் சுயூத்தியின் கூற்று:

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று:

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று:

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று:

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று:

عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று:

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

الإحكام لابن حزم ள جزء 2 - صفحة 209 ன

 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும்.

1. குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.

3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது.

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

விதியை செயல்படுத்திய மேதைகள்:

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் சரியான அறிவிப்பாளர் தொடரில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைத் தருகின்ற ஹதீஸ்களை ஏற்க மறுத்துள்ளார்கள்.

புகாரி முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்து வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இதற்காக நம்மை விமர்சிப்பவர்கள் இவர்களை வழிகேடர்கள் என்று கூற மாட்டார்கள். இந்த அறிஞர் கடைபிடித்த விதியை நாம் கடைப்பிடித்தால் நம்மை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள். பின்வரும் செய்திகளைப் படிப்பவர்கள் யார் வழிகேடர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.

இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை:

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார்.

புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை எப்படி குறை காணுகிறார் என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர்.

மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை. மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.

இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை:

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره

குர்துபீ கூறுகிறார் : கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70

ஹஜ் செய்வதற்குச் சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸைப் பின்தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தந்துள்ளார்கள்.

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்கச் சரிதான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறிப் பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது இந்த அறிஞர்களுக்கு அக்கரை இல்லை என்று பொருளா?

இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை:

இப்னு தய்மியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (4997)

وَلَوْ كَانَ أَوَّلُ الْخَلْقِ يَوْمَ السَّبْتِ وَآخِرُهُ يَوْمَ الْجُمُعَةِ لَكَانَ قَدْ خُلِقَ فِي الْأَيَّامِ السَّبْعَةِ وَهُوَ خِلَافُ مَا أَخْبَرَ بِهِ الْقُرْآنُ مَعَ أَنَّ حُذَّاقَ أَهْلِ الْحَدِيثِ يُثْبِتُونَ عِلَّةَ هَذَا الْحَدِيثِ مِنْ غَيْرِ هَذِهِ الْجِهَة

சனிக்கிழமை படைப்பதைத் துவங்கி வெள்ளிக்கிழமை முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34

வானம் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் சொல்லும் போது ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்.

இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்று இப்னு தைமியா கூறியிருப்பது இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

2. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.

وَهَذَا بَاطِلٌ لِوَجْهَيْنِ : ( أَحَدُهُمَا أَنَّ الْحَدِيثَ كَذِبٌ بِاتِّفَاقِ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ وَهُوَ مُخَالِفٌ لِلْقُرْآنِ وَالسُّنَّةِ وَالْإِجْمَاعِ ؛ فَإِنَّ اللَّهَ يَقُولُ فِي آيَتَيْنِ مِنْ كِتَابِهِ : { إنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ } …وَذَلِكَ أَنَّ اللَّهَ قَالَ : { قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا }

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4 : 48) (4 : 116) . . .

மேலும் தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39 :53) என்றும் கூறுகிறான்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னிதய்மியா பாகம் : 2 பக்கம் : 185

இப்னுதய்மியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அனுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொறுத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்து பல செய்திகளை இப்னு தய்மியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை:

சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள உலகம் படைக்கப்பட்டதைக் கூறும் ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தய்மியாவை விட ஒரு படி மேலே சென்று இட்டுக் கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு என்று இப்னுல் கய்யும் கூறியுள்ளார்.

فصل ويشبه هذا ما وقع فيه الغلط من حديث أبي هريرة خلق الله التربة يوم السبت الحديث وهو في صحيح مسلم . . . لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்துவிட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். மொத்தம் ஏழு நாட்களில் இவை படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இமாம் அல்பானியின் போங்கு :

1. இறைவா உன்னிடத்தில் முஹம்மதிற்குரிய அந்தஸ்தின் பொருட்டால் நான் உன்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதால் தான் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி இமாம் அல்பானீ அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

التوسل ள جزء 1 - صفحة 114 ன

مخالفة هذا الحديث للقرآن : ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه . . . وثبت مخالفة الحديث للقرآن فكان باطلا

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது. இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க குர்ஆனுடன் முரண்படுகிறது. . . இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுவது நிரூபணமாகி விட்டதால் இந்த ஹதீஸ் தவறாகி விட்டது.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 114

"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர்ஆன் (7 : 23)

மேற்கண்ட வசனம் கூறும் வார்த்தையை ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் கூறியதாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாக வேறொரு வார்த்தையைக் கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

2. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களது சமுதாயத்திற்காக மழை வேண்டுங்கள். ஏனென்றால் அவர்கள் (பஞ்சத்தால்) அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மழை வேண்டுமானால் அதற்காகத் தொழுகை நடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான வழிமுறைக்கும் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேளுங்கள். அவன் உங்களுக்கு மழையைத் தருவான் என்ற குôஆன் வசனத்திற்கும் இந்தச் சம்பவம் முரண்படுகிறது.

மழை வேண்டுமானால் நபியவர்களிடத்தில் சென்று கேட்கும் படி குர்ஆன் கற்றுத் தரவில்லை. மாறாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் படி சொல்கிறது. எனவே இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

التوسل ள جزء 1 - صفحة 121 ன

الثاني : أنها مخالفة لما ثبت في الشرع من استحباب إقامة صلاة الاستسقاء لاستنزال الغيث من السماء كما ورد ذلك في أحاديث كثيرة وأخذ به جماهير الأئمة بل هي مخالفة لما أفادته الآية من الدعاء والاستغفار وهي قوله تعالى في سورة نوح : { فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا . . . }

மழை பெய்ய வேண்டுமென நாடினால் மழைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து பல ஹதீஸ்களில் வந்துள்ளது. இதையே அதிகமான இமாம்கள் கடைப்பிடித்துள்ளார்கள். மார்க்கத்தில் நிரூபணமான இந்த விஷயத்திற்கு இந்தச் சம்பவம் முரண்படுகிறது. அது மட்டுமல்லாமல் (மழை வேண்டுமென்றால்) பாவமன்னிப்புக் கோர வேண்டும்; துவா செய்ய வேண்டும் என்று குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரண்பாடாகவும் இச்சம்பவம் உள்ளது.

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்''. உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். (71 : 10) என்பதே அந்த வசனம்.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 121

இமாம் புல்கீனீயின் வழிமுறை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பி விடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள்.

குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

فتح الباري ج: 13 ص: 437

وقد قال جماعة من الأئمة ان هذا الموضع مقلوب وجزم بن القيم بأنه غلط واحتج بأن الله تعالى أخبر بان جهنم تمتلىء من إبليس واتباعه وكذا أنكر الرواية شيخنا البلقيني واحتج بقوله ولا يظلم ربك أحد

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள். இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நரகம் நிரம்பும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அஸ்ஸஹீஹா பாகம் : 6 பக்கம் : 39

அறிவீனர்களின் வழிமுறையல்ல. அறிஞர்களின் வழிமுறை:

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள். இந்தத் தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.

