அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, July 31, 2011

ரமழான் நோன்பின் சட்டங்கள்

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.
மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.
தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.
கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.
மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.
தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.


நோன்பை முறிக்கக்கூடியவை


மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்றவேண்டும்.அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.
சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல் உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.
உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)
மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.) வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)
நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.நோன்பின் ஒழுக்கங்கள்


நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.
புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.
வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.
மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.
சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும்.
இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.
உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.
நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.
கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.
நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.
ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.நன்றி:ஒற்றுமை.காம்

சுப்ரமணியன் சுவாமி என்கிற பாசிஸ்ட்…

வேறு எந்த வார்த்தையாலும் சுப்ரமணியன் சுவாமியை வர்ணிக்க முடியவில்லை. கடந்த ஆகஸ்ட் 16 அன்று மும்பையிலிருந்து வெளி வரும் டிஎன்ஏ என்ற நாளிதழில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில், இந்துக்கள் அமைதியாக இருப்பதால் தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன என்ற போக்கில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், காஷ்மீருக்கு வழங்கப் பட்டிருக்கும் 370 என்ற சிறப்புப் பிரிவை நீக்க வேண்டும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே அமைந்திருக்கும் மசூதியை நீக்க வேண்டும், அது போல 300க்கும் அதிகமாக இந்தியாவில் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை நீக்க வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுவதை தடை செய்ய வேண்டும், பங்களாதேஷ் நாட்டிலிருந்து ஒரு பகுதியை ஆக்ரமிக்க வேண்டும், இந்துக்கள் போர்க்குணத்தோடு மாற வேண்டும், இந்துக்கள் 83 சதவிகிதம் இருக்கும் இந்தியாவில் இந்துக்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்று எழுதியிருந்தார். இது போன்ற கட்டுரையை சுப்ரமணிய சுவாமி எழுதுவதற்கான பின்புலம், மும்மையில் நடந்த குண்டு வெடிப்பு.

வெடிகுண்டு வைத்து, அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்யும் பாதக செயலைச் செய்பவர்களை நாம் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், இதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள் தான் காரணம் என்று கூறுவது விஷமத்தனமானது.

இந்தியாவில் தீவிரவாதம் பரவ, அதன் வேரில் நீர் விட்டு, வளர்த்தது இந்திய ஆட்சியாளர்கள் தான். காஷ்மீரில், ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதா, பாக்கிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடாக இருப்பதா என்று முடிவெடுக்க, இந்தியா கொடுத்த வாக்குறுதியை அது இன்று வரை நிறைவேற்றவில்லை. 370வது அரசியல் சட்டப் பிரிவு என்பது, காஷ்மீர் மக்களுக்கு அன்றைய பாரதப் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி.

இந்தியாவில் தீவிரவாதச் செயல்கள் மிகுந்ததற்கு முக்கிய காரணம், 1992ல் நடந்த பாப்ரி மசூதி இடிப்பு. 1991ம் ஆண்டு சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரதயாத்திரை இந்தியாவில் தீவிரவாதம் பரவுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. இது போன்ற குண்டு வெடிப்புகளால், அப்பாவிகள் உயிரிழப்பதோடு, நின்று விடுவதில்லை. அதற்குப் பிறகு நடக்கும் காவல்துறையின் விசாரணைகளால், எண்ணற்ற முஸ்லீம் குடும்பங்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஒரு சிறந்த ஜனநாயக நாடாக, வளர்ந்த பக்குவப்பட்ட மக்களாக வளருவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால் சுப்ரமணியன் சுவாமி செய்யும் பிரச்சாரமானது, ஹிட்லரின் கோயபல்ஸ் செய்யும் பிரச்சாரத்திற்கு நிகரானது.

300க்கும் அதிகமான, கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற கருத்து, மதநல்லிணக்கம் என்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அடி நாதத்திற்கே வெடி வைப்பதாகும்.

ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்குப் பிறகும், முஸ்லீம்கள் தான் காரணம் என்று இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதை, சுப்ரமணியன் சுவாமி போன்ற நபர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற கருத்துக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவாது. மாறாக, இரு பிரிவினருக்கிடையே வன்முறையைத் தூண்டுவதாக மட்டுமே அமையும். குண்டு வெடிப்பினால், சாதாரண மக்களிடையே ஏற்பட்டுள்ள கோபத்தை வன்முறையாக மாற்றுவதற்கு சுவாமி முயன்றிருக்கிறார்.

இசுலாமியத் தீவிரவாதத்தின் நோக்கம், இந்துக்களை கொல்வது என்று சுவாமி கூறுகிறார். ஆனால், நெருக்கடியான மார்க்கெட் போன்ற இடங்களில் வைக்கப் படும் குண்டு, இந்துக்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. இந்துக்களே இல்லாத, இந்தோனேசியா, நார்வே, அமேரிக்கா போன்ற இடங்களில் கூடத்தானே குண்டுகள் வெடிக்கின்றன ? தீவிரவாதத்துக்கு மதமோ நிறமோ கிடையாது.

சுப்ரமணியன் சுவாமியைப் போன்ற நபர்களே, தீவிரவாதத்துக்கு உரமாக இருக்கிறார்கள். வன்முறைச் சம்பவங்களால், அமைதி குலைந்து, வன்முறை தாண்டவமாட வேண்டும் என்ற எண்ணத்தில் வைக்கப் படும் குண்டுகளை செய்யும் காரியங்களை, சுவாமி போன்றவர்கள் தங்கள் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் செய்கிறார்கள். இசுலாமியர்கள், இந்தியா இந்துக்களின் நாடு என்பதை ஒப்புக் கொண்டு வாழ வேண்டும் என்பது எத்தகைய விஷமத்தனமான பிரச்சாரம் ?

இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்களான அக்பர் மற்றும் ஷாஜஹானுக்கு மதநல்லிணக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே, 1947ல் இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருந்தனர். 300 மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுவாமியின் கோரிக்கை, சாதாரண இசுலாமியர்களை தீவிரவாதிகளின் பக்கம் கொண்டு சேர்க்காதா ?
கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதைத் தானே சுவாமியின் கட்டுரை நிரூபிக்கிறது ? படித்த படிப்பு ஒரு மனிதனை பண்படுத்தாமல், மற்ற சமூகத்தின் மேல் விஷத்தை கக்குவதை சொல்லிக் கொடுத்தால், அதை விட கல்லாத பாமரன் எவ்வளவோ மேல் அல்லவா ?

இந்தியாவில் இசுலாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்து சாமியார்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வார் டாக்டர்.சுவாமி ?
கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை கவனமாக பயன் படுத்த வேண்டும். கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாம், எழுதி விடலாம் என்பதும், ஜனநாயத்திற்கு மிகுந்த ஆபத்தில் போய் முடியும்.

