காலை கதிரவன் தனக்களித்த திறனை காட்டுமுன் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம் சகோதரர்களின் அழகிய முயற்சியில் துவக்கமானது நெடுந்தூர ஓட்டப்போட்டி 400 போட்டியாளர்களின் அணிவகுப்பில், அவசர ஊர்திகளின் அலரும் சத்தம் கூட இங்கே ஆபத்தில்லாமலிருந்தது, காவலதுறையினர்களின் அணிவகுப்பு , நெடுந்தூர ஓட்டப்போட்டியை நடத்தும் சகோதரர்களின் அணிவகுப்பு, பார்வையாளர்களின் பிரதிபலிப்பு, சிறப்பு விருந்தினர்களின் உற்சாக வருகை அனைத்துமே அதிரையின் காலைபொழுதை அமர்களப்படுத்தியது என்றால் மிகையாகாது.
முயற்சியுள்ள மனிதனுக்கு தூரம் பெரிதல்ல என்ற விழிப்புணர்வாக இருக்க கூடுமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்திய சிறார்களின் கூட்டங்களும், 40வயதிற்கு மேற்பட்டோர்களின் ஆர்வமும் பார்வையாளர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் ஒரு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டியின் துவக்கம். 14 கிலோமீட்டர் தூரத்தையும் சில மணித்துளிகளிலேயே கடந்துபரிசுகளை தட்டிச்சென்றார்கள் போட்டியாளர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறப்பு பரிசுகளும் வழங்கி நெடுந்தூர ஓட்டப்போட்டியின் மேடையை அலங்கரித்த சிறப்பு விருந்தினர்களின் அமர்வுகள். இந்த மேடை அமர்வுகள் உலக அமைதியை உருவாக்கும் என்பதை அழகாய் பரைசாற்றிருக்கும் இந்த அமர்வு தங்களின் பார்வைக்கோர் வியப்பானதோர் விருந்து.
போட்டி நிறைவுகளும் இனிமையாய் முடிகையில்...
அதிராம்பட்டினத்தில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் அதலிருந்து தவிர்ந்துக்கொள்ளும் முறைபாடுகளை வெளிக்காட்டும் வண்ணம் நாட:டுப்புற பாடல்களுக்கு நாட்டியமாடும் விழிப்புணர்வு அரங்கத்தையும் துவக்கி வைத்து இனிதே விடைகொடுத்த அதிரை சேர்மன் அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டி இனிதே நிறைவடைய ஒத்துழைப்பு நல்கிய, பரிசுகள் வழங்கிய அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவிக்கின்றோம்...
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப்.
3 பின்னூட்டங்கள்:
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
ஆசையும் ஆவலும் நிறைவேறியது.
அம்மா - கலைஞர் இருவரையும் ஒரே மேடையில் பார்க்க கழக கண்மணிகளுக்கும், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும் ஆசை.
உலக அமைதிக்கும் இதைவிட சினப்பான மேடை வேறு எதுவும் அமையாது.
ஒரே போட்டியாளருக்கு நான்கு கரம் அடங்கிய புது மாப்பிள்ளைகளின் இரட்டை பரிசு.
நடக்காத காரியம் நிறைவேறினால் மழையை காணோம் என்பார்கள்.
ஆனால் இந்த காரியத்தால் முன் கூட்டிய மழை பொழிந்தது போலும்.
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகளுக்கு எங்களுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்
ஆளும் கட்சியையும் எதிர்கட்ச்சியையும் ஓரிடத்தில் பார்ப்பது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது......
ஆஹா இப்படியும் ஒரு நிகழ்வா? சைர்மன் கூத்தும் கும்மலாம இருகரே
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment