அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, December 25, 2011

அதிரை கல்விச் சேவையகம் AEM - அறிவிப்பு !

அன்பிற்குரிய அதிரைச் சகோதரர்களுக்கு:

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற ஜனவரி 2011 - 14,15 ஆகிய தேதிகளில் நாம் நடத்திய கல்வி விழிப்புணர்வு மாநாடு பற்றிய விவரங்களையும் அதன் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். முதல் மாநாடாக இருந்ததால், அதனைக் குறுகிய வட்டத்திற்குள்தான் சகோதரர்களை ஈடுபடுத்தி, அல்லாஹ் உதவியால், வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அல்ஹம்து லில்லாஹ்!

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் புத்தாண்டில் இரண்டாவது மாநாட்டைச் சற்று விரிவாகவும், அதிகமான சகோதரர்களின் பங்களிப்பிலும், பயனுள்ள பல நிகழ்ச்சிகளுடனும் நடத்தத் தீர்மானித்துள்ளோம். அது பற்றிய ‘மஷ்வரா’ விரைவில் தொடங்கவுள்ளது. எனவே, பங்களிப்புச் செய்ய ஆர்வமுள்ள அதிரையின் அன்புச் சகோதரர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை "ADIRAI EDUCATIONAL MISSION" என்ற மின்னஞ்சல் குழுமத்தில் இணைத்துக்கொண்டு உங்களின் அரிய / உரிய பங்களிப்புகளை வழங்குமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு கூகுள் குழுமம் இதோ : adirai-edu-mission@googlegroups.com

உங்கள் புரிந்துணர்வுக்கும் அன்பாதரவுக்கும் மிக்க நன்றி. வஸ்ஸலாம்.

அன்புடன்,

அதிரை அஹ்மது
+91 98 94 98 92 30

3 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ. அதிரை அஹமத் அவர்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் !

கல்வி விழிப்புணர்வு என்பது மிக மிக பயனுள்ள நிகழ்வு. அதே நேரத்தில் கல்வி விழிப்புணர்வுடன் மார்க்க விழிப்புணர்வுவையும் சேர்த்து இதை ஒரு கண்காட்சியாக நடத்தினால் இன்னும் கூடுதலாக சிறப்பாக இருக்கும்.
இக்கண்காட்சியில் மாணவ , மாணவிகள் தங்களின் திறமைக்கேற்ப படிப்புகளை தேர்வு செய்யும் முறைகளை விவரித்தல், பிளஸ் டூ முடித்ததும் உயர் கல்வியை எங்கு படிக்கலாம் ? எப்படி கற்கலாம் ? , வேலை வாய்ப்புகள் பற்றி , சிறந்த கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு பிடித்து தெளிவு படுத்துதல், மாணவ , மாணவிகள் பயமின்றி தேர்வை எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல் இப்படி என்னற்ற பயனுள்ள தகவல்களை இக்கண்காட்சியின் வாயிலாக தெளிவுப்படுத்தலாமே.

அன்புடன்,
M. நிஜாமுதீன்
( 9442038961 )

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"சீன சென்றேனும் கல்வி கற்றுகொல் என்பது நபி மொழி" இந்த நல்ல முயற்சிக்கு நமதூர் மக்கள் நிச்சயம் பங்களிப்பை அதிகப்படுத்தினால் தான் நமதூர் செழிக்கும்.....

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அனைவரும் பங்கேற்கும் வகையில் விடுமுறை நாட்களை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜனவரி - 2012ஐ பொருத்தமட்டில் பொங்கள் விடுமுறை 3 அல்லது 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாக இருக்கும், இந்த விடுமுறையை பயன்படுத்தி மாநாடு நடத்தலாம், மாநாடு ஏற்பாட்டாளர்கள் இந்த விடுமுறையை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் கல்வி மாநாடு வெற்றிபெற வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.