அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, April 26, 2012

தட(டு)ம் மாறும் தவ்ஹீத்வாதிகள்
இன்று பலர் தவ்ஹீத் கொள்கை விளக்கம் பற்றி அழகான முறையில் தெளிவாக விளக்கமளித்து அனைவரும் உணரும் வண்ணமும் இந்த கொள்கை பற்றி கேள்வி பதில்களையும் அவ்வபோது கூறியும் வருகிறார்கள். இன்றைய கொள்கைகள் பற்றி விளக்கம் அளிப்பவர்களில் நேற்று தவறு செய்தவர்களும் இருக்கிறார்கள். கொள்கை உணர்த்தும் பொழுது (மக்கள்) கொள்கையே கேட்பவர்கள் பாருடா புதிதாய் முளைத்துவிட்டார்போலும். இவருடைய ஆட்டம் நமக்கு தெரியாதா? என்ற கேள்விகளை தனக்குள்ளும், சமயம் கிடைக்கும் பொழுது பகிரங்கமாக கேட்பதும் இன்றைய பழக்கமாகிவிட்டது. இதற்கு தவ்ஹீத் வாதிகளும் ஒரே பதிலைத்தான் கூறுகிறார்கள் அன்று நாஙகள் அப்படியிருந்தோம் இன்று இப்படி மாறிவிட்டோம். என்று மட்டுமே தனக்கு சாதகமாக காரணத்தை மட்டுமே கூறுவதையே வழக்கமாக்கியுள்ளார்கள். தவ்ஹீத் கொள்கையே தாங்கள் ஏற்பதற்கு முன் வரதட்சனை வாங்கிருந்தோம் கொள்கைக்கு மாறிய பின் அதனை நான் கொடுத்துவிட்டேன் என்று பதிலை பெரும்பாலானோர் ஏன் கூறுவதில்லை. நான் ஒரு மனிதனுக்கு நஷ்டம் இளைத்துவிட்டேன் தவ்ஹீத் கொள்கைக்கு பிறகு நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் என்ற உண்மை ஏன் உணர்த்துவதில்லை. இன்னும் எத்தனை எத்தனை பாவங்கள் செய்து இன்று நாம் தவ்ஹீதை மாறிவிட்டோம் என்று உதட்டளவில் சொன்னால் நமக்கு நன்மை கிடைத்துவிடுமா? திருமணம் முடித்தபிறகு பெண் வீட்டில் வாழ்வதற்கு தனக்கு சாதகமாக இன்று ஹதீஸ்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தவ்ஹீத் வாதிகள். தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்கள் வெளிப்படையில் வரதட்சனை போன்ற பாவத்தை செய்யாமல் மனதினுள்ளே, பணக்காரவர்களையும், பின்பக்கபலத்தையும் பார்த்து கொண்டி திருமண முடிக்கிறார்கள். எண்ணத்தை அறிபவன் நிச்சயம் நமக்கு அதற்குரிய கூலியை கொடுப்பான். வரதட்சனை வாங்கி அதன் மூலம் தொழில் நடத்தி வருமானம் பெற்றும்கூட தவ்ஹீத் கொள்கையை ஏற்றப்பின் தவறு செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொள்பவர்கள் திருப்பிக்கொடுப்பதில் தடம் புரண்டுகொண்டிருக்கிறார்கள். இது விமர்ச்சனத்திற்காக கூறவில்லை நாமும் தவ்ஹீத்வாதி என்ற தங்களின் பெருமைத்தனத்தை தாங்களே அகற்றிக்கொள்ளுங்கள் நாம் நமது இந்த தவ்ஹீத் கொள்கையை சரிவர பின்பற்றவில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உண்மையில் சிலர் எண்ணத்தால் உயர்ந்திருப்பார்கள் அவருக்கு அல்லாஹ் அருட்கொடையை நிச்சயம் வழங்குவான் அப்பொழுது திருப்பி கொடுத்துவிடுங்கள். அல்லாஹ் அஞ்சுங்கள். அல்லாஹ் தம்முடைய பொருட்களையோ பணத்தையோ. திறனையோ, பேச்சுத்திறனையோ பார்ப்பதில்லை உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே உணர்ந்து செயல்படுங்கள்...

Tuesday, April 24, 2012

குடும்பக்”கொல்லி”யை ஊரைவிட்டு(த்) துரத்த....

