அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 31, 2011

கூகுள் மொபைல் மணிபர்ஸ்

கூகுள் மொபைல் மணிபர்ஸ்


சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது.
முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும்.
இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.
கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம்.
பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.
இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும்.
கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே. 

வாக்காளரின் வேண்டுகோள்!


அஸ்ஸலாமு அழைக்கும் !

அதிரை நகர பேருராட்சித் தலைவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நமதூருக்கு மிகவும் இன்றியமையாதது சுகாதரமே என்னும் குறிகோளுடன் நீங்கள் பதவி ஏற்றவுடன் எங்களுக்கெல்லாம் அழகான பாடம் நடத்தினிர்கள். உங்களுடைய பணிசிறக்க வாழ்த்துகளுடனும் ஒரு சிறிய கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.

நமதூரில் உள்ள அணைத்து வார்டுகளுக்கும் உங்களின் நேரடி மேற்பார்வையில் இரண்டு தெருக்களுக்கு ஒரு பொதுவான இடத்தில புகார் பெட்டி அமைப்பதுடன் அப்புகார் அளித்தவரின் முழு விவரத்தையும் சேகரித்து புகார் மனுவின் நிலைப்பாட்டை அவருக்கு தெரியப்படுத்தவும். இப்புகரை பதிவு செய்து சம்பந்தபட்ட வார்டு உறுப்பினரை அணுகி அப்புகார்மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

வக்கீல் அ.அப்துல் முனாப் BA .,BL அவர்களின் நன்றி அறிவிப்பு


அன்புடையீர், 
       அஸ்ஸலாமு அலைக்கும்..

  நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு 1142 வாக்குகள் இறைவனின் நாட்டத்தால் பெற்றேன்.தேர்தல் விதிகளுக்குப்புறம்பான பணபுயல் இடைவிடாது வீசிய நிலையிலும் அதில் சற்றும் நிலைகுலையாத நல்ல உள்ளங்கள் அளித்த விலைமதிக்க முடியாத வாக்குகள் தன அது.

 என்னுடைய மனம் திறந்து பேசுகிறேன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் என்னுடைய உறுதிமொழியை நம்பி,என்மேல் வைத்துள்ள உண்மையான அன்பினாலும்,பாசத்தினாலும்,மேலும்சிலர் உங்களுக்கு அள்ளிகொடுக்க முன்வந்தும் அதை துச்சமென கருதிஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற சொல்லை தன் நெஞ்சத்தில் வைத்து கடமை தவறாத கண்ணியவான் களாகிய நீங்கள் எனக்கு அளித்த வாக்கிற்கு என் ஆள் மனதிலிருந்து பல நூறு நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

வீடு,வீடாக சென்று இரவு,பகல் பாராமல் எங்களுடைய தகுதி எதிர்கால செயல்பாடுகள் இவைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாக்கு சேகரிப்பு என்ற உன்னதமான பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது,பெரும்பாலான மக்கள் மிக உறுதியாக எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கு என்று சொன்னதை நம்பி நாங்கள் வெற்றி களிப்பில் இருந்தோம்.அனால் எதிர்கட்சியின் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு ஆதரவுகளா! இவ்வளவு ஓட்டுகளா! என்று ஆச்சரியப்பட்டு அதற்க்கு வைக்கிறேன் பாரு வேட்டு என்று இரவென்றும் பாராமல்,நடுநிசி என்று பாராமல் கதவுகளை தட்டி வாரி இறைத்த நிகழ்ச்சி உண்மையிலேயே மனவேதனையை உண்டாக்கியது.

மனவேதனை எதற்காக? வாக்குகள் மாறிப்போகிறது என்பதற்காகவா? இல்லை!இல்லை!     
  • இலஞ்ச அச்சம்,இலஞ்ச கூட்சம் இவைகளை மரத்து அவைகளை நடைமுறை சர்வசாதாரணம் என்ற உணர்வில் இந்த மனிதம் முழுவதும் மாறி பாழாகிவிடக்கூடாது என்பதற்காக!
  • இலஞ்சம் சுவர்க்கத்திற்கு தடை என்ற இறை கோட்பாட்டால் அற்ப பதவிக்காக ஐவேளை தொழுகை,ஷரியத் இவைகளுடன் ஒழுகி வாழும் மனிதனுக்கு நாளைய நிரந்தர வாழ்வின் சொர்க்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக!
சிந்தித்து பார்க்கட்டும்.ஊருக்கு ஒரு மாற்றம் தேவை என்று கருதியவர்களுக்கு அது மாற்றமா அல்லது ஏமாற்றமா என்பதை யார் அறிவார்?
பணமா? பாசமா? பணம் முந்தியது! பாசம் பிந்தியது! பண மழையா? பாச மழையா?

பண மழை பெய்தது! பாசமழை பொய்த்தது!
எனவே எதிர் வரும் காலங்களிலாவது பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்குகோடிகளை கொடுத்து தான் அதை பெற வேண்டும் என்ற அவல நிலையை மாற்றி அடிப்படை செலவுகளை மட்டும் செய்தும்,உள்ளாட்சி மன்ற தேர்தல் ஊர் சம்பந்தப்பட்டதால் ஜநாயக படுகொலையான,மார்க்கத்திற்கு உட்படாத பிரித்தலும் தெரு உணர்வு ஒழித்து ஊர் உணர்வு மிகைக்க யாரேனும் ஒரு நல்லவர்,வல்லவர் ஹராம்,ஹலால் பேணக்கூடிய எச்சூழலிலும் மனித நல் வாழ்வு சட்ட மீறாது நடப்பவர்,எவரோ அவர் அந்த இடத்தை பெறுவதற்கு நாம் இப்பொழுது முழு முயற்சி செய்வோம்.சிந்திப்போம் அதன் படி செயல் படுவோம்.முடிந்தால் எச்செலவுகளும் இல்லாத UN OPPOSED என்கிற எதிர்ப்பில்லா ஒரு மனதான தேர்வை உண்டாக்குவோம் .
மேலே சொன்ன 1142 வாக்குகள் பெற்று தந்த கண்ணியமிக்க வாக்காளர்களுக்கு மீண்டும்,மீண்டும் நன்றி! தேர்தல் அமைதியாக நடத்த ஒத்துழைத்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி.
வெற்றி என்பது இறைவன் பொருத்தத்துடன் கூடிய வெற்றியாக என்றென்றும் உண்டாகட்டுமாக. ஆமீன்.
உண்மை வெல்லும்! அமைதி வெல்லும்!! விவேகம் வெல்லும்!!!
             
உங்கள் உண்மையுள்ள,
  அ.அப்துல் முனாப் BA .,BL .,
 வழக்கறிஞர்,நோடறி பப்ளிக்,உறுதிமொழி ஆணையர் (Oath Commissioner) 

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

உங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது எப்படி?

அண்மையில் Mobile Number Portability எனும் வசதி TRAI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
STEP 1:

முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
STEP 2:


இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
STEP 3:

தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
STEP 4:

அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
STEP 5:

தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.

STEP 6:

அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
STEP 7:

உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
STEP 8:

அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
STEP 9:

இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்

Sunday, October 30, 2011

மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

 

 மொபைலிலிருந்து இணையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு

கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.

மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.


தேவை:
            1.உங்கள் செல்பேசியில் 3G  அதிவேக இணைய இணைப்பு.

            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
         
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.தளத்திற்க்கு செல்ல சுட்டி


           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்


வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி

 

மொபைல் வைத்து இடத்தை கண்டுபிடிக்கலாம்

உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்

தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த
வகையில் இப்போது நம் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை
வைத்து ஆன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்
இதைப்பற்றி தான் இந்த பதிவு. மொபைல் டிரேஸ் அல்லது போன்
டிரேஸ் என்று சைபர்கிரைம்-ல் உள்ளவர்கள் கண்டுபிடிக்கும் அதே
தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும்
ஒரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு
போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த
இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது
போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International)
தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும் அதுமட்டுமின்றி
மேப்-ம் சேர்த்தே கொடுக்கின்றனர்.

