அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Sunday, January 22, 2012

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

விண்ணப்பம் எப்போது?

ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.

சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்


ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை அந்தந்த மாநில ஹஜ் கமிட்டி மூலமாகவும், அந்தந்த ஹஜ் கமிட்டி தலைவர்கள் மூலமாகவும் அறிவிப்புச் செய்துள்ளார்கள். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.

தமிழக கோட்டா அதிகரிப்பு

தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் மிச்சமாகியது.

சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.

நடவடிக்கை உறுதி


இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் இப்பொழுதே செய்துக்கொள்ளுங்கள். சென்ற வருடம் போனவர்கள் இனி ஐந்து வருடம் கழித்துத்தான் போக முடியும் வருடா வருடம் சென்றவர்கள் இனி செல்ல முடியாது.

4 பின்னூட்டங்கள்:

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

/*யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும்*/

எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப் படவேண்டும் என்பது நியாமான எண்ணம் தான். ஆனால், இந்த கட்டுப்பாடு மார்க்கத்திற்கு எதிரானதோ எனத் தோன்றுகிறது. ஒருத்தர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம் என மார்க்கத்தில் அனுமதி இருக்கும்போது அதை யார் சட்டம் போட்டு தடுப்பதும் தவறானது என்பது என் கருத்து. ஹஜ்-க்கு தேர்வு செய்வதில் புதிய விண்ணப்பங்களுக்கு வேண்டுமானால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப் படலாம். ஆனால், மீண்டும் மீண்டும் செல்ல விண்ணப்பிப்பவர்களை சட்டம் போட்டு தடுப்பது தவறானது ஆகும் என்பது என் எண்ணம். சகோதரர்களே.. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

வசதி படைத்த 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனியார் ஹஜ்ஜு சர்வேஸ் மூலம் சென்றால் இன்னும் கூடுதல் வசதியாக இருக்கும்.

முஸ்லிம்களுக்கு நியாயமாகவோ அல்லது அநியாயமாகவோ ஹஜ்ஜு கமிட்டி மூலம் பெறக்கூடிய "மானியம்" நமக்கு தேவை இல்லை என்று நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டு பத்திரிக்கைக்கு பேட்டிக் கொடுப்பது கொஞ்சம் ஓவர். ஹஜ்ஜுக்கு பயணம் மேற்கொள்ள கால் நூற்றாண்டுக்கு மேலாக பணம் சேர்த்து வரும் ஏழை இறை நேசர்களை நாம் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.

பிஜேபி காரர்கள் சொல்லி சொல்லி ஓய்ந்து போய் விட்டார்கள். இவர்கள் ஏன் மறுபடியும்....... (ஒரு வேலை டெல்லியின் கவனத்தை இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதற்க்காக வேண்டியா..?)

ஹஜ்ஜு முடித்து வர இருக்கும் இன்று பிறந்த குழந்தைகளே... நீங்கள் விரையுங்கள் ஹஜ்ஜு கமிட்டி மூலம் ஹஜ்ஜு செய்வதற்கு.

வாழ்த்துக்கள் ஹாஜிமார்களே.....

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

ஒரு தடவை ஹஜ்ஜுக்கு செல்வது ஐந்தில் ஒரு கடமை என்றாலும், அதை மறுபடியும் செய்வதற்கு சவூதி அரசாங்கம் தடை விதித்திருப்பது வேறு ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது ஹஜ்ஜில் இருக்கும் ஹாஜிகள் கூட்டங்களின் நெருசலை கட்டுபடுத்துவதர்காக வேண்டி இருக்கலாம்.

"ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்களிடம் .... ஹஜ்ஜுக்கு செல்லாதவர்களுக்கு கொஞ்சம் வழி விடுங்களேன்" என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்.

1 . ஹஜ்ஜில் (மினாவில்) ஒவ்வொரு முறையும் கழிப்பிடத்திற்கு செல்லவும், ஒழு செய்யவும் குறைந்தது 40 நிமிடங்களாவது ஆகும் என்கிறார்கள்.

2 . ஹஜ்ஜில் (மினாவில்) ஒவ்வொரு இடத்திற்கும் வாகனத்தில் 4 அல்லது 5 கிலோ மீட்டர் இடம் பெயர்வதற்கு குறைந்தது நான்கு மணிநேரம் ஆகும் என்கிறார்கள்.

கண்ணியமிக்க ஹாஜிமார்களிடம் விசாரித்து பாருங்கள். விபரம் புரியும் என நம்புகிறோம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அல்ஹம்துலில்லாஹ் நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.