ولهذا المعنى رد طائفة من العلماء حديث قطع الصلاة بمرور الكلب وغيره ، وقالوا: إنه مخالف للقرآن في قوله تعالى : { وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى } ளالأنعام:164ன،

நாயும், மற்றவைகளும் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்துவிடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 : 164) என்ற இறைவனுடைய கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப் பாகம் : 3 பக்கம் : 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்பட்டாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்கு பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம்.

அறிஞர்களின் பார்வை:

ஒரு ஹதீஸைச் சரிகாணுவதற்கு அறிஞர்கள் கடைப்பிடித்த வழிமுறையை நம்மை விமர்சனம் செய்பவர்கள் முறையாக அறிந்து கொள்ளவில்லை. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லையே என்று பாமர மக்கள் கேட்பதைப் போல் கேட்கிறார்கள். அறிவிப்பாளர் தொடரில் குறை இல்லாவிட்டால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடும் என்ற தவறான இவர்களின் எண்ணமே இதற்குக் காரணம். ஹதீஸ் கலை மாமேதைகள் ஹதீஸைச் சரிகாணுவதற்கு இரு வழிமுறைகளைக் கடைப் பிடித்துள்ளனர்.

1. அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது

2. அறிவிக்கப்பட்ட செய்தியிலும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனைகள் இருந்தால் மட்டுமே ஹதீஸ் சரியாகும். ஆனால் நம்மை விமர்சிப்பவர்கள் இந்த இரு நிபந்தனைகளில் முதலில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு இரண்டாவதைக் கவனிக்க மறந்து விட்டார்கள்.

ஒரு ஹதீஸில் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தால் இரண்டு நிபந்தனைகளில் முதல் நிபந்தனைக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸ் ஆகிவிடும்.. அத்துடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த ஹதீஸின் கருத்து இருக்க வேண்டும்.

1. அதன் கருத்து குர்ஆனுடன் முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.

2. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படக் கூடாது.

3. நிரூபிக்கப்பட்ட வரலாறுக்கு முரண்படக் கூடாது.

4. முரண்பாடாக பல விதங்களில் அறிவிக்கப்படக் கூடாது.

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைந்து ஹதீஸின் கருத்தில் மேலுள்ள குறைகளைப் போன்று ஏதேனும் இருக்குமானால் இது போன்ற நிலையில் அறிஞ:ர்கள் அந்த ஹதீஸிற்கு (சஹீஹுல் இஸ்னாத்) அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தி என்று மட்டுமே கூறுவார்கள். செய்தி சரி என்பதற்கு அவர்கள் அங்கீகாரத்தைத் தர மாட்டார்கள். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் விளக்கம்:

مقدمة ابن الصلاح - (ج 1 / ص 6)

السابع قولهم هذا حديث صحيح الإسناد أو حسن الإسناد دون قولهم: هذا حديث صحيح أو حديث حسن، لأنه قد يقال: هذا حديث صحيح الإسناد، ولا يصح، لكونه شاذا أو معللا " .

இது சஹீஹான செய்தி என்றோ அல்லது ஹசனான செய்தி என்றோ கூறாமல் இது அறிவிப்பாளர் தொடரில் சரியான செய்தி என்றோ அல்லது அறிவிப்பாளர் தொடரில் ஹசனானது என்றோ அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் (கருத்தைக் கவனிக்கும் போது) வலிமையான செய்திக்கு அது மாற்றமாக இருப்பதினால் அல்லது ஏதோ ஒரு குறை (அதிலே) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாமல் இருந்தாலும் இது சரியான அறிவிப்பாளர் தொடர் உள்ள செய்தி என்று சொல்லப்படும்.

நூல் : முகத்திமது இப்னிஸ்ஸலாஹ் பாகம் : 1 பக்கம் : 6

அல்குலாஸத் என்னும் நூலில் தய்யிபியின் கூற்று

 قولهم : حديث صحيح أو حسن ، وقد يصح الإسناد أو يحسن دون متنه لشذوذ أو علةا.هـ..

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

இமாம் நவவீ அவர்களின் கூற்று:

لأنه قد يصح أو يحسن الإسناد ، ولا يصح ولا يحسن لكونه شاذا أو معللاا

வலிமையான செய்திக்கு முரண்படுவதினாலோ அல்லது மறைமுகமான குறையினாலோ செய்தி சரியாகாமல் அதன் அறிவிப்பாளர் தொடர் சஹீஹ் அல்லது ஹசன் என்ற தரத்தில் அமைந்ததாக சில வேளை இருக்கும்.

நூல் : அல்இர்ஷாத்

இமாம் ஹாகிமின் கூற்று:

معرفة علوم الحديث للحاكم - (ج 1 / ص 261)

وعلة الحديث ، يكثر في أحاديث الثقات أن يحدثوا بحديث له علة ، فيخفى عليهم علمه ، فيصير الحديث معلولا ،

குறை தெரியாத காரணத்தினால் நம்பகமான அறிவிப்பாளர்கள் குறையுள்ள ஹதீஸை அறிவிப்பார்கள். எனவே ஹதீஸ் குறையுள்ளதாக மாறிவிடும். நம்பகமானவர்கள் அறிவிக்கும் செய்திகளில் குறை அதிகமாக இதனால் வருகிறது.

நூல் : மஃரிஃபது உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 261

இதே கருத்தை இப்னுல் முலக்கன் என்பவரும் இப்னு ஜமாஆ என்பவரும் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மன்ஹலுர்ரவீ பாகம் : 1 பக்கம் : 37

நூல் : அல்முக்னிஃ பாகம் : 1 பக்கம் : 89

இப்னு ஜவ்ஸியின் கூற்று:

الموضوعات - (ج 1 / ص 99)

وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا

சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட வகையைச் சார்ந்ததாகவோ அல்லது மாற்றிக் கூறப்பட்ட செய்தியாகவோ இருக்கும்.

நூல் : அல்மவ்லூஆத் பாகம் : 1 பக்கம் : 99

இப்னு தய்மியா அவர்களின் கூற்று:

مجموع الفتاوى ள جزء 18 - صفحة 47 ன

كم من حديث صحيح الإتصال ثم يقع فى أثنائه الزيادة والنقصان فرب زيادة لفظة تحيل المعنى ونقص أخرى كذلك

முழுமையான தொடரில் சரியாக இருக்கும் எத்தனையோ ஹதீஸ்களில் கூட்டுதலும், குறைத்தலும் நிகழ்ந்து விடுகிறது. சில நேரங்களில் ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது அர்த்தத்தையே மாற்றி விடும். ஒரு வார்த்தையைக் குறைப்பதும் இவ்வாறே அர்த்தத்தை மாற்றி விடுகிறது.

நூல் : மஜ்மூஉல் ஃபதாவா பாகம் : 18 பக்கம் : 47

இப்னுல் கய்யும் அவர்களின் கூற்று:

الفروسية ள جزء 0 - صفحة 245 ன

وقد علم أن صحة الإسناد شرط من شروط صحة الحديث وليست موجبة لصحته فإن الحديث إنما يصح بمجموع أمور منها صحة سنده وانتفاء علته وعدم شذوذه ونكارته

அறிவிப்பாளர் தொடர் சரியானதாக அமைய வேண்டும் என்பது ஹதீஸ் சரியாகுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று. அறிவிப்பாளர் தொடர் சரியாக இருப்பதினால் (மட்டும்) அந்த ஹதீஸும் சரியானது என்று முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் பல விஷயங்கள் இருந்தால் தான் ஹதீஸ் சரியாகும். தொடர் சரியாக இருப்பதும் கருத்தில் குறை வராமல் இருப்பதும் வலிமையான தகவலுக்கு முரண்படாமல் இருப்பதும் மோசமான கருத்தைத் தராமல் இருப்பதும் இவற்றுள் அடங்கும்.

நூல் : அல்ஃபரூசிய்யா பக்கம் : 246

حاشية ابن القيم ள جزء 1 - صفحة 77

 أما قولكم إنه قد صح سنده فلا يفيد الحكم بصحته لأن صحه السند شرط أو جزء سبب للعلم بالصحة لا موجب تام فلا يلزم من مجرد صحة السند صحة الحديث ما لم ينتف عنه الشذوذ والعلة

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக உள்ளது என்று நீங்கள் கூறுவது அந்த ஹதீஸ் சரியானது என்ற கருத்தைக் கொடுக்காது. ஏனென்றால் தொடர் சரியாக இருக்க வேண்டுமென்பது சரியான செய்தியை அறிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனை தான். முழுமையான அளவுகோல் அல்ல. எனவே முரண்பாடும் குறையும் ஹதீஸை விட்டும் நீங்காத வரை அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தால் மட்டும் ஹதீஸ் சரியாகி விடாது.

நூல் : ஹாஷியதுல் இப்னில்கய்யிம் பாகம் : 1 பக்கம் : 77

சன்ஆனீயின் கூற்று:

توضيح الأفكار ள جزء 1 - صفحة 234 ன

اعلم أن من أساليب أهل الحديث أن يحكوا بالصحة والحسن والضعف على الإسناد دون متن الحديث فيقولون إسناد صحيح دون حديث صحيح لأنه يصح الإسناد لثقة رجاله ولا يصح الحديث لشذوذ أو علة

ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸின் தகவலைப் பற்றி பேசாமல் அறிவிப்பாளர் தொடருக்கு சரியானது ஹசனானது பலவீனமானது என்று தீர்ப்பளிப்பார்கள். இது அவர்களின் வழமை. சரியான ஹதீஸ் என்று சொல்லாமல் சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்று சொல்வார்கள். ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதினால் தொடர் சரியாகி விடும். முரண்பாடு அல்லது நுட்பமான குறை (செய்தியில்) இருப்பதினால் ஹதீஸ் சரியாகாது.

நூல் : தவ்ளீஹுல் அஃப்கார் பாகம் : 1 பக்கம் : 234

கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டவை:

அறிஞர்கள் எத்தனையோ அறிவிப்பாளர் தொடர்களுக்கு தங்கள் புறத்திலிருந்து சரியானவை என்று தீர்ப்பு வழங்கிவிட்டு செய்தியில் உள்ள குறையினால் அதை ஏற்க மறுத்துள்ளார்கள். இந்த விதியைப் பல இடங்களில் கையாண்டுள்ளார்கள். இதற்கான சான்றுகள் பின்வருகிறது.

இமாம் இப்னு ஹஜர் :

ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் நோன்பு வைத்தவராக இரத்தம் குத்தி எடுத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்ற போது இவ்விருவரும் நோன்பை முறித்துக் கொண்டார்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுப்பதில் நோன்பாளிக்கு சலுகை வழங்கினார்கள். அனஸ் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பவராக இருந்தார்.

فتح الباري - ابن حجر ள جزء 4 - صفحة 178 ன

ورواته كلهم من رجال البخاري الا أن في المتن ما ينكر لأن فيه أن ذلك كان في الفتح وجعفر كان قتل قبل ذلك

இப்னு ஹஜர் கூறுகிறார் : இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரியின் அறிவிப்பாளர்கள். என்றாலும் இதில் மறுக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. ஏனென்றால் இந்நிகழ்வு மக்கா வெற்றியின் போது நிகழ்ந்ததாக வந்துள்ளது. ஜஃபர் மக்கா வெற்றிக்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 4 பக்கம் : 178

இமாம் நவவீ:
==========

Abdul Jabar

ALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (30/12/2011) ஜூம்ஆ உரை!

இன்று வெள்ளிக் கிழமை (30-Dec-2011) ALM பள்ளியில் நடைபெற்ற ஜூம்ஆவில் சகோ. அதிரை அன்வர் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் விருந்தோம்பல்" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒலிப் பேழை கிழே.!





Thursday, December 29, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


அஸ்ஸலாமு அழைக்கும்
                      
               இணையத்தள சகோதரர்க்கு இதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொல்கிறேன்.

தயவுசெய்து இதன் பிரதியைப், பொது இடங்களில் நிரந்தரமாய் ஒட்டிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வறுமையில் வாடும் பலரின் வாழ்வும் வெகு சிறப்பாய் மலரும்... இவர்களின் உதவியால், இன்ஷா அல்லாஹ்!


1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445


2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier’s

16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18



தயவுசெய்து, இவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மாணவர்க்கு தெரியப்படுத்தவேண்டுகிறேன். 
தகவல்:-                 
இப்படிக்கு
ஹாபில்.நைனா முஹம்மத் @ ரியாத்

ஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்


இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திட அல்லாஹ் அவனின் இறுதித் தூதராக முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி அவர்கள் மீது அவனின் கடைசி வேதம் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஸுலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் அவர்கள் வாழ்வின் இறுதி நாள் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் எவர் எவரெல்லாம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் சந்தித்து மரணிக்கும்போது முஸ்லிம்களாக மரணித்தனரோ அவர்கள் ஒவ்வொருவரும் ‘சஹாபி’ என அழைக்கப்படுகின்றனர். ‘சஹாபி’ என்ற பதம் மொழி வழக்கில் தோழர் எனும் அர்த்தத்தை சுமந்திருந்த போதிலும் இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் முன்னர் கூறப்பட்ட அர்த்தத்திலேயே தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.

அருமை நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தன்னந்தனியாக அல்லாஹ்வின் தூதை எடுத்துக்கொண்டு மக்கள் முன் சென்ற வேளை அவர்களுடன் கைகோர்த்து முன் நின்று இஸ்லாத்தை பரப்புவதில் தியாக சிந்ததையுடன் இயங்கிய மக்கா முஸ்லிம்கள், பின்னர் நபியவர்கள் மதீனாவுக்குச் சென்று இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்ட வேளை அங்கு வைத்து ஒத்துழைத்த மதீனா முஸ்லிம்கள் அனைவரும் பொதுவில் சஹாபிகளாவர். 

இம்மாமனிதர்களை சந்தேகத்துக்கு இடம் வைக்காது அல்லாஹ் அவர்களை மிகச் சரியான அளவுகோல் கொண்டு அளந்து விட்டான். அவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? இதோ குர்ஆனும் ஸுன்னாவும் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ


“முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் முன்னைய முந்தியவர்கள் மேலும் அவர்களை நன்முறையில் பின்பற்றினார்களே அவர்கள் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். மேலும் அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவற்றுக்குக் கீழால் ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருக்கும் நிலையில் அவன் அவர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளான். அது மகத்தான வெற்றியாகும்”. (09:100)

النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ


‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் )

நபித் தோழர்கள், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். நபித் தோழர்கள் அல் குர்ஆனை அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டார்கள் . எனவேதான் அல் குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.

அல் குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள, இதற்காக அல் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும்.
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அமசம் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏனெனில் அல் குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.

எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது. ஒரு விடயத்துடன் எந்த ஆயத் தொடர்புடையுது. எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது .அதேபோன்று  எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது. இன்னும் எது தொடர்பற்றது .இவையனைத்தையும் அருமை சஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள் .  ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்து  விளங்குவது என்பதையும் நபி அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்து  ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தேவையான விளக்கங்களை கற்றுக்கொடுத்தார்கள் . 

ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை.  அவர் அவர்களுது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை.  நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை.  இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.  இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.

அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை.  அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை.  இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதுக்கவில்லை.  எபபொழுது உம்மத்தே இஸ்லாமியா ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களளோ அன்று தொடக்கம் ஒவ்வொருவரும் குர்ஆன் விடயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்து விட்டன. அவனுடைய விளக்கத்திற்கு சார்பாக  அவர்களுக்குத் தோன்றியது போன்று  ஆயத்துக்களையும் ஹதீஷஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் 
இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி  குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள்.  இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது.  நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.    
ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது.  ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமிலர்.  அந்தளவு தூரம் விளங்கிய அவாகள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான் வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையேயாகும்.  அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது.  அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தன.  அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. விடயங்கள் அனைத்தும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.
ஆம்! அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை  சொல்லும்போது, கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹ்’ என்று கூறுவது சிறப்பாகும். அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், நையாண்டிபண்ணுபவர்கள், விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள், சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள் போன்றோரை விட்டு நீங்கி இருத்தல் வேண்டும். இவை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமா அத்தினரின் நம்பிக்கைக் கோட்பாடான அகீதா  சார்ந்ததாகும்.
சிறப்புமிக்க நபித் தோழர்களை கண்ணியப்படுத்துவது நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயமன்று. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப்பிணைந்தது, இதில் ஏற்படுகின்ற கொஞ்சநஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும்கூட மிகப் பாரதூரமானது. ஏனெனில் சஹாபிகள் ஊடாகத்தான் குர்ஆனையும் ஸுன்னாவையும் அப்பழுக்கற்ற முறையில் அணு அணுவாக அப்படியே அல்லாஹ் பாதுகாத்து அடுத்தவர் கையில் தவழச் செய்தான். அவர்களின் முதன்மையில், நேர்மையில், மகிமையில் ஊறு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி பங்கம் ஏற்படுத்தும்.
கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவது வளர்ந்து, முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் தாறுமாறாக விமர்சிக்கவும் இன்று சமூகத்தில் சிலர் தலைப்பட்டுள்ளனர். இப்போக்கு இத்தகையோரது நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம்காணச் செய்யும். சஹாபிகளை வெறுப்பவர் காஃபிர் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அறுதியாக, உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது.
‘என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின் அவர்களை நீங்கள் இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம்! எவர் அவர்களை நேசித்தாரோ என்னை நேசிப்பதன் நிமித்தம் அவர் அவர்களை நேசித்தார். மேலும் எவர் அவர்களை வெறுத்தாரோ என்னை வெறுப்பதன் நிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். மேலும் எவர் அவர்களை துன்புறுத்தினாரோ திண்ணமாக அவர் என்னை துன்புறுத்தி விட்டார். என்னை எவர் துன்புறுத்தினாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துன்புறுத்தி விட்டார். எவர் அல்லாஹ்வை துன்புறுத்தினாரோ அல்லாஹ் அவரைப் பிடிப்பான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:திர்மிதி).

தம்மை, தம்மிடமிருந்தவற்றை அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்த நபித் தோழர்கள், யதார்த்தத்தில் தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள் , இஸ்லாத்தின் தூண்கள் , அவர்களின் உதிரம் அதன் நீர், அவர்களின் தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தில் விளங்க முயற்சிபோம் . சஹாபிகளின் சிறப்பு, பெருமையை பின்பற்ற வேண்டும் என்பதை  பறைசாற்றுகின்ற. குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி எமக்கிடையே பிரஸ்தாபிக்க வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் அன்பு பொங்கிப் பிரவகிக்கும், அவர்களின் நேசம் நிரம்பி வழியும். அருமை சஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டி வளர்த்திட வேண்டும்.

ஆக, அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.
இக்கட்டுரையின் ஆசிரியர் குறிப்பு : ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

" தானே " புயல் !



சென்னை : வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தானே’ புயல் நாளை காலை சென்னை & நாகை இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும். அப்போது தமிழக கடலோரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தென் கிழக்கு திசையில் கடந்த 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று இப்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த புயல் சென்னைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

மேற்கு நோக்கி நகர்ந்த அந்த புயல், மேலும் வலு வடைந்து மிக தீவிர புய லாக மாறியது. நேற்று இரவு சென்னைக்கு 400 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அந்த புயல் மேற்கு நோக்கி நகரும் தன்மை உடையதாக இருக்கிறது. குறைந்த வேகத்தில் நகர்வதால் அது நாளை காலை சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் கன மழைபெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும்.

இதனால் தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கத் தொடங்கியதும் சென்னை மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 95 கிமீ வேகம் முதல் 105 கிமீ வேகத்தில் காற்று வீசும். கரையை கடக்கும் போது மணிக்கு 125 கிமீ வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய கடலோரப் பகுதியில் 1 மீட்டருக்கும் மேல் கடல் அலைகள் எழும்பும்.

பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் புதுச்சேரி துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்,கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் துறை முகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகை துறை முகங்களில் 8ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூறை காற்று காரணமாக மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கொந்தளிப்பு: புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது. அதேபோல, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. புயல் பலமிழக்குமா ?: 28ம் தேதி நிலவரப்படி அந்த புயல் வலுவடைந்து, காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 முதல் 135 கிமீ வேகமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் அது கடுமையான புயல் என்று அளவிடப்பட்டது. இன்று அது மிக கடுமையான புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30ம் தேதி வலிமை குறைந்து காற்றின் வேகம் 90 முதல் 110 கிமீ வேகம் இருக்கும். கரையை கடப்பதற்கு முன்னதாக அது படிப்படியாக வலிமை குறையும். வலிமை குறையும் போது திசையும் மாற வாய்ப்புள்ளது.

10 முறையும் பலனில்லை: அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை 10 முறை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அவற்றில் எதுவும் வலுவடையவே இல்லை. ஆனால் கடந்த நவம்பர் 26ம் தேதி குமரிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அப்போது பெய்த மழையில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழை அளவான 430 மிமீ அளவையும் கடந்து 497 மிமீ அளவுக்கு மழை பெய்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே இருந்தது.

வெயில் ரகசியம்

புயலா, வெயில் விளாசியதே என்று சென்னைவாசிகள் எண்ணலாம். ஆனால், சென்னை வளிமண்டலத்தில் இருந்த ஈரப்பதத்தை புயல் இழுத்து விட்டது. அதனால் வானிலை வறண்டு காணப்பட்டது. எனினும், நேற்று இரவு லேசான தூறல் விழ ஆரம்பித்தது.

நன்றி : காலை நாளிதழ்

Wednesday, December 28, 2011

2011 -ன் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை.

மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம் அதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி) பல்லாயிரகணக்கான உயிர்களை பலிக்கொண்டது, பல கோடி சொத்துக்களும் சேதமடைந்தன.




ஏப்ரல் 2 ஆம் தேதி டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட அணி உலகக்கோப்பையை கைப்பற்றி உலக சாம்பியன் ஆனது.



ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே வின் கிளர்ச்சி.



ஏப்ரல் - 29 ஆம் தேதி இளவரசர் சார்லஸ் திருமணம் லண்டனில் ராணி எலிசபத் முன்னிலையில் ஆடம்பரமாக(கோலாகலமாக) நடைப்பெற்றது.



மே - 2 ஆம் தேதி ஒசாமா-பின்-லேடனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது (ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையை வெள்ளை மாளிகையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகள்)



மே 20 ஆம் தேதி 2ஜி வழக்கில் கருணாநிதியின் மகள் கனிமொழி கைதானார்.



2011 தமிழக சட்டசபை தேர்தலில் அருதிப்பெருன்பானமையுடன் மே - 16 ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க ஆட்சிபீடம் ஏறியது.



செப்டம்பர் - 18 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது, சேதமதிப்பு 1 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது.



செப்டம்பர் - 22 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி உடல்நல குறைவால் மரணமடைந்தார்.



அக்டோபர் 5 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் தலைச்சிறந்த நிர்வாகி ஸ்டீவ் ஜாப் மரணமடைந்தார்.



அக்டோபர் 30 ஆம் தேதி உலகின் முதன்மை கார் பந்தயமான பார்முலா - 1 கார் பந்தயம் முதன்முதலாக இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைப்பெற்றது.



அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் 7-வது பில்லியனாவது குழந்தை( world's seven billionth baby) உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த்தது.



டிசம்பர் - 8 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் தனது அதிரடி ஆட்டம் மூலம் இரட்டை சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.



டிசம்பர் - 9 ஆம் தேதி கொல்கத்தாவில் அம்ரி என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தினால் 90க்கும் மேற்பட்டவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.



டிசம்பர் 18 ஆம் தேதி ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவப்படைகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது.



வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சி அதை தொடர்ந்து லிபியா அதிபர் கடாபி அக்டோபர் 20 ஆம் தேதி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.



மேற்கு வங்காளம் பிரகாஷ் நகர் கிராமத்தில் வழிதவறி சுற்றி திரிந்த சிறுத்தைப்புலி ஒன்று பல பொதுமக்களையும் மூன்று வனத்துறை காவலர்களையும் கடித்துக்கொதறியது, நீண்ட போராட்டத்துக்குப்பின் பிடிப்பட்டது.



டிசம்பர் - 26 ஆம் தேதி சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 22 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். (அதில் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் 20 பேர் என்பது மிகவும் பரிதாபத்திற்குரியது)



முல்லை பெரியாறு அனை விவகாரம் தமிழகம்-கேரளம் இடையே பெரும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


தொகுப்பு:வளர்பிறை.

Tuesday, December 27, 2011

முத்துப்பேட்டை – குத்பா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் நேரலை பற்றி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.. அன்பார்ந்த இணையத்தள வாசகர்களே.. முத்துப்பேட்டை – குத்பா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிகளை இன்ஷா அல்லாஹ்.. 30.12.11 வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து நமது இணையத்தளத்தில் நேரடி நிகழ்வாக காணலாம்..



“ கமால் “ டீ கடை – கிசு ! கிசு !! – ஓன்று


என்ன கமாலாக்கா......... ஊரில் ஒரே பனியா இருக்கே ! வேற இருக்காத ஜமாலு பணிகாலம்’ல.......வா சூட “ டீ” சாப்பிடலாம்... சரி சொல்லுங்க இஞ்சி “ டீ ” யா....


ஊரிலே என்ன விஷேசம் கமாலாக்கா.... ஒன்னுல்ல ஜமாலு ‘ கடற்கரைதெருவிலே ‘கந்துரி’ யாம்பா...........நான் கந்திரி பாத்து ரொம்ப நாளாச்சு கமாலாக்கா........இந்த தடவை ரொம்ப “தாட் பூட்” ன்னு நடத்துறான்ங்கலாம்...........

அப்புறம் கடைத்தெருவிலே ‘ த.மு.மு.க ‘ புது ஆபீஸ் தொறந்துருக்குதாம்ல...ஆமா...ஆமா நானும் பார்த்தேன்.......ஊரில் ஒரே கேஸ் தட்டுப்பாடருக்கே எந்த அமைப்பாவது ‘கையிலே’ எடுத்து போராடலாம்ல


அந்தா ‘குமாரு’ வாரான்...........வாடா குமாரு பஞ்சாயத்து போர்டு செய்தி ஏதும் இருக்காடா........... பஞ்சாயத்து போர்டு ‘அடக்கமா ‘ செயல்படுதாக்கா.... இன்னிக்கு கண்டன பேரணி தெரியுமாக்கா ? எங்கடா குமாரு........... பஞ்சாயத்து போர்டுகிட்னே......எதுக்கு ? அகல ரயில் பாதை பணியை சீக்கிரம் ஆரம்பிக்க, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, மின் பற்றாக்குறை.........


ஏன் ஜமாலு AAMF பத்தி செய்தி ருக்கா ? AAMF ‘ ன்னா என்ன கமாலாக்கா ........அதாம்பா ‘ அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ‘ அப்புடியா ! அதான் ‘ ரெண்டு ’ கூட்டம்போட்டு முடிசிட்டாங்கலே அடுத்த கூட்டம் தரகர் தெருவில


கமாலாக்கா, வேற ஒன்னும் செய்தில்ல ?............நாளைக்கு சீக்கிரம் வந்துரு நெறைய சேதி தர்றேன் ஜமாலு

தகவல் சேகரிப்பு : புல் புல் பறவை

Monday, December 26, 2011

தவ்ஹீதின் பெயரால் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும்



தவ்ஹீதின் பெயரில் இயங்கும் இயக்கங்களும் அதன் உண்மை நிலைப்பாடுகளும் பற்றி நாம் பல முறை , பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளோம் . இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் பற்றி ஷேக் அபு அப்துர் ரஹ்மான் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் 1998 முதல் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிப்பது என்ன வென்றால், இந்த போலித் தவ்ஹீத் இயக்கங்கள் 
மார்க்கத்தை வளர்க்கவோ , தவ்ஹீதை வளர்க்கவோ, சுன்னாவை அடையாளம் காட்டி வளர்க்கவோ வந்த இயக்கங்கள் இல்லை, மாற்றமாக அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கி , அல்குர் ஆனில் சந்தேகங்களை உருவாக்கி , ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை முரண்பாடுகளாக சித்தரித்து அவைகளை மறுத்து , நபி வழியையும் நபி மொழியையும் கேள்விக் குறியாக்கி, இந்த நபி வழியையும் , அல்குர் ஆணையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த அருமை சஹாபாக்களை குறை பேசி திரியும் கூட்டங்களாக தான் இன்று வரை இருந்துக் கொண்டிருக்கின்றன ? இவர்களின் வலையில் இன்று பல மக்கள் வீழ்ந்து அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். அருமை சஹாபாக்களின் வழிமுறைகளை யாரெல்லாம் தவிர்ந்துக் கொண்டார்களோ ,அந்த மக்கள் இவர்களது வலையில் சிக்கி சிரழிந்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறைகளை தவிர்ந்துக் கொண்டிருதோமேயானால், நாமும் இந்த மௌட்டீக கூட்டங்களின் வலையில் வீழ்ந்து இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் பரக்கத்தால் நாம் இந்த சலபுஸ் சாலிஹீன்களின் வழி முறையில் மார்க்கத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினால் புரிந்து விட்டோம், அதாவது, இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை, அல்குர் ஆன் பற்றிய இவர்களது கொள்கை இஸ்லாமிய கொள்கை இல்லை., இவர்களது வழி முறைகள் , இஸ்லாமிய வழி முறைகள் இல்லை, இவர்களது சட்டங்கள் , இஸ்லாமிய சட்டங்கள் இல்லை , இவர்களது ஆடைகள் இஸ்லாமிய ஆடைகள் இல்லை , இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் இல்லை என்பதாக அறிந்து விட்டோம். மாறாக , எமது கொள்கை சஹாபாக்கள் கொண்டிருந்த கொள்கை, எங்கள் மார்க்கம், சஹாபாக்கள் பின்பற்றிய மார்க்கம், எங்கள் வழி முறை சஹாபாக்களின் வழி முறை, எங்கள் சட்டங்கள் சஹாபாக்கள் பின்பற்றிய சட்டங்கள், எங்கள் ஆடைகள் சஹாபாக்கள் அணிந்த ஆடைகள் , எங்கள் பழக்க வழக்கங்கள் அருமை சஹாபாக்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்கள். மொத்தத்தில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி அருமை சஹாபாக்கள் அணு அணு வாக பின்பற்றி செயல்பட்டார்களோ , அந்த கொள்கையும் மார்க்கமும் தான் எமது மார்க்கம். எமது ஆடையாகட்டும், எமது குடும்ப வாழ்க்கை ஆகட்டும், எமது சொந்த பிரச்சனைகள் ஆகட்டும் அனைத்தும் சஹாபாக்கள் பின்பற்றி செயல்பட்ட வழிமுறையில் அன்றி நாம் செயல் படுவதில்லை. சுருங்க சொன்னால் , நபி வழி அன்றி எமக்கு ஒருவழி இல்லை. எனவே, இந்த நேரான வழி முறையை தவிர்ந்துக் கொண்ட , வழி கெட்ட இந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களை வேரோடு கழற்றி விடுவது உண்மையான ஒவ்வொரு தவ்ஹீத் வாதியின் கடமையாகும்.
ஏனெனில், இவர்கள் வந்துவிட்டார்கள், அல்லாஹ் ஏழு வானத்தின் மேலிருந்து, அருமை சஹாபாக்களை புகழ்ந்து, நான் அவர்களை பொருந்திக் கொண்டேன், அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள் என்று கூறிய பின்பும் அந்த அருமை சஹாபாக்களை ஏளனம் செய்வதையும், குறை கூறுவதையும், திட்டி திரிவதையும் அழைப்பு பனியின் வழி முறையாக எடுத்து சொல்வதற்கு. வந்து விட்டார்கள், நபி மொழியையும் , நபி வழியையும் மறுப்பதற்கு வந்து விட்டார்கள். எனவே, இந்த கும்பலை சும்மா விட்டு விட முடியுமா ? உண்மையான தவ்ஹீத் வாதியின் முன்னாள் இவர்கள் மிஞ்சுவார்களா ? 
இதனால் தான் நாம் கூறுகிறோம் , இவர்கள் இந்த காலக்கட்டத்தின் " ஸனாதிகா ". ஸின்தீக் என்றால், மார்க்கத்திற்கு புறம்பாக பேசுபவர்கள், அதாவது, எந்த விதமான அளவுகோல்களும் இல்லாமல், மார்க்கத்தில் தன் இஷ்டப்படி , தனது புத்திக்கு தோன்றியதை எல்லாம் தர்க்கங்களை வாதங்களை அடிப்படியாக கொண்டு செயல் படுவதாகும். 