இணையதள முகவரி: www.tp2location.com

Saturday, October 29, 2011

துணைத் தலைவர் தேர்தல் -நடந்தது என்ன !?


இதுவரை என்றுமே இல்லாத அளவுக்கு, கடந்த ஒரு வாரமாக அதிரையில் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்ட பேரூராட்சித் துணைத்தலைவருக்கான தேர்தல் ஒரு வழியாக இன்று (29-10-2011) நடந்து முடிந்து, அதிமுகவின் அதிரை நகரச் செயலாளர் பிச்சை துனைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவருக்கு ஆதரவு 12, எதிர்ப்பு 10.

அதிமுகவிற்கு என்று போதுமான உறுப்பினர்கள் பலம் இல்லாததால், தொடக்கம் முதல் அவ்வளவாக அக்கரை காட்டாத அதிமுகவினர், தேர்வாகியுள்ள மற்ற சில உறுப்பினர்கள் மற்றும் முக்கிய ஜமாஅத்தார்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே துணைத் தலைவர் பதவியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர்.

எதிர்தரப்பினர் குதிரை பேரத்தில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருதரப்புக்கும் இருந்தாலும், ஆளும் கட்சி என்ற ஒரு பெரும் பலத்தை வைத்தே தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக தரப்பு.

அதிமுகவின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைத்து அவர்களது வேலையை இலகுவாக்கியதில் பெரும் பங்கு அதிரை மமகவினருக்கு உண்டு என்பதையும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர் அதிமுகவினர். இன்னும் சொல்லப்போனால், பிச்சை வெற்றிபெற்றதில் அதிமுகவை விட மமகவினரே அதிக முயற்சி எடுத்ததாகவும் தகவல்.

முதலில், திமுக தரப்பில், கரையூர் தெருவைச் சேர்ந்த பாஞ்சாலன், போட்டியிடுவார் என்று செய்தி வெளியானது. ஆனால், என்ன காரணத்தினாலே அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள பின்னர், அதிரை நகர திமுகவின் துணைச் செயலாளர் அப்துல் காதர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் தொடக்கம் முதலே நகரச் செயலாளர் பிச்சையே துனைத்தலைவருக்கான போட்டியில் நிறுத்தப்பட்டார்.

சில உறுப்பினர்கள் விலைபோய் விடுவார்களோ என்ற அச்சத்தில் இரு தரப்பிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, உறுப்பினர்களை பாதுகாக்கும் வழிவகைகளையும் கையாண்டதால், பல உறுபப்பினர்களை இரண்டு நாட்களாக ஊரில் காணமுடியவில்லை. இறுதியாக அனைத்து உறுப்பினர்களும் இன்று காலை பேரூராட்சி அலுவலகம் வந்து சேர்ந்தனர்.

காலை முதலே பேரூராட்சி அலுவலகம் என்றுமில்லாத வகையில் அதிக பரபரப்புடனும் - எதிர்பார்ப்புடனும் காணப்பட்டது. யார் வெற்றி பெறுவார் என்று பலரின் தொலைபேசிகளும் அலர, பலருக்கும் படபடக்க, இறுதியில் அதிமுவின் வேட்பாளர் பிச்சை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கரகோஷம் விண்னைப் பிளந்தது. சிலர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாற்று மதத்தவர் என்ற பேதம் பார்க்காமல், ஏதோ தாங்களே வெற்றி பெற்றது போல் அனைவரின் முகத்திலும் ஆனந்தத்தை காண முடிந்தது. ஊருக்கு சேவை செய்பவர்களை இந்த ஊர் என்றுமே நன்றி மறவாது என்பதை பறைசாற்றும் முகமாக, பிச்சை அவர்களின் வெற்றி அமைந்தது என்றே சொல்லவேண்டும். அது மட்டுமல்ல, பெரும்பான்மை உறுப்பினர்கள் முஸ்லீம்கள் என்றாலும், துனைத்தலைவர் பதவியை ஒரு மாற்று மதத்தவருக்கு விட்டுக்கொடுத்ததன் மூலம், அதிரை நகரம் தொடர்ந்து மதநல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருன்றது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

சகோ. பிச்சை அவர்களின் வெற்றி அதிரை மக்களை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். காரணம், தொடக்க காலம் முதல், அனைத்து மதத்தினரின் நன்மதிப்பை பெற்ற ஒருவர், குறிப்பாக பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்களுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் செயல்படும் ஒருவர் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிச்சையின் வெற்றியின் மூலம் நிறைவேறியுள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர். இவரின் வெற்றியை திமுகவைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தது தான் ஹைலைட்.

நடந்து முடிந்த துணைத்தலைவர் தேர்தலால், ஊரின் மற்ற ஜமாஅத்களைவிட அதிக பாதிப்புக்குள்ளானது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமே. சங்கம் சார்பில் வெற்றிபெற்ற இரு வேட்பாளர்களும் துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் சங்க நிர்வாகிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். காரணம், இந்த சங்கத்திற்கு உட்பட்டவரான நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்கள் திமுகவிற்கே ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, சங்க நிர்வாகம் அதற்கு இசைந்து போகலாமா என்று முடிவெடுக்க இருந்த நிலையில், 19வது வார்டில் சங்கம் சார்பில் வெற்றி பெற்ற சௌதா அஹமது ஹாஜா அவர்கள், இதற்கு ஆட்சோபனைத் தெரிவித்து இருக்கின்றார். 'சங்கத்திற்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி - பல சங்க வேட்பாளர்கள் தோற்க காரணமாக இருந்த திமுகவை எப்படி ஆதரிக்கமுடியும்? என்றும் சங்கத்திற்கு எதிராக காவல் துறையிடம் புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரிக்க முன்வருவது நியாயமாகுமா? என்பது போன்ற நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், இறுதியாக உறுப்பினர்கள் முடிவுக்கே விடுவது என்று நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இதனால், திமுக தரப்பிரனர் சங்கத்திற்கு எதிராக கோபமடைந்தனராம். இறுதியாக ஒரு உறுப்பினர் திமுகவிற்கும் மற்றொரு உறுப்பினர் அதிமுகவிற்கும் வாக்களித்துள்ளனர்.

இது போல், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களும், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஆக மூவரும் அ.தி.மு.க.வெற்றிக்கு முக்கிய கரணமாக இருந்திருக்கின்றனர்.


வரலாற்றில் இதுவரை இல்லாமல் முதன் முறையாத அதிரையில் அதிமுக துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணைத் தலைவர் தேர்தல் நடந்தது முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் அஸ்லம் அவர்கள், இந்த பதவிக்கு புதியவர் என்பதால், முன்னனுபவமுள்ள துனைத்தலைவரின் ஒத்துழைப்போடு சீரிய முறையில் வழி நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். அதற்கேற்ப துணைத் தலைவரும் சேர்மன் அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைத்து கொடுத்து அனைத்து நலத்திட்டங்களும் ஊருக்கு கிடைக்க முழு முயற்சி செய்யவேண்டும்.

'ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பேதம் பாராமல் இருவரும் சேர்ந்து செயல்பட்டு ஊருக்கு நல்லது செய்தால் சரி தான்' என்று பொதுமக்கள் பேசுவதும் நமது காதுகளுக்கு விழத்தான் செய்கின்றது.

மத நல்லிணக்கம் மற்றும் ஊர் முன்னேற்றத்திற்க்கு கிடைத்த வெற்றி!

