அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 8, 2012

அகல ரயில் பாதையும் , தொடர் முயற்சியும் !


அல்ஹம்துலில்லாஹ் ! 
 
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கம் சம்பந்தமாக தொடர் முயறசியாக,கடந்த வாரம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப . சிதம்பரம் அவர்களை காரைக்குடியில் சந்தித்தோம். அதன் விபரத்தை ஆங்கில நாளேடான  THE HINDU பத்திரிக்கையில் விபரமாக எழுதி இருந்தார்கள். அதன் நகலையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
 
மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர்,  சற்றும் தாமதிக்காமல் உள்துறை அமைச்சகத்திலிருந்து  A.R.U.D.A  அமைப்பிற்கு  ஒரு  கடிதமும் , ரயில்வே   துறை அமைச்சருக்கு   மேற்கண்ட அகல ரயில்பாதை திட்டத்தை  வரும் பட்ஜெட் இணைக்கும்படியும், அது  சமபந்தமாக மேற்கொண்டு விளக்கமும்
கேட்டு கடிதம் எழுதி  அனுப்பி இருக்கிறார்கள். அதன் நகல் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.


  

 
மேலும் திருவாரூர் காரைக்குடி   ரயில்வே மார்க்கத்திலுள்ள வர்த்தக மற்றும் சேவை அமைப்புகளோடு இணைந்து மாண்புமிகு ரயில்வேதுறை அமைச்சரை  மார்ச் 14 தேதி  பட்ஜெட்  முன்பாக  சந்திப்பதற்காக Appontment  கேட்டு எதிர்பார்த்து கொண்டிருகின்றோம். எல்லாம் நன்மையாக நடந்தேற எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக !
 
இப்படிக்கு 
அப்துல் ரஜாக்

8 பின்னூட்டங்கள்:

A.J. Thajudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம் ஊருக்கு அகல ரயில் பாதைக்காக பல பேர் பல வழிகளில் முயற்சி செய்துள்ளார்கள், அவைகளில் மயில் கல் என்று சொல்லக்கூடிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த முயற்சி தான் இது (உள்துறை அமைச்சரை சந்தித்தது) ARUDAவின் முயற்சி பாராட்டப்படக்கூடியது.

இதற்கு ஒருபடி மேலாக நாம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலும் தன் கடமை தவறாது, நம்முடைய மனுவை பரிசீலினை செய்து உடனே இரயில்வே அமைச்சருக்கு பரிந்துரை கடிதம் எழுதியது பாராட்டப்படக்கூடியது. நானறிந்த வகையில் நாம் சந்தித்த மற்ற அமைச்சர்கள் யாரும் இவ்வளவு துரிதமாக செயல்பட்டதாக தெரியவில்லை.

இன்ஷா-அல்லாஹ், முடிந்தால் பெப்ரவரி கடைசி தேதிக்குள் இரயில்வே அமைச்சரை ARUDA சார்பாக சந்தித்தால் வரக்கூடிய இரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது, காரணம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒருவாரத்துக்கு முன்பு பட்ஜெட் தயாரிப்பு முடிந்துவிடும்.

Saleem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நம் முயற்ச்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.இன்ஷா அல்லாஹ்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள் இந்த முயற்சி செய்த நம் ஊர் பெரியவர்கள் மற்றும் சகோதரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், மற்றும் இந்த அகல ரயில் பாதைக்கு மிக விரைவில் முயற்சி செய்த ப.சிதம்பரம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த முயற்சி எடுத்தவர்களுக்கு உதவி செய்வானாகவும் ஆமீன். அதைப்போல் யார் யாரல்லாம் இதற்கு முன்னர் அகல ரயில் பாதை விசையமாக முயற்சி எடுத்தார்களோ அவர்களுக்கும் மற்றும் லண்டனில் வாழ்ந்துக்கொண்டு இந்த அகல ரயில் பாதைக்கு முயற்சி செய்த அதிரை சகோதரருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்போல் ஒவ்வொரு நல்ல காரியங்களும் நம் ஊருக்கு நடக்கட்டும் எல்லாம் இறைவனிடம் துஆ செய்வோமாக.

Abdul Razik said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Masha allah
I think this is one of the petitioner’s request might be passed by a Central Minister to particular Department right away. So we entirely anticipate as this Broad-Gauge plan will be add in forthcoming Railway budget. Thanks to Minister and our brothers who attempted to this issue.

Abdul Razik
Dubai

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

A.J தாஜுதீன் காக்கா சொல்வது போல பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பட்ஜெட் தயாரிப்பு பணி முடிவடைந்து விடும் என்பதால்,ARDA துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ரயில்வே அமைச்சர் திரு. தினேஷ் திரிவேதி அவர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுவை அளிக்க அருடா உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோருகிறேன்.

ஊர் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அனைத்து சமூக சேவகர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய அல்லாஹ்விடத்திலே துஆ செய்கிறேன்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
முயற்சிக்கு பாராட்டுக்கள் , அணைத்து மக்களும் இதற்காக ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் - வல்ல ரஹ்மான் நிறைவேற்றி தருவனகவும் - ஆமின்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் தொடர் முயற்ச்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரதமருக்கு அடுத்த அதிகாரத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தை சந்தித்த மற்றும் அதற்கான முயற்சியினை மேற்கொண்ட அனைவருக்கும் சதக்கத்துல் ஜாரியா எனப்படும் நன்மையை வல்ல ரஹ்மான் ஏற்படுத்தி தருவானாக ஆமீன்....

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த முயற்சியாளர்களை பாராட்ட நாம் கடமைப் பட்டுள்ளோம்
அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.