அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, December 29, 2011

" தானே " புயல் !



சென்னை : வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தானே’ புயல் நாளை காலை சென்னை & நாகை இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும். அப்போது தமிழக கடலோரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தென் கிழக்கு திசையில் கடந்த 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று இப்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'தானே' என்று பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த புயல் சென்னைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

மேற்கு நோக்கி நகர்ந்த அந்த புயல், மேலும் வலு வடைந்து மிக தீவிர புய லாக மாறியது. நேற்று இரவு சென்னைக்கு 400 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அந்த புயல் மேற்கு நோக்கி நகரும் தன்மை உடையதாக இருக்கிறது. குறைந்த வேகத்தில் நகர்வதால் அது நாளை காலை சென்னை மற்றும் நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் கன மழைபெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும்.

இதனால் தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கத் தொடங்கியதும் சென்னை மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 95 கிமீ வேகம் முதல் 105 கிமீ வேகத்தில் காற்று வீசும். கரையை கடக்கும் போது மணிக்கு 125 கிமீ வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடங்கிய கடலோரப் பகுதியில் 1 மீட்டருக்கும் மேல் கடல் அலைகள் எழும்பும்.

பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் புதுச்சேரி துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்,கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் துறை முகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர், நாகை துறை முகங்களில் 8ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சூறை காற்று காரணமாக மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கொந்தளிப்பு: புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது. அதேபோல, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. புயல் பலமிழக்குமா ?: 28ம் தேதி நிலவரப்படி அந்த புயல் வலுவடைந்து, காற்றின் வேகம் அதிகபட்சமாக 90 முதல் 135 கிமீ வேகமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் அது கடுமையான புயல் என்று அளவிடப்பட்டது. இன்று அது மிக கடுமையான புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 145 கிமீ வேகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30ம் தேதி வலிமை குறைந்து காற்றின் வேகம் 90 முதல் 110 கிமீ வேகம் இருக்கும். கரையை கடப்பதற்கு முன்னதாக அது படிப்படியாக வலிமை குறையும். வலிமை குறையும் போது திசையும் மாற வாய்ப்புள்ளது.

10 முறையும் பலனில்லை: அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை 10 முறை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அவற்றில் எதுவும் வலுவடையவே இல்லை. ஆனால் கடந்த நவம்பர் 26ம் தேதி குமரிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அப்போது பெய்த மழையில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழை அளவான 430 மிமீ அளவையும் கடந்து 497 மிமீ அளவுக்கு மழை பெய்தது. அதற்கு பிறகு தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே இருந்தது.

வெயில் ரகசியம்

புயலா, வெயில் விளாசியதே என்று சென்னைவாசிகள் எண்ணலாம். ஆனால், சென்னை வளிமண்டலத்தில் இருந்த ஈரப்பதத்தை புயல் இழுத்து விட்டது. அதனால் வானிலை வறண்டு காணப்பட்டது. எனினும், நேற்று இரவு லேசான தூறல் விழ ஆரம்பித்தது.

நன்றி : காலை நாளிதழ்

2 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பயனுள்ள தகவல்.... படபடக்கும் தகவல்......

முன்பெல்லாம் புயல் என்று சொன்னாலே கொஞ்சம் கூடுதல் பயமாக இருக்கும், காரணம் குடிசை வீடும், ஒட்டு வீடும் அதிகமாக பாதிக்கப் படும். 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடித்தாலே குடிசைகள் மற்றும் மரங்கள் விழ ஆரம்பிக்கும், ஓடுகள் களைய ஆரம்பிக்கும், வீட்டுக்குள் வெள்ளம் புக ஆரம்பிக்கும். அது ஏன் அடுத்த வீட்டு நிலவரம் கூட அவ்வளவா தெரியாது. அதுவும் நாம் வெளியில் சென்றால் புயல் நம்மை தாக்கிவிடுமோ என்ற மாயை இருக்கும்.

இப்பவெல்லாம் அப்படியில்லை......

புயலென்றும், மழையென்றும் பார்க்காமல் நம்ம தலைவர்கள் ஒட்டு கேட்க வருகிறார்கள்.....

இந்த வருட புயலுக்கு "தானே" புயல் பெயர் வைத்ததற்கு ஒரு காரணம்...... "சசிகலா"-"நடராஜன்" இருவரையும் கட்சியை விட்டு அடியோடு துரத்தி விட்டதால்......

இனி வரும் காலங்களில் நான் மட்டும் தான் புயல் போல் சுற்று பயணத்திற்கு போவேன் என்பதும்.....

ஊழல் வழக்கில் என்னை மட்டும் தான் சேர்க்கணும்......"தானே" தான் எல்லா காரியங்களையும் செய்கிறேன் என்பதை மக்களுக்கு சொல்லாமல் சொல்வது தான் "தானே" புயல்......

காப்பி பேஸ்ட்டு மூலமா என்னனமோ நடக்குது.... அந்த வகையில் "தானே" என்ற பெயரில் சினிமா எடுத்தால் கூட ஆச்சிரியப் படுவதற்க்கில்லை. ......... ஒருத்தன் வருவாண்டா.... அவன்தான் "தானே புயல்"ன்னு...

கவலைபடாதீங்க மோடி அண்ணே....... நீங்க என்கூட இருந்தாலும் "தானே புயல்"தான் நான். ஏன்னா நீங்க ரத்தத்தின் ரத்தம்...... வாழ்வின் உடன் பிறப்பு..... உங்களுக்காக வேண்டிதான் சசிகலாவை துரத்திவிட்டுட்டேன் அண்ணே.......

ஆமா..... எம்ஜிஆர் ன்னு ஒர்த்தர் இருந்தார்ன்னு உங்களுக்கு யாபகம் இருக்கா.....

......."யோவ் துக்ளக், புயல் காத்து ஏன் வேறப் பக்கம் அடிக்குது".........

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது வரை புயல் புயல் என்று பாடும் வானிலை துறை கூறியவாறு நடந்தது இல்லை.... இந்த முறை தான் ஆச்சரியம் அவர்களின் கணிப்பு சரியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.