சுப்ரமணியன் சுவாமியும், அவரின் விஷம் கக்கும் கட்டுரையை வெளியிட்ட டிஎன்ஏ நாளேட்டின் ஆசிரியர் ஆதித்ய சின்ஹாவும், வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள். சுவாமியின் கட்டுரையைத் தொடர்ந்து, மஹாராஷ்டிர மாநில, சிறுபான்மையினர் கமிஷன், டாக்டர்.சுவாமியை கைது செய்ய வேண்டும் என்று மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

சுவாமி போன்ற நபர்களின் கோயபல்ஸ் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள், வன்மையான கண்டனத்திற்கு உரியன.

Thanks
savukku.net

Saturday, July 30, 2011

தன் குஞ்சை பாம்பிடமிருந்து பாதுகாக்க போராடும் பறவை

மர பொத்துக்குள் இருக்கும் தனது குஞ்சை உள்ளே நுழைந்த பாம்பிடமிருந்து பாதுகாக்க ஒரு தாய் மரங்கொத்தி பறவையின் போராட்டம்.

Friday, July 29, 2011

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் இன்றைய(29/07/2011) ஜும்மா உரை

இன்று (29/7/2011) மேலத்தெரு ஜும்மா பள்ளியில் நடைபெற்ற பயான்

தலைப்பு : லைலத்துல் கதிர்


அதிரை வங்கியில் அபாய ஒலி ! பொதுமக்கள் அதிர்ச்சி !

இன்று(29/07/2011) நமதூரில் வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் விடுமுறை விடுவது வழக்கம். அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும். அந்த வகையில் புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் 12 மணி  அளவில் ஜும்மா தொழுகைக்கு மக்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை அலாரம் அலற ஆரம்பித்தவுடன் ஏராளமான பொதுமக்கள் வங்கி முன் குவிந்தனர். 

தவறுதலாக அலாரம் அடித்துவிட்டதாக வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார், பின்னர் அலாரம் நிறுத்தப்பட்டதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


அதிரை இஸ்லாமிக் மிஷன் AIM யின் அன்பான வேண்டுகோள்

அதிரை இஸ்லாமிக் மிஷன் -AIM அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்புடன் அதன் பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகிறது (இது தொடர்பான செய்தி www.aimuaeadirai.blogspot.comல் விபரமாக பதியப்பட்டுள்ளது).

அல்ஹ்மதுலில்லாஹ் !
வழமைபோல் இவ்வருடமும் ரமளான் மாதத்தின் கடமைகளை சிறப்புடன் தொடர்ந்திட அதிரை இஸ்மாமிக் மிஷன் (AIM) ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆதலால்,இவ்வருடமும் தங்களுடைய பித்ரு ஜகாத்தை தேவையுடையவர்களுக்கு அல்லாஹ்வும், ரஸுலும் கட்டளையிட்ட முறைப்படி தேவையுடையவர்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்த்திட எல்லாவகையான முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம்.
உங்களின் பங்களிப்பான பித்ரு ஜகாத்தை அதிரை இஸ்லாமிக் மிஷன் வாயிலாக தேவையுடையவர்களுக்கு சென்றடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :
அப்துல்காதர் - mobile : 055-2829759
(பித்ரு ஜகாத்தை பெற்று கொள்ள அமர்த்தப்பட்டிருக்கும் பொறுப்புதாரி மக்கள் தொடர்பு)

மின்னஞ்சல் : aimuaeadirai@ஜிமெயில்.com

இங்கனம்:
AIM -துபாய்,UAE


நன்றி:அதிரை நிருபர்

துபையில் ரமலான் தொடர் சொற்பொழிவு

Thursday, July 28, 2011

அதிரை பிபிசியின் நேரலை முயற்சிக்கு நல்ல ஆதரவு!!!


இன்று தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முயற்சியாக உள்ளூர் நிகழ்வுகளை தடங்கலின்றி வழங்கும் நேரலை சேவையை முயற்சித்தோம். அந்த முயற்சி அல்ஹம்துலில்லாஹ் முழு வெற்றியை தந்தது. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவு சுமார் 50 நிமிடங்கள் சிறப்பாக நடைபெற்றது. அதன் வீடியோ இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்கிறோம்.

குறுகிய நேரத்தில் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்நேரலைக்கு வெளிநாடுகளிலிருந்தும் உள்நாடுகளிலிருந்தும் பெரும் ஆதரவு தந்து தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எமது நன்றி.

அது போல் உள்ளூர் தொடர்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துரையாடும் கான்பரன்சிங் வசதி சேவையையும் விரைவில் சோதிக்க உள்ளோம். உங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதனையும் பார்க்கவும்: அதிரை நிகழ்ச்சிகள் இனி நேரலைகளாக!!

இன்று(28/7/2011) நேரலை செய்யப்பட்ட ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான்!
அதிரை நிகழ்ச்சிகள் இனி நேரலைகளாக!!


அஸ்ஸலாமு அலைக்கும்

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இனியும் தட்டச்சு செய்து கொண்டிருக்கவேண்டுமா என்று யோசித்ததன் விளைவாக அதிரை பிபிசி உள்ளூர் நிகழ்வுகளை நேரலைகளாக ஒலி, ஒளிபரப்பு செய்ய இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
அதன்படி இன்று முதல் அதிரை பிபிசியில் நேரலை சோதனை ஓட்டம் தொடங்குகிறது. வரும் நோன்பு மாதம் முழுவதும் உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன் நேரலைகளாக ஒலிபரப்பாகும் இன்ஷா அல்லாஹ்.

ஹஜ்ரத் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவுகள் இன்றுமுதல் நேரலையாக ஒலி/ஒளிபரப்பாகும்.

இலவச நேரலை வலைத்தளங்களில் ஏற்பட்ட இடர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து இம்முயற்சியை தொடங்கியுள்ளோம்.

அதிரையிலிருந்து மட்டுமல்லாது, இனி வெளிநாடுகளிலிருந்தும் அதிரை பிபிசியில் பேட்டி கொடுக்க அல்லது செய்தி வாசிக்க அல்லது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவிரும்புபவர்கள் எங்களுக்கு மின்னஞ்சலிட்டால் அவர்கள் தங்களது வெப் காமிரா மூலம் உலகெங்கும் வாழும் அதிரை மக்களுடன் உரையாடும் வசதியை செய்து தருகிறோம்.

அதுமட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் (வெப் கான்பரன்சிங்) பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்டு அதிரை தொடர்பான விசயங்களில் கலந்துரையாடும் வசதியையும் உங்கள் அதிரை பிபிசி செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த முயற்சிக்கு வாசகர்கள், உள்ளூர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் தங்களது ஆதரவை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றாக பேசக்கூடிய ஆர்வமிக்க அதிரை இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளூர் செய்திவாசிப்பாளராக விருப்பம் இருப்பின் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

அதிரை பிபிசி இணைய டிவியாக வலம் வர உங்களின் நல்லாதரவை எதிர்நோக்கியவர்களாக.


அதிரை பிபிசி

ஹார்ட் அட்டாக் ஒரு கண்ணோட்டம்!

நடு நிசி நேரம் பக்கத்துக்கு வீட்டு அஹமது கக்கா படுக்கையில் மூச்சு திணற தவிக்கிறார்கள். கட்டிலை சுற்றி குடும்பத்தினர் சூழ்ந்து செய்வது அரியது நிற்க மூத்த மகன் பைக்கை எடுத்துக்கொண்டு மருத்துவ உதவி நாடி விரைந்தார். பத்ர்ட்டத்துடன் டாக்டரை விசாரிக்க அங்கு உதவி மருத்துவர் மட்டும் கிடைத்ததனால் அவரை உடன் அழைத்து வந்தார். 
 
டாக்டர் வருவதற்குள் பெண்கள் என்ன செய்வார்கள் அக்கம் பக்கத்தில் அனுபவமுள்ள பாட்டி சொல்லைக்கேட்டு காக்காவின் நெற்றியில் மாவு தூவி வியர்வையை அடக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் ஹர்ட் அட்டாக் வரும்போது குபு குபுவென்று வியர்க்குமாம். ஜூனியர் டாக்டர் வந்தார். எதோ அவருக்குதெரிந்த சில முதலுதவிகள் மற்றும் சோதனைகள் செய்துகொண்டிருக்கும்போது தலைமை மருத்துவர் வந்துவிட்டதக்கேள்விப்பட்டு ஆவலுடன் வரவேற்று "நல்லநேரதுல வந்திய டாக்டர் என்ன எதுன்னு பாருங்க".

டாக்டர் 'காக்காவின் வீட்டுக்கரவோ யாரும்மா?' என்று அழைத்து காலையிலேருந்து காக்க என்னென்ன சப்பிட்டங்கன்னு சொல்லுங்கம்மா என்று கேட்டதும் விடியக்கையில் நாயக்கர் கடை மெதுவடையில் தொடங்கி காளை பசியாற இறைச்சி கறி வட்டுழப்பம் டீ பத்து மணிக்கி மரவள்ளி கிழங்கு பகல் விருந்து சாப்பாடு மூனரை மணிக்கு மிக்சர் டீ அசருக்குப்பின் செக்கடிப்பள்ளி நாற்சா கொண்டக்கடலை என்று அடிக்கிக்கொண்டே போனார்கள்.

போதும்மா நிறுத்துங்க இந்த பட்டியலே நீளமானது. இப்படி இடைவிடாது தின்றால் எங்கே போட்டு அரைக்கிறது. காக்காவுக்கு ஏற்பட்டது செரிமானக்குரைவுதான் என்று கூறிவிட்டு அதற்க்கான சில வைத்தியம் செய்துவிட்டு விடை பெற்றார்.
 
ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது :
  • துவாவும் தர்மமும் அதிகம் செய்யவேண்டும் 
  • திருமறை மற்றும் நபிமணி  சொல்கேட்டு அளவாக சாப்பிட்டு சிறிது நடைப்பயிற்சியும் முறையான தூக்கமும் தூங்கவேண்டும்.
  • குரான் ஓதுவதும் தெளிவான எண்ணமும் மன அழுத்தத்தை தடுக்கும்.
 -- அதிரை அன்வர்

அதிரையில் தரமான கல்வி?????(இக்கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகவோ,குற்றம் சாட்டவோ அல்ல.நம் அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது.)

நம் அதிரையில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.அதிலும் +2 வரை உள்ளவை இரு பெரும் கல்வி நிறுவனங்கள்.அந்த பள்ளிகளில் படித்து,இன்று வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளோர் பலர்.ஆனால் இன்று,தரமான கல்வியை தேடி,பெற்றோர் பள்ளிகொண்டான்,திருச்சி, சென்னை பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

தந்தையின் பணியும் சென்னையில் இருந்து,குடும்பமும் அங்கு இருந்தால் சரி.ஆனால்,பிள்ளையின் படிப்பை காரணம் காட்டி,அங்கு இடம்பெயர்வோர் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

கேட்டால்,நம் அதிரை பள்ளிகளில் கல்வியில் தரமில்லை என்று காரணம் சொல்கின்றனர்.தம் பிள்ளைக்கு தரமான கல்வி வேண்டும் என்பதற்காக,இங்குள்ள பலர் தம் அழகிய சொந்த வீடுகளை பூட்டி போட்டு விட்டு,வெளியூர்களில் ஆயிரங்களை கொட்டி வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

கணவர் வெளிநாடு சென்று,கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம்,வாடகை கொடுத்தே வீணாகிறது.கணவர் வெளிநாட்டிலும்,மனைவி பிள்ளைகளோடும் தனியே வாடகை வீட்டில் இருப்பதால்,பாதுகாப்பு பிரச்சினையும் எழுகிறது. இதற்கு முன் வரை,நம்மூரில் தானே நாமும் படித்தோம்,நாம் முன்னேறவில்லையா?

டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தன் சொந்த ஊரில் படித்தும் முன்னேறவில்லையா? ஆங்கிலம் தான் சரளமாக பேசவில்லையா?அவருக்கு அவர் ஊரில் கிடைத்த தரமான கல்வி,நம் பிள்ளைகளுக்கு,நம் அதிரையில் கிடைக்காதா?

அது யார் குற்றம்?அதிரையில் பிறந்த நம் குற்றமா?ஆசிரியர் குற்றமா?பள்ளி நிர்வாகத்தின் குற்றமா?

வருடக்கணக்கில் மாறாத பாடத்திட்டத்தில்,5 வருட வினாத்தாள்களை திருப்பி படித்தாலே போதும் பாஸாகிவிடலாம் என்ற ரீதியில் எளிதான வினாத்தாள் அமைப்பு, அப்படியும் சரியாக மார்க் எடுக்காத பிள்ளைகளை தனித்தேர்வு எழுத வைத்து விட்டு, மீதி மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண் பெறுவதும்,100% தேர்ச்சியும் இருந்தால்,அது தரமான கல்வியா? தரமான பள்ளியா?அதனால்,யாருக்கு என்ன பயன்?

தரமான கல்வி என்பது,நடைமுறை வாழ்வோடு தொடர்பு உடையதாக இருக்க வேண்டும் அல்லவா?வெறும் மதிப்பெண் மட்டும் இருந்தால்,உடன் வேலை தான் கிடைத்து விடுகிறதா?கல்வி தரமாக இருந்தால்,நம் பிள்ளைகள் சுயமாக சிந்திக்கவும்,தன்னம்பிக்கையோடு சுயமாக செயல்படவும்,ஆற்றலை கொடுக்க வேண்டும்.

