அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, December 19, 2011

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!

மனிதன் மட்டுமல்லாது ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய தேவைகளில் முதலிடத்தில் உள்ள ஒரு பொருள் தான் தண்ணீர். தாதுப்பொருட்கள் நிறைந்த திரவம். இறைவன் படைப்புகளில் முதன்மையானவைகளில் ஒன்று. கடலாக, ஊற்றாக, மழையாக, அருவியாக,பனியாக இறைவன் தண்ணீரை பூமிக்கு அனுப்பி வைக்கிறான். மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக இருக்குமாக்கும் என்று விஞ்ஞானிகள் ஆரூடம் சொல்லி கிளம்பியிருக்கின்றனர். அதனாலோ என்னவோ பூமியையும் தாண்டி நிலவிலும் செவ்வாயிலும் தண்ணீர் கிடைக்கிறதா என்று ராக்கெட்டுகளை ஏவி ஆராய்கிறார்கள்.

சுத்தமான குடிநீர், சத்தான உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய நான்கும் மனிதனின் அடிப்படை உரிமை என உலக மன்றமான ஐநா சபை அறிவிக்கிறது.


தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றான பெரியாறு அணை பிரச்சினை கடந்த சில நாட்களாக தண்ணீருக்காக கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. டேம் 999 என்கிற திரைப்படம் வெளியிடப்பட்டு அதில் பெரியாறு அணை உடைந்து அணையை ஒட்டிய ஊர்களில் வசிப்போர் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது போன்று பொய்யாக சித்தரிக்கபட்டுள்ளதே தற்போது பிரச்சினை சூடுபிடித்திருப்பதற்கான காரணம். இதன் தொடர்பில் கேரள மக்களும் தமிழக மக்களும் ஒருவரை ஒருவர் முட்டி மோதி ஆர்ப்பாட்டங்கள் நடத்திக்கொண்டுள்ளனர்.

நீர் பிரச்சினை தொடர்பில் கேரளாவிலும் தமிழகத்திலும் நடைபெற்றுவரும் போராட்டங்களால் நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கேள்விக்குரியதாக மாறி வருவதை கண்டு பலர் மத்திய அரசு பெரியாறு அணையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கையும் மத்திய பாதுகாப்பு படையை நியமிக்கவேண்டும் என்று தமிழக முதல்வரும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இதெல்லாம் இருக்கட்டுங்க, அதிரை பிபிசின்னு பேர் வெச்சுட்டு, ஊர் செய்திய சொல்லாம எதுக்குங்க வெட்டியா பேசுறீங்கனு கேக்குறதும் காதுல விழுது. இங்கதாங்க மேட்டரு. தமிழகத்தின் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் கூட பெரியாறு அணை விசயத்தில் ஒற்றுமையாக இருப்பது தமிழக மக்களுக்கு எவ்வளவு பெரிய நிம்மதி. அதுபோன்று தான் நமதூரிலும் தலைவரும் துணைத்தலைவரும் நமதூர் நற்காரியங்களில் ஒன்றாக இணையமாட்டார்களா என்கிற நப்பாசை நம்மூர்காரர்கள் பலரிடமும் உள்ளது எதார்த்தமே. (அட இதெக்கெல்லாம் நாங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருக்கிறோம்னு கூட்டறிக்கையா விடமுடியும்னு கேக்காதிய). தண்ணீரின் முக்கியத்துவமும் நமதூருக்கான தண்ணீருக்கான ஆதார வழிகள் பாதுகாக்கப்படவேண்டியது பற்றிய சிந்தனையை பொதுமக்களிடம் வளர்ப்பதற்காகவே இக்கட்டுரை.


முதல் பத்தியில் சொன்னது போன்று இறைவன் தண்ணீர் பற்றிய குறிப்புகளை தனது திருமறை திருக்குர்ஆனில் பலவற்றில் குறிப்பிட்டுள்ளான். நீரில் மூழ்கடிக்கப்பட்ட சமுதாயம் பற்றிய செய்திகள், ஹவ்தல்- கவ்தர் எனும் நீர் தடாகம் பற்றிய செய்திகள், மறுமையிலும் நா வறண்டு தண்ணீருக்காக ஏங்கும் மனிதர்கள், தண்ணீர் உபயோகித்து ஒளு செய்யும் முறைகள், ஜம் ஜம் வரலாறு, இன்னும் இதுபோன்ற தண்ணீர் தொடர்புடைய இஸ்லாமிய வரலாற்று தகவல்கள்.

நமது சமகாலத்தில் நமதூரைச் சுற்றியிருந்த குளங்களின் நிலைமை, செடியன்குளம், செக்கடிக்குளம், வெள்ளக்குளம், (குடிதண்ணீருக்கு) மன்னப்பங்குளம் என்று பல்வேறு குளங்கள். தற்போதும் முக்கியமான குளங்கள் இன்றும் உள்ளன. ஆனால் அவைகளின் நிலைமை என்ன?. (சில குளங்கள் காணாமல் போயுள்ளதாக நகைச்சுவையை மெய்பிக்கும் படியான செய்திகளும் உள). குளங்கள் பற்றிய உங்கள் இளமை கால, சிறுவயது அனுபவங்கள். நீச்சல் பயிற்சிகள் மற்றும் அதன் முக்கியத்துவம்.

மழை காலங்களில் நமதூரின் அனுபவங்கள், நல்ல/கெட்ட விசயங்கள், வெள்ளம் ஏற்பட்டால் எடுக்கவேண்டிய தேவையான நடவடிக்கைகள் போன்றவை.

சாக்கடை, கால்வாய் போன்றவற்றில் நமதூரில் இருக்கும் குறைபாடுகள், பொதுமக்களின் கருத்துக்கள், இதுதொடர்பில் விழிப்புணர்வு, சுகாதார செய்திகள்.

அசுத்தமான குடிநீரால் ஏற்படும் பாதிப்புகள். (ஏங்க நமதூர் டாக்டர்கள் யாரும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுத மாட்டாங்களா? இணையத்தில் பேசமாட்டாங்களா?). சுத்தமான குடிநீரும் அதனைப் பெரும் வழிகளும். மறு சுழற்சி குடிநீர் பற்றிய குறிப்புகள்.

மழை நீர் சேகரிக்கும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள்.

நமதூரைச் சுற்றி நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ள முக்கியப் பணிகள், அதன் திட்டசெலவு. இதுதொடர்பில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் பெற்ற தகவல்கள் என நீங்கள் நினைக்கும் தண்ணீர் தொடர்பான எந்த தகவல்களையும் எங்களுக்கு எழுதியோ வீடியோவாகவோ அனுப்பலாம். பேட்டிகள், துணுக்குகள் என உங்களது ஆக்கங்களை அதிரை பிபிசிக்கு அனுப்பித் தாருங்கள். 

நமதூர் மாணவர்களையும், இளைஞர்களையும் ஊடக ஆர்வத்தை தூண்டுவதற்கான சிறு முயற்சியாக இதனை அறிவித்துள்ளோம். நிகழ்கால செய்திகளையும் (நமது எழுத்தார்வத்தைக் கொண்டு) சாதகமானதாக்குவோம்.

கட்டுரைகளை adiraibbc[at]gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பித்தாருங்கள்.

நன்றி
வஸ்ஸலாம்
அதிரை பிபிசி

2 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நமதூர் டாக்டர்களின் பொழப்பே பஞ்சாயத் போர்டுகளுக்கு சொந்தமான தண்ணீர் டேங்குகள்னாலத்தான்.

மருத்துவரா பனி புரிவதுமட்டுமல்லாம, மெடிக்கல் ஷாப்புன்னு எத்தனையோ விஷயங்கள செய்திட்டு வர்றாங்க.

ஆனா. எந்த மருத்துவராவது நான் பஞ்சாயத்து தலைவர் போஸ்ட்டுக்கு நிக்கப் போறேன்னு சொன்னாங்களா...? இல்லை.

காரணம் ஒரு வேல பதவிக்கு வந்துட்டா முதல் வேலை தண்ணீர் டேங்குகள சுத்தப் படுத்துறதும், கொசுக்கள விரட்டுறதும் தான்.... தான் பஞ்சாயத் தலைவரா இருந்தாலும் மருத்துவர் என்ற முறையில கிருமி வராத விஷயங்களைத்தான் ரொம்ப பேசவேண்டி வரும்.

எப்படீன்னு கேக்குறீங்களா....

நம்ம சேர்மன் அய்யா என்ன சொன்னார்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்கப்பூரைப்போல் ஆக்கிக்காட்டுவோம்னு சொனாரா இல்லையா.... இப்ப என்ன நடக்குது... தப்பித்தவறி ஒரு கொசு கடிச்சாலும் இதுக்கு ஒரு வழி பொறக்காதா என்று புலம்புரோமா இல்லையா...

இத்துண வருஷமா கடிக்காத கொசு இப்பமட்டும் ஏன் ரொம்ப கடிக்குதுன்னு பொலம்புறோம்....

நீங்க வேற BBC , தேவையில்லாம காமடி பண்ணாதீங்க, "நமதூர் டாக்டர்கள் யாரும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுத மாட்டாங்களா? ன்னு....

உங்களுக்கு தெரியாதா, அவக எந்த எடத்துல உட்காரனும், என்ன எழுதனும்னு.......

மருத்துவத்தின்
மகிமையை உணர்ந்தவர்கள்..
மண்னடிவாசிகள்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு,
நம் மன்னடி வாசிகளிடம் போய் சொல்லு
நீயும் செல்லு.

தெரியாதா உங்களுக்கு.... சென்னையிலேயே அதிகமா மருத்துவமனை உள்ள இடம் நம்ம நம்ம மன்னடிதான்

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் அருட்கொடைகளில் காற்று முதன்மையானது. அதற்கு அடுத்தபடியாக தண்ணீர், மற்றும் உணவு மற்றும் ஏனையவகளாகும். இவை அனைத்தையும் அல்லாஹ் அதனதன் அவசியத்தின் அடிப்படையில் மக்களுக்கு முறைப்படி கிடைக்க செய்கிறான். அவை அனைத்தும் அதிகமாகிபோனாலும், மிகவும் குறைந்து போனாலும் மக்களுக்கு கஷ்டம்தான். (உதாரணம் : அதிகமானால் சுனாமி, குறைவானால் சோமாலியா)
அல்லாஹ்வின் அணைத்து அருட்கொடைகளுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. நாம் என்றும் நினைவில் நிறுத்தி செயல்படுதல் அவசியமாகும் ..

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.