அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, August 30, 2011

துபையில் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில் நடந்தது


எல்லாம்வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நாம் எதிர் பார்த்ததைவிடநமதூர் சகோதரர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்வு இனிய முறையில்மனநிறைவான வகையில் நடந்து முடிந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

இச்சந்திப்புநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் மனமகழ்சியை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வினால் 30 வருடங்களுக்குமுன்பு சந்தித்த சகோதரர்கள் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது என்பதும், ஒருசேர ஒரு இடத்திலநமதூர் அனைத்து முஹல்லா சகோதரர்கள்சந்தித்துக் கொண்டதும் அமீரக வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும்குறிப்பிடதக்கது. இப்பெருநாள் சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பான்மையினர், இதோடு இந்த நிகழ்வுநின்றுவிடாமல் இன்ஷாஅல்லாஹ் மெம்மேலும் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டுகோள் வைத்தனர்.

இந்தஇனிய சந்திப்பிற்கு அழைத்த எங்களின் அழைப்பைஏற்று ஒருமனதாக தங்கள் வருகையை பதிவுசெய்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இனிய நிகழ்ச்சி இவ்வளவு சிறப்புடன் நடைபெற பெரிதும் உதவிய அனைத்து நமதூர் இணையதளத்தார்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

…… இன்னும்எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்குஅதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம். (3:145)

குறிப்பு:இப்பெருநாள் சந்திப்பு நிகழ்வு பற்றி தங்களுடையகருத்துக்களையும், இதில் கலந்துக் கொள்ளாததங்களுக்கு தெரிந்த சகோதரர்களின் பெயர்,மொபையில் நம்பர், மின்னஞ்சல் முகவரிமற்றும் முஹல்லா விபரங்ககளையும் adiraiallmuhallah@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


என்றும்அன்புடன்,

பெருநாள்சந்திப்பு ஏற்பாட்டாளர்கள்.
adiraiallmuhallah@gmail.com













நன்றி
புகைப்படம்: இபுராஹிம்.F
காணொளிகள்: அதிரை நிருபர்; இப்ராகிம்.F

அதிரையில் நோன்புப் பெருநாள் ஏற்பாடு!

அதிரையில் பெருநாளை முன்னிட்டு மக்கள் முன் ஏற்பாடு செய்யும் காணொளி .

மரண அறிவிப்பு

புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.வா.மு. அபூஹனிபா அவர்களின் மகளும், மர்ஹும் மு.வா.மு.சேக் அப்துல் காதர் அவர்களுடைய மனைவியும், ஹாஜி அ.வா.மு.முகைதீன் சாஹிப், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது மைதீன், ஹாஜி. அ.வா.மு. முகம்மது இப்றாஹிம் அவர்களுடைய சகோதரியுமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

Sunday, August 28, 2011

அதிரையில் மிகச்சிறிய குர்ஆன்!

சமிபத்தில் பத்திரிகையில் பார்த்ததாக நினைவு பாகிஸ்தானில் தான் மிக சிறிய குர்ஆன் உள்ளது என்று . நண்பர் ஒருவர் தன்னிடத்தில் ஒரு சிறிய குர்ஆன் ஒன்று உள்ளது என்று கூறினார் உள்ளங்கையை அளவை விட மிக சிறிய அந்த குர்ஆன் பார்த்த உடன் ஆச்சரியம் ஏற்ப்பட்டது . முன்று சென்டிமீட்டர்க்கும் குறைவாக உள்ள அந்த குர்ஆனின் புகைப்படம் கிழே ..




Saturday, August 27, 2011

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது,

நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள். மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது. தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி
தமிழ் இஸ்லாம்

Friday, August 26, 2011

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் இன்றைய(26.08.2011) ஜும்மா உரை(ஆடியோ சரிசெய்யப்பட்டது)

"ஜகாத் ஒரு கட்டாயமாக்கப்பட்ட கடமை " என்ற தலைப்பில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஆற்றிய ஜும்மா உரையின் ஆடியோ கிழே

(ஆடியோ சரிசெய்யப்பட்டது)

Thursday, August 25, 2011

சாதனைக்காக ஒரு விருது !