அதற்கு ஏட்டுக்கல்வியோடு தொழில் சார்ந்த பல்துறை அறிவும் கற்பிக்கப்பட வேண்டும்.

பெற்றோர் தாம் கற்றதை விட தம் பிள்ளை மேம்பட்ட கல்வியை கற்க வேண்டும் என நினைக்கின்றனர்.ஆனால்,நம்மூரில் கல்வித்தரம் நாம் பெற்றதை விட இப்போது கீழ்நோக்கி போய் கொண்டு இருக்கிறது.

நாம் படித்த போது இருந்த ஆசிரியர்கள் தம் பணியை சேவையாக நினைத்து செய்தார்கள்.ஆனால் இப்போதுள்ள ஆசிரியர்களில் சிலர் சேவையாக நினைத்தாலும்,பலர் அதை தொழிலாக செய்கிறார்கள்.இலக்கண வகுப்பைக் கூட இனிமையாக நடத்தும் ஆசிரியர்கள் நமக்கு கிடைத்தார்கள்.ஆனால் இன்று?

பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.அவ்வாறு நடத்தினால்,பாடம் நடத்தி முடித்த பின் ஆசிரியர் கேட்கும் அத்தனைக் கேள்விக்கும்,நம் பிள்ளை கோனார் உரை இல்லாமல்,நோட்ஸ் இல்லாமல்,சரியான பதில் அளிக்குமே!இப்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் பாடம் நடத்தி முடித்த பின் பிள்ளைகளிடம் நடத்திய பாடம் தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள்?கேட்டால் தானே சுயமாக பதில் சொல்லும் திறன் வளரும்?

கோனார் உரையில் அல்லது நோட்ஸில் உள்ள பதிலை தன் புரிந்துணர்வோடு சிறிது மாற்றி எழுதினாலே மார்க் கிடைப்பதில்லை.....இது தரமான கல்வியா?

நம்மூரில் சில பள்ளிகளில் பிள்ளை தவறான விடை எழுதினாலும் ஆசிரியரின் கவனக்குறைவால் சரி என டிக் போடப்படுகிறது. சில கேள்விகளுக்கு தவறான பதில் ஆசிரியராலேயே குறித்துக் கொடுக்கப்படுகிறது .ஒரு பள்ளியில் ஆங்கில வழி அரசு அங்கீகாரம் இன்றி நடப்பதோடு,சில பாடங்களுக்கு ஆசிரியரே நியமிக்கப்படாமல் உள்ளது.அங்கு பாடம் தமிழ் வழியில் தான் நடத்தப்படுகிறது.கட்டணம் ஆங்கில வழி என வசூலிக்கப்படுகிறது.

ஒரு பள்ளியில் சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பிள்ளைகளின் தேர்வு விடைத்தாள்களை கூட திருத்துவதில்லை.சம்பந்தமே இல்லாத ஆசிரியரிடம் கொடுத்து திருத்தப்படுகிறது.இன்னும் சிலர்,நன்றாக படிக்கும் பிள்ளைகளின் பேப்பர்களை மட்டும் தாம் திருத்துவதும்,மற்ற பிள்ளைகளின் பேப்பர்கள் மற்றவர்களிடம் கொடுத்து திருத்துவதும் உண்டு.அப்புறம் எப்படி,அந்த பிள்ளைக்கு உரிய மார்க் கிடைக்கும்?

தன் பாட வேளையில் வகுப்பிற்கு வராத ஆசிரியரும் உள்ளனர். இப்படி குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இவை கற்பனையல்ல.அப்பள்ளியில் இப்போது பயிலும்,அல்லது சென்ற ஆண்டுகளில் படித்த உங்கள் பிள்ளைகளை கேளுங்கள்.ஆம் என்று அடித்துச் சொல்வார்கள்.

நம் அதிரையில் பெரும்பாலும் தந்தை வெளிநாடு சென்று விடுவதால்,பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுவது தாய் தான்.

எத்தனை தாய்மார்கள் பள்ளி முடிந்து வீடு வரும் பிள்ளையிடம் அன்பாக பேசுகிறோம்?பிள்ளையிடம் உன் பள்ளியில் இன்று எத்தனை வகுப்புகள் நடந்தன?எல்லா பாடத்திற்கும் ஆசிரியர் உள்ளனரா?ஆசிரியர் வகுப்பிற்கு தவறாமல் வருகிறாரா?பாடம் புரிந்ததா?உனக்கு எந்த ஆசிரியர் நடத்துவது புரிந்தது?வீட்டுப்பாடம் உள்ளதா? என்றெல்லாம் அன்பாக கேட்டால்,அவர்களும் சொல்வார்கள். குறைபாடும் களையப்படும்.

சில தாய்மார்களுக்கு உண்மை தெரிந்தும்,யாரிடமும் முறையிட இயலாத நிலை.....ஆம்... தட்டிக் கேட்டால் தம் பிள்ளை ஆசிரியரால் பாரபட்சத்தோடு கவனிக்கப்பட்டு தம் பிள்ளையின் எதிர்காலம் வீணாகிடுமோ என்ற பயம்....

ஒரு ஆசிரியர் தன் சக ஆசிரியர் இது போன்ற தவறு செய்யும்போது அதை தட்டிக் கேட்கவோ,பிறரிடம் வெளிப்படுத்தவோ இயலாத நிலையும் உண்டு.பெரும்பாலும் இது போன்ற தவறு செய்வோர் அரசு ஊதியம் பெறுபவர்களாகவோ பணி மூப்பு அடிப்படையிலோ இருப்பதால்,சக ஆசிரியரின் மனிதநேயம் முடக்கப்படுகிறது.

அப்போ பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?

பள்ளி நிர்வாகம் தான்.

ஸ்கூல் பீஸை எவ்வளவு உயர்த்தலாம்,அதற்கு பெற்றோருக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று அடிக்கடி கூடும் பள்ளி நிர்வாகிகள்,அதிரை பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,பாடம் பிள்ளைகளுக்கு புரியும்படி நடத்தப்பட வேண்டும்.

தம் பிள்ளை நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.அது கடினமானதும் அல்ல.பள்ளிகளில் சிறு வகுப்பில் இருந்தே ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.அப்போது தான் நம் பிள்ளையாலும் ஆங்கிலம் பேச முடியும்.

தாய்மாரும் பீஸ் கட்டியதோடு சரி நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,அவ்வப்பொது பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் தம் பிள்ளை பற்றி விசாரிக்க வேண்டும்.

