அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, February 29, 2012

அல் அமீன் பள்ளி கமிட்டிக்கு AAMF துபை கிளையின் வேண்டுகோள்Tuesday, February 28, 2012

மரண அறிவிப்புஅஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] நமதூர் வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் ஸமது அவர்களின் மகனும், "சோனி" நெய்னாம்ஷா அவர்களின் மருமகனும், அலி அக்பர் (எலெக்ட்ரீசியன்), இப்றாஹிம் ஆகியோரின் சகோதரரும், தமீம் அன்சாரி மற்றும் பாட்ஷா ஆகியோரின் மாமனாரும், அப்துல்லாஹ்வின் தகப்பனாருமாகிய அனஸ் அவர்கள்  (27-02-2012) திங்கள் கிழமை பின்னேரம் இரவு 8 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் செவ்வாய் கிழமை (28-02-2012) காலை10:00 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:35 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
21:35ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

தகவல்: A-அப்துல் மாலிக் (துபாய்)

அதிரை தமுமுக தையுப் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்...அதிரை  தமுமுக வின் செயலாளர்  தையுப் நேற்று (27/2/12)மர்ம நபர்களால் தாக்கப்பட்டரர் . கடந்த 26.2.12அன்று SDPI யின் சார்பாக திருவாரூரில் அகல ரயில் பாதை விசயமாக மறியல் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற ஒருவரை சகோ.தையுப் அவர்கள் தடுத்து நிறுத்தினார் என்ற காரணத்தால் சகோ.தையுப் அவர்களுக்கும் அதிரை SDPI இல்யாஸ் அவர்களுக்கும் சிறிது கைகலப்பு ஏற்ப்பட்டது இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிரை காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் அவர்கள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சமாதானம் ஏற்ப்பட்டு பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

மறுநாள்(27/2/12) தையுப் அவர்கள் தக்வா பள்ளி அருகில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து நடுத்தெரு வழியாக பைக்கில் வந்து கொண்டு இருக்கும்போது முகத்தை முடிக்கொண்டு இருவர் பைக்கில் வந்து இரும்பு பைப்பால் தாக்கினார்கள் இதில் தையுப் அவர்களின் முகத்திலும் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டு அதிரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.தமுமுகாவின் சார்பாக அதிரை காவல் துறையிடம் நேற்று நடந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக தாக்கியது SDPI யை தான் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது . வழக்கு பதிவு செய்து அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் விசாரணை நடத்தி வருக்கிறார் சகோ தையுப் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் முலம் கொண்டு செல்லப்பட்டார்.
Monday, February 27, 2012

புற்றுநோயை குணப்படுத்தும் நடைப்பயிற்சி!


அதிகாலையில் எழுந்து உற்சாகமாக நடப்பது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. நடை பயிற்சி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, இதயநோய்களை குணமாக்குவதும் மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபயிற்சி மேற்கொள்வது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி குணமாக்குவதும் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10,000 பேரைக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்பகப்புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒருமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அல்லது நான்குமணிநேரம் வீட்டு சேலை செய்யுமாறு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியமூட்டும் விதமாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் 40 சதவிகிதம் அளவிற்கு புற்றுநோய் குணமாகியிருந்தது தெரியவந்தது.

சுறுசுறுப்பான நடை

இதேபோல் சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைகிறது என்று கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஹார்வர்டு பல்கலைகழகங்களில் நடைபெற்ற ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தினசரி 3 முதல் 5 கிலோமீட்டர் வரை நடப்பவர்களுக்கு 60 சதவிகிதம் வரை புற்றுநோய் செல்கள் கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல் வாரத்திற்கு மூன்று மணிநேரம் நடப்பவர்களுக்கு 20 முதல் 50 சதவிகிதம் வரை புற்றுநோய் குணமாகியுள்ளது. புதிதாக புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை.

நடந்தே போங்க
உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதை விட சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் செல்லவேண்டிய இடம் நடந்து செல்லும் தூரமாக இருந்தால் கண்டிப்பாக நடந்து செல்லவேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் நடப்பதோடு நம்முடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் நடக்குமாறு உற்சாகப்படுத்தவேண்டும். இதனால் புற்றுநோய் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவதோடு மருத்துவமனைக்குச் செல்லும் பணமும் மிச்சமாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றி. போல்ட்ஸ்கை.

Sunday, February 26, 2012

பொதுத் தேர்வுகள் : மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் !

