அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, September 2, 2012

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி வலைத்தளத்தில் பதியப்பட்டதால் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கம்.

இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.

யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?

கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலீய் ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலீய் (ரஹ்) ஆலிம் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை (புதின்ங்கள்) பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்து வரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்திரக்கோட்டையிலிருந்து அதிரைக்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.

என்ன பிரச்சினை?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்  ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில்  கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள். இதனால் சிலருக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித்அத்களை ஆதரித்து வரும் சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லெப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கடந்த ஓரிரு மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரின் முயற்சியால் ஊரில் மிகச் சிலரிடம் மட்டுமே கையொப்பம் பெற்று, தவறான அதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அதே நபர், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை அதில் எடுத்தது போல் மினிட் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட் புத்தகம் திட்டமிட்டு இதுவரை மறைக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையொப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் அவராகவே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்கள் அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட புகாரை அளிக்கும் அந்த சகோதரரே சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் அந்த சகோதரர் காவல் நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற அவர் மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர்,  துணை செயலாளர் மற்றும் இரண்டு  பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.

பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.

இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துணை தலைவர், துணை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாராந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக தங்கள் அறிவிப்பை அதிரை வலைப்பூ ஒன்றுக்கு மட்டும் அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.


ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கும் எழும் சந்தேகம் இதே..

1.   ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?

2.   ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் முறையாக பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த பின்னர்தானே நடவடிகை எடுப்பது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா சங்கத்திலும் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதித்ததின் மர்மம் என்ன?

3.   மற்ற இரண்டு நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் மூன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?

4.   ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் சங்கத்திற்கு என்று இருக்கும் வலைப்பூவில் வெளியிடாமல் பொதுவான வலைப்பூ ஒன்றில் அவசர அவசரமாக வெளிட்ட மர்மம் என்ன?

5.   ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலத்தெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட)  கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?

6.   தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அந்த சகோதரர் மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?

இவ்வாறான பல கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. உண்மை நிலையை அறிய இந்த கேள்விகளுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்

நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்கள் விரைவில்… இன்ஷா அல்லாஹ் !

L.M.S. Mohamed Yousuf 

நன்றி : அதிரை நிருபர்

Tuesday, August 14, 2012

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்


மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2011-ம் ஆண்டு 6.25 சதவீதம் பேருக்கு மட்டும்தான் மலேரியா பரவி இருந்தது. 

இதேபோல் 2009-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் 37.19 சதவீதம் பேரை தாக்கியது. 2011-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 21.36 சதவீதமாக குறைந்தது. இந்த ஆய்வில் டெங்கு-மலேரியாவை பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டோரை மட்டுமே விரும்பி கடிப்பது தெரிய வந்துள்ளது. 

2011-ம் ஆண்டு மும்பையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42.84 சதவீதம் பேர் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதேபோல் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களில் 64.40 சதவீதம் பேர் இளம் வயதினர்தான். 

இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர் ஜிதிந்தர் பாட்டியா கூறும்போது, மும்பை நகரில் கொசுக்கள் மூலம்தான் அதிக அளவில் நோய்கள் பரவுகின்றன. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. இதன் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு மலேரியா-டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றன. 

என்றாலும் மலேரியா- டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத்தான் விரும்பி கடிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய ஆய்வில் இது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

Thursday, July 12, 2012

அதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்? எதற்கு??

Wednesday, July 11, 2012

உறங்கும் அதிரை மின்வாரியம்! நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...

அதிரை “மாட்டுக்கறி” விவகாரம்:“மக்கள் உரிமை” செய்திக்கு அதிரை சேர்மன் மறுப்பு !

Tuesday, July 10, 2012

தமிழில் எழுதலாம் வாங்க!

