அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, March 29, 2012

கல்லூரி இனிமைகள்...



அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களது இறுதியாண்டு நிறைவுசெய்து இறுதிதினத்தை சந்தோசத்துடனும், தங்களது பிரிவுகளை வருத்தத்துடன் ஒவ்வொருவரும் பிரிவு உபசரிப்புகளுடன் தங்களது வேலைவாய்ப்புகளுக்காகவும். மேற்படிப்புகளுக்காகவும் திசைகள் மாறி இந்த சிறகு முளைத்த கல்லூரிபறவைகள் சிறகு விரித்த பரந்துசெல்கின்றன. இந்த கல்லூரியை விட்டு செல்லும் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை அள்ளி வழங்குகின்றோம். இந்த இளைஞர்கள் நாளை மேதைகளாகட்டும்...
படித்தவர்களுக்கு தெரியும் இந்த கல்லூரியின் காலங்கள் .... ஆண்டுகள் பல சென்றபின்னும் இந்த வாழ்க்கை பாடம் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்றுமே.







கற்பவையயல்லாம் கல்வியயன்றால்...




உம் நட்பென்பதும் கல்விதானோ!




கல்வி கூடத்தில்தானே பிறந்தது உம் நட்பு.
சோர்ந்துகிடக்கும்பொழுதும்




சோகங்கள் தாக்கும்பொழுதும்




உனக்குள் சிகிச்சையளித்தவனே!




நட்பின் மகத்துவம்




உமக்கு மருத்தவம் தேவையில்லையோ!?
உம்மில் கற்ற அன்பும்




உம்மில் நிறைந்த இன்பமும்




உம்மை சேர்த்த கல்வியும் இருக்கும் வரை




உமக்குள் ஏக்கமிருக்கும்....




உம்மை காணவில்லையே என்று!
மீண்டும் உம் சந்திப்பு




நட்பு(பூ)க்களுக்கு வாசமாய் உயர்திருக்கட்டும்.




வலைதள வாசகர்களும் உதிரிப்பூக்களில் (பின்னூட்டத்தில்)இந்த இளைஞர்க்கூட்டத்தை வாழ்த்தலாமே....




வாழ்த்தக்களோடுஅதிரை பிபிசி









Wednesday, March 28, 2012

காரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்வே இலாகாவின் புதிய அறிவிப்பு.


காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் வண்டி 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ்  போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும்  பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது. 


புதிய வழித்தடத்தையோ, புதிய ரயிலையோ   நாம் கேட்கவில்லை. தற்பொழுது உள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி இந்த வழித்தடத்தில்  ஏற்கனவே  சென்றுகொண்டிருந்த கம்பன் ரயிலைதான் இயக்க சொல்லுகிறோம்.

இந்த விசயத்தில் அதிரை, முத்துப்பேடை, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை ரயில்வே இலாகாவின் காதுகளுக்கு விழ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை

இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும்.

மேலும் விவரங்களை, 044 - 2825 2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும் ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நன்றி : இந்நேரம்.காம்

Monday, March 26, 2012

காதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.

கல்லூரியின் விளையாட்டு திடலில் அமைந்திருக்கும் சலாஹிய்யா அரபி கல்லூரியின் அருகே  புல் மிக நீளமாக வளர்ந்து காய்ந்து போய் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கின்றது. 25 - 03 - 2012 அன்று மாலை சுமார் 4 மணிக்கு  திடீரென அடர்ந்த புல் புதரின் மேல் தீப்பற்றிக் கொண்டது. தீ மள மள வென பரவவே உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைத்து, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து நடந்த கல்லூரியின் மைதானத்தின் சுற்று சுவருக்கு பின்புறம் மிக அருகில் பிலால் நகரின் பல குடிசைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாமல் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

காதிர் முகைதீன் கல்லூரி பள்ளிவாசல், சலாஹிய்யா அரபிக்கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் புல்  புதர்கள் வளர்ந்து காடு போல்  காட்சியளிக்கின்றது. விஷ ஜந்துகள் இந்த பகுதியில் இருக்க மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இரவு நேரங்களில் சலாஹிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள் அருகே இருக்கும் கல்லூரி பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.

கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி காடு மிகுந்து கிடக்கும் இந்த பகுதியை சுத்தம் செய்ய முன் வருவார்களா?


எரிந்து சாம்பலான புல் புதர்களை படத்தில் காணலாம்.

Sunday, March 25, 2012

அதிரை பேரூராட்சியின் அவசரக்கூட்டம் !



அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதன் நிர்வாகத்தினால் பிளாஸ்டிக் பை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது நாம் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிரை பேரூராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்களால் ஒரு சில இடங்களுக்குச் சென்று பிளாஸ்டிக் பை புழக்கத்தில் உள்ளனவா என கண்காணிக்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து இன்று மாலை பேரூராட்சியின் சார்பாக அவசரக்கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டது. 


இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு முழுவதும் நிறைவேற்றும் வண்ணமாக நாளை மாலை அதிரையிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்களுக்குச் சென்று “மீண்டும் நினைவூட்டல் அறிவிப்புகளை” நோட்டிஸ் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்றும் மேலும் பிளாஸ்டிக் பை தடைகளை மீறி பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.


மேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். 

Friday, March 23, 2012

அதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் !




அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்”  ( WCC ) சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாளான நேற்று  ( 22-03-2012 ) வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது.



இத்தொடர் போட்டியில் அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC,  ABCC,  ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும்  XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற்று சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.




போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளின் விவரங்கள் :
1.       முதல் பரிசு : பாப்பாநாடு அணியினர்
2.       இரண்டாம் பரிசு : அதிரை  WCC அணியினர்
3.       மூன்றாம் பரிசு : அதிரை AFFC அணியினர்
4.       நான்காம் பரிசு : மதுக்கூர் அணியினர்




மேலும் போட்டிகளில் விளையாடி தங்களின் தனித்திறமைகளை வெளிபடுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகளை அதிரை  WCC அணியின் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துருந்தனர்.



 Source : TIYA

Thursday, March 22, 2012

அதிரையில் பேருந்தில் தீ விபத்து...

இன்று அதிகாலை (22/03/2012) சென்னையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (3 ஸ்டார்) அதிரை வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின் புறத்திலிருந்து தீ பற்ற ஆரம்பித்தது. பின் புறம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் பஸ்ஸை மறித்து விசயத்தை சொன்னவுடன் பேருந்து உடனே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பெரும் உயிர் சேதம் இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டது. பின்புறம் ஏற்றப்பட்ட எமஹா பைக்கிலிருந்து ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை அறிந்த அதிரையை சேர்ந்த சகோதரர்கள் எறிந்த பொருட்களை சரி செய்தனர் மேலும் பயணிகளை ராஹத் பஸ் மூலம் தொண்டிக்கு அனுப்பி வைத்தனர்.






படங்கள் உதவி : அகமது முகைதின் (பொட்டியப்பா)

உண்மைக்கு வெற்றி!



·         ஜனாஸாவைஅமைதியாகதூக்கிச்செல்லவேண்டும்...!


·         ஜனாஸா தொழுகைக்கு பிறகு துஆ ஓதுவது பித்அத்...!


மர்ஹூம் மௌலவி கே.ஏ. நிஜாமுதீன் அவர்கள் தமது இறுதி நூலில் வலியுறுத்தல்...!


தமிழகத்தில் பெரிய மார்க்க அறிஞராகத் திகழ்ந்த மர்ஹூம் மௌலவி கே.ஏ.நிஜாமுதீன் மன்பயீ அவர்கள் மரணிக்கும் முன் தமது கடைசி நூலாக எழுதிய 'மரணமும் மறுமையும்' என்ற புத்தகம் தற்போது வெளியிடப்பட்டு, பல ஊர்களில் இலவசமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதில் மர்ஹூம் ஹள்ரத் அவர்கள் மரணம் மற்றும் ஜனாஸாவின் சட்டத்திட்டங்கள் குறித்து குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

ஜனாஸா அடக்கம் செய்யத் தூக்கிச் செல்லும் போது, பின் செல்பவர்கள் கலிமா ஷஹாதத் எதுவும் ஓதாமல் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், ஜனாஸா தொழுகைக்குப் பிறகு துஆ ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டதோடு, ஜமாஅத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்பதற்காக சுன்னத்திற்கு மாற்றமாக நடைபெற்று வரும் காரியங்களை அப்படியே விட்டுவிடாமல், உரிய முறையில் மக்களிடம் ஹதீஸ்களை விளக்கிக் கூறி பித்அத்களை அகற்ற முயலவேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதியுள்ளார்கள்.

பித்அத்தான இக்காரியங்களைக் கண்டித்தும் சுன்னத்தான முறைகளை
வலியுறுத்தியும் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று
கூறுபவர்களின் நீண்டகாலப் பிரச்சாரத்திற்கு ஹள்ரத் அவர்களின் இக்கூற்று வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

நமதூரில் சமீபத்தில் காலம் சென்ற நடுத்தெரு EPMS பள்ளியின் நிறுவனர்
மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் ஜனாஸா காரியங்கள் அனைத்தும் சுன்னத்தான முறையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. இந்த சுன்னத்தான நடைமுறையக்கூட விமர்சித்த சிலருக்கு, ஹள்ரத் அவர்களின் இந்தப் புத்தகம் பதிலடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் இறப்பிற்குப் பின் நடைபெறும் காரியங்கள் பெரும்பாலும் ஊர் ஜமாஅத்தார்களின் மூலமாகவே நடைபெறுவதால், பித்அத்தான செயல்களுக்கு ஜமாஅத்தார்களே அல்லாஹ்விடம் பதில்  சொல்லவேண்டும். எனவே ஆலிம்களும் ஜமாஅத்தார்களும் ஜனாஸா காரியங்களில் பித்அத்தைத் தவிர்த்து சுன்னத்தான முறையைப் பின்பற்றிச் செயல்பட வலியுறுத்த வேண்டும்.