தேர்வுக்கு முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்  ?
மாணவர்களே, சில நாட்களில் பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு எழுதும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதற்காக, இதோ

உங்களுக்கான சில டிப்ஸ் :1. தேர்விற்கு படிக்கும் போது, புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே படித்த, ஒவ்வொன்றையும் எழுதிப் பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. நாம் ஒன்றை செய்யும் போது திட்டமிட்டு செய்தால், அது சிறப்பாக அமையும். எனவே தேர்விற்கு படிப்பதற்கு முன் திட்டமிட்டு படிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நாளில் 12 மணி நேரம் படிக்க திட்டமிட்டால், 10 மணி நேரம் படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தை, 10 மணி நேரம் படித்ததை நினைவுபடுத்தி பார்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
3. திட்டமிட்டு படிக்க ஆரம்பித்த பின், இரவில் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துவிட்டோமா என சுயபரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்வதால், என்ன படித்தோம், எவ்வளவு நேரத்தை வீணாக்கினோம் என ஆராய்ந்து நேரத்தை நிர்வகிக்க முடியும்.
4. தேர்விற்கு 1 அல்லது 2 வாரத்திற்கு முன்பே புதியதாக எதையும் படிக்காமல், படித்ததை நினைவு படுத்த வேண்டும்.
5. படிக்கும் போது, நல்ல முறையில் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும். கவலை மற்றும் அச்சத்துடன் படிக்க கூடாது.
6. படிக்கும் போது படங்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தனியாக எழுதி வைத்துக் கொண்டால், திருப்புதல் செய்யும்போது உதவியாக இருக்கும்.
7. படிக்கும் போது, டிவி பார்ப்பது, பிறரிடம் பேசிக்கொண்டே படிப்பது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
8. தேர்விற்கு முதல் நாள், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், அடையாள அட்டை போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
9. தேர்விற்கு பழகிய பேனாக்களையே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் வேகம் கிடைக்கும்.
10. தேர்விற்கு அவசரமாக செல்லாமல் சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு செல்வது நல்லது.
மாணவர்களே தேர்வு எழுத தொடங்கும் முன் எந்தவித பதட்டமும் இன்றி கேள்வித்தாளை நன்கு படித்த பின் தேர்வெழுத துவங்குங்கள்.
இறைவன் நாடினால் ! தேர்வுக்கு தயாராகுங்கள், நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுங்கள்.

Source :  காலை நாளிதழ்

Saturday, February 25, 2012

போலியோ - பட்டியலிருந்து இந்தியா நீக்கம்!


போலியோ இல்லாத ஆண்டாக, 2011-ஐ கடந்திருக்கிற இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் இன்று நீக்கியது. 

டெல்லியில் இன்று காலை தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார். 

உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இன்று காலை கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கடந்த ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லாததால், போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார். 

முன்னதாக, போலியோ பாதிப்புள்ள 4 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் இந்தியா இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாத பட்சத்தில், 'இந்தியாவை போலியோ இல்லாத நாடு' என உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும். 

இதற்கு உரிய முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி நடேலா மேனாப்தே தெரிவித்துள்ளார். 

போலியோ ஒழிப்பில் வெற்றி கிட்டியதற்கு கூட்டு முயற்சியே காரணம் என்ற பிரதமர் மன்மோகன் சிங், 23 லட்ச தன்னார்வ தொண்டர்களுக்கே இந்த பெறுமைச் சேரும் என்று புகழாரம் சூட்டினார். 

"இந்தியாவில் மட்டுமின்றி, இந்தப் பூமியில் இருந்தே போலியோவை விரைவில் முற்றிலும் ஒழித்திட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

போலியோ இல்லாத இந்தியா!

இந்தியாவில் ஜனவரி 13, 2011-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இந்த வருடம் ஜனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை. உலகச் சுகாதார நிறுவனமும் மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் எடுத்த பெருமுயற்சியால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.

அதேநேரம், ''போலியோவை ஒழித்துவிட்டோம் என்று நமது அரசுகள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. போலியோ என்பது சுழற்சி முறையில் தோன்றக் கூடியது. இந்த வருடம் போலியோ ஒழிந்தால், அடுத்த நான்கு வருடங்களுக்கு அந்தப் பாதிப்பு தோன்றாமல் இருக்கலாம். அதற்கு அடுத்த ஆண்டு போலியோ தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், போலியோ தடுப்பு மருந்துகளும் அதற்கான பிரசாரமும் தொடர வேண்டும்!" என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள்.

Friday, February 24, 2012

இஸ்லாத்தில் இணைந்தார் ஜெர்மன் விஞ்ஞானி!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.


முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.

ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!

இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.

வ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!


இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.

காணொளி காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
Source : http://www.facebook.com/photo.php?v=302948643091569

Sunday, February 19, 2012

நேற்று (17/2/12)A.L.பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.I. அன்வர் அவர்களின் உரையின் காணொளி பாகம் -2


Saturday, February 18, 2012

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் !