Sunday, July 1, 2012

அதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி !
கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பதுதான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை தமுமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் அதில் முன் வைத்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக, சமுதாய சேவை செய்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் அதிரை த.மு.மு.க. பற்றி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளுடன் அதிரை தமுமுக நிர்வாகிகளை அனுகினோம். அதன் காணொளியினை இங்கே பதிந்துள்ளோம்.
சகோதரர் செய்யது பேட்டி

சகோதரர் அஹமது ஹாஜா பேட்டி

சகோதரர் சாகுல் ஹமீத் பேட்டி

பட்டுக்கோட்டை பஜக, இந்து முன்னனியினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள், மற்றும் அதிரை பேரூராட்சி கூட்ட அழைப்பு நகல்.
இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.


நன்றி
-அதிரைநிருபர் குழு

Friday, June 29, 2012

இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் சர்ச்சைகுறிய பாடத்திட்டம்

யுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி!

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி அணி, மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதியது. 

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அருமையான கோல் அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜெர்மனி வீரர்கள் மீள்வதற்குள், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அவர்களுக்கு அடுத்த அதிர்சியையும் பலோடெலி அளித்தார். இம்முறை களத்தில் பம்பரம் போல புயல் வேகத்தில் செயல்பட்ட பலோடெலி, பந்தை வெகுதூரத்திலிருந்து தனி ஆளாகக் கடத்தி கொண்டுவந்து, கம்பீரமாக கோல் அடித்தார். 

முதல் பாதி ஆட்ட முடிவில் இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.

Thursday, June 28, 2012

யுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.

நேற்று நள்ளிரவு நடைப்பெற்ற முதலாவது அரை இறுதியாட்டத்தில் போர்ச்சுகல் அணி நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணியுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினர். குறிப்பாக போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சகவீரர்களான ஜோவோ பெரீரா, கோயண்ட்ராவோ, மௌடின்ஹோ ஆகியோர் ரொனால்டோவுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தனர். 

எனினும் ஸ்பெயின் வீரர்களும் சிறப்பாக ஆடியதால் போர்ச்சுகல் அணியினரால் எளிதாக கோல் அடிக்க இயலவில்லை. ஸ்பெயின் அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான இகர் காஸில்லஸ் சிறப்பாக செயல்பட்டு போர்ச்சுகல் வீரர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியும் துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. 90 நிமிடங்களின் முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணியினராலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இன்று நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் விளையாடுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு ஆட்டம் துவங்கும். இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உண்மை..

Wednesday, June 27, 2012

யூரோ கால்பந்து போட்டி : முதலாவது அரையிறுதியில் ஸ்பெயின் - போர்ச்சுகல் பலபரீட்சை!


இன்று நடைபெறும் (27/06/2012) முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் Vs ஸ்பெயின் அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி

நாளை நடைபெறும் (28/06/2012) இரண்டாவது அரை இறுதியில் ஜெர்மனி Vs இத்தலி அணிகள் மோதல்.
இந்திய நேரம் : நள்ளிரவு 12:15 மணி

ஜூலை 1ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.

சென்னை : ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து


சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் ராயப்பேட்டை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநர் பிரசாத், நடத்துநர் ஹேமச்சந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் வடபழனியைச் சேர்ந்த முருகன், ராணி, பல்லவன், பானுப்ரியா உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்ணா மேம்பாலத்தின் அருகே உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே செல்லும் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணையர் திரிபாதி சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கவிழ்ந்துள்ள பேருந்தை நிமிர்த்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். பாண்டிபஜார் காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்து விழுந்ததும், பேருந்தில் இருந்து புகை கிளம்பியதும், பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு போன் செய்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீர் அடித்து புகையை நிறுத்தியுள்ளனர். பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளை, பொதுமக்கள் பலரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியே மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் போட்டிகள் துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், லண்டன் ஒலிம்பிக் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

தற்காலிகமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒலிம்பிக் கோலாகலத்தை எதிர்கொள்ள லண்டன் மைதானம் முற்றிலும் தயார்நிலையில் உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மைதானத்தில் ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது.

Tuesday, June 26, 2012

காலை உணவின் அவசியம்!


எடை குறைக்க வேண்டும் என்று ஆசை படுபவர்கள் காலையில் உணவை சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஏனெனில் இரவில் உண்ட பிறகு, நீண்ட நேர இடைவேளைக்குப் பின் காலை நேரத்தில் உணவு உண்போம். ஏனெனில் அப்போது உண்டால் தான் அந்த நாளை தொடங்குவதற்கு ஏற்ற சக்தியானது கிடைக்கும். இத்தகைய சக்தியை காலை உணவில் மட்டுமே கிடைக்கும். மதியம் கூட உண்ணாமல் இருந்து விடலாம், ஆனால் காலையில் உண்ணாமல் இருந்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்படி உண்ணாமல் இருப்பவர்கள், இதை படித்தப்பிறகாவது உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். 

காலையில் உண்ணாமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?

1. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும். அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு சக்கியானது தேவைப்படுகிறது. அதற்கு காலை உணவே சிறந்தது. 

2. சிலர் எடையை குறைக்க காலை உணவை மட்டும் தவிர்த்து, மற்ற நேரத்தில் கொஞ்சம் உண்பர். ஆனால் உண்மையில் காலையில் உண்ணாமல் இருந்து மதியம் குறைவாக உண்ண முடியாது, அப்போது வயிறு நிறைய தான் உண்பர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. மேலும் அத்தகைய உணவை உண்ணும் போது ஆரோக்கியமான உணவைக் கூட உண்ணமாட்டார்கள். ஆகவே இதனால் எடை தான் கூடுமே தவிர எடை குறையாது. 

3. மேலும் உணவை உண்ணாமல் இருந்தால் முதலில் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து, பின் கலோரியின் அளவு அதிகரிக்கும். மேலும் இது உடலில் மெட்டபாலிக் டிஸ்ஆடரை ஏற்படுத்தும். இதனால் எடை தான் அதிகரிக்கும். 

4. வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் காலை உணவை உண்ணாமல் சென்றால் அவர்களால் வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆகவே காலை உணவு அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தந்து கவனத்தை அதிகப்படுத்துகிறது. 

5. காலை உணவை உண்டால், உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரியானது விரைவில் கரைத்து விடும். 

6. மேலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் எப்போதும் நீங்கள் நடந்து கொள்வதையே பழகுவார்கள். இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களும் போக போக சாப்பிடாமல் தான் இருப்பார்கள். பின் அவர்கள் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆகவே அவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க நினைப்பவர்கள், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், அவர்களும் அதையே பின்பற்றுவார்கள். 

7. காலையில் உண்ணும் போது வேண்டுமென்றால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்கள், பழங்கள், பால் போன்றவற்றை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு எடையும் கூடாமல் அளவாக இருக்கும். 

8. வேலைக்குச் சென்று சிடுசிடுவென டென்சனாக இருக்கிறீர்களா? அகற்கு காரணம் வேலைப்பளு அல்ல. அதற்கு காரணம் காலை உணவை உண்ணாதது ஆகும். 

எனவே காலை உணவை சாப்பிடுங்க!
அன்றைய தினத்தை ஆரோக்கியமா ஆரம்பிங்க!!

Saturday, June 2, 2012

டாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) மொழிக்கு பொருந்தும்...


