அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, January 9, 2012

நன்றி உரித்தாகட்டும் !

எங்களது அருமை சகோதரர் மௌலான முஹைதீன் அவர்களின் இறப்பு மிக பெரிய இழப்பு என்றால் அது மிகையல்ல. எங்களை குறிப்பாக மூத்த சகோதரர்கள் என்ற போதிலும் மார்க்க அடிப்படையின் கீழ் எடுத்துரைக்க வேண்டிய (ஹக்கை) உபதேசங்களை சற்றும் சளைக்காமல் எடுத்ரைப்பவர். அன்னாரின் நற்குணங்களை நாங்கள்,குடுமபத்தார் அறிந்ததை விட மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர்கள் அறிந்து வைத்துள்ளதும் , அவரின் ஜனாஸா தொழுகைக்கும் , நல்லடகதிற்க்கும் ஆயிரகனக்கனோர் வந்து கலந்து கொண்டு அன்னாரின் மக்பிரதிர்க்காக துவா செய்ததும் , அதிரை வலை தல மூலமாகவும் , தொலைபேசி மூலமாகவும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த விதம் எங்கள் நெஞ்சங்களை நெகிழ வைத்துவிட்டது ." மனிதனக்கு நன்றி செலுத்தாதோர் இறைவனுக்கு செலுதாதவான்" என்ற , நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அடிபடையின் கீழ் , உங்கள் யாவருக்கும் , எங்கள் மனமார்ந்த நன்றியினை உரிதாகிகின்றோம்.

M.S ஜமாலுதீன்.
M.S தாஜுதீன்.
M.S சிஹபுதீன்.
M.S சைபுதீன்.
M.S நிஜாமுதீன்.
(9840078678)

4 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இஸ்லாத்தின் அற்புதமான வழிகாட்டுதலின் அடிப்படையில் மிகச்சிறப்பான முறையில் எந்தவித அனாச்சாரங்கள் இல்லாமல் அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த வழிமுறைப்படி அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யும்போது மற்ற சமுதாய மக்கள் வியப்பில் ஆள்கிறார்கள்....

சமீபத்தில் மரணித்த புரசைவாக்க இமாம் நிஜாமுதீன் மன்பஈ அவர்களின் நல்லடக்கத்தின் போது காவலுக்காக வந்திருந்த காவலர்கள் இங்கே என்ன விசேசம் என்று கேட்டதற்கு எங்கள் மரியாதைக்குரிய நபர் ஒருவர் இறந்து விட்டார்.... அவர்களின் இறுதி காரியங்களுக்காக தான் இந்த கூட்டம் என்று சொன்ன போது.....

அதற்க்கு அந்த காவலர்.... என்ன சார்.....? ஒரு சாராய வாடை இல்லை..... அசம்பாவிதங்கள் இல்லை.... ஒப்பாரிகள் இல்லை...... இப்படி ஒரு அற்புதமான முறையில் துக்கம் அனசருக்கிரீர்கலே.....என்று கூறி வியப்பில் ஆழ்ந்ததை இங்கே நினைவு படுத்த விரும்பினேன்..... பதிந்தேன்.....

Abdurrahman said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி மதியழகன் அவர்களே, இஸ்லாத்தின்பால் உங்கள் பார்வை மிக ஆழமாக உள்ளது, ஏக இறைவன் உங்களுக்கு நேர்வழியை நல்கிட வேண்டுகிறேன், நிற்க!
பொதுவாக ஒரு பழமொழி உண்டு " ISLAM is BEST, MUSLIMS are WORST, என்று.,, ஆனால் இதையும் பொய்யாக்கும் வகையில் சில பெரியார்கள் இவ்வுலகில் வாழ்ந்தும் பிரிந்தும் இருக்கிறார்கள், சகோ. முகைதீன் ஹாஜி போன்றவர்கள் இவ்வுலகில் இருக்கும் வரை உலகம் உயிர் இருக்கும், இறைவனின் அச்சம் அகழ அகழ உலகமும் அழியும் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது..

Ashraf S/O Siddique said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அவர்கள் மக்பிரதிலும் வெற்றி பெற அல்லாஹு போதுமானவன்

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வசதியான குடும்பத்தில் பிறந்து எளிமையான வாழ்க்கை நடத்தியவர்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.