அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, December 4, 2011

"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள்......

விடுமுறையில் ஊரில் நமது மதிப்பிற்குரிய வாவன்னா சாரை பலமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். அவர்கள் நமதூரில் தொன்றுதொட்டு வரும் சமூகச்சீர்கேட்டையும், மார்க்கம் தூற்றும் பழக்க,வழக்கங்களையும் கலைந்தெறிய (துடைத்தெறிய) இன்றைய இளைஞர்களால் ஒரு மாபெரும் புரட்சி நமதூரில் வெடிக்க‌ வேண்டும் என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்(அது தானே நம் எல்லோரின் ஆவலும்). வாவ‌ன்னா சார் போல் எத்த‌னையோ பெரிய‌வ‌ர்க‌ள் ந‌ம்மூரில் இது போன்ற‌ உய‌ரிய‌ எண்ண‌ங்க‌ளுட‌ன் வெளிக்காட்ட‌ வாய்ப்பின்றி வாய‌டைத்து ம‌வுன‌வாய் இன்றும் வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். வாழ்ந்து ம‌றைந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னையோ? அந்த‌ வ‌ல்லோனுக்கே வெளிச்ச‌ம்.பல ஆண்டுகாலம் யாரும் அசைக்க முடியாமல் ஆண்டு வந்த நாட்டின் மன்னர்கள்/ஜனாதிபதிகளெல்லாம் இன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு (அது அமெரிக்காவின் தூண்டுதலாலோ அல்லது உள்நாட்டு மக்களின் கொந்தளிப்பாலோ என்பது ஆராயப்பட வேண்டிய விசயம்) ஒற்றுமையாக எல்லோரும் பல உயிர்த்தியாகங்களுக்கிடையே அந்நாட்டு தலைவர்களையே தூக்கி எறிந்து விட்டார்கள். இது போன்ற (பாதிக்கப்பட்ட) மக்கள் புரட்சி நமதூரில் வெகுவிரைவில் வெடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்ப‌டி வெடித்தாலும் நாம் நேச‌க்க‌ர‌ம் நீட்ட‌ த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.அரசும் அதன் அலட்சியப்போக்கான அதிகாரிகளும் ஒரு புறம் அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற துரோகம் செய்து வருவதுடன் உள்ளூர் ம‌க்க‌ளாக‌ இஸ்லாமிய‌ ச‌மூக‌த்த‌வ‌ர்க‌ளே ஒருவ‌ருக்கொருவ‌ர் மார்க்க‌ம் பேணாம‌ல் துரோக‌மும், நில (பிறர் உடைமை)அப‌க‌ரிப்பும், வ‌ர‌த‌ட்சிணை கொடுமையும்,குண்டாமத்து என்னும் பம்மாத்து வேலைகளும், பெண்ணுக்கு வீடு கொடுத்து மார‌டிப்ப‌தும், சில்ல‌ரைப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் விவாக‌ர‌த்து வேண்டுவதும், ஏழைக‌ளை ஏறெடுத்து பார்க்காத‌தும், தன்னை ஈன்றெடுத்த‌ பெற்றோர்க‌ளை உல‌கில் இருப்ப‌தை விட‌ சாவ‌தே மேல் என்று அற்ப‌ உல‌க‌ ஆதாய‌த்திற்காக‌ க‌ருதுவ‌தும், ஆண்க‌ளை எல்லாம் குடும்ப‌ பொறுப்பை த‌லையில் ஏற்றி ஊரை விட்டு அப்புற‌ப்ப‌டுத்துவ‌தும், காம இச்சைகளுக்காக எந்தக்கபோதிகளுடனோ காணாமல் போவதும், அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போர்முனையை சந்திப்பது போன்ற சங்கடமான சூழ்நிலைகள் ச‌க‌ஜ‌மாக‌ எல்லா இட‌ங்க‌ளிலும், வீடுக‌ளிலும் ந‌ட‌ந்துவ‌ருமேயானால் அல்லாஹ்வுடைய‌ வேத‌னைக‌ளைத்த‌விர‌ வேறென்ன‌ அவ‌னிட‌மிருந்து நாம் எதிர்பார்க்க‌ முடியும்? நெருப்பு மழையன்றி பன்னீர் மழையை எப்படி எதிர்பார்க்க முடியும்?அவ‌ன் நாடினால் இறைநிராக‌ரிப்ப‌வ‌ர்களை (காஃபிர்கள்) வைத்தே ந‌ம் சோலியை க‌ச்சித‌மாக‌ முடித்து சுவ‌டு தெரியாம‌ல் அழித்திடுவான் அல்ல‌வா? பண்டைய இஸ்லாமிய உண்மை வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டாமா? ஏன் தான் சிந்திக்க‌ ம‌றுக்கிற‌தோ உள்ள‌ம்?புர‌ட்சிக‌ளெல்லாம் ஊரைத்திர‌ட்டி பிரச்சாரம் செய்து போர்க்கொடி தூக்கி ஆர‌ம்பிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அவ‌ர‌வ‌ர் வீடுக‌ளிலிருந்து ஆர‌ம்பிக்க‌ வேண்டியுள்ள‌து. மார்க்க‌மும் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிற‌து அன்று முத‌ல் இன்று வ‌ரைக்கும். மாற்று ம‌தத்தினரை தூற்றும் முன் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் முத‌லில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக மாற வேண்டும். வெறும் இஸ்லாமிய‌ சின்ன‌ங்க‌ள் ம‌ட்டும் ந‌ம்மை க‌ரை சேர்த்து விடாது. ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளே ந‌ம்மை சுவ‌ன‌ம் புக‌ செய்ய‌ வேண்டிய‌தை செய்யும்.ஜாஹிர் காக்கா, புர‌ட்சிக‌ள் எந்த‌ ரூப‌த்தில் வெடிக்குமென்று இறைவ‌னே அறிவான். அது உங்க‌ள் எழுத்து மூல‌மாக‌ கூட‌ இருக்கலாம். தொட‌ருங்க‌ள் ஒன்று சேர ஒரு சிலரல்ல ஓராயிரம்‌ ம‌க்க‌ள் காத்திருக்கிறார்க‌ள்.அவ‌ர‌வ‌ர் ம‌த‌ங்க‌ளை அவ‌ர‌வ‌ர் மதித்து நடந்து ம‌னித‌ நேய‌ம் காக்க‌ப்ப‌ட‌ வேண்டும்."புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள்......மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