என்னப்பா ரொம்ப டையடா இருக்கு, வெளியிலே பிரியா கொஞ்சம் போய்ட்டு வரலாமுன்னு கிளிம்பி வந்தால் உட்காரும் இடத்தில் எல்லாம் பிரச்சனையாதான் பேசிக்கொண்டேயிருக்கிறாங்க. இந்த வார சூடான பிரச்சனைகள் நம்ம தவ்ஹீத் வாதிகளிடன் தன்மைகளைபப் பற்றிதான் அப்படியிப்படி பேசிக்கொண்டிருக்காங்கோ....
என்னென்ன பேசிராங்கன்னு கொஞ்சம் தெளிவா கேட்போம்..
என்னடா ஆளுக்காளு வர்ராங்க நாங்க தவ்ஹீத் அமைப்புன்னு சொல்லாறங்க ஆனா அவங்க செய்ற தப்ப சொன்னா மட்டும் ஒத்துகிடாமே விவாத அரங்கமே வைத்து தன்னை நியாயப்படுத்த முயற்சிக்கிறாங்க இதான் இவங்க கொள்கையா? மெளுலூது ஓதக்கூடாத செயல் என்பதை மக்கள் பல பேர் உணர்ந்து மெளலூது ஒதாத நிலைகள் மாறி வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒழிப்போம் நாங்கள் தான் என்ற வீம்பைக் கொண்டு திரும்பவும் தவறை தெளிவாக உணர்ந்தவங்களையயல்லாம் தங்களுடைய வீம்பான வார்த்தைகளாலும், தங்களுடைய சுயநலத்திற்காகவும் எதை எந்த நேரத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் பேசி, எதிலாவது தாம் அல்லது வேறு யாரையாவது சிக்க வைப்பது போன்ற யோசினைகளை மட்டும் சரியாக செய்து வருகின்றார்கள். இப்பவெல்லாம் ஒவ்வொரு அமைப்பிலும் இந்த சேவைகள் செய்தால் இத்தனை பாய்ண்ட்ஸாம். பாய்ண்ட்ஸ் கொண்டே அவர்களின் பதிவிகள் உயர்த்தப்படுதாம். இப்ப நடந்த ஹந்துVரி பிரச்சனைகளில் கூடு செய்தவர் கூட தவ்ஹீத் கொள்கையை கூறும் கொள்கைவாதிகளின் அங்கத்தினராம். பெயருக்காக செய்ய துடிக்கும் செயல்கள்தான் அதிகம் அதிகம் இன்று. ஆக இந்த சேவையின் எண்ணங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
தவ்ஹீத்வாதிகளுக்கு அன்பான கவனத்திற்கு : நமது TNTJபள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால் இந்த பள்ளிவாசலில் வைக்கப்படும் தொழுகை நேரங்களில் ஒலிப்பெருக்கி அதிக சத்தத்துடன் தொழுகை நடைபெறுவதால் மிக நெருக்கத்தில் இருக்கும் மதரஸா பள்ளிவாசலில் நடைபெறும் தொழுçக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சென்ற நோன்பு நேரத்தில் பல முறை அந்த நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களிடையே கூறியும் கூட இந்த இடையூறுகள் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. TNTJ பள்ளியில் தொழுகைகள் சிறப்பாக நடக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆனால் மிக நெருக்கத்தில் இருக்கும் பள்ளியில் தொழுபவர்களுக்கு இடையூறில்லாமல் இருக்க முயற்சிக்கலாமே.
நன்மையான விசயத்தை ஏவி நாம் தவ்ஹீத்வாதிகள் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்வோமாக!

Friday, June 1, 2012

பான் கார்டின் முக்கியத்துவம்நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...

பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.

ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான் கார்ட் உதவுகிறது.

பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் AFZPK7190K என்று வைத்துக் கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.

“P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

பான் கார்ட் வைத்திருப்பது கட்டாயமா?

ஆமாம். பான் கார்ட் மிக மிக அவசியமானதே. வங்கியில் பணப் பரிமாற்றத்துக்கும், வருமான வரித்துறைக்கு நமது கணக்குகளை சமர்பிக்கவும் இது கட்டாயமாகும்.

எப்படி இதைப் பெறுவது?

வருமான வரித்துறையின் Form 49 விண்ணப்பத்தில் இதைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.

உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற
https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையத்தளத்தை நாடலாம்.

இந்திய குடிமகன்கள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.

