அதிரையைச் சேர்ந்தவர் மீரான். அதிரையிலேயே உள்ளூர் மின்சாதன, ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பின் சுயமாக மின்சாதன கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்து ஒரு ஆசை. தனது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று.
இவருக்கு சிறு வயதிலிருந்து ஒரு ஆசை. தனது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று.
சிறு வயதிலேயே தென்னம்பாளையில் சிறு தோனிகளை செய்து குளத்திலும், மழைக்காலங்களில் வீதியில் ஒடும் தண்ணீரிலும் ஓட விட்டு விளையாடுவது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.
தனது தொழில் அனுபவங்கள் கைகொடுக்க இவர் உருவாக்கியிருப்பது இந்திய இராணுவக் கப்பல் மாதிரி ஒன்றை. இதற்கு INDIA SHIP ADIRAI என்று பெயரிட்டிருக்கிறார். இதற்காக இவர் செலவழித்ததோ சுமார் 20,000 ரூபாய்க்கும் மேல் என்கிறார்.
தனது மாதிரிக் கப்பல் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்பற்றையும், கண்டுபிடிப்பு அறிவையும் வளர்க்க உதவும் என்று நம்புகிறார். இதனை பள்ளிகளில் காட்சிப்படுத்த இருக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புகளையும், தியாகங்களையும் வரலாற்றில் மறைத்தும் திரித்தும் எழுதப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரை முஸ்லிம் இளைஞரின் நாட்டுப்பற்றின் விளைவாக உருவாகியுள்ள இம்முயற்சி முஸ்லிம்கள் இந்திய இறையாண்மையில், நாட்டுப்பற்றில் நம்பிக்கை வைத்து முன்னணியில் இருப்பவர்கள் என்று பறைசாற்றியுள்ளார்.
சகோ. மீரானுக்கு அதிரை பிபிசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



