இதனை இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து இயக்கங்களிலும் காணலாம். அல்குர் ஆனை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், சுன்னாவை தனக்கு தேவை மாதிரி திருப்பி பேசுவான், மறுப்பான். இவ்வாறு இவர்கள் தவ்ஹீதின் பெயரில் செய்யும் அக்கிரமங்களை சொல்வது என்றால், ஒரு உரையில், ஒரு சில பக்கங்களில் சொல்லி முடிக்க முடியாது. அந்தளவுக்கு இவர்களது அக்கிரமங்கள் மார்க்கத்தின் பெயரில் இருக்கிறது. 
தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை தனிப்பட்டதாக வணங்குவதாகும். அவனை தனிப்பட்டதாக வணங்க, அவன் தனிப்பட்டவன் , அவனுக்கு ஒப்பாக , நிகராக யாருமில்லை என்பதை தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் சரிவர அறிந்து இருக்க வேண்டும். அவனது செயல்பாடுகளை அவன் மட்டுமே செய்யக்கூடியவன் என்பதை அறிந்து இருக்க வேண்டும். அடிமைகளின் செயல் பாடுகளை அவனுக்கு ஒப்பாக்க முடியாது என்பதை அறிந்து இருக்க வேண்டும். மாற்றமாக ஒப்பாக்கி விட்டீர்கள் என்றால், அல்லாஹ்வை தனித்ததாக வணங்கியதாக அமையாது. அல்லாஹ்வை ஏகத்துவ படுத்தியதாக அமையாது. எனவே, அவன் தனிப்பட்டவன் என்பதை 
அறிய அவனது பெயர்களை பண்புகளை அவன் அல்குர் ஆனில் சுன்னாவில் வர்ணித்தவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் , அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய ஈமானில் சர்ச்சையாகி விடும். அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு இவர்கள் மாற்றுக் கருத்து கொடுக்க வாரார்கள் என்றால் இவர்கள் அல்லாஹ்வை விட அல்லாஹ்வை பற்றி அறிந்தவர்கள் என்று சொல்ல வருகிறார்கள் என்று தான் அர்த்தம் . 
ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான், சொல்வதில் அவன் ஆகவும் உண்மையானவன். வார்த்தைகளில் சிறப்பானது அவனுடைய வார்த்தை என்று. இதன் பிறகும் , அல்லாஹ் அவனை பற்றி வர்ணித்தவைகளுக்கு மாற்றுக் கருத்து கொடுக்க வருகிறார்கள் என்றால் , அல்லாஹ் சொல்வதில் மேலானவன், வார்த்தைகளில் அவனது வார்த்தை சிறப்பானது என்பதை ஏற்றுக் கொள்ள வில்லை என்று தான் அர்த்தம். அல்லாஹ் 
்தம். இவ்வாறு அல்லாஹ் அவனை பற்றி சொன்ன பெயர்களை பண்புகளை ஏற்றுக் கொள்ளாமல், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் இல்லை, இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று இந்த கும்பல்கள் சொல்கிறார்கள் என்றால் , இது தவ்ஹீதா ? இது தான் அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையா ? இது இஸ்லாமிய கொள்கையா ? இதற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் ஆ ?  இப்படியான மௌட்டீக கூட்டம் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் , இது எனது ஆராய்ச்சி , இது எனது விளக்கம், எனது ஆராய்ச்சியின் அடிப்படையில் , எனது விளக்கத்தின் அடிப்படையில் இந்த பண்பு அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், இவர்கள் அறிந்ஜர்கள் ஆகிவிட்டார்கள், சொல்வதில் உண்மையாளர் ஆகிவிட்டார்கள் ஆனால் அல்லாஹ் மடத்தனமாக சொல
சிறப்பாக சொல்லவில்லை என்று தான் சொல்ல வருகிறார்கள். அல்லாஹ் அவனது பண்பை பற்றி சொன்ன பிறகும். இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது , அல்லாஹ் இவ்வாறு செய்ய முடியாது என்று சொல்ல வருகிறார்கள் என்றால் , அல்லாஹ்வுக்கு சிறப்பாக சொல்ல தெரியாமல் போய்விட்டது , இவர்கள் வந்து விட்டார்கள் சரியாகவும் சிறப்பாகவும் அல்லாஹ்வை பற்றி சொல்வதற்கு என்று தான் அர்
த்லிவிட்டான், பொய்யன் ஆகிவிட்டான் ( நவூதுபில்லாஹ் ) என்று தான் மறைமுகமாக சொல்ல வருகிறார்கள். இப்படியான விடயங்களை இவர்கள் சொல்ல , மக்களும் கேட்டு பின்னால் செல்கிறார்கள் என்று சொன்னால், மக்களின் ஈமான் என்னவாகிவிட்டது ?, புத்தி என்னவாகிவிட்டது ? , மக்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள் ? 
ய்மையானவன். தூதர்கள் மீது ஸலாம் உண்டாவதாக . அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் " என்று.
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். இது தான் வரலாற்றில் வந்த அனைத்து பித் அத் வாதியின் அடிப்படைகள், அனைத்து வழிகேடர்களின் அடிப்படைகள். இத வழிகேடர்களுக்கு மறுப்பாக தான் அல்லாஹ் சூரத்துல் ஸாபாதில் கூறுகிறான், " இவர்கள் வர்ணிப்பதை விட்டும் உங்களுடைய மேலான இரட்சகன் மிகவும் பரிசுத்தமானவன்,
தூ
இந்த நபிமார்கள், அல்லாஹ்வை பற்றி அல்லாஹ் சொன்னதை தவிர வேறொன்றையும் சொல்லமாட்டார்கள். அல்லாஹ் இறக்கியதை தவிர வேறொன்றையும் சொல்ல மாட்டார்கள். எனவே தான், அந்த தூதர்மார்கள் மீது ஸலாம் உண்டாவதாக. இறக்கியதை இறங்கிய பிரகாரம் சொல்லி விடுவார்கள். அதில் தன் இஷ்டப்படி பேச மாட்டார்கள். எனவே, வஸலாமுன் அலல் முர்சலீன். 



