அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, January 29, 2012

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு

காரைக்குடி -திருவாரூர் அகல ரயில் பாதை சம்பந்தமாக நமதூரின் முக்கியஸ்தர்கள் இன்று (29.1.2012)காரைக்குடியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் இல்லத்தில் சந்தித்தனர் . இமாம் ஷாஃபி பள்ளியின் தாளாளர் M.S.T.தாஜுதீன் , M.K.N டிரஸ்ட் தாளாளர் அஸ்லம் , அதிரை சேர்மன் S.H.அஸ்லம் , CHASECOM அப்துல் ரஜாக் , காதிர்முகைதின் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் ஆகியோர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நமது பகுதி புறக்கணிக்கப்படுவதை நமதூர் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினார்கள் அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் ARDA சார்பாகவும், அதிரை பேரூராட்சி தலைவர் அவர்களின் சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது மத்திய ரயில்வே அமைச்சரிடம் இது தொடர்பாக தாம் எடுத்து சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார் .



கோரிக்கை மனு :


அதிரையில் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் நடத்திய தாவா பயிற்சி முகாம் .

அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 21 /1 /2012 அன்று மாலை 4 .௦30 மணியளவில் A.L.M ஸ்கூல் லில் இஸ்லாமிய தாவா பயிற்சி முகாம் நடைபெற்றது ,இதில் பிற மத சகோதர்களுக்கு இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பதை பற்றி பல ஆண்டுகள் தாவா களத்தில் அனுபவம் வாய்ந்த அறிவகம் மதரசா தாய்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைத்து பயிற்சிவித்தனர் .இதில் 100 க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .








ஆக்ஸன் இல்லையா?

சு.ப.- மருத்துவ சிகிச்சைக்காக மதராஸபட்டினத்தில் பெரிய ஆஸ்பத்திரிக்கு தேர்தல் நேரத்துல ஓட்டு போட்டுட்டு சிகிச்சைகாக போனதிலிருந்து சி.ப எதுவும் பேச முடியாம மெண்டு முழுங்கிக்கிட்டேயிருந்தாரு. இப்ப சு.ப சுகமா ஊருக்குவந்தவுடன் நம்ம ஈ.சி.ஆர் ரோட்டில னைசா சு.ப.வை வாக்கிங்னு சொல்லி அவர் இல்லாத நாளுல நடந்த எல்லாத்தையும் பற்றி சொல்லணும்னு இழத்திட்டுவந்துட்டாரு நம்ம சி.ப.!





சி.ப- சு.ப நீங்க ஓட்டுபோட்டுட்ட உடனே மதராஸூக்கு போய்ட்டியா?



சு.ப- ஆமாண்டா அதற்குமுன்னாலே நீங்க போகவேணா நம்ம ஜெயிக்கணும். இதற்கு முன்னாடி இருந்த சேர்மனால நமக்கு என்ன பயன் நடந்தது. நம்ம அதமாத்தணும் என்று சொல்லி என்னை ஓட்டுபோட வைச்சாங்க... அதிருக்கட்டும் எலக்­ன் முடிஞ்சிச்சே என்ன நடக்குது நம்ம ஊருலே. நல்லதெல்லாம் நடக்குதா நாமே எதிர்பார்த்தமாதிரி இருக்குதா?


சி.ப- எல்லாம் அரசியல்ணு அனுபவ பட்டுபட்டுதான் நாம தெரிஞ்சிக்கணுங்கிறது நம்ம விதியா இருக்குது! என்னத்த சொல்றது ம்.ம்.ம்.... நான் ஒன்னு சொல்றேன் யாரிடமும் சொல்லாதீங்க நம்ம பேரூராட்சில 3800(38000) செக் மோசடி நடந்ததாம். இத நம்ம இப்ப உள்ள சேர்மன் கையும் களவுமாக பிடித்து “நான் ஒன்னு சொல்றேன்” யாரிடமும் இதை சொல்லவேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லிக்கிட்டு அலைகிறாருன்னு அங்கங்கே பேசிக்கிறாங்கே.




சு.ப- ஏன் அவருதான் தவறையயல்லாம் தட்டிகேட்பேன்னு சொன்னாரே! ஏன் இதை சும்மாவிட்டாருன்னு நீ விசாரிக்கலையா?



சி.ப- அதையும் கேட்டுப்பார்த்தேன் உடனே எதற்கும் முடிவெல்லாம் எடுத்து விடக்கூடாது நான் சிங்கப்பூர் சிட்டிங்ல போய் யோசித்துவிட்டு வருவாராம்... ஆட்சிக்கு வந்தவுடன் சுத்தம் சுத்தம்னு பேசி சுத்தமா எதுமே நடக்காம இருக்குன்னு பேச்சாக்கிடக்குது..




சு.ப- என்ன ஒன்றும் செய்யலனு சொல்றா குப்பை கூடை அங்காங்கே வைச்சிருக்காரே!




சி.ப-அதுக்கூட(டை) பழைசுயயல்லாம் எடுத்து புதுசாத்தான் வைத்திருக்காராம். அரசியலுக்கு வந்தவுடன்தான் ரோட்டுக்கு கீழே உள்ள தெருவெல்லாம் தெரிகிறதாம். இதற்கு முன்னால் இந்த கூடைகளெல்லாம் வைப்பதற்கு இந்த தெருவில் இடமில்லைபோலுனு அதிரை மக்கள் விலாசிறாங்க. சு.ப.- அடபோப்பா... எல்லாரும் அரசியலுக்குள் நுழைவதற்குமுன் நாம் அப்படி செய்யலாம், இப்படிசெய்யலாம்னு சொல்றாங்க அரசியலில் புகுந்தவுடன் அரசியலுக்கு தகுந்தபடிதான் செய்யமுடியும்னு மாறவும் செய்றாங்க... என்னத்த சொல்றது....?




பழைய சேர்மன் இருக்கும்போது வி.ஐ.பிகளின் மாடிவீட்டுக்கெல்லாம், வணிகஸ்தாபனத்திற்கெல்லாம் குறைந்த வரிகள் அதாவது குடிசை வீட்டு வரிகள்தான் வாங்கினார்களாமே அதற்கெல்லாம் நம்ம இப்ப உள்ள சேர்மன் முடிவு கட்டுவாரா இல்ல... இதையும் இப்ப செய்யக்கூடாதுன்னு சும்மா விட்டுருவாரா? ஏன் கேட்கிறேன்னா...... இப்ப வரி,வாய்தாக்கள் எல்லாம் முறையா கட்டுவதற்கு கடைசி தேதிலாம் வச்சிருக்காங்கலாம்... இதற்கும் முடிவெடுத்தாங்களா...இந்த களத்தில் சேர்மன் இறங்குகிறாரா இல்லையானு தெரியல. ஏனென்றால் ரேசன் கடைகளில் மக்கள் குறைகளை நீக்க அதிமுக அதிரடி ஆய்வு நடத்தி அதில் வெற்றியும் கிடைத்துள்ளது இதனால் அதிமுக மொவுசு கூடியிருக்குதுன்னு பேச்சாக்கிடக்குது அதனாலேதான் கேட்டேன் கிளைமாக்சல தெரிஞ்சுக்கிடவும் முடியல. சேர்மனுக்கு தெரியாமலிருந்தாலும் தெரிந்துக்கொள்வாருங்ற நோக்கத்துல சொல்றேன். ம்... ம்... போடா இதப்பத்தி பேசிக்கிட்டேயிருந்தா மறுபடியும் மருத்துவமனைக்குதான் போகனும்...

Saturday, January 28, 2012

அதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்

கடந்த் சில வாரங்களாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் திருட்டுகள் இருக்கிறது. கடந்த வாரம் நெசவுத்தெருவில் திருட்டு போன பொருட்களை போலிசார் கண்டுபிடித்து கொடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஈ.சி.ஆர் ரோட்டில் ஹவான் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் கே.ஆர். நகைக்கடையில் சுமார் 25 லட்சம் மதிப்புமிக்க தங்கமும், வெள்ளியும் நூதனமுறையில் திருட்டு போனது. இந்த திருட்டை கண்டுபிடிப்பதற்காக கைரேகை நிபுணர்களும், காவல்துறையின் மோப்ப நாய் வரவழைக்ப்பட்டு திருடர்களை பிடிப்பதற்காக போலிஸ் வலைவிரித்துதேடுகிறது. தொடரும் திருட்டுக்களை தவிர்க்க மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோளும் கோரப்படுகிறது.






















உங்கள் வீட்டின் அருகே சம்மதமில்லாத புதிய நபர்களின் நோட்டம் அதிகமாயிருந்தால் உங்கள் முஹல்லா அல்லது நண்பருக்கு தகவல் கொடுத்து அவர்களைப் பற்றி முழுவிபரம் தெரிந்துக்கொள்ளுங்கள்
வீட்டின் அருகே சந்தேகம்படியாக வாகனங்கள் நிறுத்தியிருந்தாலோ, வாகனங்கள் உங்கள் ஏரியாவையே வலம் வந்துக்கொண்டிருந்தாலோ தகவல் உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உடன் விசாரனை செய்யுங்கள்.

உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் உங்கள் அண்டைவீட்டாரகள் அல்லது உறவினர்களின் வீட்டை ஒரு நோட்டமிடுங்கள் உடன் தகவல் வழங்குங்கள்.

சம்மந்தமில்லாமல் வரும் தொலைபேசி, அலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவேண்டாம்.

திருட்டுகளை ஒழிக்க காவல்துறைக்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இருட்டாய் தெரியும் வீதியில் வெளிச்சம் கொடுங்கள் உங்கள் வீட்டு வாசல் விளக்குகளை எரியவிடுங்கள்.

இமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் முழுமையான காணொளி














புதுப்பள்ளிவாசல் நிர்வாகிகளின் வேண்டுகோள் !




















Thursday, January 26, 2012

இமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக துவங்கிய அறிவியல் கண்காட்சி











இமாம் ஷாஃபி குடியரசுதின நிகழ்ச்சியில் பேர.பரக்கத் மற்றும் S.H.அஸ்லம் அவர்களின் உரையின் காணொளி!




இமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற குடியரசுதின நிகழ்ச்சி...

இமாம் ஷாஃபி பள்ளியில் 63 ஆவது குடியரசுதின விழா இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பாக துவங்கியது விழாவில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூராட்சி தலைவர் ஜனாப் S.H அஸ்லம் மற்றும் கனரா வங்கி மேலாளர் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார் பேர.பரக்கத் மற்றும் S.H அஸ்லம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் திரளாக மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






















Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.