நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர், சாலைவசதி, மின்சாரம், சுகாதாரம், சமுக நலம், நிலம் கையகப்படுத்துதல், உணவுப்பொருள் வழங்கல், கல்வி, சான்றிதல் பெறுதல், இயற்கை சீற்றம் இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் அவர்களுடைய வரம்புக்கு உட்பட்டதை அவர்களின் கடமையிலிருந்து செய்ய தவறியதில்லை. அதேசமயத்தில் அவர்களின் வரம்புக்கு மீறியதை அவர்களைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் தவறு அவர்களும் நம்மைப்போலவே.
ஓவ்வொரு மாவட்டத்திர்க்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் ஆவார். நாம் அவரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று அவர்களுடைய அலுவலகத்தில் “ மக்கள் குறைதீர்ப்பு நாளில் “ தொடர்புகொண்டு நம்முடைய கோரிக்கையை மனுவாக கொடுக்கலாம் அவர்களும் அதைப் பெற்றுக்கொண்டு மனு ரசீது கொடுப்பார்கள். அதைப்பெற்றுக்கொண்ட நாம் சம்பந்தப்பட்டவர்கள் நம் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கண்காணிக்க இலகுவாக இருக்கும். மேலும் நமது கோரிக்கைகள் கலெக்டர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு குறைவு.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அவர்களின் அலுவலக முகவரி :-கச்சேரி ரோடு, தஞ்சாவூர் – 613 001
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி : collrtnj@nic.in
பஸ் ஸ்டாப் : ஆற்றுப்பாலம் அருகில்
வேலைப்பளு காரணமாக நம்மால் அவரது அலுவலத்துக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அல்லது பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்களும் கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம். ( ONLINE PETITION FILING )
தொலைப்பேசி எண் : 04362 – 230102
மின்னஞ்சல் முகவரி : collrtnj@nic.in
பஸ் ஸ்டாப் : ஆற்றுப்பாலம் அருகில்
வேலைப்பளு காரணமாக நம்மால் அவரது அலுவலத்துக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அல்லது பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்களும் கீழ் கண்ட முறையில் ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யலாம். ( ONLINE PETITION FILING )
1. இதற்க்கு முதலில் http://onlinegdp.tn.nic.in/indexe.php இந்த லிங்கில் செல்லுங்கள்.
2. அதில் Tamil Version ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
4. பதிவு செய்து அனுப்பியவுடன் நம்முடைய கோரிக்கைக்காண பதிவு எண் ஓன்று கொடுப்பார்கள் அதை வைத்து நமது கோரிக்கையின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
5. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
2. அதில் Tamil Version ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்வு செய்து அதில் நம்முடைய கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம்.
4. பதிவு செய்து அனுப்பியவுடன் நம்முடைய கோரிக்கைக்காண பதிவு எண் ஓன்று கொடுப்பார்கள் அதை வைத்து நமது கோரிக்கையின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
5. சகோதரர்களே, கோரிக்கையில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
இறைவன் நாடினால் ! அடுத்த பதிவில் “ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை “ பற்றி விளக்கமாக எளிய வடிவில் பார்ப்போம்.
அன்புடன்,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
10 பின்னூட்டங்கள்:
Dear BBC Moderator, I tried to open this link, but it says as "you don't have permission to access this server" could any one activate this?
இனி அதிரை மக்கள் பயமின்றி தங்களது புகார்களை மேற்கூறிய எளிய வகையில் பதியலாம்.
தன் படிப்பு,தன் விளையாட்டு , பொழுதுபோக்கு என்று மாணவர்கள் இருக்கும் இவ்வேளையில் எம்.நிஜாம் போன்ற இளைஞர்களின் சமுதாயத்தின் மீதான அக்கறை பாராட்டிற்குரியது. இதுபோன்ற பணியை தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்.இவரை போன்றவர்கள் அப்பகுதியில் செயல்படும் சங்கங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதிரை மக்களின் விழிப்புணர்வை தட்டி எழுப்பி, இனி எந்த ஒரு அதிகாரியும் தவறு செய்ய இயலாத வகையில் பயனுள்ள பதிவை கொடுத்துள்ள அன்பு தம்பி நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
salaam brother abdul razik,
if you click the same link and then choose the TAMIL VERSION and you can activate. Do not choose English version. it doesn't work
நல்ல விசயங்களை பதிவதில் முன்னிலை வகிக்கிறது அதிரை பி பி சி வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்
மார்க்க அறிவு, பொது அறிவு, நாட்டு நடுப்பு அனைத்தையும் அணைத்து மக்களுக்கும் அறியத்தருவதால்தான் மக்கள் விழிப்புணர்வு அடைந்து சமுதாயத்துக்கு பயன் உண்டாகும். சகோதரரின் இந்த தகவலுக்கு நன்றி. மேலும் பொது நலன் விசயத்தில் சங்கம் மூலமாக கலக்டரிடம் புகார் அளித்தால் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
அஸ்ஸலாமு அழைக்கும்
நிஜாம் அவர்கள் மிக அழகாக புகார்களுக்கு வலிகாட்டியுள்ளார் நானும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஆன்லைனில் புகார் எப்படி செய்யலாம் என்று இனிமேல் கவலை இல்லை புகார்கள் இருந்த படியே கொடுக்கலாம் இதற்காக எங்கேயும் அலைய தேவை இல்லை. நிஜாம் அவர்கள் சொன்னது போல் எந்த விதமான பொய் புகார்களை தெரிவிக்கக் கூடாது. அதான் ஆன்லைனில் வந்து விட்டதே இனிமேல் உட்டு அடிச்சிவிடுவோமே அதுமட்டுமல்லாமல் பொய்யான முகவரியையும் குடுக்க வேண்டாம். கோரிக்கைகள் வைப்பவர்கள் தாராளமாக வைத்து உங்களுடைய
காரியங்களை சாத்திதுக் கொள்ளுங்கள். நிஜாம் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் இதைபோல் தந்தால் மிக நன்றாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் விரைவில் இதையும் வெளியிடுங்கள்.
அதிரையில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் புகாரி ஷரிப் மஜ்லீஸ் இவ்வருடமும் கடந்த கடந்த நாற்பது நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாளான நாளை (08: 12:2011)சுபுகு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லீஸ் நடைபெறும் அதனை தொடர்ந்து புகாரி ஷரிப் விரிவுரை நடைபெறும்.
நிறைவாக துஆ ஓதி தப்ரூக் வழங்கப்படும் என்று ஜாவியா கமிட்டியினரால் தெரிவிக்கப்பட்டது .
இந்த புகாரி ஷரிப் நிறைவு நிகழ்ச்சிக்கு அதிரை மக்கள் மட்டுமின்றி முத்துபேட்டை,மல்லிபட்டினம், புதுபட்டினம் போன்ற சுற்று வட்டார ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் என நமது செய்தியாளரிடம் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர் .
விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமான கட்டுரை...
இதுபோன்ற தகவல்களை நமதூர் பொது நல அமைப்புகளின் கோப்புகளில் வைத்திருக்ககூடிய பத்திரம்.
அவசர கால கட்டத்தில் இதை பயன்படுத்தினாலும், நமதூரின் முக்கியஸ்தர்களை வைத்து கலக்டரை அணுகினால் மேலும் கூடுதல் கவனம் இருக்கும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment