அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, April 4, 2012

மின் கட்டணம் குறைப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு.


சென்ற மாதம் கடுமையாக உயர்த்தப்பட்ட மின்கட்டணங்களை, சிறிதளவு குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

மார்ச் 30ம் தேதி தமிழக மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட மின் கட்டண உயர்வு பற்றிய விபரம். 

100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.10 பைசா. 
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.80 பைசா. 
201 யூனிட் முதல் 250 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3 
251 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 பைசா.
500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 75 பைசாவாக உயர்த்தப்பட்டது. 

03 - 04 - 2012 அன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திருத்தியமைக்கப்பட்ட புதிய மின் கட்டண விபரம்.


100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.50 பைசா. 

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படுகிறது.


500  யூனிட்டுகளுக்கு  மேல் உள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த  புதிய மின் கட்டண குறைப்பு வீட்டு மின் பயனீட்டாளர்கள் மட்டுமே பொருந்தும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

1 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.//

எங்கள் அரசு மின்சார கட்டணத்தை குறைப்பதற்கும், மானியம் வழங்குவதற்கு அதி முக்கிய காரணம் இதோ.

* நாங்கள் அளவுக்கு அதிகமாக எல்லா இடத்திலும் விலைவாசியை ஏற்றிவிட்டோம். அதை வைத்து பல திட்டங்களையும் தொடங்கி பணத்தை வைக்க இடமில்லாமல் தவிக்கிறோம், எங்களுக்கு உதவி புரிவோர் யாருமில்லை. வங்கியில் பணத்தை போட்டால் என்னன்னோமோ வரியென்று எங்களை பயமுறுத்துகிறார்கள்.

** விலை நிலங்களுக்கும், வசிக்கும் இடங்களுக்கும் பத்திர விலை ஏற்றியதற்கு அதி முக்கிய காரணம் நாங்கள் வைத்திருக்கும் அரசு பணத்தை எங்கள் பெயருக்கு இடமாக மாற்றி அதனால் ஏற்படும் பத்திர சிலவை அரசுக்கே திருப்பி தரப் போகிறோம் என்ற திருப்திதான்.

*** நாங்கள் கய்யகபடுத்தும் பணத்தை அரசுக்கு நாங்கள் மட்டும் திருப்பி மட்டும் கொடுக்கவில்லை, தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் நிலம் வாங்குகிறார்களோ அவர்களையெல்லாம் சேர்த்து பணத்தை அதிகமாக அரசுக்கு கொடுக்க உதவியும் புரிகிறோம். (அதோடு நில வியாபாரத்தில் முஸ்லிம்களும் அதிகமாக முதலீடு செய்திருப்பதால் அவர்களையும் ஒழித்து விடலாம்)

**** நாங்கள் முக மூடி வேண்டாம் என்று சொல்லகாரணம் தமிழ்நாட்டில் திருடர்கள் மட்டுமல்ல, எங்களின் பினாமிகளும் எங்களைப் பார்த்து முக மூடி போட ஆரம்பித்து விட்டார்கள். அதோடு போலீஸ்காரர்களுக்கும் அதிக வேலை இருக்காது, அவர்களை எங்களையும், எங்கள் பணத்தையும், கட்சிக் காரர்களையும் பாது காத்துக் கொண்டாலே போதும்.

கடைசியாக கிடைத்த கட்சி அலுவலக செய்தி...........

(படத்தில் இருக்கும் நிலம் தரிசாக இருப்பதால் நமதூர் நில வியாபாரிகள் "சலாமத் நகர்" என்று பெயர் வைக்காமல் இருந்தால் சரி")

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.