அதிராம்பட்டினம் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களுக்கு "சிறந்த தலைமை ஆசிரியருக்கான விருது" வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி 'ஆசிரியர் தின'த்தன்று லயன்ஸ் சங்கம் சார்பாக வழங்கப்பட இருக்கின்றது. காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பத்தாம் வகுப்பில் இந்த ஆண்டுதான் தேர்ச்சி சதவிகிதம் 93%ஐ எட்டி உள்ளது . இதுபோன்று சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் 12 ஆம் வகுப்பின் தேர்ச்சி சதவிகிதம் 98%-ஐ எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, பள்ளியின் தரத்தை உயர்த்தியதில் தலைமை ஆசிரியை ரோசம்மாள் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இது போல் மேலும் சாதனை பல படைக்க அதிரை பிபிசி வாழ்த்துகிறது .

நம்பிக்கைதான் நமக்கான வாழ்க்கை!

மண வாழ்க்கை என்பது புயல் காற்று வீசும் கடலில் பயணம் செய்வது போன்றது. காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப சமாளித்து கடலில் கப்பலை செலுத்தும் சிறந்த மாலுமி போல வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை சமாளித்து வெற்றி பெற வேண்டும்.

அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' என்பார்கள். கடலில் அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும். இது போன்ற கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையான மாலுமியாக உருவாகிவிடுவார். அதுபோலத்தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்

தொடக்க நிலையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டிவிட்டால் போதும் வசந்தம் வீசும் வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும். அதற்கு சில புரிதல்கள் தேவை.

மன்னிக்கும் மனப்பக்குவம்

குடும்பம் என்பது கணவன் மனைவி இருவர் தொடர்புடையது மட்டுமல்ல இருவருடைய புகுந்த வீட்டு, பிறந்த வீட்டு சொந்தங்களும் அந்த குடும்பத்திற்குள் அடக்கம். எங்காவது ஒரு இடத்தில் சிறு நெருடல் ஏற்பட்டாலும் உட்கட்சி பூசல் போல கணவன் மனைவிக்கு இடையே விரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே தவறு யார் மீது என்று அலசி ஆராய்ந்து சண்டை போடுவதை விட்டு விட்டு மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கனியிருக்க காய் வேண்டாமே

ஒருவரை ஒரு புரிந்து கொள்வதற்கு ஓரளவிற்காவது பேசி புரிந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது. சண்டையே ஏற்பட்டாலும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.உடனே சமாதானக் கொடி உயர்த்த வேண்டும்

சமத்துவம் வேண்டும்
வீட்டு வேலைகளைச் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மை கூடாது. எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் நீயா? நானா? போட்டி ஏற்பட வாய்ப்பே இல்லை.

கட்டுப்பாடான சுதந்திரம்

எதற்கும் ஓர் எல்லை உண்டு. யாரும் யார் மீதும் ஆதிக்க செலுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அங்குதான் விரிசலுக்கான விதை தோன்றுகிறது. அது வளர்ந்து விருட்சமாகி வளராமல் தடுப்பது அவரவர் கையில்தான் உள்ளது. அதே சமயம் கட்டுப்பாடான சுதந்திரமே குடும்பத்தை கட்டுகோப்பாக கொண்டு செல்ல உதவும்.

நகைக் சுவை உணர்வு

வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை
'
எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே உறவில் விரிசல் விழ வாய்ப்பே இல்லை.

மரண அறிவிப்பு


சால்ட் லைனை சேர்ந்த மர்ஹூம் அஹமது ஹாஜியார் அவர்களின் பேரனும், ஜனாப் பஷீர் அஹ்மத் அவர்களின் மகனும் B.முஹம்மது, B.மகதூம் நெய்னா அவர்களின் சகோதரரும், அர்ஷத் அவர்களின் தந்தையும், ஜனாப் A.J. தாஜுதீன் அவர்களின் மருமகனும் மற்றும் ஏரோ வேர்ல்ட் யூசுப் அவர்களின் மைத்துனருமான B.முஹம்மது மீராஷா அவர்கள் இன்று (25 - 08 - 2011) அதிகாலை 1:00 மணியளவில் சென்னையில் வபாதாகிவிட்டர்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


அவர்களின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25 - 08 - 2011) பகல் 12.00 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்திற்கு பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.

Monday, August 22, 2011

அதிரையில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா - (அழைப்பிதழ்)

அதிரையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நடத்தும் சமுக நல்லிணக்க பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு அழைப்பிதழ்




நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி? செய்முறை காணொளி !

சமையல் என்பது ஒரு கலை ! அந்த கலையால் படைத்த உணவை ருசிப்பதில் எம்மிடமிருக்கும் ஆர்வமும் போட்டியும் அல்லது அதன் சுவையை விமர்சிப்பதிலும்ஆர்வம் காட்டுவோம். இதுநாள் வரை பெரும்பாலும் சமையல் குறிப்புகள் என்று ஏராளமாக எழுத்து வடிவிலும் /அச்சுவடிவிலும்தான் நாம் கண்டிருக்கிறோம் ஒரு சிலவற்றை தவிர, அப்படியான சமையல் குறிப்புகளைவாசித்து விட்டு முயற்சித்தும் பார்த்து ருசித்தும் இருந்திருக்கிறோம்.

இனி வழமையாக வாய்ப்புகள் வசப்படும்போதும் அதிரைநிருபரின் சமையல் கலை செயல்வடிவ வல்லுநர் சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்களுடைய சமையல்களின்செய்முறை காணொளிகள் இடம்பெறச் செய்ய இருக்கிறோம். அதன் தொடர்ச்சியின் துவக்கப் பகுதியாக ரமளான் மாதத்தில் நம் யாவரின் மனம் நாடும் உணவாக "நோன்பு கஞ்சி" தயாரிக்கும் செயல் முறையினை காணொளித் தொகுப்பாக இங்கே வழங்குகிறோம்.

நன்றி : அதிரைநிருபர்


Sunday, August 21, 2011

அதிரையில் இன்று (21/08/2011) AFFA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியின் காணொளி

இன்று(21/08/2011) அதிரையில் AFFA சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நமதூர் கிராணி மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Saturday, August 20, 2011

பட்டுக்கோட்டை சென்றுவர ஆட்டோ கட்டணம் 250 = ஒருமாத ஏழை குடும்ப ஜீவாதாரத்திற்கு 250 ரூபாய்!

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகை 220லிருந்து 250 இந்திய ரூபாய் வரை என்பதை நாம் அறிவோம். இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத்தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். 
 
அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது.

கடந்த 1973-ம் ஆண்டிலிருந்து சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மாலின் நிதி ஆதாரம், அடிப்படை தாங்கள் வழங்கிவரும் ஜக்காத், ஃபித்ரா, ஸதகா, நன்கொடை, நேர்ச்சை, ஸ்பான்சர்ஷிப் நிதி உதவிகள்தான்.

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் வெகுதொலைவில் உள்ள ஊர்களிலிருந்தும் கூட நமதூருக்கு ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப் பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது நம்மில் அநேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது.

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக, நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.

அதிரை நகர ஏழை, எளிய மக்களுக்கு நிதியாக, பொருளாக உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதிகள் மாநாடு நடத்தவோ, வேறு காரியங்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. தங்களது உதவிகள் உத்திரவாதத்துடன் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன, அல்லது உரியவர்களுக்குப் பங்கிடப்படுகின்றன.

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழுதியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ளலாமே! இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி, பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!
அதிரை பைத்துல்மால் தொலைபேசி எண்: 04373 - 241690

துபை ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் அதிரைவாசிகளின் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்புப் பெருநாள் அன்று துபை தேரா ஈத் முஸல்லாஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளின் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரைவாசிகள் மட்டும் 3000 பேருக்கும் அதிகமானோர் இருக்கக்கூடும். நமதூரைவிட சிறியசிறிய ஊர்களின் மக்களெல்லாம் ஸஹர்/இஃப்தார் நிகழ்சிகள்மூலம் ஒன்றுகூடுகின்றனர். இதுவரைக்கும் அதிரைவாசிகளுக்கென இத்தகைய முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு (2011) முதல் இதற்கான முயற்சியை நமதூர் தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர். ஊர்மக்களை ஒன்றிணைக்கும் இந்த உன்னத முயற்சி வெற்றிபெற உங்கள் வருகையையும் உறுதி செய்வதோடு அதிரை நண்பர்களையும் அழைத்து வரவும்.

பிறஅமீரகங்களிலிருந்து பெருநாளன்று துபைக்கு தொழுவதற்குவரும் அதிரைவாசிகள் தவறாமல் இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்டு தமது உறவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டு பரஸ்பரம் முஸாபஹா செய்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

துபாய்-டேரா பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெறும் ஈத் முஸல்லா மைதானத்திற்கு வருவதற்கான
வரைபடமும்,மைதானத்தின் வலதுபுறம் பரஹாரோட்டில் அதிரைவாசிகள் கூடுமிடமும் இணைக்கப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகை முடிந்து அதிகபட்சம் ஒருமணி நேரத்திற்குள் இந்த அரிய சந்திப்பு நிகழ்வு முடிந்துவிடும் என்பதால் வேறுபள்ளிகளில் பெருநாள் தொழுதவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த சந்திப்பை காணொளி மற்றும் (வாய்ப்பிருந்தால்) நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


For Further Reference Kindly Contact following Persons.

1. Thameem------------(Air Link) - 050 74800 23
2. Jamaludeen----------(west Street ) 050 28551253
3. Ibrahim. F-----------(Flying colours) - 055 4011344
4. Nawas----------------(West Street) - 050 46 04267
5. Ashraf Ali ------------(West St) - 050 6983136
6. Ajmal V T------------(Aramex) - 050 49638
7. Abdul Gaffoor----------(Spine EM) - 050 6919845
8. Dawood--------------(Beach St) - 050 6851183
9. Jahfar-----------------(Etisalat) 050 4964545
10    Ameen----------------(Middle St) 050 5050922



Friday, August 19, 2011

இஃப்தார் நிகழ்ச்சி! - அதிரை (18-08-2011)

அதிரையில் நேற்று செக்கடிமேடு மஜ்லிஸ் கார்டன் சகோதரர்களால் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் பங்குபெற்றனர் . இந்த நிகழ்ச்சியில் கோவை சிறைவாசிகளுக்காக நிதியுதவி கேட்டு கோவையில் 12 வருடங்கள் சிறையில் இருந்த வெளிவந்த சகோதரர் உரையாற்றினார்.


Wednesday, August 17, 2011

புதிய கட்டிடம் கட்டுபவர்களுக்கு மின்வாரியம் ஷாக் ட்ரீட்மென்ட்!!

நமதூர் அதிரையில் வசிக்கும் அநேகர் அடுத்தவேளை உணவை பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ ஆளுக்கொரு வீடு வேண்டும் என்று நிமிடத்திற்கொருமுறை யோசிக்கிறோம். பெண்ணுக்கு வீடு கொடுக்கும் கலாச்சாரம் பற்றி பலர் பல நேரங்களில் எழுதியும் பேசியும் வருகின்றனர்.

இதன் காரணமாக நமதூரில் வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் ஒரு துறையாக கட்டுமானத்துறை திகழ்கிறது என்றாலும் அதில் முஸ்லிம் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் முதலாளிகள் என்று கட்டுமானத்தை பராமரிப்பவர்கள், மராமத்து வேலை செய்பவர்கள், வேலைக்கு ஆள் அனுப்பி கட்டுமானத்தை கட்டித்தருபவர்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள் என்று 'அனுபவ முதலாளி'களாக நம்மவர்கள் பலர் உள்ளனர். சமீப காலங்களில் தான் முறையாக கல்வி கற்ற கட்டிட கலைஞர்கள், கட்டிட (civil) இன்ஜினியர்கள் நமதூரில் சில கட்டிடங்களில் பொறுப்பெடுத்து அல்லது வேலை கிடைத்து கட்டிடம் கட்டி  வருகின்றனர்.

தனது மகள், சகோதரிக்காக மறுமகன், மச்சான் வீட்டாரின் கடும் நெருக்கடியின் விளைவாக அவசர அவசரமாக வீடு கட்டித் தர பலர் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் தங்களது பணி நிமித்தம் கிடைக்கும் சொற்ப பணத்தில் சேமித்து ஒவ்வொரு மாதமும் ஒருபெரும் தொகையை அனுப்பி வீடு கட்டும் பணியை தொடங்க எண்ணி, அனுபவமில்லாத அல்லது குறைந்த செலவில் கட்டித்தருவதாக கூறும் நபர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். 
என்னதான் அனுபவமிருந்தாலும் அதிகாரிகளை வளைத்துப்போட்டுவிடலாம் என்கிற இறுமாப்பில் சிலரும், அரசு நடைமுறைகளைப் பற்றி அறியாத அப்பாவி? 'முதலாளி'கள் சிலரும் இத்தொழிலில் இருப்பதால் இரத்தத்தை பிழிந்து உழைத்து அனுப்பும் உங்களின் பணம் கணிசமாக தண்டம் கட்டுவதற்கு செல்லக் கூடிய ஆபாயம்.

ஆம், கடந்த சில நாட்களாக புதிய கட்டிடங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மின்வாரிய அதிகாரிகள்,
1. புதிய கட்டிடங்களில் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு கமர்சியலாக பதிவு செய்துள்ளனரா என்று ஆய்வு செய்கின்றனர். 

2.புதிய கட்டிடத்தில் மின்இணைப்பு இன்னும் கொடுக்கப்பட்டிருக்காவிட்டால், தண்ணீர் எங்கிருந்து எடுத்து உபயோகிக்கின்றனர் என்று பார்த்து பின் அது வேறொரு வீட்டிலிருந்து வந்தால் அந்த வீட்டு மின்னிணைப்பு கமர்சியலாக பதியப்பட்டிருக்கிறதா என்று பார்க்கின்றனர்.  

3. ஏற்கெனவே பூர்த்தி ஆன வீடு, புதிதாக மேல் தளம் (மாடி) கட்டுவதாக இருந்தாலும் கமர்சியலாக பதியவேண்டும்.

மேற்கூறியவற்றில் மின் இணைப்பு கமர்சியலாக பதியப்பட்டிருக்காமல் இருக்கும் பட்சத்தில் தண்டத்தொகைகளை சராமாரியாக கணக்கெழுதி வசூலிக்கின்றனர். சில வீடுகளில் ரூ 50,000 வரை தண்டத்தொகை கட்ட சொல்வதாகவும் தகவல். பலர் ரூ 25,000 வரை தண்டத் தொகையை கட்டி அழுகின்றனர்.

அதிரையில் இதுவரை பல இலட்சங்கள் இவ்வாறு தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

முறையாக  அனுமதிபெற்று சில ஆயிரங்களில் முடியவேண்டிய செயலுக்கு கடுமையாக உழைத்த பணம் தண்டமாக போவதை யாரால் பொறுக்க முடியும். அதுவும் பணத்தை கொடுத்து பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்தபின்.

ஆகவே கட்டிடம் கட்டுபவர்கள் மின் இணைப்புகளை கமர்சியலாக பதிவு செய்வதுடன், அரசின் நடைமுறைகளை முறையாக அறிந்து வீண் சிரமத்தையும், மன உளைச்சலையும் தவிர்க்க அறிவுறுத்துகிறோம். 

நமதூர் மின்வாரிய அதிகாரிகளிடம் உங்களுக்கு கேள்விகள் ஏதும் இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் அவை அவர்களிடம் விளக்கம் கேட்டு இவ்வலைப்பதிவில் அறியத்தருகிறோம். இன்ஷா அல்லாஹ்.

Monday, August 15, 2011

அதிரை பிபிசியின் மைல்கல் - அதிரையின் முதன்மை தளமாக உருவெடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!

கடந்த ஜூன் 27, 2011 அன்று தொடங்கப்பெற்ற அதிரை பிபிசி வலைப்பதிவு, இறைவனின் உதவியாலும் வாசகர்களின் நல்லாதரவாலும் அதிரையின் முதன்மை வலைப்பதிவாக உருவாகியிருக்கிறது. அதிரை பிபிசியில் 500 க்கும் மேற்பட்ட வாசகர்கள் தினமும் வந்து செல்கின்றனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து மகிழ்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

ஒன்றறை மாதத்திற்கு முன் ஊடக ஆர்வத்தில் தொடங்கப்பெற்ற இந்த இலவச வலைப்பதிவின் அபரித வளர்ச்சி எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருவதோடன்றி அதிகமான சமூக பொறுப்பையும் எங்களுக்கு அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை.

உள்ளூர் பங்களிப்பாளர்களை மட்டுமே கொண்டு யாருடைய நெருக்கடிகளும் இல்லாத சுதந்திரமாக செயல்படும் களமாக அதிரை பிபிசி திகழ்ந்து வருகிறது. அதிரை பிபிசி தொடங்கப்பட்டது முதல் தொழில்நுட்ப அளவில் இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை வலைப்பதிவுகள் ஊடாக செய்துவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் வெளியிடுவதை அதிரை மட்டுமல்லாத மற்ற பகுதி மக்களும் ஆர்வம் கொண்டுள்ளதை காண முடிகிறது.

தற்போது,

1. அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்குவதற்காக சோதனை முயற்சியாக ரமலான் மாத சொற்பொழிவுகளை நேரலைகளாக வழங்கி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் உள்ளூர் செய்திகளை நேரலைகளாக வழங்கவும், செய்தி வாசிக்க இளைஞர்களை குறிப்பாக மாணவர்களை பயிற்சி அளித்து தயார்படுத்தவும்  திட்டமிட்டுள்ளோம்.

2. அதிரை பிபிசி பங்களிப்பாளர்களாக உள்ளூரில் வசிப்பவர்களே உள்ளனர். சென்னை அல்லது அதிரையில் வசிப்பவர்கள் பங்களிப்பாளர்களாக விருப்பம் இருந்தால் மடலிடவும். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான நுட்ப உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
3. அதிரையில் மட்டுமல்லாத சமுதாயம் சார்ந்த மற்ற செய்திகளையும் நேரலைகளாக பதிந்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமை, சென்னை புதுக்கல்லூரி, மற்றும் கிரசென்ட் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்வுகளை நேரலைகளாக ஒலிபரப்பினோம்.

4. நுட்ப விசயங்களில் முன்னணியில் இருப்பதால், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் தளமாக அதிரை பிபிசி திகழ்ந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

5. கல்வி விழிப்புணர்வை தூண்டுவதற்கான எங்களது முயற்சியின் பயனாக வெளியான அதிரையில் கல்வி - ஆவணப்படம் பகுதி -1 பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்முயற்சியை கல்வியாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். ஜஸாகல்லாஹ்...

6. சகோதரர் மீரானின் தேசப்பற்று வீடியோ பதிவு, உள்ளூரில் ஒளிந்து கிடக்கும் இளைஞர்களின் அறிவை உலகுக்கு அறியத்தர நாங்கள் எடுத்த சிறிய முயற்சிக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

7. இமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிற்சியை நேரலையாக ஒளிபரப்பினோம்.

8. அதிரையின் கலாச்சாரத்தை படம்பிடிக்கும் பொருட்டு வெளியிட்ட நோன்பு திறக்க வடை சமூசா ரெடி பதிவை வாசகர்கள் நன்றாக ரு(ர)சித்தார்கள்.

9. பேஸ்புக் கணக்கில் அதிரை பிபிசியை விரும்புபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

10. எமது பங்களிப்பாளர்கள் பட்டறிவுடன், அனுபவ அறிவு, சமூக அக்கறை, அரசியல் பரிச்சயம், மார்க்கப்பற்று, ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு கொண்டவர்களாக உள்ளனர்.

வரும் நாட்களில் அதிரையில் நடைபெறும் அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை நேரலைகளாக ஒலி/ஒளிபரப்ப இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை பிபிசி பங்களிப்பாளர்கள் மீது வாசகர்களாகிய நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்பிற்கும், அன்பிற்கும் எங்களது நெஞ்சார நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் அதிரை பிபிசி வெற்றிநடை போடும். இன்ஷா அல்லாஹ்.

உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். நன்றி

வஸ்ஸலாம்.
அதிரை பிபிசி நிர்வாகிகள் மற்றும் பங்களிப்பாளர்கள்...

குறிப்பு:அதிரை பிபிசி வலைப்பதிவை http://adiraibbc.com மூலமாகவும் வந்தடையலாம்.

துபாய் எய்ம் நடத்தும் சிறப்பு சொற்பொழிவில் முஃப்தி உமர் சரிப் அவர்கள் இன்று பேசுகிறார்!

புனித ரமலான் மாதத்தில் துபாய் அரசின் அங்கமான அவ்காப் எனும் இஸ்லாமிய அமைப்பு வருடந்தோறும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த சிறந்த இஸ்லாமிய பேச்சாளர்களை அழைக்கிறது. அவர்களது சொற்பொழிவுகளை முஸ்லிம் மற்றும் மாற்று மதத்தவர்கள் கேட்க அழைத்து இப்தார் விருந்து வைத்து உபசரிப்பது வழக்கம்.