தந்தையும் சம்பாதித்து பணம் அனுப்பியதோடு,நம் கடமை முடிந்தது என்று இல்லாமல்,விடுமுறையில் ஊர் வரும்போது பள்ளிக்குச் சென்றும்,தம் பிள்ளையிடம் விசாரித்தும் அவர்களின் கல்வி நிலையை அறியலாம்.

காலில் முள் குத்தியது என்பதற்காக காலை வெட்டி வீசுவதை விட,முள்ளை பக்குவமாக நீக்கிவிட்டு,காலுக்கு செருப்பு போட்டு நடப்பதே அறிவுடைமை...அது போல் அதிரையில் கல்வி தரமில்லை என்று புலம்புவதை விட,வேறு ஊர் பள்ளிக்கு இடம்பெயர்வதை விட,பெற்றோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிரையிலேயே நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

புகழ்பெற்ற இரு பெரும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகமும் நம் சமுதாய நலனை கருத்தில் கொண்டு இதற்கான சில சீர்திருத்தங்களை செய்து குறைகளை களைய முயல வேண்டும்.

ஆசிரியர்களும் தம் திறமையை,அறிவை (update)புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சில மாணவர்களும் +2 வரை படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்துவிட்டு,கல்லூரிக்கு சென்ற பிறகு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக படிக்காமல்,சிறு வகுப்பில் இருந்தே ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால்,நம் அதிரையிலும் சொந்த வீடுகளில் இருந்தபடியே பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்கும் சூழல் உருவாகும். பொருளாதார விரயமும் தவிர்க்கப்படும்.

அதற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!
ஆக்கம்: அதிரைத்தென்றல்.

Wednesday, July 27, 2011

மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது


நியூயார்க்:அமெரிக்காவின் குடியுரிமை ஆர்வலராக பணியாற்றிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அவருடைய மரணத்தைக் குறித்த மர்மங்களை வெளிப்படுத்துமா? – மால்கம் எக்ஸின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.


1965-ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் உரையாற்றும் வேளையில் மால்கம் எக்ஸ் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். கறுப்பு இன முஸ்லிம்களின் தலைவரான எலிஜா முஹம்மதுடன் மால்கம் எக்ஸிற்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு மூலம் அவரது ஆதரவாளர்கள் மால்கம் எக்ஸை கொலைச் செய்ததாக போலீஸ் கூறுகிறது. கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தண்டனையை அனுபவித்துவிட்டனர். மர்மங்கள் நிறைந்த மால்கம் எக்ஸின் கொலைவழக்கின் மறுவிசாரணைக்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.


டாக்டர்.மானிங் மாரப்ல் எழுதிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அத்தகைய முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ’மால்கம் எக்ஸ் எ லைஃப் ஆஃப் த ரி இன்வென்ஷன்’ என்ற பெயரைக் கொண்ட வாழ்க்கை வரலாற்று நூலில் மால்கம் எக்ஸ் மீது துப்பாக்கியால் சுட்டவர் நியூயார்க் நகரத்தில் பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹோவாட் பல்கலைக்கழகத்தில் மாணவரான அப்துற்றஹ்மான் முஹம்மது என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.


இவ்வழக்கை மறு விசாரணக்கு உட்படுத்தும் சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவுகிறது. தெற்கு மாகாணங்களில் இனவெறியர்களான போலீசார் விசாரணை நடத்திய பல வழக்குகளிலும் பல ஆண்டுகளுக்கு பின்னர் மறுவிசாரணை நடந்துள்ளது. திறமையான வழக்கறிஞர் கான்ஸாஸில் ஆல்வின் ஸைக்ஸ் அமெரிக்க நீதித்துறை மால்கம் எக்ஸின் கொலையைக் குறித்த உண்மையான விபரங்களை வெளிக்கொணர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


மால்கம் எக்ஸின் ஏழு பெண் மக்களில் ஒருவரான இல்யஸாவும் மறுவிசாரணை தேவை என கூறுகிறார். வெள்ளையர்களுடனான வெறுப்பை அடிப்படையாக வைத்து எலிஜா முஹம்மது நிறுவிய ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற இயக்கத்திலிருந்து கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மால்கம் எக்ஸ் பின்னர் ஹஜ் கடமையை நிறைவேற்றி இஸ்லாத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தை புரிந்துக்கொண்டார். மாலிக் அல் ஷபாஸ் என பெயரை மாற்றிய மால்கம் எக்ஸை எலிஜா முஹம்மது எதிரியாக பிரகடனப்படுத்தியது அவரது மரணத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது என கூறப்படுகிறது.


போலீஸார் கைதுச் செய்த தாமஸ் ஹாகன் உள்ளிட்ட இரண்டுபேரை நீதிமன்றம் தண்டித்தாலும் சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. கடுமையான தாக்குதலை நடத்தியது வில்லியம் ப்ராட்லி என்பவராவார் என கூறப்படுகிறது. போலீஸ் பதிவுச்செய்த வழக்கில் ப்ராட்லி குற்றவாளியாக்கப்படவில்லை. எஃப்.பி.ஐயும் நீதித்துறையும் ஒத்துழைத்து செயல்பட்டால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம்

Tuesday, July 26, 2011

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

இந்திய சிறுபான்மையினர் நலத்துறை வெளiயிட்டுள்ள அறிக்கையில் 10-ம் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.

இதற்கான முழு விபரத்தை காண கீழ் காணும் சுட்டியை CLICK செய்யவும்,மேலும் இச்செய்தியை சமுதாய மக்களிடம் கொண்டு செல்லும் படியும் வேண்டுகிறோம்.
 
http://www.minorityaffairs.gov.in/Postmetric

Monday, July 25, 2011

புதுப்பள்ளி

புதுப்பள்ளியின் கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருவதை படத்தில் காணலாம். தொழுகைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்திலிருந்து மாற்றி தற்பொழுது தொழுகை, கட்டுமான பணிகள் நடைப்பெற்று வரும் புதுப்பள்ளியின் உள்ளேயே நடைப்பெற்று வருகிறது.
சென்ற ஆண்டு ரமலானில் அரைகுறையாக இருந்த புதிய கட்டிடத்தில் தொழுகை நடத்தப்பட்டு வக்ப் செய்யபட்டது. பின்னர் பணி முடிக்கப்படாததால் மீண்டும் பழைய கொட்டகையிலேயே தொழுகை நடைபெற்றுவந்தது. மழைகாலம் தொடங்கியுள்ள இத்தருணத்தில் கொட்டகையில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் புதிய கட்டடத்தில் தொழுகை நடைபெறுகிறது.


இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்ப்போமாக.

Sunday, July 24, 2011

பணி முடிக்கப்படாத நிலையில் ஆபத்தான இரயில்வே கேட்

பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ECR ரோடு புதிதாக கட்டமைக்கும் பணி கடந்த நான்கு வருடமாக நடைபெற்று தற்போது 80 சதவீதம் வேலை நிறைவுற்றுள்ளதை நாமறிவோம். 