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்று சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தை பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாய சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஓன்று இவ்வூரில் பிரபல தொழில் அதிபர்கள், கல்வி சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்டம் தெரிந்த வல்லுனர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டுருக்கிற ஊரில்.........”மதுக்கடைகள்” !

இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில்
அழைத்துச் சென்றுவிடும்.

இடம் : பட்டுக்கோட்டை ரோடு ( பாத்திமா நகர் அருகே )

மதுக்கடை + கூடம்” ஜருராகத் தயாராகிறது நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவமனை எனும் சிறப்பைப் பெறுகிற “ஷிஃபா” அருகே............
மேலும் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிற சாலைப்பகுதி, அதிரை மின்சார வாரியம், இன்டேன் காஸ் நிறுவனம் போன்றவை அமைந்துள்ளப் பரபரப்பானப் பகுதியின் அருகே...........


இடம் : E.C.R சாலை ( பெரிய ஏரி அருகில் )
ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய 60 வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. இச்சாலையில் நமதூரைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சிலர் அதிகாலைப்பொழுதிலும் வேறுசிலரோ மாலை நேரங்களிலும் “வாக்கிங்” “சைக்கிளிங்”,”ஜாக்கிங்” போன்றவற்றை செய்வதுண்டு.
மேலும் இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் இவ்வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய “மதுக்கடை”

சமீபத்தில்தான் மதுவின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி “குடிக்காதே”எனும் தலைப்பிட்டு விழிப்புணர்வைத் தூண்டும் விதமாகக் கட்டுரை ஓன்றைப் பதிந்த எனக்கே இக்கூடங்களைக் கண்டதும் மிகவும் மன வேதனையடையச் செய்ததே...............!

அப்போ உங்களுக்கு எப்படி இருக்கும் ?


நமதூர் பிரபல அரசியல் கட்சிகளே !
சமுதாய அமைப்புகளே !!
இயக்கவாதிகளே !!!
தொண்டு நிறுவனங்களே !!!!
சமூக ஆர்வலர்களே !!!!!
மாணவ, மாணவிகளே !!!!!!
பொதுமக்களே !!!!!!!

எழுந்துருங்கள் ! தயாராகுங்கள் !! புறப்படுங்கள் !!! இதுபோன்ற குடும்பக்கொல்லியை ஊரைவிட்டு துரத்துவதற்கென்றே.................

சேக்கனா M. நிஜாம்

இறைவன் நாடினால் ! தொடரும்......................

Tuesday, April 17, 2012

AFFA வின் 9ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி சிறப்பாக துவங்கியது ..

அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் AFFA வால் நடத்தப்படும் 9ஆம் ஆண்டு  கால்பந்து தொடர் போட்டி நேற்று முன்தினம்  சிறப்பாக துவங்கியது முதல் நாள்  ஆட்டத்தில் கலைவாணர்கண்டனூர் அணியும் பொதக்குடி அணியும் மோதியது 4-1 என்ற கோல் கணக்கில்  கண்டனூர் அணி வெற்றி பெற்றது .இரண்டாம் நாள் நேற்று(16/4/12) நடைபெற்ற  ஆட்டத்தில் ஆலத்தூர் அணியும்தஞ்சை அணியும் மோதியது 2-1 என்ற கோல் கணக்கில் தஞ்சை அணி வெற்றி பெற்றது .

இன்று (17/4/12)நடைபெறும் கால் இறுதி போட்டியில் தஞ்சை அணியும் கண்டனூர் அணியும் மோதிகின்றன .

Sunday, April 15, 2012

காதிர் முகைதின் கல்லூரியில் இலவச லேப்டாப்(மடிக்கணினி) வழங்கும் நிகழ்ச்சியின் காணொளி

அதிரை காதிர் முகைதின் கல்லூரியில் நேற்று(14/4/12) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் வைத்தியலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசு அறிவித்த இலவச லேப்டாப் வழங்கினார் கல்லூரியில் பயிலும் முதலாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் சுமார் 534 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது .

தமிழகத்தின் மூன்று முக்கிய அகலப்பாதை திட்டங்கள் ஆமை வேகம்: எம்.பி.,க்கள் பாராமுகம்மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், இன்னும் மீட்டர் கேஜ் பாதைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, இந்த பட்ஜெட்டிலும் அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கான நிதி சொற்பமாகவே உள்ளது. மிக முக்கிய மூன்று திட்டங்களுமே கண்டு கொள்ளப்படாமல் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீட்டையே பெற்றுள்ளன. தமிழக எம்.பி.,க்களின் பாராமுகமும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கு விடிவு எப்போது கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் மட்டுமே இருந்தன. நாட்டின் பிற மாநிலங்களில் எல்லாம், ரயில் பாதைகள் அகலப் பாதைகளாக, அப்போதே மாற்றம் பெற்றுவிட்டபோதிலும், கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தமிழக ரயில் பாதைகள் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தன. இந்த சூழ்நிலையில், ரயில்வே இணையமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த வேலு இருந்தபோது, இவ்விஷயத்தில் ஒருவித தீர்வு கிடைக்க ஆரம்பித்து, தற்போது தமிழகத்தில் 60 முதல் 65 சதவீதம் வரை அகலப் பாதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன.

பல ஆண்டு சோகம்: தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்று முக்கிய அகலப்பாதை ரயில் திட்டங்கள் உள்ளன. அதில், முதலாவது மதுரை - கோவை இடையிலான திட்டம். பழமையும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்நகரங்களுக்கு இடையே, அகலப்பாதை இல்லை என்ற சோகம், பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை தற்போது இரட்டைப் பாதை உள்ளது. திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி - கோவை வரையிலும், பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரையிலும் இரட்டைப் பாதை அமைக்கும் திட்டம், கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது
தாமதமாகும் முதலில் 750 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், ஆமை வேகத்தில் நடைபெறத் துவங்கியதால், திட்டச் செலவும் அதிகரித்து தற்போது 1,300 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. மொத்தம் 224 கி.மீ., தூரம் கொண்ட இந்த திட்டத்திற்கு, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வெறும் 70 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. இன்னும் 555 கோடி ரூபாய் கிடைத்தால் தான், திட்டத்தைப் பற்றி நினைத்தே பார்க்க முடியும். இந்த வேகத்தில் போனால், இந்த திட்டம் முடிவடைய நான்கைந்து ஆண்டுகள் வரையாகும்.

குரல் கொடுக்க யாருமில்லை: அடுத்தது மயிலாடுதுறை - காரைக்குடி அகலப்பாதை திட்டம். இந்தத் திட்டம் ஆரம்பித்த பிறகு, புதிதாக இரண்டு கிளைகளும் சேர்க்கப்பட்டன. அதாவது, நீடாமங்கலம் - மன்னார்குடி மற்றும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு பாதைகளும் அகலப்பாதை திட்டமாக்கப்பட்டன. மயிலாடுதுறை - காரைக்குடி அகலப்பாதை திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டு விட்டால், தமிழகத்திற்கு நெடுக்குவாக்கில் மூன்றாவது லைன் கிடைத்துவிடும். சென்னையில் இருந்து தென்தமிழகம் செல்வதற்கு இரண்டு பாதைகள் ஏற்கனவே உள்ள நிலையில், இது மூன்றாவது பாதையாக மாறிவிடும். மயிலாடுதுறை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி என, சென்றுவிட்டால் போதும். ஏற்கனவே காரைக்குடி - மானாமதுரை பாதை தயாராக இருப்பதால், மானாமதுரையில் இருந்து விருதுநகர் சென்று தென்கோடி வரை இந்த பாதை மூலம் சென்று விடலாம். இந்த திட்டத்தின் அருமை சரிவர தெரியாமல், இது பற்றியும் பெரிய அளவில் குரல் கொடுக்க, தமிழக எம்.பி.,க்களில் யாரும் இல்லை. இந்த திட்டத்தில், மயிலாடுதுறை - திருவாரூர் இடையில் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், திருவாரூர் - காரைக்குடி பணிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இந்த வேகத்தில் சென்றால், இந்த திட்டம் இன்னும் 10 ஆண்டுகளானாலும் நிறைவேறுவது கடினமே

அமைச்சரின் தொகுதி: இத்தனைக்கும், உள்துறை அமைச்சரின் சொந்த தொகுதி வழியாகவும் இந்தப் பாதை செல்கிறது. அவரது சொந்த ஊரான கண்டனூரும் கூட இதில் வருகிறது. அப்படியிருந்தும் கூட, இந்த ரயில் திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, செலவும் கூடிவிட்டது. தற்போது இந்த திட்டத்தின் செலவு 1,005 கோடி ரூபாய் வரை வந்து விட்டது. இதுவரைக்கும் 323 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் 70 கோடி தான் கிடைத்துள்ளது. இன்னும் 622 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

பெங்களூரை இணைக்கும் இன்னொரு திட்டம், கடலூர் - சேலம் இடையிலான அகலப்பாதை திட்டம். இந்த திட்டமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. துறைமுக நகரான கடலூருக்கு பெங்களூருவுடன் இணைப்பை இந்த திட்டம் அளிக்கும். வர்த்தக நோக்கில் மிகப்பெரும் பயனை தமிழகத்துக்கு அளிக்கும் இந்த திட்டம், விருத்தாசலம் வழியாகச் செயல்படவுள்ளது. ஆனாலும், ஆமை வேகமே இந்த திட்டத்திலும் காணப்படுகிறது. 718 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டும் இதுவரை 160 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில், 5 கோடி தான் கிடைத்துள்ளது. இன்னும் 400 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இப்படி, தமிழகத்தின் மிக முக்கிய மூன்று திட்டங்களுமே கண்டு கொள்ளப்படாமல் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ளன. தமிழக எம்.பி.,க்களின் பாராமுகமும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அகலப்பாதை ரயில் திட்டங்களுக்கு விடிவு எப்போது கிடைக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றி: தினமலர்

Saturday, April 14, 2012

AFFA அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் கால்பந்து தொடர் போட்டி நாளை (15/4/12) துவக்கம்

அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் AFFA வால் நடத்தப்படும் 9ஆம் ஆண்டு  கால்பந்து தொடர் போட்டி நாளை (15/4/12)கிராணி மைதானத்தில் நடைபெற உள்ளது
முதல் ஆட்டமாக பொதக்குடி அணியும் கலைவாணர் கண்டனூர் அணியும் மோதிகின்றன.

இமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு காணொளி

12 ஆம் நூற்றாண்டில் ஹதிஸ் கலை வல்லுனராக திகழ்ந்த இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் தமிழ் தொகுப்பு .


இமாம் புஹாரி அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம் 1

இமாம் புஹாரி அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம் 2

சிரியாவில் நடப்பது என்ன? - உண்மைச் சூழல் !


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே !?.

உலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும் பொங்கியெழுந்து எதிர்க்கிறோம். அமெரிக்கா ஏதாவது ஒரு இஸ்லாமிய நாடு(?)க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள்? என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா? அல்லது தவறா? என்பதை அலசவல்ல இந்த பதிவு.

முஸ்லீமாகிய எம்மக்கள் எப்படி தங்களின் ஈமானுடன் சிரியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த போராடுகிறார்கள் என்பதனை உண்மைச் சம்வங்களோடு காணொளிகள் காட்டுடன் இங்கே உங்களின் பார்வைக்கும் இறையச்சம் உடைய மக்களின் இறைஞ்சலுக்குமாக வைக்கிறோம். மேலும், இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்புகளை கொண்டு ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் மக்களை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் இந்த காணொளிகளில் காண இருக்கிறீர்கள். இதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள் நிறைய உள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கலீபாக்களில் உமர் (ரழி) அவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கே. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

சிரியாவின் ஆட்சியாளர் அலாவி(!!??) என்ற மதத்தை சார்ந்தவர்கள், குர்ஆன் சுன்னா இவர்களின் வழியல்ல, அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வாக ஏற்றுக்கொண்ட கூட்டம் தான் இந்த அலாவி மத்தத்தவர். இந்த இனத்தின் வந்த சிரியா அதிபர் அஸாத் பஸரை முன்னிருத்தி அல்லாஹ்வுக்கு இணையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளரின் அபிமானிகளும் கைக்கூலிகளும் அந்த நாட்டின் கேடுகெட்ட பாதுகாப்பு படையினரும். இதோ இந்த காணொளியை பாருங்கள்.. அல்லாஹ்வையும் பின் தள்ளுவோம் என்று நெஞ்சலுத்தத்துடன் சொல்லும் இந்த இணைவப்பவர்களின் சிரியா அரசு பிரதிநிதி ஒருவன். சுப்ஹானல்லாஹ்.. அபூஜஹலின் கொடூர சரித்திரம் ஞாபகத்துக்கு வரும் இவந்த கொடுங்கோலர்களின் செயல்.


இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜும்மா மேடைகளில் பிரச்சாரம் செய்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் ஆட்சியாளர்களையல்ல என்று மக்களை நேர்வழியில் பக்கம் அழைத்து வருகிறார்கள். அப்படி செய்யும் இஸ்லாமிய மார்க்க பிரச்சார்களை (தாயிக்களை) தேடிப்பிடித்து கொலை செய்கிறார்கள் இந்த கொடுங்கோலன் அசாத் பஷார் கூட்டத்தார்கள். சுப்ஹானல்லாஹ்! இந்த மனிதர் படும் பாட்டை பாருங்கள். வேறு வழியில்லாமல் தன் உயிரை காப்பாற்ற அஸாத் பற்றிய இணைவைப்பு வாசகத்தை சொல்லுகிறார், பிறகு கொடூரமாக கொள்ளப்படுகிறார் இந்த தாடிவைத்த ஒரு முஸ்லீம். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஃவூன்.

தயைகூர்ந்து இலகியமனம் படைத்தவர்கள், சிறுவர்கள், பெண்கள் இந்த காணொளிகளை கானுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். காண சகிக்காத காட்சிகள். இத்தகைய காணொளிகள் நம்முடைய ஈமானை பலப்படுத்தவும் எந்த நிலையிலும் நம்முடைய இறையச்சம் ஊசலாடாமல் பாதுகாக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்நோக்கத்தில் பதியப்பட்டிருக்கிறது.


இதோ பாருங்கள் அல்லாஹ்வின் இறையில்லங்கள் தாக்கப்படுகிறது


இந்த இறையில்லங்களை இடிக்கும்போது அம்மக்கள் சத்தத்துடன் அழும் குரல் பார்க்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கண்ணீர் வரும். சுப்ஹானல்லாஹ்..

சுதந்திரம் வேண்டும் என்று போராடும் நம் முஸ்லீம் மக்கள் நடத்தும் போராட்டத்தில் நடந்த இந்த போர்களத்தை பாருங்கள்.பெற்ற தாயை மருத்துவமனைத்து அழைத்துச்சென்ற மகனும் தாயும் தாய் ஷஹீதாஹிவிட்டார், மகன் படுகாயமடைந்து விட்டார். காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த சகோதரனை மீட்டெடுக்கும் காட்சியை பாருங்கள். உலகத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு கொடுரமான திரை மற்றும் காணிளி காட்சிகளிலுல் கூட காண்டிருக்க மாட்டீர்கள்.


அசத் பஷாரை அல்லாஹ் என்று சொல்ல மறுக்கும் ஒரு முஃமீன் ஷஹாதா சொல்லிக்கொண்டிருக்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்து உடனே கழுத்தை அறுத்து கொல்லப்படுகிறார்…

இதன் காணொளி தற்போது யூடியூபால் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

சிரியாவில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள்.
அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
எவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ஆனால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.
மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.
யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு அல்லாஹ் மன நிம்மதியை அளித்தருள்வாயாக..

அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…
யா அல்லாஹ்! சிரியாவில் உள்ள முஸ்லீம் உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

தயைகூர்ந்து நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், அவர்களுகாக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
சிரியாவின் ஆட்சியாளரின் அலாவி (ஷியாவின் ஒரு பிரிவு) மதம் மற்றும் இதன் வரலாறு பற்றி விரிவாக தனி பதில் இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.

தொகுப்பு: அதிரைநிருபர் குழு

Friday, April 13, 2012

இக்காலமும் வரும்...

பிறப்பால் முஸ்லிம் என்று இந்தியாவில் சற்று பின்தள்ளி வைத்துவிடுகிறார்கள் என்ற முழுக்கங்கள் இன்றைய பொழுதுகளின் ஓசையின் ஒலி சக்தி வலு இழந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மை நாம் தற்பொழுது அறிந்துக்கொண்டிருகிறோம். பெரும் அறிஞர்களும் சிந்தனை வாதிகளும் உண்மையறிந்து வேறு மதத்திலிருந்து இஸ்லாத்தின் பால் திரும்பி வந்துவிடுகிறார்கள். நம்மைப் படைத்தவன் கூறிய வசனங்களை அலசி ஆராய்ந்து பார்த்தும் அண்ணல்நபி(ஸல்) காட்டிச்சென்ற வழிமுறைகளின் உண்மைகளின் உன்னதத்தையும் தெரிந்து இறைவன் கூறியதுபோல் நேர்வழிக்கு வந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகம் என்பதும், விரைவில் இஸ்லாமி வழிமுறைக்கு மாற்றம் கிடைக்கும் என்பதும், மிலாதுநபி விழாவில் கூட ஒயின்ஸ்கடைகள் விடுமுறை என்ற அறிவிப்பு நம் உணர்வுகளுக்கு ஒரு சிலிர்ப்பை தந்தாலும் உண்மை ஒரு நாள் அதன் சுயஉருவத்தை காட்டும். இன்றைய காலண்டர்(ஜூம் தினம், அரசு விடுமுறை) இக்காலம் விரைவில் வரும் என்பதை உணர்த்துகிறதோ? என்ற சிந்தனையை உண்டாக்குவதுபோல ............
Tuesday, April 10, 2012

அதிரையின் புதிய அரசியல்...அதிராம்பட்டினத்தில் பெரும்போட்டிகளிடையே வெற்றி பெற்ற சேர்மன் நமதூர் S.H.அஸ்லம் அவர்கள். துணைச்சேர்மனுக்கு பெரும் பெரும் போட்டியை தழுவி வெற்றியைக் கண்டவர் நமதூர் A.பிச்சை அவர்கள். சேர்மன் பதவியேற்றதும் ஆங்காங்கே துடிப்பாய் செம்மையாய் அதிரையை வலுப்படுத்துவேண்டும் என்று பல விதமான நேரடி ஆய்வுகளை மேற்க்கொண்டு தனது பணியை செம்மையாய் செய்து கொண்டிருக்கிறார்(கள்). துணைச்சேர்மன் அவர்கள் அதிரையில் ஆரவராமாய் களப்பணிகளில் இறங்கவில்லையோ என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் சேர்மன் மற்றும் பேரூராட்சி செயல்அதிகாரி பெயர் மட்டும் பொருந்திய அதிக நோட்டிஸ்கள், பேனர்கள் வெளியாகியிருக்கின்றன. அரசியல் விவகாரம் நம்ம தலையிட்டால் நாமும் ..... என்பது அனைவரும் புரிந்த உண்மை.

தற்பொழுது எல்லை கல் போர்டுகளில் சேர்மன் பெயர் திமுக வண்ணத்திலும், துணைச்சேர்மன் பெய்ர் அதிமுக வண்ணங்களிலும் எழுதி அசத்தியுள்ளார்கள். ஏரிப்புறக்கரை மற்றும் கிராமப்புறங்களில் இதுபோன்ற அசத்தல் செயல்கள் அவர்கள் செய்யவில்லை. அதிரைவாசிகளுக்கு சேர்மனும், துணைச்சேர்மனும் அவரவர்களின் கையயழுத்துக்களை கட்சி வண்ணத்தில் எழுதினால்கூட கவலைதெரிவிக்கமாட்டார்கள் போலும்.
பேரூராட்சி மூலம் செய்யக்கூடிய ஒவ்வொன்றும் மக்களுக்கு சேவைசெய்யும் தலைவனாகவும், தொண்டனாகவும் செய்யவேண்டும் இது தனிப்பட்டவர்களின் பணம் அல்ல அதிரைபேரூராட்சியின் பணம் இது போன்ற செயல்களில் (தலைவர்களும்.பணியாளர்களும்) உங்கள் சுயநலத்தை திணிக்காதீர்கள். மக்களின் அடிப்படை தேவையை அழகாய் பூர்த்திசெய்துகொடுத்தால் இந்த வண்ணத்தைவிட அழகாய் ஜொலிக்கும் உலகம் முழுதும் உங்களது பெயர்கள்.

விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்


சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.

இதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கின்றன.
பிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் - ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.

ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.
வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.
இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் ""ப்யோபால்'' என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.

பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.