போலியோ சொட்டு மருந்து முகாம் 19-2-2012 மற்றும் 15-4-2012 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு 19-2-2012 அன்று சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 903 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 838 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 19-2-2012 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் (15-4-2012) ஞாயிற்றுக் கிழமை இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.தேசிய தடுப்பூசி அட்ட வணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது.இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கை வாழ் அகதிகள் மற்றும் இடம் பெயர்ந்து வாழ் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19-02-2012 போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் மற்றும் அரிமா சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால் தமிழ்நாடு 8-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேற்று (17/2/12)A.L.பள்ளியில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் M.I. அன்வர் அவர்களின் உரையின் காணொளி பாகம் -1Friday, February 17, 2012

கூடங்குளத்தில் விஞ்ஞானிகள் சும்மா இருக்க அனுமதிக்க முடியாது

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தங்கள் விஞ்ஞானிகள் காலவரையின்றி தொடர்ந்து சும்மாவே இருப்பதற்கு ரஷ்ய அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டின் சிறப்புத் தூதர் தெரிவித்தார்.

கூடங்குளம் போராட்டம் காரணமாக, அணுமின் நிலையப் பணிகள் தடைபட்டுள்ள சூழலில், ரஷிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான சிறப்பு தூதர் அலெக்சாண்டர் எம்.கடகின் செவ்வாய்க்கிழமை சென்னையில் நிருபர்களிடம் கூறியது:

பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்து பெரிய அளவில் சோதனை செய்ததை பல உலக நாடுகள் எதிர்த்தன. ஆனால் ரஷியா தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டது.

ஜப்பானில் சுனாமியின்போது அணு உலை வெடித்து சேதம் அடைந்து 6 மாதம் கழித்து கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிர்ப்பு வந்தது ஏன்? ஜப்பானில் வெடித்த அணுஉலை பழமை வாய்ந்தது. பழைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை நவீன தொழில்நுட்பத்தில் உலகிலேயே பாதுகாப்பான அணுஉலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படி ஒரு அணு உலை இந்த அளவுக்கு பாதுகாப்பாக அமைக்கப்படவில்லை. காரணம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது புதிய நவீன தொழில்நுட்பத்தில் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சாரம் போதவில்லை என்று பிரமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார். எனவே கூடங்குளம் அணு மின்நிலையம் வந்தால்தான் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், கடந்த அக்டோபரில் இருந்தே சும்மா இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கைதேர்ந்த விஞ்ஞானிகள். ரஷ்யா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.

கூடங்குளத்தில் அணு மின்நிலைய பணிகள் முடிந்தும் திறக்கமுடியாமல் உள்ளது. இது இந்தியாவின் பிரச்னை. இந்த பிரச்னையில் தலையிட ரஷியா விரும்பவில்லை.

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று உள்ளே போக நான் விரும்பவில்லை.

அணு உலை திறக்காமல் எங்கள் ரஷிய என்ஜினீயர்கள் எவ்வளவு நாட்கள்தான் வேலை இல்லாமல் சும்மா இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து வேலை இல்லாமல் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்காக இவ்வளவு காலம்தான் அவர்கள் இங்கு இருப்பார்கள் என்று காலக்கெடு எதுவும் விதிக்க விரும்பவில்லை. இந்த பிரச்னையில் குறுகிய அளவில் அரசியல் நடைபெறுகிறது.

கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்கப்படவில்லை என்றால் இந்தியாவின் மின்சார தேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை தீர்ந்து அணு உலை திறக்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார் ரஷிய சிறப்பு தூதர் அலெக்சாண்டர் கடகின்.

அப்போது, இந்தியா - ரஷியா தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிறுவன தலைவர் வி.எம்.லட்சுமி நாராயணன், தலைவர் ஜெம் ஆர்.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Thursday, February 16, 2012

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஆஸ்பத்திரித் தெருவை சார்த்த மர்ஹூம் செய்யது முஹம்மது (சேனா அப்பா)அவர்களின் மகளும், மர்ஹும் ஹாபீஸ் செ.மு.அ .முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஏ.ஷம்சுதீன் அவர்களின் தாயாரும் எம்.ஷம்சுத்தீன் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று வியாழக்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்  வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

Wednesday, February 15, 2012

குழந்தைகளே உஷார் !!! போலி மிட்டாய்கள் !