1. பள்ளி டிசி
2. பிளஸ் டூ சான்றிதழ்
3. கல்லூரி் சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு விவரம்
5. கிரடிட் கார்ட் ஸ்டேட்மென்ட்
6. வாட்டர் பில்
7. ரேசன் கார்ட்
8. வீட்டு வரி ரசீது
9. பாஸ்போர்ட்
10. வாக்காளர் அட்டை
11. ஓட்டுனர் உரிமம்
12. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

அதே போல விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.

1. மின் கட்டண ரசீது
2. தொலைபேசி கட்டண ரசீது
3. வங்கிக் கணக்கு விவரம்
4. வீட்டு வாடகை ரசீது
5. பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
6. பாஸ்போர்ட்
7. வாக்காளர் அடையாள அட்டை
8. வீட்டு வரி ரசீது
9. ஓட்டுனர் உரிமம்
10. ரேசன் கார்டு
11. எம்பி அல்லது எம்எல்ஏ அல்லது கவுன்சிலர் அல்லது கெஜட்டட் அதிகாரியிடம் பெறப்பட்ட Certificate of identity கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போதுமானவை.

Monday, May 28, 2012

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

டெ‌ங்குவை பர‌ப்பு‌ம் அ‌திபய‌ங்கர ஏடி‌ஸ் கொசு - தப்பிப்பது எப்படி ?

Webdunia
FILE
நெ‌ல்லை, தூ‌த்து‌க்குடி உ‌‌‌ள்‌ளி‌ட்ட தெனமாவட்மக்களஅதிரவை‌க்கு‌ம் அதிபயங்கரமாக கொசு ஏடிஸ் கொசு. இ‌ந்த கொசஎப்படி பிறக்கிறது? இதகடித்தாலஎன்னவாகும்? டெங்கஏற்படுவதற்காஅறிகுறி என்ன? வராமலதடுப்பதஎப்படி? வந்தாலதடுப்பதஎப்படி? என்பதகுறித்தகோவமாவட்சுகாதாரத்துறஇணஇயக்குனரசெந்தில்குமார் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அவ‌ர் அ‌ளி‌‌க்கு‌ம் தடு‌ப்பு நடவடி‌க்கைக‌ள்: வழக்கமாகொசுக்களதேங்கி கிடக்குமகழிவுநீரிலஇருந்தஉற்பத்தி ஆகும். ஆனாலஏடிஸகொசதேங்கி கிடக்குமநல்தண்ணீரிலஇருந்தஉற்பத்தியாகுமஒரபூச்சி வகையசேர்ந்தது.

தேங்காயசிரட்டைகள், தெருவிலவீசப்பட்பிளாஸ்டிககப்கள், பழைபாத்திரங்கள், ஆட்டஉரல்களபோன்றவற்றிலதேங்கி இருக்குமமழநீரமூலமஇந்கொசுக்களஉற்பத்தி ஆகிறது. இவபெரும்பாலுமவீட்டிற்குள்ளுமவீட்டசுற்றியுமஅதிகமாவலமவரும்.

இந்வககொசுக்களநோயஎதிர்ப்பசக்தி குறைந்நபர்களையோ, குழந்தைகளையகடித்தாலஉடனடியாஅவர்களடெங்ககாய்ச்சலதாக்குமஅபாயமஉள்ளது. பெரும்பாலுமஇந்கொசுக்களகுழந்தைகளகடிக்கும்போதஎளிதிலநோயதாக்குதலுக்கஆளாவர்.

ஒருவரஏடிஸகொசகடித்தாலமுதலிலகாய்ச்சலவரும். உடலவலியுடனஎலும்புகளிலுமவலி ஏற்படும். இப்படி ஏதாவதஉடலவலிகளதொடங்கும்பட்சத்திலஅதடெங்ககாய்ச்சலுக்காஅறிகுறி என்றஅர்த்தம். உடனடியாஅரசஆஸ்பத்திரிக்கசென்றஉரிசிகிச்சமேற்கொண்டடெங்ககாய்ச்சலிலஇருந்தவிடுபடலாம்.