இந்த அடிப்படியில் அல்லாஹ்வின் தூதரை நம்புகிறோம் என்றால், அல்லாஹ்வின் தூதர் சொன்னவைகள் வஹியாகும். அது அல்லாஹ் சுபஹானஹுதாலா குர் ஆனுக்கு விளக்கமாக அவனுடைய தூதருக்கு கொடுத்தது. இப்படி நம்பும் முஸ்லிம்கள் எப்படி , நபி மொழியை அல்குர் ஆனுக்கு முரணாக சுமக்க முடியும் ? இவ்வாறு, நபி மொழி அல்குர் ஆனுக்கு முரண் என்று இந்த கூட்டங்கள் சொல்கிறது என்றால், அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வுக்கு மாற்றமாக பேசுகிறார் என்று சொல்வதாக தான் அர்த்தம். நபி , அல்லாஹ்வுக்கு முரணாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்ல வருகிறார்கள் என்று அர்த்தம். 



இவர் வஹியை தவிர பேச மாட்டார் என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா சொல்ல , நாம் இவருக்கு விளக்கத்தை கொடுத்தோம் என்று அல்லாஹ் சொல்ல , இவர்கள் வந்து, நபி அல்லாஹ்வுக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று சொல்லி பித்தலாட்டம் செய்கிறார்கள். ஒரு முஸ்லிம் சொல்ல முடியுமா ? இவர்கள் கூறுவது போல் நபி மொழி குர் ஆனுக்கு முரண் என்று சொல்வது , 
" திட்டமாக அல்லாஹ்வின் தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது. யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்தவராக , அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவராக இருக்கிறாரோ அவருக்கு." என்று சொல்லப்பட்ட தூதர் அல்லாஹ்வுக்கு , அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாக செயல் பட்டார்கள் என்று தான் அர்த்தம். அல்லாஹ் பாதுகாப்பானாக. இப்படி சொல்லும் மௌட்டீக கூட்டத்திற்கு பெயர் தவ்ஹீத் ஜமாஅத் !!. இதற்க்கு பெயர் ஏகத்துவம் ?? எப்படி ?? இது எந்தக் கூட்டத்தின் ஏகத்துவம் ? யூத நசாராக்களின் ஏகத்துவமா ? இது இஸ்லாமிய ஏகத்துவமா ? இஸ்லாமிய ஏகத்துவம் இப்படியா ?.
ஆமாம், ஏகத்துவம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் Monotheism என்று சொல்லி , கிறிஸ்தவர்கள் trinity யையும் அதாவது , பிதா , சுதன் , ஆவி என்று மூன்றையும் ஏகத்துவம் என்று ஆக்கி விட்டான். இவர்களும் தவ்ஹீத் வாதி என்கிறார்கள் என்றாலும் இவர்களிடம் , நீங்கள் தவ்ஹீத் வாதிகள் , பித் அத் செய்யும் இமாம் பின்னால் தொழ மாட்டீர்கள்!, கப்ரு ஸ்தான பள்ளிவாயல்களில் தொழ மாட்டீர்கள் ! இருப்பினும் நீங்கள் பாபரி மஸ்ஜித் எனும் கப்ரு ஸ்தான பள்ளிவாயலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, இந்த போலி தவ்ஹீத் வாதிகளின் பதில் என்ன தெரியுமா ? நாங்கள் கோயில்களுக்கும் , சர்ச்சுகளுக்கும் உரிமை என்ற விடயத்திற்காக குரல் கொடுப்போம் என்பதாகும். 
இப்படி ஒரு பதிலை உண்மையான தவ்ஹீத் வாதி சொல்வானா ? உரிமை என்ற ரீதியில் ஒரு முஸ்லிம் பச்சை ஷிர்க்கான கோயிலுக்கும் சர்ச்சுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பானா ? இந்த ஷிர்க்குகளும் இவர்களுக்கு ஏகத்துவ கொள்கை. உரிமை என்றால் , பள்ளிவாசல், கோயில் , சர்ச் மூன்றும் இவர்களுக்கு ஒன்று. அல்லாஹ்வின் உரிமை எங்கே ? அவனுக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் , செய்ய வேண்டிய கடமையும் எங்கே ?
சுமந்து இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இவர் இந்த பி. ஜெ. கூறுகிறார், அவர் தவ்ஹீதுக்கு தலைவராம். எந்தளவுக்கு என்றால், இலங்கை நாட்டு மக்கள் தொகை அளவுக்கு மக்கள் எங்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தும் ... என்று ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். க
சிலைகளை அழிக்க வந்த மார்க்கம் , தவ்ஹீதை சொல்லும் மார்க்கத்தின் அழைப்பு பணியை சொல்ல வந்த இவர்கள், சிலைகளுக்கு பாதுகாப்பாக ஆதரவு குரல் கொடுப்பேன் என்று தவ்ஹீத் பேசும் நாவால் சொல்கிறார்கள் என்றால் , இவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.  நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் எதிரிகளின் சிலை வைக்கும் தவ்ஹீதை இவர்க ள்யிலுக்கும் , சர்ச்சுக்கும் பாதுகாப்பாக அதரவு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று ஷிர்க்கை முழங்கும் தலைவர். அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். 
இவரது பாதை தமிழ் உலகத்தை ஷிர்க்கில் கொண்டு சேர்க்கும் பாதை. ஏனெனில் , எழுத்து மூலமாக வந்துள்ள அல்குர் ஆன் பாதுகாப்பாக வந்து சேரவில்லை என்று சொல்லும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை தெரியப்போகிறது. அல்லாஹ்வின் பெயர் பண்புகளை , தனது புத்திக்கு படவில்லை என்று மறுக்கும் , திரிக்கும் இந்த கூட்டங்கள் எங்கே தவ்ஹீதை அறிந்திருக்க போகிறது ? அல்லாஹ் அவனை பற்றி அல்குர் ஆனில் வர்ணித்தவைகளையும், நபி சல்லல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் வர்ணித்தவைகளையும் , படைப்பினங்களுடன் ஒப்பு ஆக்காமல் , மாற்று கருத்து கொடுக்காமல், மறுக்காமல், எப்படி என்று கேள்வி கேட்காமல் , அப்படியே வந்த மாதிரி கேட்டோம் , கீழ்படிந்தோம் என்று ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹீத். 
ஆனால், இவர்களோ அல்லாஹ்வின் பெயர் பண்புகளை மறுத்தும், திரித்தும், அவனுக்கு லாயக்கு இல்லை என்றும் சொல்லி தவ்ஹீத் என்ற அழைப்பு பனி செய்கின்றனர். இது தவ்ஹீத் அழைப்பு பனியா ? இவ்வாறு தவ்ஹீதை நாசாமாக்கி, அல்குர் ஆனை நாசமாக்கி செய்யப்படும் ஒரு அழைப்பு பணி தான் இவர்களின் அழைப்பு பணி. நவூதுபில்லாஹ்.


இந்த வழிகேடான கொள்கையை சுமந்த இவர்கள் , சலபி கொள்கைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அல்ல. ஏனெனில், வரலாறில் இதே கொள்கை கொண்ட பல வழி கேடான கூட்டங்கள் தெள்ளத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இவர்களை பார்த்து நாம் கூறுகிறோம் , இவர்களது வழி முறை முஃதஸிலா. இவர்களது கொள்கை அஷாயிரா என்று. ஏனெனில், முஃதஸிலா , அறிவிப்பை விடவும் தர்கத்திற்கும் வாதத்திற்கும் முன்னுரிமை கொடுப்பான். அஷாயிரா , அல்லாஹ்வின் பெயர் பண்புகளை படைப்புகளுடன் ஒப்பாக்கி, மறுத்து , மாற்று கருத்து கொடுத்து விடுவார்கள். இந்த போக்கு தான் இவர்களிடமும் காணப்படுகிறது. 
குறிப்பு: இந்த கட்டுரையின் முதல் peragraph கடைசியில் வந்ததின் காரணமாக கட்டுரையை சரியாக வாசிக்க முடியாமல் போனது. சிரமத்திற்கு மிகவும்  வருந்துகிறேன்....

இக்கட்டுரையின் ஆசிரியர் குறிப்பு : ஷேக் யஹ்யா சில்மி அவர்கள் இமாம் நாஸிருத்தீன் அல்பானி, அஷ் ஷேக் அப்துல் அஸீஸ் ‌பி‌ன் ப‌ஸ், அஷ் ஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல் ஹுசைமீன் போன்ற தற்கால அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களின் சபைகளில் கலந்து பயன் பெற்றுக்கொண்டுள்ளார். 

மேலும் இவரை தற்காலதில் உயிருடன் வாழும் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஆ அறிஞர்களான அஷ் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்களி, அஷ் ஷேக் அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஆகியோரும் இவரிடம் கல்வியில் பயன் பெற்றுக்கொள்ளும்படி சிபாரிசு (தஸ்கியா) செய்துள்ளனர். 
இமாம் அல் பானியின் மாணவர்களில் ஒருவரான அஷ் ஷேக் மஹ்மூத் இஸ்தன்பூலி அவர்கள் இவரைப் பற்றி விரிவாகவும் பாராட்டியும் சிபாரிசு ( தஸ்கியா ) கொடுத்துள்ளார். 

இன்னும் இவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் 
அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரில் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் வரை உ‌ள்ள அறிவிப்பின் அறிவிப்பாளர் வரிசையை அறிவிக்கும் அனுமதியை அஷ் ஷேக் அப்துல் மன்னான் குஜரன்வாலா அவர்கள் மூலம் அனுமதி பெற்றுள்ளார்.

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.