மதுரையில் வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரில், குழந்தைகள் நலத்திற்கு கேடான போலி மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில், "கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களின் தரம் சந்தேகத்தை கிளப்புவதாக,' ஒருவர் மனு அளித்தார். "உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு,' கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். துறையின் நியமன அலுவலர் டாக்டர் ஜெ.சுகுணா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணன், ராஜா, முரளி, மனோகரன், அம்ஜத் அலி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மதுரை லட்சுமிபுரம் "ஒரு குறிப்பிட்ட' கடையில் ஆய்வு செய்த போது, சில சாக்லெட் பொருட்கள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. விசாரிக்கையில், தாய்லாந்து, இந்தோனேஷியா, சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போலி முகவரியில், சாக்லெட், ஜெல்லி, கேண்டி மிட்டாய்கள் விற்றது தெரியவந்தது. சில பொருட்களில் தயாரிப்பு முகவரி இல்லை. அங்கிருந்த, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போலி வெளிநாட்டு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சிலவற்றை, உணவு ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

கடைக்காரர் கொடுத்த தகவல் படி, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, மேலூர், தெற்குத்தெருவில் போலி மிட்டாய்கள் தயாரிக்கப்படுவதும், மதுரை முழுவதும் விற்பனையில் இருப்பதும் தெரியவந்தது. குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கும் போதும், கடைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போதும், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது:மதுரையில் போலி மிட்டாய்கள் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். போலி மிட்டாய்களை கடைகளுக்கு சப்ளை செய்வோர், பில் தருவதில்லை. இதனால், அவர்களை ரகசியமாக நெருங்க வேண்டியுள்ளது. விரைவில் அவர்கள் பிடிபடுவர், என்றார்.

SOURCE : காலை நாளிதழ்

Tuesday, February 14, 2012

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு

அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த பொதுமக்களின் கவனத்திற்கு அடிக்கடி மின்சாரம்  தடை ஏற்படுவதின் காரணமாக நாள் தோறும் வழங்கப்படுகின்ற குடிதண்ணீர் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம். ஆகவே வருகின்ற குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாய் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இங்கனம் 
 
பேரூராட்சி அலுவலக நிர்வாக அதிகாரி
 
அதிராம்பட்டினம்.

அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு


சென்னை, பிப்.14-

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அகமது அலி ஜபார் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதையில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலானது மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, அதிராம்பட்டினம் , பட்டுக்கோட்டை, அறந் தாங்கி, மார்க்கமாக இயக்கப் பட்டது. மயிலாடுதுறை- காரைக் குடி இடையே அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்காக 2006-ல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில்பாதை மாற்றும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டும் இன்னும் பணி முடியவில்லை. இதனால் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை வைத்தோம். இதை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

ரெயில்வே நிர்வாகத்தின் இச்செயலானது இயற்கை நீதிக்கு புறம்பானது. எனவே மயிலாடுதுறை- காரைக்குடி இடையேயான அகல ரெயில் பாதை மாற்றும் பணியை விரைவாக முடித்து அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரெயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் இதுகுறித்து 6 வாரத்தில் பதில் அளிக்கும்படி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

நன்றி : மாலைமலர்.

Wednesday, February 8, 2012

அகல ரயில் பாதையும் , தொடர் முயற்சியும் !


அல்ஹம்துலில்லாஹ் ! 
 
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்கம் சம்பந்தமாக தொடர் முயறசியாக,கடந்த வாரம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப . சிதம்பரம் அவர்களை காரைக்குடியில் சந்தித்தோம். அதன் விபரத்தை ஆங்கில நாளேடான  THE HINDU பத்திரிக்கையில் விபரமாக எழுதி இருந்தார்கள். அதன் நகலையும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
 
மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்த பின்னர்,  சற்றும் தாமதிக்காமல் உள்துறை அமைச்சகத்திலிருந்து  A.R.U.D.A  அமைப்பிற்கு  ஒரு  கடிதமும் , ரயில்வே   துறை அமைச்சருக்கு   மேற்கண்ட அகல ரயில்பாதை திட்டத்தை  வரும் பட்ஜெட் இணைக்கும்படியும், அது  சமபந்தமாக மேற்கொண்டு விளக்கமும்
கேட்டு கடிதம் எழுதி  அனுப்பி இருக்கிறார்கள். அதன் நகல் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.


  

 
மேலும் திருவாரூர் காரைக்குடி   ரயில்வே மார்க்கத்திலுள்ள வர்த்தக மற்றும் சேவை அமைப்புகளோடு இணைந்து மாண்புமிகு ரயில்வேதுறை அமைச்சரை  மார்ச் 14 தேதி  பட்ஜெட்  முன்பாக  சந்திப்பதற்காக Appontment  கேட்டு எதிர்பார்த்து கொண்டிருகின்றோம். எல்லாம் நன்மையாக நடந்தேற எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக !
 
இப்படிக்கு 
அப்துல் ரஜாக்

முந்தைய திமுக அரசின் அலட்சியம் சரி, அதற்காக இப்போது மக்கள் மீது பெரும் சுமை ஏன்!

மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறதாம்.  மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், கூடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 8,200 கோடி மக்கள் மீது திணிக்கப்படும். அதாவது, இதுவரை யூனிட் ஒன்றுக்கு 75 பைசா, 85 பைசா என செலுத்தி வந்த நுகர்வோர் இனிமேல் குறைந்தபட்சம் ரூ. 2 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்போது 5 படிகளாகப் பிரித்து மின் கட்டணம் அளிவீடு செய்யப்படுகிறது. அது, இனிமேல் 3 படிகளாகக் குறைக்கப்படும். அதோடு தற்போது 600 யூனிட் வரை வழங்கப்படும் மானியம், இனிமேல் 500 யூனிட்களாகக் குறைக்கப்படும்.
இதனால் 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இதுவரை செலுத்தி வந்த ரூ. 1,100 கட்டணத்துக்கு பதில் ரூ. 2,375-க்கு மேல் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
கட்டண உயர்வு ஏன்?÷கடந்த ஆண்டு நிலவரப்படி மின்வாரியத்துக்கு ரூ. 42 ஆயிரத்து 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு, நிகழாண்டில் ரூ. 53 ஆயிரம் கோடியாக உயர உள்ளது. இதுவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குக் காரணம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
உண்மைக் காரணம் என்ன? மானியம் மற்றும் கட்டணங்களை தமிழக அரசு முழுமையாக அளிக்காததே, மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
தமிழக அரசின் கொள்கை முடிவின்படி 19 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கும், 14 லட்சம் குடிசைகளின் மின் இணைப்புகளுக்கும், விசைத்தறி, நெசவு, ஆலயங்கள் ஆகியவற்றின் இணைப்புகளுக்கும் இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது.
இந்த இலவசங்களுக்கு ஈடாக 2008-2009 நிதியாண்டில் ரூ. 4,118 கோடியை மானியமாக மின்வாரியத்துக்கு அரசு அளித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு வழங்கியதோ ரூ. 263 கோடி மட்டுமே.
2009-10 நிதியாண்டில் அரசு வழங்கியிருக்க வேண்டிய மானியத் தொகை ரூ. 5,858 கோடி. ஆனால் அரசு வழங்கியதோ ரூ. 267 கோடி மட்டுமே. எனவே, மின்வாரியத்தின் வருவாய் இழப்புக்கு கடந்த திமுக அரசே முக்கிய காரணம்.
மின்வாரியத்தின் மின் ஆதாரத்தில் 25 சதவீதம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, மானியங்களுக்கான தொகையை அரசு முழுமையாக அளித்திருந்தால், மின்வாரியத்தின் வருவாய் இழப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் ஆந்திரத்தில், மானியத் தொகையாக ரூ. 3,665 கோடியை அம்மாநில அரசு மின் வாரியத்துக்கு அளிக்கிறது. இதேபோல பஞ்சாப் அரசு அம்மாநில மின் வாரியத்துக்கு ரூ. 2,565 கோடி மானியத் தொகை அளிக்கிறது. ஆனால் தமிழக அரசு முழு மானியத் தொகையை தொடர்ந்து வழங்கவில்லை.
வாரியத்துக்கு மீட்சி நிதி தேவை: கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகரித்துவரும் மின் நுகர்வோருக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்வதற்குத் திட்டம் கொண்டு வரப்படவில்லை.
மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக வெளிச் சந்தையில் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதும், வருவாய் இழப்புக்கு முக்கியக் காரணமாகும்.
எனவே, இந்த இழப்புக்கு பொறுப்பேற்று மின்வாரியத்துக்கு மீட்சி நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர்.
ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மின் கட்டணத்தை 110 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கு பதிலாக, வருவாய் இழப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது மொத்த மின் உற்பத்தியில் தனியாரின் பங்களிப்பு 11 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக, மொத்த வருவாயில் 30 சதவீதத்தை மின்வாரியம் செலவிடுகிறது. எனவே, இந்தத் தனியார் நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
அரசுத் துறைகள் வைத்துள்ள மின் கட்டண பாக்கியை வசூலிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், கூடுதல் சுமையை நுகர்வோர் மீது ஏற்றுவதைத் தவிர்க்கலாம் என்கின்றனர் மின் நுகர்வோர் நல ஆர்வலர்கள்.

விவசாயிகள் என்ற போர்வையில் நிறைய பண்ணை யார்களும், பெருவிவசாயிகளும் தான் இலவச மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளுக்கு வசூலிக்கும் கட்டணத்தை அவசியம் வசூலிக்கவேண்டும். உண்மையான ஏழை குறுநில விவசாயிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு மட்டும் இலவச மின்சாரம் வழங்கவேண்டும். மேலும் உண்மையாக குடிசையில் வசிப்பவர்களின் சொந்த குடிசையாக மட்டுமிருந்தால் மட்டுமே இலவச மின்சாரம் வழங்க வேண்டும். முக்கால் வாசி குடிசைகளில் இருப்போர் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த அரசியல் வாதிகள், கவுன்சிலர்கள் மற்றும் தாதாக்களுக்கு சொந்த மான குடிசைகளில் வாடகைக்கு இருக்கிறார்கள். சில தொழிற்சாலை களுக்கு, பணத்திற்கு ஆசைப்படும் மின் பணியாளர் களின் உதவியுடன் மின் உபயோகம் குறையும் படி யும் ஏற்பாடு செய்யபட்டிருக்கலாம். அவர்களின் உண்மையான மின் உபயோகத்தை கண்டறிவதுடன் முறைகேடான பயன் பாட்டிற்கு அவர்கள் மேல் நஷ்ட்ட்ட ஈடு நடவடிக்கையும் எடுக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் கூடுதல் சுமையை நுகர்வோர் மீது ஏற்றுவதைத் தவிர்க்கலாம். 

இந்த செய்தியை தந்தமைக்கு நன்றி. 

பயனுள்ள தகவல்.  

Tuesday, February 7, 2012

அகல ரயில் பாதை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரியிடம் லண்டன் AAMF யின் சார்பாக சந்திப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் 

லண்டன் (AAMF) யின் சார்பாக லண்டன் இந்திய தூதரக அதிகாரியை நமதூர் 
அகல ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக ரயில்வே 
அமைச்சருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். லண்டன் (AAMF) 
ஒருங்கிணைப்பாளர் S.A. இம்தியாஸ் அஹமது லண்டன் சம்சுல் இஸ்லாம் 
சங்கத்தின் துணை தலைவர் டாக்டர். கபீர் காக்கா அவர்களும் இந்திய தூதரக 
அதிகாரிக்கு பரிசாக அரபியிலும்(translate) ஆங்கிலத்தில் உள்ள குர் ஆனன வழங்கியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு 

லண்டன் வாழ் (AAMF) யின் சகோதரர்கள்.  

AAMF -இன் அறிவிப்பும் வேண்டுகோளும்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த 14-01-2012   அன்று நடைப்பெற்ற அவசரக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி  

நமதூரில் நிகழக்கூடிய இறப்புகளுக்காக ( மவுத் ) குழி வெட்டுதலில் ஏற்படுகிற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) சார்பாக வெளி மாநிலத்திலிருந்து மூன்று முஸ்லீம் சகோதரர்களை வரவழைத்து இப்பணிக்காக நியமித்த செய்தி அனைவரும் அறிந்ததே.


இவர்களின் சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் செலுத்துவதற்கு ஏதுவாக லண்டன் வாழ் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட சகோதரர் லண்டனில் இருக்கும் காலம் வரை, ஒவ்வொரு மாதமும் ரூ.2 ,௦௦௦/- தருவதாக போருப்பேற்றுகொன்டுள்ளார். (Jazakallah Khair ). 

இதுபோல், வெளிநாடு வாழ் அதிரை சகோதர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவி இந்த நல்ல காரியத்தில் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
 
தொடர்புக்கு சகோ.A .தமீம் -தலைவர், அமீரக கிளை. 00971 -50 -7480023 , 
Email : adiraiallmuhallah @gmail .com

இப்படிக்கு 
AAMF நிர்வாகம் 
அமீரக கிளை. 

Saturday, February 4, 2012

(AAMF)முஹல்லா வாரியாக லண்டன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.

 (AAMF)முஹல்லா வாரியாக லண்டன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
********************************************************************************
சம்சுல் இஸ்லாம் சங்கம்

தலைவர்: அப்துல் குத்தூஸ். த/பெ சேக் முஹம்மதுதம்பி.
00447404052728

துணைதலைவர்:அஹமது கபீர்  த/பெ.முஹம்மது இஸ்ஹாக்
00447588558835

செயலாளர்:  ஜஹபர் சாதிக்  த/பெ. முஹம்மது ஹனீபா
00447593395955
----------------------------------------------------------------------------------------

தாஜுல்இஸ்லாம் சங்கம்
------------------------------------------
 தலைவர்:ஜமால் முஹம்மது த/பெ. முஹம்மது இப்ராஹிம்
00447522062767