இதில் நமதூர் வழியாக செல்லும் பாதையில் இரயில் பாதை அமைந்துள்ள பகுதியில் மட்டும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இருக்கின்றது. அதிரையில் இருந்து மல்லிப்பட்டினம் செல்வோருக்கு அறிவிப்பு பலகை பெருத்தப்பட்டுள்ளது. ஆனால் மல்லிப்பட்டினத்திலிருந்து வருகை தரும் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. 

அப்படி வரும் வாகனங்கள் எந்த வித அறிவிப்புபலகையும் இல்லாத காரணத்தால் நேராக சென்று இரயில்வே கேட் மூடியிருப்பதால் அப்படியே நின்று பின்னர் திரும்பி மாற்றுப்பாதையில் செல்கின்றன. அந்த இடத்தில் ஒரு பத்து நிமிடம் நின்று பார்த்தால் இதுபோன்று நிகழ்வை அடிக்கடி காணமுடிகிறது. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலைவாய்ப்பு இணையதளம்


சென்னை, ஜூலை 23:
அமெரிக்காவில் பிரபலமாக விளங்கும் வேலை வாய்ப்புக்கான இணையதளம் கார்ப்-காம், தனது சேவையை சென்னையில் தொடங்கியுள்ளது. இச்சேவையை காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார். கார்ப்-காம் இணையதளம், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தேடுவோருக்கு உரிய பணியிடங்கள் பற்றிய தகவலை அளிப்பதில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் உரிய பணியாளர்களைத் தேடும் நிறுவனங்கள் 30 விநாடிகளில் தாங்கள் விரும்பும் தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய முடியும். பொதுவாக நிறுவனங்கள் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்களைப் பெற்று அதை பரிசீலித்து உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். இதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் கார்ப்-காம் இணையதளம் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் தகுதியானவர்களைத் தேர்வு செய்யலாம். இந்த இணையதளத்தில் தனிநபர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்ய கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஒரு மாதத்தில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இந்த இணையதளம் உருவாக்குகிறது.
இணையதள முகவரி: www.corp-corp.com

Friday, July 22, 2011

அதிரை நல்வாழ்வு பேரவையின் கோரிக்கை

மயிலாதுறை -திருவாரூர் -காரைக்குடி -மார்க்கம் திருவாரூர் -காரைக்குடி பிராட்கேஜ் மாற்றுவது சம்மந்தமாக அடிக்கடி
செய்திகள் வருகிறதே தவிர இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை . இது சமந்தமாக தென்னிந்திய ரயில்வே மேலாளர் சென்ற வாரம் சொன்ன செய்திகள் இன்னும் 03வாரத்தில்,இந்த வேலை முடியும் யன்று சொல்கிறார்.அது மாறி நடக்கும் என்று நம்பிக்கை இல்லை .இந்த வழிதடம் மிகவும் பழமையானது .இதை கவனிக்காமல் புதிய பாதை அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது.நாம் காத்து கிடப்பதில் எந்த பயனும் இல்லை ஆகவே HIGH COURT-ல் உடனே ரிட் பைல் கொடுத்து வேலை துரிதமாக நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் .இதற்காக வக்கீல் பீஸ் மற்றும் இதர செலவுகள் இருக்கிறது இதற்கு உதவும் படிதாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்
தொடர்புக்கு:
ஹாஜி அகமது அலி ஜாபர்,
35,ஜோன்ஸ் தெரு
சென்னை -1
தொலை பேசி:9791190405
இங்கனம்,
அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை.
அதிரை .

அதிரையில் PFIயின் அணிவகுப்பு நிகழ்ச்சியின் காணொளி

கடந்த 17/07/2011 அன்று நமதூரில் நடைபெற்ற PFIயின் அணிவகுப்பு நிகழ்ச்சியின் காணொளி சில தவிர்க்க முடியாத காரணத்தால் காலதாமதம் ஆகிவிட்டது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

Thursday, July 21, 2011

அல் அமீன் பள்ளியின் வரவு செலவு கணக்கு

Tuesday, July 19, 2011

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Monday, July 18, 2011

அதிரையில் நடந்த PFIயின் சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை புகைப்படங்கள்


நாம் முந்தைய செய்தியில் சொல்லியது போல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை கடற்கரை தெரு திடலில் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.நிகழ்ச்சியை காண பலநூறு பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் புகைப்படங்களில் சில… மேலும் புகைப்படங்களும், காணொளியும் விரைவில் இன்ஷாஅல்லாஹ்!


Sunday, July 17, 2011

தமுமுக கோரிக்கை ! மின்வாரியம் நடவடிக்கை!

நமதூரில் வெள்ளைக்காரன் காலத்து மின்கம்பிகளும், மின்கம்பங்களும் இருப்பதை அறிவோம். ஊர் பெரிதாகிவிட்ட நிலையில் கடந்த 20 - 25 வருடத்திற்குமுன் நிறுவப்பட்ட மின்மாற்றிகளின் உதவியுடனே இதுவரை அரைகுறை மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மின்சாரப் பொருட்களான வாசிங்மெசின், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், ஏசி என்று ஏகத்துக்கும் மின்சாதனப் பொருட்களை வாங்கி குவித்திருக்கிறோம். மின்சார நுகர்வு அதிகளவில் அதிகரித்திருக்கிறது. மின்கட்டணமும் சொல்லவேண்டியதில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செக்கடி மோடில் ஆய்வு செய்யப்பட்டபோது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 26/05/2011 அன்று பட்டுக்கோட்டை வட்ட மின் குறைதீர்ப்பு ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சி E.O. திரு. தங்கராஜிடம் திறன் குறைந்த மின்மாற்றிகளை நீக்கி அதிகத் திறன் கொண்ட மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டதன் பேரில் அதிரை A.O. தலைமையில் மின்மாற்றிகளின்(TRANSFORMER) திறன் அளக்கப்பட்டது. முதலில் செக்கடிமேடு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை குறைவாக இருப்பதாக குறிப்பிட்டு அதற்கு அருகில் அதிக திறன் கொண்ட மின்மாற்றிகள் (TRANSFORMER) பொருத்தி தருவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்று(16/07/2011) கிழத்தெருவில் இருக்கும் மின்மாற்றிகள் (TRANSFORMER) குறைந்த திறன் கொண்டதை மாற்றித்தர முடிவுசெய்து 18ஆம் என் கொண்ட மின்மாற்றிகள்(TRANSFORMER) கழட்டப்பட்டு வருகிற திங்கக்கிழமை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .நேற்று(16/07/2011) கிழத்தெருவில் இருக்கும்மின்மாற்றிகள் கழட்டப்பட்டபோது.