12 பின்னூட்டங்கள்:

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யாரும் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை அவரவர் நான் பெரியவன் என்றல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய கோப பார்வையை எவரும் சிந்திப்பதில்லை அப்படி சிந்தித்தால் யாரும் சண்டையும் போடமாட்டார்கள். அல்லாஹ்வுடைய தண்டனையை விளங்குவதில்லை நில மோசடியும், வ‌ர‌த‌ட்சிணையும் இருக்கும் வரை அல்லாஹ்வுடைய கோப பார்வை வந்தே தீரும்.

a.ahamed thaha,alkohoar. ksa, said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதரர்களே - சகோதரர் அவர்களின் இந்த ஆக்கம் நமது ஊர் குறித்த கவலைகளையும் ஆதங்கங்களையும் வெளிபடுத்துவதாக உள்ளது. நமது வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் இம்மை மறுமைக்கான நமது தேவைகள் குறித்தும இறை வசனங்களும் நம் தூதர் நடைமுறையும் நம்மிடம் இருந்தும் நாம் அதனை சரிவர பின்பற்றாமல் இருப்பதினால்தான் இந்த நிலை. எந்த ஒரு சமுதாயமோ தனி நபரோ தன்னை தானே திருதிக்கொள்ளாதவரை அல்லாஹ் நேர்வழி கட்ட மாட்டான் என்றும் - சமுதாயத்தில் ஒவ்வருவரும் ஒவ்வருவருக்கும் பொறுப்பாளிகள் - பொறுப்புக்களை எவ்வாறு செயல் படுத்தினீர்கள் என்றும் மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்பான் என்றும் வான்மறையும், நபி மொழியும் நமக்கு கூறிகொண்டிருக்கிறது.

