இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழும் நகரங்களில் சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆய்வை மெர்சர் நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்த ஆண்டு மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் உலக அளவில் பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் நகரம் முதலிடத்தில் உள்ளது.
உலக அளவில் சென்னை மாநகரம் 108-வது இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் சென்னை மாநகரமே பாதுகாப்பான நகரம் என்று மெர்சர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூர். மெர்சர் நிறுவன ஆய்வுப்படி சர்வதேச அளவில் இதற்கு 117-வது இடம் கிடைத்துள்ளது. டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு 127-வது இடம் கிடைத்துள்ளது. 2 நகரங்களும் ஒரே இடத்தில் உள்ளது. மும்பை 142-வது இடத்தை பிடித்துள்ளது.
இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெங்களூருக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி 2-வது இடத்தையும், மும்பை 3-வது இடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கொல்கத்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. சர்சதேச அளவில் டெல்லி 143-வது இடம், மும்பை 144-வது இடம், சென்னை 150-வது இடம், கொல்கத்தா 151-வது இடத்தில் உள்ளது.
Source: http://www.mercer.com , webdunia.com
6 பின்னூட்டங்கள்:
எது எப்படி இருந்தாலும்,என் ஓட்டு மலேஷியாவுக்குத்தான்.
நரபலி மோடி மறுபடியும் இங்கு வராமல் தடுத்தால், நிரந்தரமாக முதல் இடத்தில் இருந்து விடலாம்.
மழைக்காலங்களில் சுகாதார கேடுகள் மிகுந்த நகரம் என்ற கருத்துகணிப்பு நடத்தினால் அதிலும் சென்னையே முதலிடம் பிடிக்கும்.
சென்னையில் தண்ணீர் லாரிகளையும் தண்ணி அடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் சென்னை இன்னும் பாதுகாப்பான நகரமாக திகழும்
உலகிலேயே பாதுகாப்பற்ற ஊர்களை பற்றிய பட்டியலிட்டால் குஜராத் தான் முதலிடம் வகிக்கும்..... சென்னை ஒரு அருமையான நகரம் அமைதி பூங்கா என்றளைக்கபடும் தமிழகத்தின் தலைநகரின் மற்றொரு சிறப்பு ஜாதி மத கலவரம் இல்லாதது....
அஸ்ஸலாமு அலைக்கும்
ஏன் இஸ்லாமிய நாடுகள் இவர்களின் கண்களுக்குதெரியவில்லை. சவுதியில் மக்கள் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா? அவர்களுக்கு அதற்கு மனம் வராது. என்னைப்பொறுத்தவரையில் மதீனா மாநகருக்குதான் முதல் மதிப்பெண்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment