சகோதர ! சகோதரிகளே ! !
தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.
நமது பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சனைகள் அதிகளவில் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
பிள்ளைகளின் படிப்புகள் சீரழிய “சினிமா’ வும் ஒரு காரணமாக இருக்கிறது. “சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது. அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. ( எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு )கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. & DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க பெற்றோர்களும் காரணமாக ஆகிவிடுகிறார்கள்.
பிள்ளைகளின் படிப்புகள் சீரழிய “சினிமா’ வும் ஒரு காரணமாக இருக்கிறது. “சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது. அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. ( எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு )கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. & DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க பெற்றோர்களும் காரணமாக ஆகிவிடுகிறார்கள்.
கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே !!
1. மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?
2. யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள் ?
3. தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
4. கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
5. இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...
என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா ? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா ? என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா ? சந்தேகப்படுவதாக ஆகாதா ? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.
பெற்றோர்களே ! ! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம். அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ! ஆமீன்.
சிந்திப்போம் ! செயல்படுவோம் ! !
நன்றி : சகோ. ஜாகிர்
நன்றி : சகோ. ஜாகிர்
6 பின்னூட்டங்கள்:
இப்பதிவு பெற்றோர்களுக்கு சரியான விழிப்புணர்வு தரக்கூடிய பாடப்புத்தகம்
ஒவ்வொரு பெற்றோரும் இப்பதிவை பிரிண்ட் அவுட் எடுத்து அவரவர் பாக்கெட்களில் பத்திர படுத்தி பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதரர்களே - நாம் ஏட்டளவில் இல்லாமல் செயலளவில் நாம் இஸ்லாத்தை பின்பற்றினால் நாம் வெற்றி பெறுவோம்.
அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் - இஸ்லாம் -
நீங்கள் இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து கொள்ளுங்கள் - (அல்-குர் ஆன்)
"ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்"” (அல்-குர்ஆன் 7:35)
இது போன்ற எத்தனையோ இறைவசனங்களும் - நபிமொழிகளும் நம் முன் இருந்தும் நாம் பாராமுகமாக இருந்து அவற்றை நம் வாழ்கைக்கு ஒரு சீர்திருத்தமாக எடுத்துக்கொள்ளாமல் சடங்கு சம்பிரதாயத்துக்கு பயன்படுத்துவதால் நாம் அதன் பயனை, பலனை அடையாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறோம் - அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும் .
நாம் சிந்தித்து செயல் படவேண்டும்.
சகோ.ஜாகிர் அவர்களின் பதிவு, நம் பிள்ளைகளை Advanced டெக்னாலஜி சம்பந்தமாக இப்பவே நாம் கற்றுக்கொள்ள அந்த சாதனங்களை அவர்கள் புழங்க தொடங்கினால்தான் அவன் எல்லாவற்றிலும் முதன்மையாக (???) இருப்பார்கள் என்கின்ற மனநிலை பொதுவாக எல்லா பெற்றோகளுக்கும் உள்ளது...., இது முற்றிலும் தவறு என்பதன் பதிவுதான் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், விலையுர்ந்த மொபைலை எதோ ஒரு மோகத்தில் வாங்கி சிறிய குழந்தைகளிடம் கொடுத்து......எனக்கே தெரியாது இந்த மொபைல எப்படி operate பண்ணுறதுன்னு, எல்லாமே என்புள்ளக்கித்தான் தெரியும்..... இந்த காலத்து புள்ளைக ரொம்ப பாஸ்ட்டா இருக்குதுக (???).....நமக்கு தெரியாததெல்லாம் இவங்க ரொம்ப வேகமா கத்துகுடுதுங்க..... என்பதாக பெருமையாக பேசுவார்கள். இது பெற்றோர்களின் அறியாமை மட்டுமல்ல, மார்க்க அறிவின்மை என்பதுதான் ஆணித்தரமான கருத்து.
இதற்குண்டான தீர்வை நாம்தான் இனங்கான வேண்டும். முதலில் பெற்றோர்களாகிய நாம் எப்படிப்பட்ட மார்க்க பேணுதலில் உள்ளோம் என்பதையும் முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
"பெற்றோர்களே... உங்கள் பிள்ளையை நமதூருக்கு மார்க்க ஞானம் பெற்றவர்களை எங்களுக்கு தாருங்கள்"
பேசாம இந்த பதிவை "பெற்றோர்களின் பெற்றோர்களுக்கு" முதலில் சொல்லலாம்.
// பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.
பெற்றோர்களே ! ! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம். அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ! ஆமீன். //
மார்க்கமில்லாத பள்ளிகூடங்களுக்கு அனுப்பாதீர்கள்.... நமதூரிலேயே நம்மால் சகிக்க முடியாத சில அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன..... அதிலும் என் மகளுக்கு இந்த லேப்டாப் தான் பிடிக்கும் என்று அலைந்து திருந்து வாங்கியவர்கேளெல்லாம் வாங்கிகட்டிகொண்ட வேதனைகளை சமீப காலங்களில் பார்க்க முடிந்தது....
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு உலககல்வியோடு மார்க்கத்தையும் சேர்த்தே கற்பியுங்கள்.... தனிமையில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார உபகரணங்களும் நமக்கு தீங்கு தான் என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பட்டும் திருந்தாவிட்டால்...... அல்லாஹ்தான் நம் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்.
படிப்பினை தரும் கட்டுரை
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment