அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புள்ளம் கொண்டவர்களே !
நாம் ஏற்றிருக்கும் மார்க்கம் எத்தகையது என்பதை நன்கு அறிவோம், நாம் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம், யாருடைய வழியை பின்பற்றி வாழ்கிறோம் சிந்தனை செய்துபாருங்கள். ஒரு மனிதன் தனது இரவு பகலை தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை மட்டுமே கொண்டு முழுமையான முஃமின் ஆகமாட்டார். தொழுது நோன்பு நோற்று வந்தால் மட்டும் போதுமா, நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடிய செயலையும்தானே செய்யவேண்டும். தற்பொழுது அவ்லியாக்கள் என்ற பெயரில் செய்யும் அனாச்சாரத்திற்கு பெயர்தான் கந்தூரி. இவைகளால் என்ன லாபம்? சிந்தித்துப்பாருங்கள்.
நமது மார்க்கம் விபச்சாரத்தை தடுப்பதோடு மட்டுமல்லாது விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்று ஆணித்தரமாக கூறுகிறது. கந்தூரி என்ற பெயரில் கண்ணால் விபச்சாரம் செய்யக்கூடியவர்கள் எத்தனையோ பேர்களை பார்க்கத்தான் செய்கிறோம். கச்சேரி என்ற பெயரில் விபச்சாரம் மேடைபோட்டு அரங்கேற்றமும் நடைபெற்றுக்கொண்டுத்தான் இருக்கிறது.
நம்முடைய சமுதாயம் நன்மையை ஏவி தீமையை தடுக்ககூடிய சமுதாயம், ஒரு முஃமினை பார்த்து மாற்று மத சமுதாயத்தார்கள் வாழ கற்றுக் கொள்ளக்கூடிய மார்க்கம் நம் மார்க்கமல்லவா? மக்களே சிந்தியுங்கள் வழிகேட்டை விட்டு பாவமன்னிப்பு அல்லாஹ்விடம் கோருவோம்.நாம் இங்கே வாழும் வாழ்க்கை நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்காக மட்டுமே இம்மை வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கையை அழுகுபடுத்தவேயன்றி இதுவே நிரந்தரவாழ்க்கையில்லை. பெண்களே நீங்கள் நன்மையான விசயங்களில் பற்றுக்கொள்ளுங்கள் உங்கள் பற்றினால் உங்களை சைத்தான் நெருங்குவது கடினமானது.
இம்மையில் ஏற்படும் சிறிய வேதனைகளை அதாவது வாகன விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்களை கண்டு அஞ்சி பண்மடங்காய் வேதனையடைகின்றோம். மறுமையின் வேதனையை நினைவு கூறுவோமாயின் அவ்வேதனையின்பால் யாருமே உதவிக்கு வரமாட்டார்கள். அல்லாஹ்க்கு பயந்து கொள்வோம். நாம் நமக்காக மட்டுமே வாழ்பவரல்லர். அண்டைவீட்டார் பசிந்திருந்தால் கூட அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்பான். அண்டை வீட்டாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் அதில் நமக்கும் பங்குண்டு. மறுமையில் நம்மிடமும் அல்லாஹ் கேள்வி கேட்பான். அல்லாஹ்க்கு அஞ்சி நடந்துகொள்வோம்.
ஐவேளை தொழுகைகளையும் பேணுதலாய் தொழுக்கூடியவர்களும் கந்தூரி என்றால் எங்கள் முன்னோருடையது. இதை நடத்தாவிட்டால் நாங்கள் பாவியாகிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். சகோதரர்களே, பெரியோர்களே நாம் கொண்ட ஈமான் உறுதியானது. நாம் அல்லாஹ்க்கு அஞ்சி நடக்கவேண்டும் நபி(ஸல்) அவர்களின் வழி நடக்க வேண்டும். நம் முன்னோர்கள் செய்த பாவத்தையே நாம் செய்ய நினைக்க கூடாது. நம்மால் முடிந்தவரை நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம். கந்தூரி என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரத்தை நம்முடைய பங்களிப்பை மட்டுமின்றி நமது சகோதரர்களின் பங்களிப்பைக் கூட தடுப்போம்.
கந்தூரிவிழாவிற்கு செய்யும் உடல் உழைப்பு, பொருள் உதவியை அல்லாஹ்க்கு அஞ்சி தவிர்த்திடுங்கள், வியாபர ஸ்தாபனங்கள் குறிப்பாக இஸ்லாமியர்களின் வணிக ஸ்தாபன உரிமையாளர்கள் பலர் இந்த அனாச்சாரத்திற்காக தம் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு பொருள் உதவி செய்து வருகிறார்கள். அல்லாஹ் நமக்கு கொடுக்க நினைப்பதை ஒருபோதும் எவராலும் தடுக்கமுடியாது, தடுக்ககூடியதை ஒருபோதும் எவராலும் கொடுக்கவும் முடியாது.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை அதிகபடுத்துவோம் மற்றும் கந்தூரி செல்வதை நாமும் நம்மைச்சுற்றியுள்ளவர்களும் கலந்துக்கொள்ளாமல் வைத்திடுவோம். கந்தூரியின் மோகம் அதாவது அனாச்சாரத்தின் மோகங்கள் இனியாவது குறையும் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
ஆமின்.
