அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, July 2, 2011

தொலைப்பேசியால் ஏற்படும் சீரழிவுகள்....

லகில் அதிகமாக பெருகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப கருவிகளில் தொலைக்காட்சி, கணினி, கைபேசியும் ஏராளம். இங்கே கலந்துரையாடும் தொழில்நுட்பம் கைபேசியை பற்றி தான். அது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பல தரப்பட்ட மக்களுக்கு அன்றாட தேவையாகிற்று, காரணம் என்னவென்றால் தொடர்புக் கொள்ளும் நோக்கில் மக்கள் அதனை பயன்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் தேவை என்கிற நோக்கத்தில் வயதிற்கு வந்த பெண்களிடம் கைபேசியைக் கொடுத்து அன்னிய ஆண்களிடம் பேசுவதும் அதுபோல் ஆண்களும் கூட இந்த கைபேசியின் மூலம் பல பெண்களிடம் தொடர்புக் கொண்டு பேசுவதும் இதனால் மிகப்பெரும் தீங்கத்தகாத ஆபத்துகள் ஒவ்வொரு வீட்டிலும் வந்து முடிகின்றன காரணம் அவர்களில் சில பேர் யாருடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. அவர்கள் வேற்று மத நபரிடம் பேசுகிறாரா அல்லது அன்னிய ஆண்களிடம் பேசுகிறாரா என்று கூட தெரியவில்லை. மேலும் சென்னை போன்ற நகரங்களிலோ வாலிபர்கள் கேமரா பொருந்திய கைபேசியை வைத்துக் கொண்டு ரோட்டில் செல்லும் பெண்களைத் தவறாக படமெடுப்பதும் தேவையற்ற வீடியோக்களைப் பார்த்துக் கொண்டும் கலாச்சார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த விஷயத்தை அக்கால மக்களின் வாழ்வியல் மாறுபாட்டினை நினைத்து பார்த்தால் நமக்கு நாமே அவர்கள் வாழ்க்கை நெறியைப் பார்த்து பொறாமைப் படக்கூடும். ஏனென்றால் அவர்களிடம் வேறெந்த நோயினையும், குழப்பங்களையும், தேவையற்ற பேச்சுக்களும் குறைவாகவே காணப்பட்டன. தற்போதைய காலத்தில் கைபேசி ஒரு அவசியமான ஒன்று யாருக்கு? தொழில் செய்பவருக்கு, வேலை பார்பவர்களுக்கு, வீட்டில் இருக்கும் குடும்ப பெண்களுக்கு, தேவை இருந்தால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட கைபேசி பயன்பாட்டினை வைத்துக்கொள்ளலாம் காரணம் அவர்களில் சில பேர் சென்னையிலோ அல்லது பிற மாநிலத்திலோ விடுதியில் மற்றும் வெளியில் தங்கி தங்கள் படிப்பை படித்துக் கொண்டு தன் பெற்றோரை தொடர்புக் கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் அதில் அவர்களுக்கு தேவையான ஒன்று தான். கைபெசியின் மூலம் வரும் கதீர்விச்சினால் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நோய்கள் அதிகம் அதிலும் குறிப்பாக பிள்ளை உண்டாகியிருக்கும் பெண்களுக்கு பாதிப்புகள் ஏராளம். ஒரு காலத்தில் சிட்டு குருவிகள், பருந்துகள், பல வகை பறவைகள் இப்போது காண இயலவில்லை காரணம் கதிர்வீச்சினால் அழிந்து போயின. மேலும் கதீர்விச்சினால் கால்நடை விலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு பெருமைக்காகவோ அல்லது அவர்களின் பாடுத்தாங்க முடியாமல் கைபேசியை வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். நமதூர் பெண்களில் சில பேர் கைபேசியை தெருக்களில் நடந்துச் செல்லும் பொழுது கைபேசியைப் பேசிக்கொண்டே செல்கிறார்கள் அவர்கள் என்ன பேசுகிறார்கள் யாரிடம் பேசுகிறார்கள் கூட யாருக்கும் தெரியவில்லை. இதனால் நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு சற்று வருத்தத்தைக் கொடுக்கிறது. இதனால் பெற்றோர்கள் குறிப்பாக தனது பெண் பிள்ளைகளை கண்டித்தும் மார்க்கத்தின் நிலைபாட்டினை சொல்லிக் கொடுத்து அவர்களை நல்ல படியாக வளர்ந்து மார்க்கத்தின் சிறந்த பெண்ணாக வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
இதில் சிறுவர் சிறுமியர் வயது வந்த பெண்களும் ஆண்களும் கைபேசியை உபயோக படுத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்களும் பெண்களும் கைபேசியை தேவையான விஷயத்திற்கு உபயோக படுத்தினால் நல்லது. ஆனால் நமதூரிலும் மற்றும் பிற ஊரிலும் கைபேசியைத் தவறான நோக்கில் உபயோக படுத்துவதால் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் ஊரில் நடைபெற்று குடும்பத்தின் பெயரை சீரழித்து விடுகிறார்கள். அதிலும் பள்ளி வகுப்புக் கூட முடித்து இருக்க மாட்டார்கள் அவர்களிடத்திலும் கைபேசி உலாவிக் கொண்டிருக்கிறது இன்றைய காலத்தில். மேலும் அவர்களிடத்தில் சாதாரண கைபேசியைப் பார்ப்பது கடினம் ஏனென்றால் தங்களின் உபயோகத்திற்கு மெமரி கார்டு பொருந்திய கைபேசிகளை கைகளில் வைத்துக் கொண்டு சினிமா பாட்டுக் கேட்பதற்கும் விளையாட்டு விளையாடத்தான் வைத்து இருப்பார்கள். இதனால் அவர்களுடைய படிப்பில் கவனத்தை செலுத்தாமல் வீணடித்துக் கண்பார்வைத் திறனும் மங்கிவிடும், கைபெசியினால் மிகப்பெரும் பாதிப்புகளே அதிகம். அதிலும் நம்மூரில் பெரும்பாலான மாணவர்கள் சிலர் தொழுகைக்காக கூட கைபேசியை சற்று நிறுத்தி வைக்க மாட்டார்கள் மற்றும் தொழுகையை வீணான பேச்சுக்களால் தவறவிட்டுவிடுவார்கள். சென்னையில் வசிக்கும் வயது வந்த ஆண் பிள்ளைகள் தங்களை தன் பெற்றோர்கள் ஏன் அனுப்பி வைத்தார்கள் என்று நினைத்து பார்க்காமல் மனம்போர போக்கில் வீணான செயல்களுக்கு நேரத்தை எப்படி அனுபவிக்கிறது என்று நண்பர்களிடத்தில் பகிர்ந்துக் கொண்டு கைபேசியை உபயோக படுத்துகிறார்கள் இதனால் கலாச்சார சீர்கேடும் கெட்டுபோய்கிறது. வரும் காலங்களில் தொழில் நுட்பம் மிகவும் முன்னேற்றம் கண்டு வருவதால் மக்கள் அதிகமாக விலைக்கு வாங்க விரும்பிறார்கள். இது போல் மக்கள் மார்க்கத்தின் நிலையைப் புரிந்து அதற்கேற்ப காலத்தின் நிலைபாட்டினை மனதில் வைத்து தேவை உள்ளவர்கள் கைபேசியை உபயோகிப்பதும் மற்றவர்கள் தவித்துக் கொள்வதும் குறிப்பாக மாணவச் செல்வங்கள் தங்களுடைய கல்வித் திறனை மேம்படுத்தி அறிவுள்ள மாணவர்களாகவும், மாணவிகளாகவும் நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தை உலக தரத்தில் உயர்த்தி நிலை நிறுத்துவோமாக!!! இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம்:அதிரை பிபிசி நிருபர்அப்துல்லா

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.