ஜனாஸாவில் நடைபெறும் நூதன அனுஷ்டானங்களைக் கண்டித்து, சுன்னத்தான முறையைத்  தமது இறுதி நூலில் வலியுறுத்திய மௌலவி மர்ஹூம் நிஜாமுத்தீன் மன்பயீ அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்தைத் தந்தருள்வானாக!

'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது
நிராகரிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புஹாரி, முஸ்லீம்

 அபுபக்கர் (முகி)

சென்னை

Wednesday, March 21, 2012

அஸ்ஸலாமு அலைக்கும், ஜூபைர் காக்கா

வ அலைக்கு முஸ்ஸலாம் தம்பி சிராஜ் , எப்ப சவுதியிலிருந்து வந்திய?

“ரெண்டு நாளாச்சு காக்கா, என்ன... மீன் வாங்கியாச்சா?

“இல்லை தம்பி வெறும் கத்தாள பொடியாத்தான் இருக்குது, அதனால இன்னைக்கிகாய்கரி வாங்கிட்டு போறேன்." இப்படி போற கரண்டுக்கு மீன் வாங்கி ஐஸ் பொட்டில வச்ச நாறிரும்"

அதெல்லாம் சரி வாங்க காக்கா நூர் லாட்ஜ்ல ஒரு சம்முசாவும் டீயும் சாப்பிட்டுகிட்டு பேசலாம்.

“ம்... அது சரி நம்மூர் நெலம எப்படி இருக்கு ? “

“அது ஒவ்வொரு நாளும் ஒரு வதந்தி ஓடிக்கிட்டு இருக்குது தம்பி,

“இப்ப எதோ புது செய்தி வந்திருக்குதாமே அது என்ன?”

“ஆமா தம்பி ,
நம்ம சேர்மேன் எவ்வளவு நல்ல செயல் செய்தலும் அவருக்கு என்னவோ கெட்ட பெயர் வாங்கிதருவதற்கு ஒரு சில கூட்டம் இருக்கத்தான் செய்து

“அது ஏற்கனவே உள்ளதுதானே இப்ப என்ன ?”
அதுவா அவர் சென்ற வாரம் கலந்துகிட்ட மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நமது பொம்புள பிள்ளயகள் போடுற முகத்திரையை(FACE COVER) தடை செய்ய ஒப்புதல் அளிப்பதாக சொன்னார் என்று ":


என்ன காக்கா நமதூரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்து நமதூரை பிளாஸ்டிக் பையிலிருந்து விடுதலை மற்றும் நமதூர் செட்டிய குளத்தில் தூர் வாரி சுத்தம் செய்து மேலும் நல்ல செயல் செய்துகிட்டு இருக்கிறார்:


ஆமா தம்பி நம்ம சேர்மன் ஒவ்வொரு நல்ல காரியம் செஞ்சாலும் அதுக்கு அரசியல் காரனம் சொல்லிக்கிட்டு அலஞ்சிகிட்டு இருக்கிறவர் களுக்கு அல்லாஹ் தான் நல்ல புத்திய கொடுக்கணும் ":


சரி காக்கா , நான் வீட்டுக்கு நாலு சமுசா வாங்குறேன் ,உங்களுக்கு எதுவும் வேணுமா காக்கா ..................


இல்ல தம்பி.


சரி. இக்பால் காக்கா நாலு சம்சா மடிச்சி தாங்க;

என்ன காக்கா பையில் போட்டு தராமல் பேப்பரில் மடிச்சி தரிய?


என்ன சிராஜ் இவ்வளவு நேரம் நம்ம பேசினத மறந்திட்டியா ?





“உன்கிட்டே பேசிகிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல இப்படியே பேசிகிட்டே இருந்தோம்னா பகல் எனக்கு பட்டினிதான்
, நம்ம அரசியல் சூழல் பத்தி இன்ஷா அல்லாஹ் நாளைக்கு மீன் வாங்க வருபோது பேசலாம்



சந்திப்பு தொடரும்















Monday, March 19, 2012

அதிரை AFCC கிரிக்கெட் தொடர் போட்டி இறுதி ஆட்டம் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காணொளி...





அதிரை AFCC சார்பாக கிரிகெட் தொடர்ப்போட்டி கடந்த 10/3/12 முதல் 6  நாட்கள் நடைபெற்றது 32 அணிகள் பங்கு பெற்றது அதில் இறுதிப்போட்டியில் கறம்பக்குடி அணியும் அதிரை AFCC அணியும் மோதியது அதில் கறம்பக்குடி அணி வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது இரண்டாவது பரிசை அதிரை AFCC அணியும் மூன்றாவது பரிசை பேராவுரணி அணியும் நான்காவது பரிசை அதிரைWCC மேலத்தெரு அணியும் பெற்றது .

பரிசு வழங்கும் நிகழ்ச்சி காணொளி :



இறுதிப்போட்டி காணொளி :

Sunday, March 18, 2012

அதிரையில் தமுமுக பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது அவர்கள் உரையின் ஒலிப்பேழை

Saturday, March 17, 2012

அதிரையில் இருந்து தமுமுக பொதுகூட்டம் நேரலை

அதிரையில் இன்று (17/3/12) மாலை 6.30 மணிக்கு தக்வா பள்ளி அருகில் தமுமுக வின் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதில் கோவை செய்யது அவர்கள் உரையாற்றுகிறார் இந்நிகழ்ச்சி நமது அதிரை பிபிசியில் நேரலை செய்யப்படும் .

Friday, March 16, 2012

அகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் !

     அகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் !
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! சென்னையிலிருந்து அதிரை செல்ல அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்தாற்போல் முயற்சிகள் பல செய்து வருகின்றோம். லாலு,வேலு , அஹமத் , ப சிதம்பரம் , முனியப்பா போன்ற மந்திரிகளை சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்து வந்தோம். குறிப்பிட்டு சொல்லும்படி எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழ் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை காரைக்குடி சென்று சந்தித்தோம். அவர் எங்களுக்கு கொடுத்த அவகாசம் 1 .1 / 2 நிமிடம் மட்டுமே !
அவரை சந்திக்க ஹாஜி M .S தாஜுதீன் , S . M அஸ்லம் ( காதர் மொஹிதீன் கல்லூரி தாளாளர் ),S .H . அஸ்லம் அதிரை பேரூராட்சி தலைவர்,மற்றும் A அப்துல் ரஜாக் ஆகியோர் சென்று வந்தோம். அவர் கொடுத்த கால அவாகசத்தை கணக்கில் எடுத்து கொண்டால் , அந்த சந்திப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தோன்றியது. என்ன ஆச்சரியம் ! அல்லாஹ்வின் உதவி கொண்டு , சந்தித்த அடுத்த வாரமே , ரயில் துறை அமைச்சருக்கு , திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக உடனடியாக வேலைகளை தொடரும்படி பரிந்துரை செய்து ஒரு மடல் அனுப்பியதோடு , அதன் நகலையும் ARUDA அமைப்பிற்கு அனுப்பிருந்தார். ரூ 505 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாய்ன. THE HINDU நாளிதழில் திருவாரூர் காரைக்குடி சம்பந்தமாக செய்திகள் வர ஆவணம் செய்தோம். இதற்கும் காரணம் உண்டு , இது சம்பந்த செய்திகளை அத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்ட செல்லவும் ஒரு வழி வகுத்தது.
கடந்த வாரம் ஹாஜி M S தாஜுதீன் அவர்கள் டெல்லி சென்று முயற்சி செய்தால் நன்மையாக அமைய வாய்ப்புள்ளது என்ற கருத்தை சொன்னார்கள். அதன்படி , நாங்கள் டெல்லி புறப்பட்டு சென்றோம். ஹாஜி அப்துல் ரஹ்மான் M P
அவர்கள் சற்றும் சளைக்காமல் எங்களுடன் உடன் வந்து , மாண்பு மிகு இணை அமைச்சர் முனியப்பா அவர்களிடம் , காரைக்குடி பட்டுகோட்டை வரையிலான வேலைகளை தொடர்வர்திற்கு பதிலாக , திருவாரூர் பட்டுக்கோட்டை வேலைகளை ஆரம்பிக்கும்படி தீர்க்கமாக கோரிக்கை வைத்தார். அமைச்சர் அவர்களும் கவனத்துடன் கோரிக்கைய கேட்டதோடு , வரும் வாரங்களில் அதிகாரிகளுடன் பேசி , திருவாரூர் பட்டுகோட்டை அகல பாதை சம்பந்தமாக வேலைகளை ஆரம்பிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார். மேலும் ரயில்வே துறை மூத்த அதிகாரிகளையும் சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்தோம். அந்த அதிகாரியும் நிச்சயமாக அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது , மன நிறைவை கொடுத்தது. இன்ஷா அல்லாஹ் ! நமது நீண்ட கால தேவையான சென்னை காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் இன்னும் 2 வருடத்தில் தொடங்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டருக்கிறது . கம்பன் ஏமாந்தான் என்ற சொல் நீங்கி , கம்பன் வந்தான் , என்ற சொல்லும் செயலும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அகல ரயில் பாதை சம்பந்தமாக அயராரது முயற்சி செய்து வரும் ஜனாப் ஜாபர் காக்கா அவர்களுக்கு துவா செய்யவும். மேலும் ஜனாப் அப்துல் ரஹ்மான் M P அவர்களை தொடபுகொண்டு நம் நன்றியினை தெரிய படுத்தவும். இச்செயல் அவரை மேலும் ஆர்வ படுத்தும் .
உங்கள்
அப்துல் ரஜாக்

Tuesday, March 13, 2012

அடித்தளமில்லா அழகான வீடுகள்....!?


நம்ம அபுல்கலாம் வீடு எங்கே இருக்கிறது என்று வெளியூரிலிருந்து வருபவர்கள் கேட்டால் அபுல்கலாம் வீட்டின் அடையாளங்களை அங்க அங்கமாய் புட்டு வைப்பார்கள் அன்று...
காக்கா எந்த அபுலகலாம் வீட்டை கேட்கிறீங்க? அவரா ............. இல்லை இங்கே ஜவுளிக்கடையில் வேலை செய்கிறாரே அந்த அபுலகலாமா?

சவுதிலே வேலைசெய்கிறவர்.

அவர் வீடா...

சோத்தாங்கைப்பக்கம் போய்க்கிட்டேயிருங்க வாசலில் 2 பெரிய திண்ணை இருக்கும் அந்த வீட்டுக்கு அருகில் கொழுக்கி ஓடு போட்டு ஒரு வீடு இருக்கும் அதற்கு அடுத்தாற்போல் நாட்டு ஓடுப்போட்டு கீற்றுகள் முடைந்த தாவரம் வீட்டு வாசலில் இருக்கும் அந்த வீடுதான். அன்று விளக்கமாய் சொல்லி முடிக்கும்போது. வெளியூரிலிருந்து வந்தவரும் இவரும் பலநாட்கள் பழகியது போல் பார்த்துசெல்வார்கள்... சரி மேட்டருக்கு வருவோம்.
மாதங்கள் பல, வருடங்கள் சில வென்று வணிகமே இல்லை வெளிநாடே வாழ்க்கை என சென்றுயிருக்கும் சென்று கொண்டிருக்கும் நமதூர் மற்றும் நம்மைச் சார்ந்தவர்கள் வாழ்க்கையை கொடுத்து, சந்தோசத்தை இழந்து கஷ்டப்பட்டு சம்பாதித்த சம்பாத்தியத்தில் கட்டிய அடித்தளமில்லா அழகிய வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டேயிருக்கின்றது என்பதும் அழகிய உண்மை.
அன்று கூறிய அடையாளங்களின் அணிவகுப்புகள் மனிதனை அதிகம் கஷ்டப்படுத்தாது உழைத்து சந்தோசமாய் கட்டிய அரண்மனைகள் என்பது கூறுவதில் தவறேதுமில்லை எனலாம். அந்த மண்வீட்டிற்கு மதிப்பு கொடுக்காமல் மனிதன் உறங்கத்திற்கும்,உறைவிடத்திற்கும் வீடு என்ற உண்மையை உணரந்திருந்தார்கள். அதிநவீனங்கள் இன்று மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தாலும் அன்றைய மனித அறிவும் மிகைத்தவண்ணம்தான் இருந்தது என்பதையும் சரித்திரம் உணர்த்தும்.
உதாரணமாக அதிராம்பட்டினத்தில் வீடு கட்டுவதற்கு ஒரு வீட்டு மனை வாங்கவேண்டுமென்றால் 6 வருடத்திற்கு மேல் உழைக்கவேண்டும். ஒரு பெண்ணுக்கு சீதனமாக கொடுத்த மனை என்றாலும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கே ஒரு வருடம் உழைக்கவேண்டும். மேலும் எழில் சூழும் ஒரு வீடு தற்பொழுது கட்டவேண்டுமென்றால் சுமார் 12வருடம் உழைக்கவேண்டும். இத்தருணத்தில் ஒரு வீட்டின் மதிப்பு 35 லடசம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இந்த வீட்டில் எத்தனை வருடங்கள் வசிப்போம் என்ற சிந்தனையை மக்கள் முன்னிறுத்தினால் 30 முதல் 40 வருடங்கள் என்ற குரலின் வலிமைத்தான் சற்று ஓங்கி நிற்கிறது.
35 வருடம் இந்த வீட்டினில் வசித்தால் வருடத்திற்கு ரூ.1,0o000/ லட்சம் வாடகை கொடுக்கின்றோம் என்பதையே இங்கே உணர்த்துவதற்கு கடமைபட்டுள்ளோம். முன்னோர்கள் வசிக்க கட்டிய வீடுகள் எளிçயாகவும், வலிமையாகவும், மக்களின் இன்பத்தில் இன்னல்களை குறைத்தே வாழ்ந்தார்கள் அல்ல அல்ல வசித்தார்கள். நம்மை போன்று (வீட்டின் லட்சனம் ஓட்டையாய் தெரிவதற்கே நாம் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றோம். மழைத்தண்ணி ஓழுகுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவு செய்ய தயங்க மறுக்கின்றோம்) "அடித்தளமற்ற வீடு"களை கட்டுவதற்காய் வாழ்க்கையின் மகிழ்வுகளை அதிகம் அன்று இழக்கவில்லை ....

மன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா?

மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே, அகல ரயில்பாதை அமைப்பதற்கான நில சர்வே முடிந்து விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் அகல ரயில்பாதை முடியாமல், ரயில் பயணம் சுமையாக இருக்கும் போது இது மிகவும் அவசியமானதா என்று புரியவில்லை.
மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடைப்பட்ட தூரம், 39 கி.மீ., இங்கு அகலரயில்பாதை அமைப்பது என்றால், 39 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும் நூறு மீட்டர் அகலத்திற்கும் குறைந்த பட்சம் நிலம் தேவை. அதன் அளவு, 983 ஏக்கர் ஆகும்.75 லட்சம் பேர் உணவு: இப்பகுதியில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் ஆற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்களை அதில் கழித்து விட்டால், குறைந்த பட்சம், 900 ஏக்கர் நிலம் தேவை. இப்பகுதியில் அதிகம் நெல் விளையும் நஞ்சை நிலப்பரப்பு அதிகம். நெல்விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது, 50 மூட்டை நெல் விளையும். ஒரு மூட்டையின் எடை 60 கிலோ. ரயில் பணிக்கு எடுக்கப்படும், 900 ஏக்கர் நிலத்தில் மொத்தம், 27 லட்சம் கிலோ நெல் கிடைக்கும். இதனை அரிசியாக மாற்றினால் ஒரு நாளைக்கு 75 லட்சம் பேருக்கு உணவாகும்.

அதே சமயம் ஏற்கனவே காரைக்குடியில் இருந்து திருவாரூர்வரை , மீட்டர்கேஜ் ரயில் பாதை இருக்கிறது. அதை அகலரயில்பாதையாக்கினால், புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. விளைநிலங்கள் அழியாது. அந்தப் பாதை அகலரயில் பாதையாக்கப்படும் போது, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற நகராட்சிகளும், மூன்று தேர்வு நிலை நகராட்சிகளும் பயன் பெறும். அப்பகுதி மக்களும் அதிக போக்குவரத்து வசதியால், பொருளாதார வளம் பெறுவர்.இதைத் தவிர திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள, வேதாரண்யத்தில் வருடத்திற்கு ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில், உப்பு உற்பத்தி நடக்கிறது. இதைச் சென்னை போன்ற பகுதிகளுக்கு, ரயில் மூலம் கொண்டு செல்லவும், ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கவும் உதவிடும்.

மேலும், சென்னையில் இருந்து மாயாவரம், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சென்றது உண்டு. ராமேஸ்வரம் வரை மக்கள் பயணிக்க வசதியாக இருந்தது. இந்த வழித்தடத்தில், மீட்டர் கேஜை மாற்றி அகலரயில்பாதை அமைத்தால் மக்களுக்கு அதிக வசதி ஏற்படும். பின்தங்கிய பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவர். தவிரவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை ஏற்கனவவே உள்ள மீட்டர்கேஜ் பாதை அகலரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக ரயில்வே துறையால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டுக் கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை அவசியம் தானா? அரசுப்பணம் விரயம் ஆவதில், மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?

அகலரயில்பாதையாக மாற்றும் முக்கியத் திட்டங்கள் பலவும் முழுவதும் நிறைவேறாமல் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் போது, பட்டுக்கோட்டைக்கும் மன்னார்குடிக்கும் இடையே புதியதிட்ட சர்வே ஏன் என்பது தெரியவில்லை என்று, இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். தவிரவும் விளைநிலங்களை இழக்க நேரிடுமோ என்று விவசாயிகளும் அச்சப்படத் துவங்கி விட்டனர். இத்திட்டத்திற்கு ஓர் அரசியல்வாதி மிகவும் ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் புரியவில்லை

நன்றி
தின மலர் 

Sunday, March 11, 2012

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!                                                                                                     


    ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிலும் 8 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது.  இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.  ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை.


தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.  ஒதுக்கீடும் தவணை முறையில் தான்.  விழுப்புரம் மயிலாடுதுறை வரை வந்த ஒதுக்கீடு 40 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூரை அடைய பல ஆண்டுகள் ஆனது.  இன்னும் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் பாதையில் வண்டிகள் இயக்கப்படாதது வேறு கதை.


நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி என அகலமாக்கும் பணிகள் நடைபெற்றதென்னவோ உண்மை தான்.  ஆனால் திருவாரூரிலிருந்து சென்னை செல்ல மயிலாடுதுறை செல்லாமல் இன்னும் ஊர் சுற்றிச் செல்லும் அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.

காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தாம்பரம் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற மீட்டர் பாதை தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு யாரேனும் நினைவுப்படுத்தினால் நல்லது.  அவருக்கு வரவர எதுவும் நினைவில் தங்குவதில்லை.

தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி சொல்லும் ரயில்வே திட்டங்களை விட தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சொல்லும் திட்டங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள எதார்த்த நிலை.  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் தி.மு.க தலைமைக்கு வேண்டுமானால் இல்லாது போயிருக்கலாம்.  இ. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க போன்றவை என்ன செய்து கொண்டுள்ளன?

திருக்குவளையில் துறைமுகம் என்றார்கள்.  வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடம் என்றார்கள்.  இவை அனைத்தும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.  ஆனால் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு ரயில் விட்டாயிற்று.  2012-13 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இப்பாதையை பட்டுக்கோட்டைவரை நீட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.  இப்படிச் செய்துவிட்டால் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்தை மூடிவிடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

எனவே, அதற்கேற்றவாறு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை - வடசேரி -மன்னார்குடி வழி புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி இந்த வழியில் கம்பன் எக்ஸ்பிரசை இயக்குவதுதான் தி.மு.க வின் திட்டம்.  இது நடந்துவிடும் என்ற அச்சத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிவாழ் பொதுமக்கள், வணிகர்கள் சென்ற மாதத்தில் (டிசம்பர் 2011) ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.  இதற்கு அமோக ஆதரவு இருந்தது.

தஞ்சை - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - மன்னார்குடி போன்ற தொடர்வண்டிப் பாதை இல்லாத இடங்களை அவற்றால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அதற்காக இருக்கின்ற வழித்தடங்களை பலியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.  எனவே, இருக்கின்ற திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தை முற்றிலும் அகலப்பாதையாக்க வேண்டும்.  கூடவே திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியாம்பள்ளி - கோடியக்கரை தடத்தையும் அகலப்படுத்தி பயணிகள் ரயில் போக்குவரத்திற்கும் உப்பு ஏற்றுமதிக்கும் வழிவகுக்க வேண்டும்.

     சுற்றுச்சூழல், கடலோர மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், இருப்புப்பாதைகள் என தனியார் முதலாளிகள் வளம் கொழிக்க திட்டங்கள் தீட்டும் மத்திய - மாநில அரசுகள், வேதாரண்யம் கடற்கரையில் உற்பத்தியாகும் உப்பை எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற இருப்புப் பாதையை அகலப்பாதையாக்க மறுக்கும் மக்கள் விரோதப்போக்கை எப்படிப்புரிந்து கொள்வது?

திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - கோடியக்கரை வழித்தடங்களை அகலப்பாதையாக்குவதைக் காட்டிலும் வடசேரி கிங் கெமிக்கல்ஸ், அங்கு அமையப்போகும் சாராய வடிப்பாலை வழியாக ரயில்பாதை அமைப்பதுதான் டி.ஆர். பாலுவிற்கு முக்கியமாகப்படுகிறது.  எனவே தான் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.  மு. கருணாநிதிக்கு திருக்குவளையை விட கனிமொழி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் முக்கியம்.  தானொரு கம்யூனிஸ்ட் என்று ஓயாமல் சொல்லி வரும் மு. கருணாநிதி தானும் பெருமுதலாளியாகி டி.ஆர். பாலு போன்ற பெருமுதலாளிகளை உருவாக்க முடிந்ததுதான் வரலாற்றின் மாபெரும் சோகம்.


உப்பை மட்டும் உற்பத்தி செய்யும் காரணத்தால் இன்று வேதாரண்யம் வெறும் தீவாகிப் போயிருக்கிறது.  கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வேளாங்கண்ணியைத் தாண்டியதும் திருத்துறைப்பூண்டிக்குள் நுழைந்து உள்நாட்டுச் சாலையாகி விடுகிறது.  அகலப்பாதை வசதியுமின்றி பிறப்பகுதிகளிடமிருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சாலையாக மாறிப்போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஒரு சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கீழே வேதாரண்யம் தொடர்வண்டிப் பாதை செல்கிறது.  நாட்டிலேயே ஓடாத ரயிலுக்கு இங்குதான் சாலை மேம்பாலம் அமைந்துள்ளதை அதிசயமாக பார்க்கக் கூடிய சூழல் வெகு விரைவில் வரலாம்.

M ANSARI

Wednesday, March 7, 2012

அயோத்தி தொகுதியை இழந்தது BJP!



நடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலில் சர்ச்சைக்குரிய அயோத்தி தொகுதியை பாஜக இழந்து விட்டது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்கு வென்று வந்த பாஜகவுக்கு இந்த முறை அயோத்தி மக்கள் டாட்டா காட்டி விட்டனர். மாறாக, சமாஜ்வாடிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.


அயோத்தியிலிருந்துதான் தனது அரசியல் மறுமலர்ச்சியைத் தொடங்கியது பாஜக என்பது நினைவிருக்கலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜகவினரும், இந்து அமைப்புகளும் சேர்ந்து இடித்தது இன்று வரை இந்தியாவின் பெரும் கரும்புள்ளியாக திகழ்ந்து வருகிறது. அன்று முதல் அயோத்தியில், தொடர்ந்து பாஜகவே வென்று வந்தது. ஆனால் இந்த முறை அயோத்தி மக்கள் மாற்றி யோசித்து, ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். சமாஜ்வாடிக் கட்சி இங்கு வென்று விட்டது. 

 பாஜகவின் லல்லு சிங், தொடர்ந்து 1991ம் ஆண்டு முதல் இங்கு வென்று வந்தார். இந்த முறை அவர் இளம் சமாஜ்வாடி தலைவரான தேஜ் நாராயண் பாண்டேவிடம் 5700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார். கடந்த தேர்தலிலேயே லல்லு சிங் ஆடிப் போய்த்தான் வென்றார். அதாவது அவரது வெற்றி வித்தியாசம் 6500 மட்டுமே. இப்போதைய தேர்தலில் லல்லுவுக்கு அயோத்தி நகர்ப் புறங்களில் முன்னிலை கிடைத்தது. அதேபோல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் அவருக்கே அதிக ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஆனால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அவரைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.


அயோத்தி வேட்பாளராக பாண்டேவை அறிவித்த கையோடு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்தியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை கவர ஆரம்பித்தார். அவரது அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இப்போது வெற்றியும் வந்து சேர்ந்துள்ளது. 

 நன்றி : தட்ஸ்தமிழ்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்



இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமத் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளருமான ஃபாத்திமா முஸப்பர் அக்கட்சியிலிருந்து உட்கட்சி விவகாரங்களினால் வெளியேற்றப்பட்டார்.



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-

1906-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி தொடங்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் 1948-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உருவானது.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களில் செயல்பட்டு வந்தது.. இந்திய யூனியன் முஸ்லிம்லீகிற்கு இ.அஹமது சாஹிப் தலைவராகவும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய நான் பொதுச்செயலாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டதும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் ஒரே பெயரில் இயங்குவது என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.



இதற்காக கேரள மாநிலத்தின் பிரைமரி, மாவட்ட, மாநில அமைப்புக்கள் முறைப் படியாக தீர்மானங்கள் நிறைவேற்றி அம்மாநிலத்தின் 20 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் என அத்தனை பேரின் வாக்குமூலங்களும் பெற்று தேர்தல் ஆணையத்திடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்பட்டது.



ஆனால், தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவர் என சொல்லப்படும் உ..பி.யின் பஷீர் அஹமதுகான் ஆகியோர் இதற்கு ஆட்சேபணை தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அனைத்தையும் பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் 3-ம் தேதி தெளிவான ஆணை பிறப்பித்தது.

அந்த ஆணையின்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது என்றும், முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயர் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட `ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



அந்த ஆணையில் எம்.ஜி. தாவூத் மியாகான், ஃபாத்திமா முஸப்பரால் தலைவராக சொல்லப்படும் பஷீர் அஹமதுகான் ஆகியோர் தனி நபர்கள் என்றும், அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உறுப்பினர்கூட இல்லை. இந்த கட்சி பற்றி அவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பதற்கு தகுதி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது.



எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையும், பச்சிளம் பிறைக்கொடியையும் நாங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளைத் தவறாக பயன்படுத்துவோர் மீது நாஙகள் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-வது நிறுவன தினம். இந் நாளை தேர்தல் ஆணையத்தின் அங்கீகார வெற்றி விழா நாளாக நாடு முழு வதும் கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. 60-க்கும் மேற்பட்ட ஊர்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.



செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி. மாநிலச் செய லாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி இந்நேரம்.காம்

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.