- DIGITECH.
11 பின்னூட்டங்கள்:
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48)
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427, 434, 1341, 3873,
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் (அல்குர்ஆன்.5:2)
பேருராட்சி மன்ற வார்டு உறுபினர் மற்றும் சங்கத் தோ்தல்களில் ஆலிம்களும், சங்க நிர்வாகிகளும் காட்டிய கவணத்தை கந்தூரிக்கு எதிராகவும் காட்டுவார்களா? AAMF அனைத்து தெருவை சார்ந்தவர்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் இவர்கள் கந்தூரரிக்கு எதிராக முடிவு எடுப்பார்களா? அல்லது ஒற்றுமையை காரணம் கட்டி அமைதியாக இருந்துவிடுவார்களா?
கட்டுரை அருமை இதை படித்து பயன் பெறுவார்களா தாய்மார்கள்
அருமையான சிந்தித்து பார்க்ககூடிய வரிகள்....
சிந்திப்பீர் செயல்படுவீர்...
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமின்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதர சகோதரர்களே கந்தூரி கூடாது என்று நமது ஆலிம்கள் எல்லா இடங்களிலும் பிரசங்கம் செய்தும் நமது ஊர் மக்கள் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடுகின்றனர் அதன் விளைவால் ஏற்படக்கூடிய இம்மை மறுமை தீங்குகளை அறிந்திருந்தும் உலக ஆசையின் காரணத்தால் பொடுபோக்காக இருக்கின்றனர் .மேலும் அடங்கி இருப்பவரை படைத்த நாயனுக்கு இணையாக அங்கு சென்று உதவி தேடுகின்றனர் .அல்லாஹ் தன் திருமறையில்
“மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது! இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பவஹீனர்களே” (அல்-குர்ஆன் 22:73)
என்று கூறுகிறான். எனவே கந்தூரி பொறுப்பு தாரிகளும் ஊர்மக்களும் இதை உணர்ந்து தங்கள் போக்கை மாற்றிகொல்லுதல் கட்டாயமாகும்
மாற்றங்கள் மனிதனுக்கு அவசியம் அதுவும் இது போன்ற சிர்க் விசயத்தில் மாற்றங்களை செய்து கந்துரிக்களை களை எடுக்க வேண்டும்
ஆலிம்கள் ஒவ்ெவாாு தடைவயும் கைடசியில் முயற்சி ெசய்வாா்கள்..., இப்ேபாது ம்....,
உண்மையில் நாம் ஆலிம்கள் வழி நடப்பதில்லை. தன்னுடைய பெண் மக்களை தனியாக சென்னையில் படிக்க வைக்கலாமா? என்பதற்கு இப்பொழுதெல்லாம் ஆலிம் தேவையில்லை. அனால் என் மகள் ஹஜ்ஜுக்கு தனியாக போகலாமா? என்ற கேள்விக்குதான் ஆலிம்களையும் பயன்படுதுகின்றோம்.
இவ்வுலக வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மனிதன்..... அல்லாஹ்வை பற்றிய முழுமையான ஞானம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.... மார்க்கத்தில் இல்லாத இது போன்ற பித்அத துகளிலிருந்து எப்போதுதான் விடிவு பிறக்குமோ....?
த.த.ஜ மற்றம் த.மு.மு.க
இதை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்! உங்கள் பகுதியில் நடைபெறும் ஜும்ஆ பயான்களிலும் பெண்கள் பயானிலும் கந்தூரிக்கு செல்வது, அதற்காக உதவி செய்வது இணைவைப்பிற்கு துணை போகும் காரியம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இல்லையேல் மறுமையில் குற்றவாளிகளாக நிற்பீர்கள்!
எங்கள் கடமை தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறொன்றும் இல்லை (அல்குர்ஆன்.36:17)
தடுப்பார்கலா ? ஆலிம்கள் , மற்றும் இம்மாம்கள் ?
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816,
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் (அல்குர்ஆன்.5:2)
இதை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள்! உங்கள் பகுதியில் நடைபெறும் ஜும்ஆ பயான்களிலும் பெண்கள் பயானிலும் கந்தூரிக்கு செல்வது, அதற்காக உதவி செய்வது இணைவைப்பிற்கு துணை போகும் காரியம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இல்லையேல் மறுமையில் குற்றவாளிகளாக நிற்பீர்கள்!
எங்கள் கடமை தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறொன்றும் இல்லை (அல்குர்ஆன்.36:17)
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610,
அதிரைBBC போன்ற இனையதளங்கள் கந்தூரி, தர்கா வழிபாடு பற்றிய அதிரையில் உள்ள ஆலிம்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் கருத்தையும் (விடியோ) கேட்டு இங்கே பதிவு செய்தால் மிக நன்றாக இருக்கும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment