அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label தீ விபத்து. Show all posts
Showing posts with label தீ விபத்து. Show all posts

Monday, March 26, 2012

காதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.

கல்லூரியின் விளையாட்டு திடலில் அமைந்திருக்கும் சலாஹிய்யா அரபி கல்லூரியின் அருகே  புல் மிக நீளமாக வளர்ந்து காய்ந்து போய் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கின்றது. 25 - 03 - 2012 அன்று மாலை சுமார் 4 மணிக்கு  திடீரென அடர்ந்த புல் புதரின் மேல் தீப்பற்றிக் கொண்டது. தீ மள மள வென பரவவே உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வண்டி விரைந்து வந்து தீயை அணைத்து, தீ பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து நடந்த கல்லூரியின் மைதானத்தின் சுற்று சுவருக்கு பின்புறம் மிக அருகில் பிலால் நகரின் பல குடிசைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படாமல் அல்லாஹ்வின் கிருபையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

காதிர் முகைதீன் கல்லூரி பள்ளிவாசல், சலாஹிய்யா அரபிக்கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் புல்  புதர்கள் வளர்ந்து காடு போல்  காட்சியளிக்கின்றது. விஷ ஜந்துகள் இந்த பகுதியில் இருக்க மிக அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இரவு நேரங்களில் சலாஹிய்யா அரபிக்கல்லூரி மாணவர்கள் அருகே இருக்கும் கல்லூரி பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது.

கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி காடு மிகுந்து கிடக்கும் இந்த பகுதியை சுத்தம் செய்ய முன் வருவார்களா?


எரிந்து சாம்பலான புல் புதர்களை படத்தில் காணலாம்.

Thursday, March 22, 2012

அதிரையில் பேருந்தில் தீ விபத்து...

இன்று அதிகாலை (22/03/2012) சென்னையில் இருந்து தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (3 ஸ்டார்) அதிரை வண்டிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின் புறத்திலிருந்து தீ பற்ற ஆரம்பித்தது. பின் புறம் வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் பஸ்ஸை மறித்து விசயத்தை சொன்னவுடன் பேருந்து உடனே நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது. பெரும் உயிர் சேதம் இறைவன் அருளால் தவிர்க்கப்பட்டது. பின்புறம் ஏற்றப்பட்ட எமஹா பைக்கிலிருந்து ஏற்பட்ட பெட்ரோல் கசிவே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விபத்தை அறிந்த அதிரையை சேர்ந்த சகோதரர்கள் எறிந்த பொருட்களை சரி செய்தனர் மேலும் பயணிகளை ராஹத் பஸ் மூலம் தொண்டிக்கு அனுப்பி வைத்தனர்.






படங்கள் உதவி : அகமது முகைதின் (பொட்டியப்பா)

Saturday, November 12, 2011

கீழத்தெரு முஹல்லா அமீரக கிளையின் வேண்டுகோள்


அஸ்ஸலாமு அலைக்கும்,

நேற்று முன் தினம் (10/11/2011) மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு,  முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நேசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலானது, வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கரையானது.! வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும்விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அமீரக கிளை சார்பாக நேற்று இரவு 11.11.2011 அன்று அந்த முஹல்லாவின் அமீரக கிளை தலைவர் M.A. அப்துல் ஜலீல்அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை அமர்வு நடைப்பெற்றது. அதன் காணொளி இங்கே பதிகிறோம்.




பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக அமீரகத்தில் கிழத்தெரு முஹல்லா சார்பில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களும் தாராளமாக உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:-
மரைக்கான் .S. +971553998943
அஜீஸ் – + 97150 4100139
ஜவாஹிர் – +97155 8188040
அரஃபாத் – +97155 2723284

ஹாஜா முஹைதீன் – +97150 2302116

 அதிரைநிருபர்
நன்றி -

Friday, November 11, 2011

UPDATED on 12/11/2011 தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடுவீர்!!

UPDATED on 12/11/2011

நேற்று முன்தினம் (10/11/2011) கீழத்தெருவில் தீ விபத்தால் வீட்டை இழந்த பெண்மணிக்கு இன்று (12/11/2011) காலை சுமார் 10 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.! மூன்று மாதங்களுக்கு முன்பு தன் கணவர் ஜியாவுல் ஹக் என்பவரை ஒரு வாகன விபத்தில் இழந்தவர் என்பதும் மிகவும் வேதனையான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது! 


நல் உள்ளங்கள் உதவிடுவீர்.!


--------------------------------------------

நேற்று (10/11/2011) மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலாயின.!  வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கிரையானது.! தங்களின் வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு நிதியுதவி செய்திடுவீர் .!

அல்லாஹ் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக.!


தொடர்புக்கு



கீழத்தெரு இளைஞர் அணி கமிட்டி

தலைவர் :   மரைக்கான் அப்துல் கஃபூர் - 0091 - 876 000 8274

செயலாளர் :  தமீம் அன்சாரி - 0091 - 8015270294

பொருளாளர் :  அலியார் - 0091 - 9865135467


-------------------------------------------------------------------------------------

அதிரை த.மு.மு.க வை தொடர்புக்கொள்ள



M. O. செய்யது :  0091 - 9944449848



M. ஷாகுல் ஹமீது : 0091 - 9894973416



------------------------------------------------------------------------------------




அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அமீரக சகோதரர்கள்:

மரைக்கான் .S. +971 55 3998943

அஜீஸ் – + 971 50 4100139

ஜவாஹிர் – +971 55 8188040

அரஃபாத் – +971 55 2723284

ஹாஜா முஹைதீன் – +971 50 2302116




கீழத்தெரு இளைஞர் அணி கமிட்டி, அதிரை த.மு.மு.க விற்கு எழுதிய கடிதம்.!



Thursday, November 10, 2011

அதிரை கீழத்தெருவில் நடந்த தீ விபத்து

இன்று மதியம் சுமார் 2:00 மணி அளவில் கீழத்தெருவில் சமையல் எரிவாய்வால் நடந்த தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பல்லாயின.! ஒருவர் காயம் அடைந்தார் மற்றும் ஓர் ஆடு உயிர் இழந்தது.!

தீயை பொது மக்கள் அனைதபிறகு தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு வந்தது.! இதைத் தொடர்ந்து தாமதமாக வந்த தீயணைப்பு வண்டியை  மறியல் செய்து பொது மக்கள் ஆர்பாட்டம் செய்தனர்.!

இதன் முழு விபரம் விரைவில்.!












Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.