இதுமட்டும் அன்றி கடந்த (11/07/2011) அன்று நடைபெற்ற குறை கேட்பு முகாமில் மின் துறை சமந்தமாக் பெறப்பட்ட மனுக்களை அதிரையின் மின் அலுவலர் JE அவர்களிடம் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது .


நேற்று(16/07/2011) அதிரையின் மின் அலுவலர் JE அவர்களிடம் தமுமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டபோது
Saturday, July 16, 2011

இந்த அநியாயத்தை பாருங்கள் ....


ஊர்ப்புற நிர்வாகத்திற்காக அரசு சார்பில் ஒவ்வொரு ஊருக்கும் என கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer – VAO ) நியமிக்கப்படுவார். அதன் அடிப்படையில் தற்போது நமதூரைச் சார்ந்த பகுதிகளுக்கு என இரு வி.ஏ.ஓ-க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவரது அலுவலகம் அதிராம்பட்டினத்திலும், இன்னொருவர் அதிரையின் கடலோரக்கரையான ஏரிப்புறக்கரையிலும் இருக்கின்றனர்.மேலத்தெரு, கடற்கரைத் தெரு , CMP லைன் ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் அரசு சார்ந்த அலுவல்களுக்கு ஏரிப்புறக்கரையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லவேண்டி இருக்கின்றது. அரசிடம் இருந்து மக்களைச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களுக்கு சான்று பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் ஏறிப்புறக்கரைக்கு சென்று, அங்கு காத்திருந்து நமக்கான சான்றிதழ்களை பெற்று வரவேண்டும் . . அப்படி செல்லும் நேரங்களில், பெரும்பாலும் அலுவலர் அவரது அலுவலகத்தில் இருப்பதில்லை. இதனால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பயன் இல்லாமல் வீடு திரும்புகின்றனர் .

ஏரிப்புறக்கரையில் நீண்ட நேரம் காத்துக் கிடந்த மக்களின் அல்லலை நீங்களே பாருங்கள். கிராம நிர்வாக அலுவலரின் அலவலகத்தில் பல மணிநேரம் காத்திருந்தும் அலுவலர் கடைசிவரை வராமல் போனதனால் ஏமாற்றமே மிஞ்சியது.அதிரை BBC செய்திகளுக்காக,
அதிரை BBC நிருபர் குழு.

அதிரையில் PFIயின் அணிவகுப்பு நிகழ்ச்சி ..


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் ஒரு பகுதியில் நடத்தபடுவது வழக்கம் . அந்த வகையில் இந்த வருடம் நெல்லைமாவட்டத்தில் நடைபெறவுள்ளது . அந்த அணிவகுப்பிற்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக நமதூர் ITI அருகில் கடற்கரைதெரு மைதானத்தில் நாளை (17/7/2011) பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அணிவகுபு நிகழ்ச்சியின் முன்னோட்டம் நடைபெற உள்ளது . தஞ்சை ,திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பேர் பங்கு பெறுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் சாஜஹான் BABL அவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ் அந்த நிகழ்ச்சியின் காணொளியை அதிரை பிபிசியில் காணலாம் .

அதிரையில் புற்று நோய் உண்டாக்கும் மாம்பழம் விற்பனை: எச்சரிக்கை செய்தி!

அதிராம்பட்டினத்தில் புற்றுநோய்,வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாக கூடிய மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த ஒரு எச்சரிக்கை செய்தி. இந்த செய்தி நாம் படிக்க மட்டும் அல்ல நமது மக்களிடம் முழுமையாக  சேர்க்க வேண்டிய செய்தியும் கூட!

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் (14/07/20011) வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு கார்பைடு கல்   மூலம் பழுக்கவைக்கப்பட்ட ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பேருராட்சி உரக்கிடங்கில் புதைக்கப்பட்டதாவும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்பைடு கல் மூலம் பழுக்கவைத்த இந்த வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவோ, அபராதம் விதிக்கப்பட்டதாகவோ எந்த தகவல்களும் அந்த செய்தியில் இல்லை.

கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு: 
இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக் கும். இதில் ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரை டு போன்ற நச்சுப் பொருட் கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளி யேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங் களை பழுக்க வைக்க முடி யும். தேவையான அளவு கார் பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி பழப்பெட்டிகளை லாரி யிலோ குடோனிலோ அடுக் கும் போது அதனுள் வைத்து விட்டால் 24-48 மணி நேரத்தி ற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்ற வாறு கலர் மாறிவிடும். முற் றிய காய்களிலுள்ள ஈரம் மற் றும் காய்கள் சுவாசிக்கும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தா லும் காய்கள் எளிதில் கலர் மாற உதவுகின்றன.

பழுக்கும் முறை: 

முற்றாத காய்களை பழுக்கவைக்க சற்றுஅதிகமாக கற்கள் வை க்க வேண்டும். கற்கள் மூலம் பழுத்த பழங்க ளின் மேல்தோல் மட்டு மே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற் கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர் மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உப யோகித்து பழுக்க வை த்த பழங்களின் மேற் தோல் ஒரே சீராக மஞ் சள் நிறமாகத் தோற்ற மளிக்கும். மணம் குன் றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழுக்க வைத்த பழங்க ளைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடு களில் தடை செய்யப்பட்டுள்ளது.
Normal Mango
உடல்நலக்கேடு: 

கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உட லுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வை. இதன் அளவு அதிகமாகும் போது புற்று நோய் வர வாய்ப்பு ள்ளது. சுமார் 33-35 சதவீத அசி ட்டிலின் வாயுவை ஒருவர் சுவா சித்தால் 5-7 நிமிடங்களில் மய க்க மடையலாம். கார்பைடு உபயோ கித்து பழுக்க வைத்த பழங்களை உண் பதால் வாந்தி, பேதி, நெஞ் சில் எரிச்சல், குடற்புண், கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங் குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற் கையாக பழுக்க வைத்த பழ ங்களை உண்ணக்கூடாது. பழ ங்களின் மேற்தோல் ஒரே சீ ராக மாறி இருந்தால் அது கல் வைத்து பழுக்க வைத்தது என் பதை கண்டறியலாம். தெரிந் தோ தெரியாமலோ கல் வை த்து பழுத்த பழங்களை வாங் கினால் தண் ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத் தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உண்ண லாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. மாம்பழ சீசன் துவ ங்கிய உடனே சந்தைக்கு வரு ம் பழங்கள் பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்- ஜூலை மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கை யாகவே பழுக்க வைத்த வையாக இருக்கும்.
கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் (பயிர் வினையியல்),
கு.சிவசுப்பிரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை நுட்பவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி,
மதுரை-625 104
இதையும் படிங்க:
கடைகளில் வாங்கும் மாம்பழம் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் அப் பழத்தை பிரிட்ஜில் 24 மணி நேரம் வைக்க வேண்டும். அப்போது மாம்பழத்திலிருந்த எத்திலீன் வாயு வெளியேறிவிடும். பின்னர் அதை சாப்பிடலாம் பிரிட்ஜ் இல்லாதோர் மாம்பழத்தை தண்ணீரில் 24 மணி நேரம் வைத்து பின்னர் சாப்பிடலாம்.

Friday, July 15, 2011

அதிரை தமுமுகவின் ஆம்புலன்ஸ் நிதியுதவி வேண்டுகோள்!
Thursday, July 14, 2011

அதிரையில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் 3ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திகள் துவங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஜனவரிமாதம் உப்பு உற்பத்தி துவங்கியது. கடந்த பிப்ரவரி,மார்ச்,ஜூன் மாதங்களில் அதிராம்பட்டினம் பகுதியில் கோடைமழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதித்தது.

கடந்த ஒரு மாதமாக அதிக அளவில் வெயில் அடித்ததால் மீண்டும் உப்பு தீவிர உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் (11/07/2011) திங்கட்கிழமை அன்று கனமழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உற்பத்தி பாதித்தது. இப்போது உப்பளங்களில் தேங்கிய மழைநீரை வடிக்கும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்பு மீண்டும் தீவிர உப்பு உற்பத்தி துவங்கும் என்று அதிராம்பட்டினம் உப்பு உற்பத்தியாளர்கள் அதிரை பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இமாம் ஷாஃபி பள்ளியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ...

இமாம் ஷாஃபி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (13/07/2011) இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓமன் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர் வருவதாக இருந்தது. சில தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வரவில்லை .

விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விபரம் பின் வருமாறு:

நிகழ்ச்சி தலைமை : அப்துல் காதிர் ஆலிம் சாஹிப் அவர்கள்

வரவேற்புரை : பேரா. S பர்கத் MA. M.phil அவர்கள்

வாழ்த்துரை : பேரா. M.A அப்துல் காதிர் MA. M.phil CJMC அவர்கள்

சிறப்புரை : சகோ. M.B அஹ்மது அவர்கள்

பரிசு வழங்கி சிறப்பித்தோர் : சகோ. MST தாஜ்தீன் அவர்கள்
மற்றும் A.M இக்பால் ஹாஜியார் அவர்கள்.

நிகழ்ச்சியின் புகைப்படமும் காணொளியும் அதிரை BBC வாசகர்களுக்காக இதோ :

Wednesday, July 13, 2011

மரண அறிவிப்பு


அதிரை S A M நகரை சார்ந்த மர்ஹும் நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும் முஹம்மது ரியாஸ், முஹம்மது தம்பி, முஹம்மத் அபூபக்கர், ஹபீப் ரஹ்மான், முஹம்மது சாலிஹ், அவர்களின் தந்தையும் முஹம்மது புஹாரி ,முஹம்மது சமுன், முஹம்மது சாலிஹ், அபுல் ஹசன், அவர்களின்சகோதரர்ரும் அலிமா பர்ணிச்சர் உரிமையாளருமான முஹம்மது ஜக்கரியா அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள். அவர்களின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்


காரைக்குடி - திருவாரூர் வழித்தடம்: அகல ரயில் பாதையாக மாற்றாவிட்டால் ரயில் மறியல்! மக்கள் ஆவேசம்!!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலைய ஆய்வுக்கு வருகை தந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷனிடம் காரைக்குடி - திருவாரூர் ரயில் வழித் தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என நேற்று(12ஜூலை செவ்வாய்க்கிழமை) மக்கள் ஆவேசமாக கூறினர். 

திருவாரூர் - காரைக்குடி வழித்தடம் மிகப் பழைமையான வழித்தடமாகும். ராமேசுவரத்திலிருந்து நாகூர், வேளாங்கண்ணி வரை அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களையும் இந்த வழித்தடம் இணைக்கக் கூடியது. இந்த வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே இதற்கான நிதியை ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.

தமிழகத்திலுள்ள குறுகிய ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்ட நிலையில், காரைக்குடி - திருவாரூர் வழித்தடம் மட்டும் இன்னும் மாற்றப்படாமல் உள்ளது.
 இந்நிலையில், தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷன், கோட்ட மேலாளர் வைத்திலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தனி ரயிலில் காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பேராவூரணி ரயில் நிலையத்தில் அனைத்து கட்சிப் பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், ரோட்டரி, அரிமா சங்கத்தினர், பொது நல அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கூடினர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ள காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையை உடனடியாக அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும். நாங்கள் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த கோரிக்கை நிறைவேற தவறினால் ரயில் மறியல் செய்வோம் என பொது மேலாளரிடம் ஆவேசமாக தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொது மேலாளர் தீபக்கிஷன் உறுதி அளித்தார்.


இந்த கோரிக்கையை வலியுறித்தி அதிராம்பட்டினம் முக்கிய பிரமுகர்கள் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களின் முந்தைய கோரிக்கை: உங்களின் பார்வைக்கு,கடந்த பல வருடங்களாக முயற்சித்து வந்த திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக பல முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு வேலு  அதன் பின் வந்த E அஹமது மற்றும் ரயில்வே Genarail Managaer போன்றவர்களை சந்தித்து நமது கோரிக்கையை சமர்பித்தோம். ஏன் முத்துபேட்டை சேர்த்த அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடமும் பல முறை M.S. தாஜுதீன் அவர்கள் பேசி வந்தார்கள்.   என்ன பயன் ?    ஏமாற்றமே !
நாம் ஓன்றுபட்டு தீவிரமாக முற்சி செய்தால் மட்டுமே அகல ரயில் பாதை திட்டம் நம் வட்டார மக்களுக்கு கிடைக்கும். புதிதாக அமைந்து இருக்கும் மாநில அரசின் ஒத்துழைப்போடு முயற்சிகள் மேற்கொண்டால் வரும் ஆண்டின் ரயில்வே RAILWAY BUDGET சேர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி வெளி நாடு அதிரை வாசிகள் INDIAN EMBASSY மூலமாக தொடர்ந்து PRIME MINISTER  OF INDIA  மற்றும் RAILWAY MINISTER & CHEIF MINISTER OF TAMILNADU இவர்களுக்கு கோரிக்கை அனுப்பிவைக்க கேட்டுகொள்கிறோம்.

காரைக்குடி - திருவாரூர் வழித்தடம் அகல ரயில் பாதை சம்மந்தமாக முயற்சி செய்ய விரும்பும் அனைவரும் ஏற்கனவே தீவிர முயற்சியில் இருக்கும் அதிரை பிரமுகர்களை தொடர்பு கொண்டால் கூடுதல் பயன் தரும்; வெற்றியை நோக்கி நகர இலகுவாக அமையும்!
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.