இந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

Monday, April 9, 2012

அட நம்புங்கப்பா இது IPL இல்ல அதிரையில் நடந்த APL தான் ! காணொளி இணைப்பு ..

முதல் பாகம் ..

இரண்டாம் பாகம்

அதிரை நடத்திய ஒரு நாள் மின்னொளி கிரிக்கெட் தொடர்போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்றது சமார் 50 அணிகள் பங்குபெற்ற இந்த தொடர் போட்டி  நேற்றைய முன்தினம் இரவு சரியாக 8  மணிக்கு அதிரை கிராணி  மைதானமே மின்னொளியில் ஜொலித்தது. விண்ணை பிளந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தன. ஆம் அதிரை வரலாற்றிலயே முதல் முறையாக மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியை அதிரை AFCC அணி நடத்தியது. முதல் போட்டியை சொந்த அணிகளான AFCC A vs AFCC B அணிகள் காட்சி  போட்டியாக விளையாடின.  இரவு முழுவதும் தொடர்ந்து  நடைபெற்றது. பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்தனர். இதில் இறுதி ஆட்டம் நேற்று (8/9/12) மாலை நடைபெற்றது. AFCC vs VCC  வேதாரண்யம் அணிகள் மோதின. இதில் அதிரை அணியான AFCC  சம்பியன் ஆனது. இதன் முலம் முதல் மின்னொளி கிரிக்கெட் தொடர் போட்டியில் சம்பியன் ஆனது.    

Sunday, April 8, 2012

அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி பாகம் -3


Saturday, April 7, 2012

அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி பாகம் -2
அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி பாகம் -1
Thursday, April 5, 2012

அதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்​வுப் பொதுக்கூட்​டம் நேரலை

 • பெருகி வரும் காதல் ஓட்டங்கள்!
 • காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்!
 • சந்தி சிரிக்கும் சமுதாய கௌரவங்கள்! 
காரணம் என்ன?
 • பொறுப்பற்ற பெற்றோர்களா?
 • இஸ்லாமிய கல்வி இன்மையா? 
 • வரதட்சணையா?
 • செல்போனா?
 • சினிமா, சின்னத்திரைகளா?
 • பிற மதக் கலாச்சாரமா?
 • சினேகிதமா?
 • கடமைகளை மறந்தோர் யார்? 

என்பன போன்ற சமீபகாலச் சீர்கேடுகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலச வருகிறார்கள்.

சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் (மாநிலத் துணைத்தலைவர், JAQH)
இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் என்ற தலைப்பிலும்,

மவ்லவி மீரான் ஸலாஹி அவர்கள்
நரக வேதனை யாருக்கு? என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் 05.04.2012 வியாழக்கிழமை பின்னேரம் மஃரிபுக்குப் பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி முன்புறம் நடைபெறும்.

குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சரிநிகர் இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியூர், வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும்
http://www.adiraibbc.blogspot.com/

http://www.adirainirubar.blogspot.com/

http://www.adiraixpress.blogspot.com/

http://www.adiraimujeeb.blogspot.com/

http://www.adiraitiyawest.blogspot.com/

http://www.aimuaeadirai.blogspot.com/
ஆகிய தளங்களில் நேரலை செய்யப்படும்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் படிப்பினைமிக்கதோர் உரையாக அமையவுள்ளதால் உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)
அதிராம்பட்டினம்.

Wednesday, April 4, 2012

மின் கட்டணம் குறைப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு.


சென்ற மாதம் கடுமையாக உயர்த்தப்பட்ட மின்கட்டணங்களை, சிறிதளவு குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. 

மார்ச் 30ம் தேதி தமிழக மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட மின் கட்டண உயர்வு பற்றிய விபரம். 

100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.10 பைசா. 
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.80 பைசா. 
201 யூனிட் முதல் 250 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3 
251 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 பைசா.
500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 75 பைசாவாக உயர்த்தப்பட்டது. 

03 - 04 - 2012 அன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திருத்தியமைக்கப்பட்ட புதிய மின் கட்டண விபரம்.


100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.
101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.50 பைசா. 

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படுகிறது.


500  யூனிட்டுகளுக்கு  மேல் உள்ள கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த  புதிய மின் கட்டண குறைப்பு வீட்டு மின் பயனீட்டாளர்கள் மட்டுமே பொருந்தும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.