அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, September 30, 2011

புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக ததஜ இன்று (30-09-2011) முற்றுகைப் போராட்டம்!

இன்று வெள்ளிக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுப்பட்டினம் கலவரம் தொடர்பாக காவல்த்துறை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் ததஜ நடத்த உள்ளது.





Thursday, September 29, 2011

இன்று(29/9/2011) காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்புமனு தாக்கல் - காணொளி


அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு காணொளி...











அதிமுக வேட்புமனு காணொளி






காங்கிரஸ் வேட்புமனு காணொளி

சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் அஜீஸ் வேட்ப்புமனு தாக்கல் செய்தார்

அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று (29/9/2011) காலை 11:45 மணியளவில் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காணொளி (Video)..




சேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது பஷீர் வேட்பு மனு தாக்கல்



அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் அஹமது பஷீர் அவர்கள்  இன்று (29/9/2011 காலை 11: 15 மணியளவில் மேலத்தெரு M.M.S. வாடியிலிருந்து ஊர்வலமாக நடந்து சென்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.


















சகோதரர் வக்கீல் முனாஃப் சேர்மன் பதவிக்கு வேட்ப்புமனு தாக்கல் செய்தார்

அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் சகோதரர் முனாப் அவர்கள்  இன்று (29/9/2011)  காலை 11: 00 மணியளவில் அவர்கள் வீட்டிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.  அதன் புகைப்படங்கள்:--







ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள்

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் வேட்பாளர்கள், மற்றும் அவர்கள் அனைவரும் சங்கத்தில்  முஹல்லா மக்கள் முன்னிலையில் நேற்று (28/09/2011) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஏற்றுக்கொண்ட உறுதிமொழியின் (ஒருவரின்) நகல் உங்கள் பார்வைக்காக!


வது வார்டு    -    ஜஹபர் சாதிக்

-----------------------------------------------

12வது வார்டு - எம்.ஏ ஹனிபா

-------------------------------------------

13 வது வார்டு -  எம்.ஜே.சம்சுதீன்

-----------------------------------------------


14 வது வார்டு - எம்.ஏ. சேக் அப்துல்லாஹ்

---------------------------------------------



19 வது வார்டு     -       திருமதி சவ்தா
(கணவர் - அஹமது ஹாஜா)
-----------------------------------------------

21 வது வார்டு     -     எஸ். முஹம்மது இபுராஹீம்
---------------------------------------------







Wednesday, September 28, 2011

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி இன்று 28/9/11 வேட்பு மனு தாக்கல் செய்தனர்

மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை கடந்த இரண்டு வாரங்களாக பெற்று வந்தது. அதையொட்டி அதிரையில் வேட்புமனுத்தாக்கல் சூடுபிடித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 4 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் இக்கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் இன்று காலை மனுத்தாக்கல் செய்தனர், மீதமுள்ள 1 வேட்பாளர் நாளை (29/09/2011) வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.


வேட்பாளர்கள் விபரம்:


3 வது வார்டு - M. ஷாகுல் ஹமீது
10 வது வார்டு - S. ஆயிஷா அம்மாள்
11 வது வார்டு - B. தெசீமா
15 வது வார்டு - அஜ்ரன் அலீமா






ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தனது வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ்!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அதிகாரபூர்வ ஆறு வார்டுகளின் வேட்பாளர்கள் இன்று (28-09-2011) வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதனையொட்டி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட அணைத்து பள்ளிவாசல்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளது, பட்டுமில்லாமல் பொது அறிவிப்பும் நோட்டீஸ் மூலம் செய்துள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள நோட்டீஸ்கள் கிழே:




உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டி

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.

அதன்விளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தை களை நடத்தினர்.

போதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க., அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப் படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.

எனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


நன்றி: http://www.tmmk.in

சம்சுல் இஸ்லாம் சங்கம் உறுதிமொழி மற்றும் வேட்புமனு தாக்கல் காணொளி

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று 28/9/2011 சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் காலை 10 மணிக்கு ஒன்றுகூடினர் சங்கத்தின் துணைத்தலைவர் சகோ .சகாபுதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனனவருக்கும் உறுதிமொழியை வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று உரை நிகழ்த்தினர் . பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது . சம்சுல் இஸ்லாம் சங்கநிர்வாகிகள் , வேட்பாளர்கள் அனனவரும் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் சங்கத்தலைவர் முன்னிலையில் மனுதாக்கல் செய்யப்பட்ட காணொளி கிழே .

சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இன்று வேட்ப்புமனு தாக்கல் செய்தனர்


சம்சுல் இஸ்லாம் சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 12 மணியளவில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.


