அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, April 9, 2012

அட நம்புங்கப்பா இது IPL இல்ல அதிரையில் நடந்த APL தான் ! காணொளி இணைப்பு ..

முதல் பாகம் ..

இரண்டாம் பாகம்









அதிரை நடத்திய ஒரு நாள் மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது சமார் 50 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் போட்டி  நேற்றைய முன்தினம் இரவு சரியாக 8  மணிக்கு அதிரை கிராணி  மைதானமே மின்னொளியில் ஜொலித்தது. விண்ணை பிளந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தன. ஆம் அதிரை வரலாற்றிலயே முதல் முறையாக மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியை அதிரை AFCC அணி நடத்தியது. முதல் போட்டியை சொந்த அணிகளான AFCC A vs AFCC B அணிகள் காட்சி  போட்டியாக விளையாடின.  இரவு முழுவதும் தொடர்ந்து  நடைபெற்றது. பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். இதில் இறுதி ஆட்டம் நேற்று (8/9/12) மாலை நடைபெற்றது. AFCC vs VCC  வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் அதிரை அணியான AFCC  சம்பியன் ஆனது. இதன் முலம் முதல் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் சம்பியன் ஆனது.    

3 பின்னூட்டங்கள்:

Meerashah Rafia said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

IPL மைதானத்தை விட பெரிதாகவே தெரிகின்றது.
அமைக்கப்பட்டுள விதம் பிரம்மாண்டம்/சாதனையாக திகழ்கின்றது.
முதல் புகைப்படமும், கடைசி மூன்று புகைப்படுமும் ஒரே மாதிரியாக இருக்கின்றது.. ஏதாவது ஒன்றை மட்டும் வெளியிட்டால் சிறப்பு..

அதுசரி, கேமராவை நோக்கி பந்து வந்ததா இல்லையா?!

அதிரை தென்றல் (Irfan Cmp) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ்...காண்பதற்கே கண்ணுக்கு குளிச்சியை தருகிறது இன்டர்நேஷனல் ஸ்டேடியம் மாதிரி காட்சியளிக்கும் கருசல் மணி திடலா இது??

வெற்றிகரமாக நடந்தேறி அதற்கு முழு ஒத்துழைப்பு நழுகிய அனைத்து அணி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மற்றும் AFCC நிர்வாக குழுவிற்கும் மிகவும் கவர்ச்சியான புகைப்படமிட்ட அதிரை BBC இணையத்திற்கும் AFCC அணியில் நானும் ஒரு வீரர் என்ற பெருமிதமும் அதேபோல் மகிழ்ச்சி கலந்த நன்றியுனை AFCC சார்பாக தெரிவித்துகொள்கிறேன்

இறுதியில் AFCC அணியே வெற்றி கோப்பையை தட்டி சென்றனர் என்பது மேலும் அதிரை கிரிக்கெட் ரசிக பட்டாளத்திற்கு மகிழ்வடைய செய்கிறது.....வாழ்த்துக்கள்...

இந்த வெற்றி பயணம் தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்....

அதிரைஅன்பு said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மகசர் மைதானம் நினைவும் இருக்கனும்?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.