 துணைத்தலைவர்: சாஹுல் ஹமீது  த/பெ. அஸ்லம் மரைக்காயர்
004475441818199

 செயலாளர்: அஹமது பாஸ்னியா த/பெ சாஹுல் ஹமீது
0759676662888
--------------------------------------------------------------------------------------
தரகர் தெரு (முகைதீன் ஜூம்-ஆ பள்ளி முஹல்லா)
--------------------------------------------------------------------------------
தலைவர்:முஹம்மது ஸஃபர் கான் த/பெ முஹம்மது ரசீது
00447599412533

செயலாளர்:முஹம்மது நஸீம் த/பெ அப்துல் ரஹ்மான்
00447752787093
----------------------------------------------------------------------------------------
கடற்கரைத்தெரு ஜூம்-ஆ பள்ளி முஹல்லா
-----------------------------------------------------------------------
 தலைவர்: ரஃபீக்
--------------------------
செயலாளர்:முஜிபுர்ரகுமான் த/பெ.முஹம்மது அலி
00447507550624
-------------------------------------------------------------------------------

மிஸ்கீன் சாஹிப் பள்ளி முஹல்லா
---------------------------------------------------------
 தலைவர்:அஹமது இப்ராஹிம் த/பெ.முஹம்மது முகைதீன்
00447766515211
-------------------------------------------------------------------------------------------------
நெசவுத்தெரு முஹல்லா
--------------------------------------------
 தலைவர்: முஹம்மது இலியாஸ் த/பெ.முஹம்மது அபூபக்கர்
00447872051340
----------------------------------------------------------------------------------------------------
கீழத்தெரு முஹல்லா
--------------------------------------
 தலைவர்:நஜீர் அஹமது த/பெ.சாஹுல் ஹமீது
00447405726207


மரண அறிவிப்பு (EPMS நடுத்தெரு முஹம்மது அபுல்ஹசன் அவர்கள் )

அஸ்ஸலாமு அலைக்கும்  

நடுத்தெரு கீழ்புரைத்தைச் சேர்ந்த மர்ஹூம் ம.மு.க.முஹம்மது  ஸாலிஹ் அவர்களின் மகனும் அம்மார் ஹசன் அவர்களின் தகப்பனாரும் 
கபீர் மரைக்காயம், முனவ்வ்ர் இபுராஹீம், தமீம் அன்சாரி, அமீன் நவாஸ்,
ஷாஃபி, ரிஜ்வி, ராஜிக் அஹமது ஆகியோரின் மாமனாரும் நடுத்தெரு E.P.M.S. பள்ளியின் தாளாளருமாகிய முஹம்மது அபுல்ஹசன் அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னநில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

Friday, February 3, 2012

புதிய பாஸ்போர்ட்/ பழைய பாஸ்போர்ட் எடுக்க தேவையான ஆவணங்கள்


நாம் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) முக்கியமான ஒன்று. இந்த பாஸ்போர்ட்டை நாம் எப்படி புதிதாக பெறுவது. நாம் எடுத்த எப்படி பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.இந்த விசயம்பற்றி ஒவ்வொரும் தெரிந்துக்கொள்வது முக்கியம்.


புதிய பாஸ்போர்ட் எடுப்பது எப்படி.1.நம்முடைய வசிப்பிடம் அடையாளத்திற்காக ரேசன் கார்டு- இது
கட்டாயம் கொண்டு செல்லவேண்டிய ஆவணம்


2.புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம்,மத்திய அரசு அடையாள ஆவணம், அரசால் அங்கிகரிக்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று)


3.பிறந்த தேதிஅல்லது ECNR-ன் தேவைகளுகு படிப்புச்சான்று அவசியம் கொண்டுசெல்லவேண்டும்


4.1989-ஆண்டு மற்றும் அதற்கு மேல் பிறந்தவர்கள் கட்டாயம் பிறந்த சான்றிதழ் கொண்டு செல்லவேண்டும்


5.திருமணமாகிருந்தால் நோட்டரி கிளப்உறுப்பினரிடம் சான்று ( (affidavit) பெற்று செல்லவேண்டும்.2009ம் ஆண்டு அல்லது அதற்கு மேல் திருமணம் செய்தவர்கள் கட்டாயம் தனது திருமணத்தை பதிவு அலுவலகத்தில் (Register Office) பதிவு செய்யதிருக்கவேண்டும்


6.சிறு குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேண்டுமேயானால் அந்த குழந்தையின் தாய் கட்டாயம் பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டும், தந்தை வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் இருக்கிறார் என்ற துதரகக் (Embasssy) கடிதம் கொண்டு செல்லவேண்டும்.

பழைய பாஸ்போர்ட புதுப்பித்தல் பழைய பாஸ்போர்ட் காலத்தவணை முடிந்துவிட்டது என்றாலோ காலத்தவணை முடியும் நேரத்திற்கு 1வருட காலத்தவணத்திற்கு முன்போ, புகைப்பட மாற்றம்வேண்டியோ, பாஸ்போர்ட் கிழிந்துவிட்டாலோ. காணாமல் போய்விட்டாலோ முகவரி மாற்றம், மனைவி/கணவன் பெயர் சேர்த்தல் காரணங்களுக்காக அதற்குரிய ஆவணங்களை சமர்பித்து புதிதாக பாஸ்போர்ட் பெறலாம்.1. ஒரிஜினல் பழைய பாஸ்போர்ட்


2. நம்முடைய வசிப்பிடத்திற்கான ரேசன் கார்டு ஆவணம்


3. புதிப்பிக்கும் தருணத்தில் ECNR-ன் தேவைகளுக்கு படிப்பு சான்று அல்லது வெளிநாட்டில் இருந்த 3 வருட அனுபவங்களை நோட்டரி கிளப்உறுப்பினரிடம் சான்று (affidavit) பெற்றுசெல்லவேண்டும்.


மேலும் விபரங்களுக்கு டிஜிடெக் கம்ப்யூட்டர், காலேஜ்ரோடு, அதிராம்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் கலக்டர் அலுவலகத்திலும், இணையத்திலும் விபரங்கள் அறியலாம்.
ஆவணத்தில் உள்ள பெயர்கள், முகவரிகள் சரியாக இருக்கின்றன என்பதை சரிபார்க்கவும். சரியாக இல்லையயன்றால் அதுக்குரிய அலுவலகத்தில் அதனை திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

டிஜிடெக்கில், டிஜிடெக் கம்ப்யூட்டர், காலேஜ்ரோடு, அதிராம்பட்டினம் இதற்கான அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொடுக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு ! தஞ்சை மாவட்ட கலெக்டர் அழைக்கிறார் !


தஞ்சை மாவட்டத்தில் 2011-12ம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானோர்களை தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் அவர்கள் விண்ணப்பிக்க அழைக்கிறார்.


தொழிற்பயிற்சிகள் எவைகள் :
ஏர் கண்டிசன்
ரெப்ரிஜிரேஷன்
எலக்ட்ரீசியன்
புட் புரொடக்க்ஷன்
புட் அண்ட் பீவரேஜ் சர்வீஸ்
வெல்டிங்
பிட்டர்

கால அளவு : மூன்று மாதம்
வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவராக இருக்க வேண்டும்

சலுகைகள் :
தினமும் ரூ.35 வீதம் உதவித்தொகை
பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்குதல்
பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு வழங்க பயிற்சி நிலையத்தின் மூலம் நடவடிக்கை

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
திட்ட அலுவலர்,
மகளிர் திட்டம்,
சி-5 ராமகிருஷ்ணாபுரம், மணிமண்டபம் அருகில்,
தஞ்சை

என்ற முகவரிக்கு வரும் 7 ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ரேஷன் கார்டு மற்றும் கல்வி தகுதிக்கான சான்றுடன் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு : தகுதியானோர் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

Wednesday, February 1, 2012

உனக்காக நண்பா!!!! (மாரடைப்புக்கு முத‌லுத‌வி சிகிச்சை)

வீட்டில் அல்லது வெளியில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?

மாலை மணி 6:30 வழக்கம் போல், அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க, என்ன செய்யலாம்??

துரதிஷ்ட வசமாக, மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் வழக்கத்திற்கு மாறாக தாறுமாறாக துடிக்கிறது.நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும‌ வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னர் மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இருமல் மிக நீண்டதாக‌ இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆக்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவ‌தால் ஏற்படும் அதிர்வில் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

(என் அறிவுக்கு எட்டிய‌ ஒரு உதார‌ண‌ம்: முன்பெல்லாம் வீட்டில் அடி ப‌ம்பு இருக்கும் ச‌ம‌ய‌ம் அதை வேக‌மாக நிற்காமல் அடித்துக்கொண்டே இருந்தால் குழாயிலிருந்து முத‌லில் காற்றுட‌ன் பிற‌கு நீரும் அத‌ன் வாயிலிருந்து வேக‌மாக‌ பீறிட்டு வெளியேறுவ‌து போல் தான் ந‌ம் உட‌லிற்குள் ரத்தத்தில் இய‌ங்கும் நுரையீர‌ல் ம‌ற்றும் இருத‌ய‌த்தின் செய‌ல்பாடுக‌ளும் உள்ள‌ன‌ என‌ நினைத்துக்கொண்டேன். ச‌ரியா? தவ‌றா? என‌ விள‌க்க‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் விள‌க்க‌வும்)

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்!!!!

என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் இணைய‌த்தின் மூல‌ம் எல்லோருக்கும் சென்ற‌டைய‌ட்டுமாக‌...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.