வேட்பாளர்கள் விபரம்

1வது வார்டு       -        ஜகபர் சாதிக்
12வது வார்டு     -       ஹனிபா
13வது வார்டு      -       சம்சுதீன் (கொய்யா பழம்)
14வது வார்டு     -       சேக் அப்துல்லா
19வது வார்டு     -       திருமதி சவ்தா
21வது வார்டு     -       இபுராஹீம் (ஆப்பிள்)






இன்ஷா அல்லாஹ் காணொளிகள் விரைவில்:











அதிரைக்கு அகல ரயில் பாதை கோரிக்கை-T.R பாலு .M.P யுடன் சந்திப்பு

மன்னார்குடி சென்னை இடையேயான மன்னை எக்ஸ்ப்ரஸ் புதிய இரயில் துவக்கவிழா, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மிக எளிமையான முறையில் மன்னார்குடியில் நேற்று(27- 09 - 2011) நடைப்பெற்றது. தேர்தல் நடத்தை விதிமுறையின் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் போல் அல்லாமல் ஒரு பயணியை போல் கலந்துக்கொள்ள வந்த பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு M.P அவர்களை நமதுர் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிரை பிபிசி செய்தியாளர் குழுவும் முன் அனுமதி(Appointment) பெற்று சந்தித்தது. இச்சந்திப்பின்போது மயிலாடுதுறை-காரைக்குடி அகல ரயில்பாதை திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.அதன் துவக்க நிகழ்ச்சி மற்றும் சந்திப்பின் காணொளி கிழே









Tuesday, September 27, 2011

மரண அறிவிப்பு



ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் நேற்று மாலை 3 மணியவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது சகோதரர் நிஜாம் அலி திடீர்றேன்று ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார். அவர் தற்போது இறந்து விட்டதாகவும் அவரின் உடல் பல கிலோமிட்டர் தூரத்தில் சம்பவ இடத்திலிருந்து இன்று மாலை கிடைத்ததாகவும் தெரியவருகிறது. 


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு கடிதம்!


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்து அவர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கம் தனது கோரிக்கையை அதிரையின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு சங்கத்தின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என்று கடிதம் அனுப்பியுள்ளது.




அதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் இன்று காலை சகோதரர் அஸ்லம் வேட்புமனு தாக்கல்

அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சகோதரர் அஸ்லம் இன்று  காலை 10: 30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தி.மு.க.பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இரண்டாம் கட்டமாக நம் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தீவிரமடைந்துள்ளது.











Monday, September 26, 2011

முக்கிய செய்தி .......

அதிரை நகரை சேர்ந்த 5வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் இன்று 3மாலை மணியளவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது ,நிஜாம் அலி என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.தற்போது இவரை தேடும் பனி திவிரபடுத்தபட்டு உள்ளது. சகோதரர் நலமுடன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்

மரண அறிவிப்பு


தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல் பரகத் ஹாஜியார் அவர்களின் மகனும் ஷர்புதீன், முஹம்மது ஷரிப் ஆகியோரின் மாமனாரும் அஹ்மத் ஆரிப் அவர்களின் தந்தையுமான புலவர் ஹாஜி பஷீர் அகமது அவர்கள் இன்று மாலை 3:45மணிக்கு சென்னையில் வபாதாஹி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு ஆழ்வார்திருநகர் சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.


அதிரையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊர் ஒற்றுமை கருத்தில் கொண்டு அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ. சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.



அதிரையில் தமுமுக ஆம்புலன்ஸ் அற்பணிப்பு சகோ. ஹாஜாகனி உரையின் காணொளி






இந்த நிகழ்ச்சியின் காணொளியின் தொடர்ச்சி விரைவில் 

அதிரை மக்களின் கவனத்திற்கு



கடந்த சில மாதங்களாக நமதூரில் கேஸ் சிலிண்டர் விநியோகிப்பவர்கள் அரசாங்கம் நிர்ணயம் செய்த பில் 397ரூபாயைவிட கூடுதலாக 23 ரூபாய் சேர்த்து 420 ரூபாய் மக்களை கட்டாயப்படுத்தி வசூல் செய்கிறார்கள் 23ரூபாய்க்கு காரணம் கேட்டால் இது நாங்கள் கேஸ் கம்பெனியில் இருந்து உங்கள் விடு வரை எடுத்து வருவதற்கு என்று காரணம் சொல்கின்றனர் . இந்த உழியர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் வேலை செய்கின்றனர் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களை பற்றி மேல் அதிகாரியிடம் புகார் செய்வதற்கு 9443363634 என்ற என்னை தொடர்பு கொண்டு புகார் செய்யவும் .




நன்றி தகவல் : Digitech sena muna

சங்கங்களின் சங்கமம்: அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்

இன்று மாலை, சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அழைப்பை ஏற்று, அதிரையில் இயங்கும் கீழ்க்காணும் சங்கங்கள் மஃரிப் தொழுகைக்குப் பின் மரைக்கா பள்ளியில் ஒன்று கூடின.


* தாஜுல் இஸ்லாம் சங்கம், மேலத்தெரு
* கீழத்தெரு சங்கம்
* தரகர் தெரு சங்கம்
* நெசவுத் தெரு சங்கம்
* கடல்கரைத் தெரு சங்கம்
* மிஸ்கீன் பள்ளி சங்கம்


தொடக்கமாக, கூட்டத்தின் நோக்கம் பற்றிய பேரா. அப்துல் காதர் அவர்களின் சிற்றுரைக்குப் பின், அப்துல் லத்தீஃப் ஆலிம் சாஹிப் அவர்கள், நமக்கிடையே வரவேண்டிய ஒற்றுமை பற்றி அழகிய சிற்றுரையொன்றை நிகழ்த்தினார்கள்.


அதில் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற பொருளை எடுத்து விரிவாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பட்ட படை ஒன்றுக்குப் பதினெட்டு வயது வாலிபராக இருந்த உசாமா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக்கி, அதில் உமர் (ரலி) போன்ற பெரும் பெரும் நபித் தோழர்களைப் படையணிப் போராளிகளாக்கி அனுப்பியது பற்றிக் குறிப்பிட்டு, தலைமைக்குக் கட்டுப்பட்டு எவ்வாறு அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள்.


இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்ட பின் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடந்தது. அதன் பின் மீண்டும் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வந்திருந்த சங்கப் பிரதிநிதிகள் தத்தம் கருத்துகளை எடுத்து வைத்தனர்.


பேரூராட்சித் தலைவர் தேர்தலுக்குக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதை நாம் தடுக்க முடியாது என்ற கருத்தை கீழத் தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.


ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாக்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் போட்டியில் இருப்பதால், முதலில் அவர்களைத்தான் சரி பண்ண வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் எடுத்து வைத்தார்.


கட்சிப் போட்டியாளர்களையும் கூட்ட முடியும் என்ற கருத்தை தரகர் தெருப் பிரதிநிதி எடுத்து வைத்து, இது உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதை வலுவாகப் பதிவு செய்தார்.


தலைவர் தேர்தல் கட்சி அடிப்படையில்தான் நடக்கும்; அதை நம்மால் தடுக்க முடியாது என்ற கருத்தைக் கடல்கரைத் தெருப் பிரதிநிதி உறுதியாக எடுத்து வைத்தார்.


போட்டியாளர்களைக் குறைக்க, நமது சங்கங்கள் அவர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மேலத்தெரு சங்க உறுப்பினர் தனது வேண்டுகோளாக எடுத்து வைத்தார்.


முடிவாக, "அதிராம்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய ஜமாத்" என்ற பெயரில் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு, அனைவராலும் அது ஒருமனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இதனடிப்படையில், நாளைக் காலை பத்து மணிக்கு, மரைக்கா பள்ளிக்கு வருமாறு தலைவர் வேட்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களுக்கு, நமக்கிடையே நிலவும் அதிகமான போட்டியைக் குறைக்கும் விதத்தில் அறிவுரை கூறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகவல்: அதிரை அஹ்மது

Sunday, September 25, 2011

ம ம க சேர்மன் வேட்பாளர் அறிவிப்பு

அதிரையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிரை பேரூர்ராட்சி தலைவர் பதவிக்கு செய்யது முஹம்மது புஹாரி(ஆதம் டெக்ஸ்)அவர்களை மனிதநேய மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது

சம்சுல் இஸ்லாம் சங்கம் வேட்பாளர்கள் அறிவிப்பு



வரும் உள்ளாட்சித் தேர்தலில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று(25/09/2011)காலை 10 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டுகளில் போட்டியிட மனு செய்த 33 பேர் கலந்துகொண்டனர். இஸ்லாமிய அடிப்படையில் வார்டுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள்.


01வது வார்டு. சுரைக்கா கொல்லை
(கிரிட்டி)ஷேக் அஷ்ரப் அவர்கள்


12வது வார்டு புதுத்தெரு
ஹனீபா அவர்கள்


13வது வார்டு நடுத்தெரு கீழ்புறம்
(கொய்யாபழம்)சம்சுதீன் அவர்கள்


14வது வார்டு நடுதெரு மேல்புறம்
(ப்ளம்பர்) ஷேக் அப்துல்லாஹ் அவர்கள்


19வது வார்டு புதுமனைத் தெரு
சகோதரி (மரியம்மா வீடு)செளதா அவர்கள்


21வது வார்டு C M P லேன்
(ஆப்பிள்) இப்ராஹிம் அவர்கள்


இன்ஷாஅல்லாஹ் இதன் விடியோ தொகுப்பு விரைவில்

Saturday, September 24, 2011

மரண அறிவிப்பு

இஜாபா நகரைச்சேர்ந்த (இமாம் ஷாபி எதிரில்) மர்ஹும் பீனா மூனா. முஹம்மது சாலிஹு அவர்களின் மகனும் அமானுல்லா, ஹசன், அஷ்ரப் அவர்களின் மாமனாரும் முஹம்மது, புஹாரி, அவர்களின் தந்தையுமான ஷேக்கா மரைக்காயர் அவர்கள் இன்று இரவு வfபாத்தாஹிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்


ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (அமீரக கிளை) நிர்வாகிகள் தேர்ந்தேடுப்பு


அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளையின்
நிர்வாகிகள் தேர்வு கடந்த 22-09-2011 அன்று துபை-டேரா லேன்ட்மார்க்
ஹோட்டலில் நடந்தது. அதில் தேர்ந்த்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்
பின்வருமாறு:


தகவல்: சகோ.F.இப்ராஹிம்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.