அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, February 3, 2012

வேலைவாய்ப்பு ! தஞ்சை மாவட்ட கலெக்டர் அழைக்கிறார் !


தஞ்சை மாவட்டத்தில் 2011-12ம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானோர்களை தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் அவர்கள் விண்ணப்பிக்க அழைக்கிறார்.


தொழிற்பயிற்சிகள் எவைகள் :
ஏர் கண்டிசன்
ரெப்ரிஜிரேஷன்
எலக்ட்ரீசியன்
புட் புரொடக்க்ஷன்
புட் அண்ட் பீவரேஜ் சர்வீஸ்
வெல்டிங்
பிட்டர்

கால அளவு : மூன்று மாதம்
வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவராக இருக்க வேண்டும்

சலுகைகள் :
தினமும் ரூ.35 வீதம் உதவித்தொகை
பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்குதல்
பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு வழங்க பயிற்சி நிலையத்தின் மூலம் நடவடிக்கை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
திட்ட அலுவலர்,
மகளிர் திட்டம்,
சி-5 ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில்,
தஞ்சை

என்ற முகவரிக்கு வரும் 7 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ரேஷன் கார்டு மற்றும் கல்வி தகுதிக்கான சான்றுடன் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு : தகுதியானோர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம் நாட்டில் மிக சிறந்த வேலை அரசாங்கத்தில் பணியாற்றுவது தான்.... அரசாங்க வேளையில் அதிக கவனம் செலுத்துவது பிரமான சமுதாயத்தினர் மட்டும் தான்.... அது சரி.... குயவனுக்கு தெரியுமா தங்கமுலாம் போச்சா.....:)

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.