இந்நோயஎளிதிலகுணப்படுத்கூடிநோய். அதநேரத்திலபோதிசிகிச்சஎடுத்துககொள்ளாமலகாய்ச்சலதொடர்ந்தநீடித்தாலஉயிரிழக்குமஅபாயமுமஉள்ளதஎன்பதமக்களபுரிந்துகொள்வேண்டும். இந்நோயமுற்றிநிலையிலஇதகிருமிகளரத்தத்திலஉள்பிளட்லெட்களசாப்பிடும். இதனாலமனிஉடலிலஉள்ரத்தமஉரையும். வாய், மூக்கஉடலினபல்வேறபகுதிகளிலரத்கசிவஏற்படும். இதனாலவிலைமதிக்முடியாஉயிரஇழப்புமஏற்படும்.

அதனாலஇந்நோய்க்காஅறிகுறி தென்பட்டவுடனஉரிசிகிச்சமேற்கொண்டஉடல்நலத்தகாத்துககொள்ளலாம். அதநேரத்திலசுற்றுப்புறத்தமழைநீரதேங்காமலசுத்தமாவைத்துக்கொள்ளுதலமூலமாகவுமவீட்டிற்குளகொசுவராமலதடுப்பாஜன்னலிலகொசுவலைகளபயன்படுத்துவது, கொசஒழிப்பான்களபயன்படுத்துதனமூலமுமடெங்ககாய்ச்சலஏற்படுத்துமஏடிஸகொசுவவிரட்டி நோயவராமலதடுக்கலாமஎ‌ன்று டா‌க்‌ட‌ர் செ‌ந்‌தி‌ல்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Saturday, May 12, 2012

பள்ளி செல்வோம் – பள்ளி செல்ல உதவுவோம்

ஓதுவீராக! உங்களை படைத்த இறைவனின் திருப்பெயரைக்கொண்டு என்று ஆரம்பமான வேத வெளிப்பாட்டின் முதல் வரிகள் தொடங்கி, குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் கல்வி, சிந்தனை, அறிவியல் தொடர்பாக அவற்றை வழியுறுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. இதனடிப்படையில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள், மனித குலத்திற்கு பயன்தரும் அளப்பரிய கண்டுபிடிப்புகளை பல்வேறு துறைகளில் வெளிக்கொணர்ந்தனர்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை

ஒன்றுபட்ட இந்தியாவில் கல்வி பிராமனர்களின் தனிச்சொத்தாக கருதப்பட்ட காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களே இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் இந்து-முஸ்லிம், ஆண்/பெண், ஏழை/பணக்காரன் என்ற பாரபட்சமின்றி கல்வி கற்கும் உரிமையை வழங்கினர்.

இந்தியாவில் தற்போது

22- மத்திய பல்கலைகழகம், 220-மாநில பல்கலைகழகம், 115-நிகர்நிலை பல்கலைகழம், 17-தேசிய கல்வி நிறுவனங்கள், 83% அரசு மற்றும் 17% தனியார் பள்ளி கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் 16 சதவிதத்தினராக இருக்கும் முஸ்லிம்கள் தென்இந்தியாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினரைவிட மிகவும் மோசமாக இருப்பதாக சச்சார் கமிட்டியின் அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும், முஸ்லிம்களில் 66 சதவீத்தினர் இன்னும் ஆரம்ப கல்வி பெறாமலேயே இருப்பதாக தெரிவிக்கிறது. இது தவிர்த்து ஹரியானாவில் 98 சதவீதமும், அஸ்ஸாமில் 74 சதவீதமும், ம.பி. 65 சதவீதமான முஸ்லிம் பெண்கள் கல்வி பெறாமலேயே இருக்கின்றனர்.

(National Family Health Survey - NFHS)

கிராமப் புறங்களில் வாழும் 50 சதவீத முஸ்லிம்களுக்கு கல்வி எட்டாக்கணியாகவே உள்ளது.

இதற்கான காரணங்கள்:

·         ஏழ்மை

·         அறியாமை

·         குழந்தை தொழில்

·         அரசின் மெத்தனப் போக்கு

·         முஸ்லிம் விரோதப் போக்குமுஸ்லிம்களின் நிலை


·         குடிசை மற்றும் சேரிப்புறங்களில் வாழ்க்கை

·         ரிக்ஷா ஒட்டுதல்

·         70 சதவீத முஸ்லிம்கள் வருமை கோட்டுக் கீழ்

·         மாத வருமானம் தேசிய வருமான உச்சவரம்பைவிட மிக குறைவு

·         தலித்களை விட பின்தங்கிய நிலை

-    National council of Applied Economic Research (NCAER) 1999

முஸ்லிம் சிறுவர்கள் தங்களது குடும்ப வருமானத்திற்காக ரெஸ்டாரண்ட், மொகானிக், தொழிற்சாலைகள் மற்றும் ஷூ பாலிஸ் போன்ற வேலைகள் செய்து மாதத்திற்கு வெறும் ரூ.150 மட்டுமே ஈட்டுகின்ற மோசமான நிலை.


·         33 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப கல்வி கூடங்களும், 40 சதவீத முஸ்லிம் கிராமங்களில் ஆரம்ப சுகாதார கூடங்களும் இல்லாத பரிதாப நிலை

·         மேற்குவங்கத்திலுள்ள, முர்ஸிதாபாத் மாவட்டம் 70 சதவீதம் (இந்தியாவிலேயே அதிக) முஸ்லிம்கள் வாழும் மாவட்டமாக இருந்த போதிலும், அதுவே இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையிலுள்ள மாவட்டமாகவும் இருக்கிறது.முஸ்லிம்களின் கல்வி நிலை:
இந்நிலையை சரிசெய்யும் முயற்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 3 வருடங்களாக பள்ளி செல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து தென் மாநிலங்களில் பல்வேறு பிரச்சாரம் மற்றும் உதவிகளைச் செய்து வருகிறது. அதிலொரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் ரூ.300/- மதிப்பிலான School Kit கள் மேற்கு வங்கத்தில் 10,000 மும், மணிப்பூரில் 1000 மும் வழங்கப்பட்டது.


இந்த கல்வியாண்டில் ஆந்திரா, ம.பி. உ.பி. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய ஏழு மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை 1-5 வரையிலான வகுப்புகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கு தேவையான School Kit வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.3 கோடியாகும்.

இந்த செயல்திட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்தும் முகமாக:

·         கல்வி வழிகாட்டி முகாம்கள்

·         வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம்

·         தத்தெடுத்தல் மூலம் மாணவனின் முழு கல்விச் செலவையும் ஏற்றல்

·         பொது கூட்டங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

·         படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மறுபடியும் சேர்பித்தல்

·         பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டி ஆர்வ மூட்டுதல்

·         ஒரு நபர் (ஆசிரியர்) பள்ளி கூடங்கள் அமைத்தல்

·         Sarva Shiksha Gram Project -  மூலம் முழு கிராமத்தையும் தத்தெடுத்து 100 சதவீத கல்வியை உறுதிசெய்வது

·         உதவித் தொகை வழங்குதல்

போன்ற எண்ணற்ற முயற்சிகளின் மூலம் நம் சமூகத்தை கல்வி ரீதியாக சக்திபடுத்த திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பூமியிலுள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள் மேலுள்ளவன் உங்களுக்கு கருணை காட்டுவான். – அபூதாவூது 4941

உங்களால் முடிந்த உதவிகளை செய்து மரணத்திற்குப்பின் பயன்தரும் நிலையான நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

-    தகவல் தொகுப்பு: முஅ ஸாலிஹ்
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.