“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 7:35)

எனவே நாம் நமக்கு வழங்கப்பட்ட திருமறையையும் நபி வழியையும் பின்பற்றுவதன் மூலம் தான் நாம் - நல்ல புதியதோர் ஊர் செய்ய முடியும்

அபூ அப்துல்லா முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
"புதிய‌தோர் ஊர் செய்வோம்" வாருங்கள்..என்றால் எதை போன்ற ஊர்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கிய மதினாவை போல் நாமும் உருவாக்க முயற்ச்சி செய்ய வேண்டும். மதினாவில் இரண்டு தலைவர் இல்லை,சஹபாக்களுக்கு மத்தியில் கொள்கை விசியத்தில் எந்த கருந்து வேருபாடும் இல்லை, அவர்களிடம் பெருமை,பகட்டு ஆனவம் இல்லை, அவர்களை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு ஒழுக்க சிடர்களாக உருவாக்கிநார்களோ அதுபோல் நாமும் நம்முடைய அதிரை மக்களை உருவாக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அதற்க்கு முக்கியமான ஒன்று "தவ்ஹீத்" மேலோங்க வேண்டும், சிர்க் பித்அத்கள் ஒலிக்க படவேண்டும்,எமது ஊரில் அல்லாஹ்வின் இறை கட்டளைகளை வாழ செய்ய வேண்டும், நபி மொழிகள் நடமாட வேண்டும் அதற்கான் முயற்ச்சிகளில் இளைஞ்ர்கள் மற்றும் பெரியவர்கள் துனையோடு செயல் பாடுகலை துவங்க வேண்டும்.

இயக்க வெரிகளை தூக்கி எரிந்து விட்டு, குர் ஆன் சுன்னாவின் மூலம் நமக்கு மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாத்தின் உலமாக்கள் மூலம் தீர்வுகளை பெற்று,நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ முயற்ச்சி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் இந்த முயற்ச்சி நம்க்கு பயன் பெராமல் போய்விடும். அல்லாஹ் காப்பற்ற வேண்டும்..

அபூ அப்துல்லாஹ்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புரட்ச்சி..... என்ன செய்ய நினைக்கிறீர்கள்.... ஊரில் உள்ள அனைவரும் மேலை நாட்டை நோக்கி படைஎடுத்திவிட்டு வெங்காய புரட்ச்சிக்கு தான் வித்திட முடியும்..... எங்கிருந்தோ வந்து மொழி, உணவு, பழக்க வழக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நமதூரில் பிழைக்க வந்திருக்கும் (மெயின் ரோட்டுக்கு போகு வழியில் ராஜ் டாக்டருக்கு எதிர்புறம் இருக்கும்) மார்வாடிக்கு இருக்கும் நெஞ்சுறுதி கூட நமக்கில்லையே....? முதலில் நமக்குள் இருக்கும் குறைபாடுகளை கண்டுபிடியுங்கள்.... அவற்றை கலைஎடுங்கள்.... பிறகு எத்தனியுங்கள் எதிர்கால புரட்ச்சிக்கு....

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

naattil arivuraikkum panjamillai,anaachaarangalukkum panjamillai.endha samoogattahiyum vida nammudaiya islaamiya samoogatthil thaan arivurai aatkal athigam.aanaal avar veettilirundhu seerthirutthatthai thodangamaattaar avaridam endha thiyaaga unarvum irukkaadhu adhaevaelai adutthavar mattum thiyagiyaaga irukkavaendum endru ninaippaar.vaavannaa saarudaiya ennangalukku nandri,avarudaiya ennangalai veliyitta mu.se.mu.nainaavukkum nandri.neengal iruvarum ungaludaiya unarvugalai seyalpaduttah kalam irangi poraattangal seydhu ooril maatrangalai seyya thayaara?ungalukku pinnaal oru kootaamae anivagukka thayaar.ondrum vaendaam mudhalaavathaaga neengal seeyya vaendiyathu ovvoru palliyilum islaathirku virodhamaaga seyalpadum pokkukalai kandippadhu,mouloodhu odhuvathu koodaathu endru therindhae odhukindra koottathai thadukkavaendum,thirumanatthil thuaa odhumpodhu islaathin aani vaerai thagarttheriyum vaartthaigalai ubayogikkaadhae endru sollavaendum.idhai neengal edhirthu nindru paesinaal adutthadutthu varum matra vishayangalai naam elithaaga theerkkalaam.thayaara?summaa oor vandhu pozhudhaikkazhitthuvittu arivurai kooruvadhil artthamillai thambi..thambi thambi thambiyov.

Naina Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மதியழகன் said... [Reply to comment] 4 புரட்ச்சி..... என்ன செய்ய நினைக்கிறீர்கள்.... ஊரில் உள்ள அனைவரும் மேலை நாட்டை நோக்கி படைஎடுத்திவிட்டு வெங்காய புரட்ச்சிக்கு தான் வித்திட முடியும்..... எங்கிருந்தோ வந்து மொழி, உணவு, பழக்க வழக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நமதூரில் பிழைக்க வந்திருக்கும் (மெயின் ரோட்டுக்கு போகு வழியில் ராஜ் டாக்டருக்கு எதிர்புறம் இருக்கும்) மார்வாடிக்கு இருக்கும் நெஞ்சுறுதி கூட நமக்கில்லையே....? முதலில் நமக்குள் இருக்கும் குறைபாடுகளை கண்டுபிடியுங்கள்.... அவற்றை கலைஎடுங்கள்.... பிறகு எத்தனியுங்கள் எதிர்கால புரட்ச்சிக்கு....//

ம‌திய‌ழ‌க‌ன் அவ‌ர்க‌ளே, உள்ளூரின் மார்க்க‌ம் தூற்றும் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளால் நாமெல்லாம் அய‌ல்தேச‌ங்க‌ளில் அற்ப‌,சொற்ப‌ காசுக‌ளுக்காக‌ த‌ஞ்ச‌ம் அடைந்திருப்ப‌து ஏனோ உண்மையும், வ‌ருத்த‌ப்ப‌ட‌க்கூடிய‌ விட‌ய‌மும் அன்றி வேறில்லை உங்க‌ள் கூற்றுப்ப‌டியே. தாங்க‌ளும் சில‌ ஆண்டுக‌ள் இங்கிலாந்து நாட்டில் செல‌வ‌ழித்து குடும்ப‌ங்க‌ளையெல்லாம் விட்டு த‌னித்திருந்து ச‌ம்பாதித்த‌து ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌ங்க‌ளின் உட‌ன்பிற‌ந்தோரெல்லாம் இன்றும் அமெரிக்க‌ நாடுக‌ளில் இருந்து வ‌ருவ‌து ப‌ற்றி சிந்திக்காம‌ல் இப்ப‌டி எழுதிவ‌ருவ‌து ஏனோ? "புரட்சிகள் தன் வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதே நமக்கு முன்னால் நம் மார்க்கம் கூறும் ஆணித்தரமான கூற்று" என்பதை நினைவில் கொள்ளவும்.

வெங்காய‌ப்புர‌ட்சியாக‌ இருந்தாலும் ச‌ரி, வெள்ள‌ரிக்காய் புர‌ட்சியாக‌ இருந்தாலும் ச‌ரி வெகுண்டெழாத‌வரை அது மெல்ல‌,மெல்ல‌ செல்ல‌ரித்து ந‌ம் ச‌முதாய‌த்தையே அழித்தொழித்து விடும் இந்த‌ கேடுகெட்ட ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளும், ஈன்றெடுத்த‌ பெற்றோரை எப்ப‌டியாவ‌து க‌ப்ரு குழிக்குள் அனுப்பி வைக்க‌ வேண்டும் என்ற‌ பிள்ளைக‌ளின் ம‌னோபாவ‌மும்.

உங்க‌ளின் எதிர்ம‌றையான மற்றும் ஆணித்த‌ர‌மான‌ வாத‌த்திற்கும் அதை இங்கு ப‌கிர்ந்த‌மைக்கும் ந‌ன்றிக‌ள்.

கீப் இட் அப்...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான ஆக்கம்!, சிந்திக்க வேண்டிய ஆக்கம்!! நம் சமுதாயத்தின் மேல் அதிக அக்கறை கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்!!!

//இஸ்லாமிய‌ ச‌மூக‌த்த‌வ‌ர்க‌ளே ஒருவ‌ருக்கொருவ‌ர் மார்க்க‌ம் பேணாம‌ல் துரோக‌மும், நில (பிறர் உடைமை)அப‌க‌ரிப்பும், வ‌ர‌த‌ட்சிணை கொடுமையும்,குண்டாமத்து என்னும் பம்மாத்து வேலைகளும், பெண்ணுக்கு வீடு கொடுத்து மார‌டிப்ப‌தும், சில்ல‌ரைப்பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் விவாக‌ர‌த்து வேண்டுவதும், ஏழைக‌ளை ஏறெடுத்து பார்க்காத‌தும், தன்னை ஈன்றெடுத்த‌ பெற்றோர்க‌ளை உல‌கில் இருப்ப‌தை விட‌ சாவ‌தே மேல் என்று அற்ப‌ உல‌க‌ ஆதாய‌த்திற்காக‌ க‌ருதுவ‌தும், ஆண்க‌ளை எல்லாம் குடும்ப‌ பொறுப்பை த‌லையில் ஏற்றி ஊரை விட்டு அப்புற‌ப்ப‌டுத்துவ‌தும், காம இச்சைகளுக்காக எந்தக்கபோதிகளுடனோ காணாமல் போவதும், அண்ணன் தம்பிகளுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் போர்முனையை சந்திப்பது//

ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள மேற் சொன்ன செய்திகள் போதுமானவை.

Naina Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ. மஜ்ஃபா யூ.எஸ்.ஏ அவர்களின் ஆணித்தரமான கருத்திற்கு நன்றிகள்.

ஐங்காலத்தொழுகையை முன் சஃபில் நின்று தொழுதுவரும் நம் ஊரின் மைப்பகுதியில் இருந்து வரும் நல்ல குடும்பம் என்றென்னி திருமண சமயத்தில் பசுத்தோல் போர்த்திய கழுதைகளாக வந்தவர்களை நம்பி தன் வீட்டுப்பெண்ணை கொடுத்து பிறகு அவர்கள் போலி முகத்திரைகள் மெல்ல‌ விலகி படாதபாடுகளுடன் பல பித்தலாட்டங்கள் மார்க்கம் பேணாத அவர்களால் இன்றும் நடந்தேறிவரும் என் வீட்டிலேயே என் முதல் புரட்சி ஆரம்பமாகட்டும் வேண்டாதவர்களால் நான் கொல்லப்படும் வரை.........முடிவே ஊரின் ம‌றும‌ல‌ர்ச்சிக்கு வித்திட்டால் ச‌ந்தோச‌மேய‌ன்றி ச‌ங்கட‌மேதும் இல்லை.

"நாம் புதைக்கப்படும் முன் ஏதேனும் நல்லவை நம் ஊரில் விதைக்கப்பட வேண்டுமென்ற ஆவலே இப்படியெல்லாம் நம்மை எழுத வைக்கிறதேயன்றி வேறொன்றும் இல்லை".

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

ச‌வுதியிலிருந்து....

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Naina Mohamed said... [Reply to comment] 6....அருமை தோழர் நைனா முஹம்மது அவர்களுக்கு.... தங்களின் ஆக்கங்களுக்கு நன்றி.... தாங்கள் குறிப்பட்டது போன்று நான் ஒன்றும் மேலை நாட்டில் வேலை புரிந்தவன் அல்ல.... அதற்காக நான் வேலை புரிபவர்களை எள்ளளவும் குறை மதிப்பிடும் குருமதியாளரும் அல்ல.... பார்க்க என்னுடைய ஈகை திருநாள் வாழ்த்துக்களை இதே அதிரை பி பி சி இணையத்தில் வெளிவந்துள்ளது....."தியாகமே உருவாய் தம் சொந்தகளை விட்டு குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அயல் நாட்டில் வாழும் சொந்தங்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள்"..... எவனுக்காகவோ சென்று நம் மொத்த அறிவினையும் பயன்படுத்தி அவன் செளிப்படைவதர்காக காலமெல்லாம் உழைக்கும் நம் சொந்தங்களை எண்ணி வேதனை தான் மிச்சம்...... இருப்பினும் நம்மால் இயன்ற ஊக்கங்களை வெளிப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடு தான் என்னுடைய வரிகள்..... அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் யாரையேனும் புன்படுத்தி இருந்தால் பிழை பொறுக்குமாறு இங்ஙனமே விண்ணப்பிக்கிறேன்....

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"NAAM PUDHAIKKAPPADUM MUNBU AEDHAAVADHU NAALLAVAI VIDHAIKKAPPADA VAENDUM" ORU ARUMAIYAANA SOL,EN NENJIL PADHINDHATHU.IDHARKKU MUNBU ULLA PARAGRAPH PURIYAADHA PUDHIRAAGA IRUKKIRADHAE,VILAKKINAAL NANDRAAGA IRUKKUM.

Naina Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ. மஜ்ஃபாவுக்கு,என்னை அறிந்தவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நன்றாக விளங்கும். என்னை அறியாத தமக்கு ஒரு விளங்காத விடயத்தைப்பற்றி விளக்க வேண்டுமென்ற அவசியம் என‌க்கில்லை. அதை அறிந்து கொள்ள சிரத்தை எடுத்துக்கொள்ளவும் தேவையில்லை.நாமும் மெல்ல,மெல்ல‌ எல்லாவ‌ற்றிற்கும் த‌யாராகி வ‌ருகிறோம். தாமும் தாய்த்த‌மிழில் த‌ன் சொந்த‌ப்பெய‌ருட‌ன் எழுத‌ த‌யாராகுங்க‌ள். இல்லையேல் ஆங்கிலத்தில் தங்லீஸ் இல்லாமல் தெளிவாக எழுதி விடுங்கள்.புனைப்பெய‌ரில் வ‌ல‌ம் வ‌ருவ‌தால் என்ன‌தான் பிரயோஜனம் கிடைக்க‌ப்போகிறோதோ?மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

a.ahamed thaha,alkohoar. ksa, said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
புதியதோர் ஊர் செய்வோம் வாருங்கள்,
------------------------------------------------------------
நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இழி செயல்கள் , இறை நிராகரிப்புகள், குற்றங்கள், அப்பப்பா - சொல்லி மாளாது - உலகத்தில் என்றுமே நடந்திராத அட்டூழியங்கள் - சுருங்க சொல்லப்போனால் மனிதர்கள் மனிதர்களாகவே வாழவில்லை, ஒரு காலம் வந்தது - மனிதர்கள் புனிதர்களாக மாறினர். மாற்றியது எது?
அல்லாஹ்வின் கலாம் என்னும் - திருமறையும் - அவனது தூதரின் நடைமுறையும் தான் - அதே திருமறையும் - தூதரின் நடைமுறையும் இன்றும் நம் முன் உள்ளது - ஆனால் நாம் தான் உலக மாயையில் வீழ்ந்து அவற்றை பின்பற்றாமல் உள்ளோம் .
தற்போது உள்ள மவ்லவிகள், இளம் மவ்லவிகள் அணைத்து தரப்பு மக்களும் இணைந்து மாற்றினால் , மாறினால் -
புதியதோர் ஊர் செய்யலாம் - வாருங்கள் .

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.