அவ்வகையில் தமிழகத்தில் மிகவும் அறியப்பட்ட மார்க்க பேச்சாளரும் தாருல் ஹூதா நிறுவனத்தின் உரிமையாளருமான முஃப்தி உமர் சரீப் அவர்கள் துபாய் அரசு விருந்தினராக வரவழைக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவர் அவ்காப் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இந்திய நேரம் 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை துபாயிலிருக்கும் அதிரை இஸ்லாமிக் மிஷன் அமைப்பு நடத்தும் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சி அதிரை பிபிசியில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரிடம் ஓரு 15 நிமிட கோரிக்கை!!

பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி வரையான அகல இரயில் பாதை கடந்த பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிறகு சென்னை செல்வதற்கு பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்போது அரியலூர், தஞ்சாவூர் மார்க்கமே இரயில் பயணத்திற்கான ஓரே வழியாகும்.

தஞ்சாவூர் வழியாக செல்லும் இரயில் காலை பத்துமணிக்கு ஏறினால் இரவு 7 மணிக்கு தான் சென்னை சென்றடைகிறது. ஆனால் அரியலூர் மார்க்கமாக சென்றால் 3 மணிநேரம் பயண நேரம் குறைகிறது. 

திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் அநேக இரயில்கள் அரியலூரில் நின்று செல்கின்றன. இதனை கருத்தில் கொண்டு நமதூர் அதிரை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து பொதுமக்கள், இரயிலில் சென்னை செல்பவர்கள், அரியலூர் வழியாக செல்கின்றனர்.

அரியலூர் வழியாக சென்னை செல்பவர்களுக்காக பட்டுக்கோட்டையிலிருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு அரியலூர் இரயில் நிலையத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. 

இது தற்போதைய நமது சட்டமன்ற உறுப்பினர் கடந்த ஆட்சியின் போது கேட்டுப் பெற்ற பாராட்டுக்குரிய சேவையாகும். இந்த வசதியை வெறும் பத்து நிமிட தூரத்தில் இருக்கும் அதிரையிலிருந்து செல்லும் பேருந்தாக இயக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை. 

அதுபோல் அரியலூர் இரயில் நிலையத்தில் பல்லவன் இரயில் வந்தவுடன் சுமார் இரவு 7.30 க்கு  பட்டுக்கோட்டைக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இது பட்டுக்கோட்டையை சுமார் 11 மணிக்கு வந்தடைகிறது. ஆனால் இரயில் தாமதமாகும்போது இப்பேருந்து சரியான நேரத்தில் வந்தடைவதில்லை. இதனால் அதிரைக்கு 11.30 மணிக்கு இயக்கப்படும் பேருந்தை பிடிக்க முடியாது. 11.30 மணிக்கு இயக்கப்படும் இப்பேருந்தை தவறவிடும் பட்சத்தில் கடைசிப்பேருந்துக்காக நடுநிசி ஒரு மணி வரை காத்திருக்கவேண்டி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்,

1. பட்டுக்கோட்டையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பேருந்தை அதிகாலை 3.45 மணிக்கு அதிரையிலிருந்து புறப்படுமாறு செய்து தர வேண்டுகிறோம்.
2. அரியலூர் இரயில் நிலையத்தில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் பேருந்தை அதிரை வரை நீட்டித்து தர வேண்டுகிறோம்.

இக்கோரிக்கையை கணிவுடன் பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பான இந்து நாளிதழில் வெளியான பழைய செய்தி

--சென்னைப் பயணி--

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு



இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்ட வர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.


இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி.கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.


வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தி லிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.

கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர் களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலே யரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன் னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான்.  அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10-ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக் கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூ ருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.


முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடு தலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப் பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.


அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.


புதைந்து போன புரட்சி மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிட ப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலி டப்பட்டார்.

அன்றும் ஒரு பொடோ


இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப் பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனை யற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளை யெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார்.அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர்.  காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

சிலையை உடைத்த சீலர்

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசி யாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.

சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915-ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் விபரங்களுக்கு இங்கு செல்லவும் (நன்றி: TamilIslamicMedia.)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.