அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 23, 2011

சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் !



புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Source : காலை நாளிதழ்

4 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறுபான்மையினருக்கு 4.5 % உள் ஒதுக்கீடு செய்து இதை அனைத்து சிறுபான்மையினரும் பிரித்துக்கொள்வது என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். முஸ்லிம்களின் கோரிக்கையான 10 % தனி இட ஒதுக்கீடு மூலமே அரசின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் இதர பணிகளுக்கு இவர்களை கொண்டு செல்வதன் மூலம் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள்களை அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்றைய அரசியல்வாதிகள் - "ஆதாயமில்லாமல் ஆத்தை கட்டி இறைக்க மாட்டார்கள்" என்ற பழமொழிக்கு உதாரண புருஷர்கள்" . - இதுபோன்ற போதாத சலுகைகளை காட்டி மக்களை ஏமாற்றுவது என்பது அவர்களுக்கு கைவந்த கலை

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அயோக்கியர்களின் முட்டாள்தனமான முடிவு தான் இந்த அறிவிப்பு "4.5 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்ட அனைவரோடு சேர்த்து முஸ்லிம்களுக்கும் கொடுத்துள்ளார்கள் இந்த கயவர்கள்" நமக்கு பி ஜெ பி காரனும் இந்த காங்கிரஸ் காரனும் ஒன்னு தான். இந்த முறை நிச்சயம் நல்ல பாடத்தை இந்த அயோக்கியர்களுக்கு நாம் புகட்டியே ஆகவேண்டும்..... ரங்கநாத் மிஸ்ரா கமிஸனையும் அமைத்து நமக்கு நல்லது செய்வது போன்று ஒரு பாவனையும் காட்டிவிட்டு அந்த கமிஸன் ரிப்போர்ட்டை காற்றில் பரக்கவிட்டுவிட்டனர் இந்த கயவர்கள்....

அபூ இஸ்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அனைத்து இஸ்லாமிய கட்சிகளும் ஒன்றுபட்டு கடுமையாக போராடி நமது சமுதாயக் கோரிக்கையான பத்து சதவீதத்தை பெற வேண்டும்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.