நம் அதிரை சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...
நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றிஅல்ஹம்துலில்லாஹ்!
இதற்காக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஊரின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு பெருமுயற்சி எடுத்தவர்களின் நோக்கம் பின் வருமாறு:
1. தலைவரும், துணை தலைவரும் ஒரே கட்சியை அதுவும் மாநிலத்தை ஆளாத ஒரு கட்சியின் வேட்பாளராக இருந்தால் திட்டங்கள் ஊருக்கு வந்தடைவது மிகச்சிரமமாக இருக்கும்.
2. மேற்சொன்னபடி, இது சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு சேவை செய்வதற்க்கு மறைமுக உதவியாக இருக்கும், இப்பொழுது இது அவருக்கு கசப்பாக இருக்கலாம், ஆனால் காலம் கனிய கனிய இன்ஷா அல்லாஹ் அதை அவரே உணர்வார்.
3. மத நல்லிணக்கம் பேணப்படவேண்டுமென்று சில சங்கங்கள் தேர்தலுக்கு முன்பு முடிவு செய்தததை செயல்படுத்துவது..

அதிரை பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலுக்கு முன்பு தமுமுக சகோதரர்கள், துபை வாழ் ஜித்தா சாஹுல் ஹமீத் காக்கா, சகோ. M.S. சஹாபுதீன் காக்கா, மேலத்தெரு சங்கம், கடற்கரை தெரு ஹாஜா (முஹல்லாஹ் தலைவர்) மற்றும் பலரால் கீழ்கண்ட நிபந்தனைகள் திரு பிச்சை அவர்களுக்கு விதிக்கப்பட்டு வாய்மொழி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

1. ஒரு சாரார் நிலை எடுக்கக்கூடாது.

2. கட்சி சார்பற்று அனைவரையும் அரவனைத்து செல்ல வேண்டும்.

3. ஊருக்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவதில் சேர்மன் சகோ அஸ்லத்தோடு இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும்.

4. ஒரு வருட செயல்பட்டிற்க்கு பின் துணை தலைவரின் செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்படும், மேற்கூறப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மாறாக செயல்பாடுகள் இருக்கும் பட்சத்தில், தகுந்த ஆதாரங்களோடு இருக்குமாயின், அவரை மறுபரீசலனை செய்யப்படும்.

தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் வேண்டுகோள்..

எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)

நமதூரில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 25.10.2011 அன்று புதிதாக பதவியேற்றிருக்கும் பேரூராட்சி தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்களுக்கும் மற்றும் 21 வார்டுகளின் கவுன்சிலர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் சார்பாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

ஒற்றுமை

நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியில் ஒருவருக்கொருவர் குற்றம் காணாமல் ஒற்றுமையுடன் ஊரின் நலனில் மட்டும் அக்கறை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்து செயல்பட்டு விட்டுகொடுக்கும் மனப்பான்மையை இனிமேலாவது அதிகரிக்கச் செய்து நமது ஊரின் நலனுக்காக மட்டும் அனைவரும் சேர்ந்து செயலாற்றிட வேண்டுகிறோம். ஊரின் நன்மை மட்டும் கருதி அதிக அக்கறை செலுத்த வேண்டிக்கொள்கிறோம்.

மருத்துவம்

நமது அரசு மருத்துவமனைக்கு நிரந்தர அறுவை சிகிச்சை நிபுணர்இ மகப்பேறு மருத்துவர், ஜெனரல் மருத்துவர், சேவை திறன்மிக்க மருத்துவர்கள்இ நர்சுகள் ஆம்புலன்ஸ் வசதி, சுத்தமான சுகாதாரமான மருத்துவமனை, இவை நமது ஊருக்கு உடனடி தேவையாக உள்ளது இதற்கு பேரூராட்சிதலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள்இ பேரூராட்சி அரசு நிர்வாகிகள் ஒன்று இணைந்து செயல்பட்டு நமது ஊருக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகுமாறு கேட்டு கொள்கிறோம்.

சாலை வசதி

நமது ஊருக்கு மிக பெரிய தலைவலியாக இருப்பது ரோடு வசதி ரோடுகளை உடனே சரி செய்வதுஇ ரோடு இல்லாத இடங்களுக்கு உடன் ரோடு வசதி செய்து கொடுப்பது இனியாவது ரோடு ஒப்பந்தக்காரர்களை சரியான முறையில் தேர்ந்து எடுத்து கண்டிப்புடனும்இ காலவரைக்குள் செய்து முடிக்கும் ஒப்பந்த காரர்களை தேர்ந் தெடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தூய்மையான குடிநீர்

நமது ஊரில் பெரும் பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் சில இடங்களில் குடிநீர் குழாயினுள் கழிவு நீர் கலந்து வருவது தாங்களும் நன்கு அறிவீர்கள் அவைகளை கண்டறிந்து அதை சரி செய்து மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

சாலைவிளக்கு

நமது ஊரின் எல்லா பகுதிகளுக்கும் சாலைவிளக்கு முறையாக அமைத்து கொடுக்க வேண்டும் எத்தனையோ தெருக்களில் சாலைவிளக்குகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு உள்ளார்கள் தெரு பாகுபாடு இல்லாமல் மத வேறுபாடுகள் இல்லாமல் சாலைவிளக்கு விசயத்தில் மிக அக்கறை செலுத்த வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

சுகாதாரம்

இந்த விசயத்தில் தான் அதிரை மிகவும் பின் தங்கியுள்ளது. இந்த விசயத்தில் நமதூர் பேரூராட்சி தலைவர் அவர்கள் மிகவும் அக்கறையாக உள்ளார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும் குப்பைஇ பாதளசாக்கடை இவை இரண்டிலும் தலைவர் மட்டும் அல்ல 21வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குறிப்பாக பெண்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது முதலில் சுகாதரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்படவேண்டுமென்றும் கேட்டு கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு

மற்ற ஊர்களை விட நம் ஊரில் அறுக்கப்படும் ஆடுகள் முறையாக பேரூராட்சியின் முத்திரையுடன் அறுக்கபட்டு வந்தது மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அதிரைக்கு சென்றால் நல்ல கறி கிடைக்கும் பெண் ஆடுகள் அறுக்கமாட்டார்கள் என்று நம்பி வாங்குவார்கள் ஆனால் இப்போது அது போன்று எதுவும் நடப்பதாக எங்களுக்கு தெரியவில்லை பெண் ஆடுகளையும் அறுக்க செய்கிறார்கள் அது மட்டும் அல்ல சீக்கு கொண்ட ஆடுகளையும் வாங்கி வரும் போது செத்து போகும் ஆடுகளையும் உடனடியாக அறுத்து அதையும் விற்பனை செய்து வருவதாக பரவலாக செய்திகள் வந்து கொண்டு உள்ளது. எனவே இந்த விசயத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சி தாங்களின் சேவையை சரியாக செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் அதிரையில் உள்ள அனைத்து கறி கடைகளிலும் பேரூராட்சியின் முத்திரை இல்லாத ஆடுகளை வாங்கவோ விற்கவோ கூடாது இதில் அதிக கவனம் செலுத்தி பொது மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் தனது இஸ்ட்டத்திற்க்கு கறியின் விலையை கூட்டுவதும் குறைப்பதுமாக உள்ளனர் நமக்கு அருகில் இருக்கும் மதுக்கூர் இ பட்டுக்கோட்டைஇ முத்துப்பேட்டை போன்ற ஊர்களை நாம் பார்க்கும் போது அதிரையில் விலை கடுமைதான் இந்த விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

ஆட்டோ எந்த ஊரிலும் இல்லாத ஆட்டோ கட்டணம் நம்ம ஊரில் மட்டும் கடுமையாக உள்ளது இதனால் பொதுமக்கள் அனைவரும் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர் நமதூரில் இயங்கும் ஆட்டோக்கள் அனைத்திற்க்கும் மீட்டர்கள் பொருத்த வேண்டும் அல்லது ஒரு முறையான அதாவது யாருக்கும் பாதகம் இல்லாத வகையில் ஒரு கட்டணத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் இந்த விசயத்திலும் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பத்திர பதிவு அலுவலகம் நமதூரில் செயல்பட்டுக் கொன்ரிருக்கும் பத்திர பதிவு அலுவலகம் நமதூரிலிருந்து மாற்றி தாமரங்கோட்டைக்கு கொண்டு செல்ல போவதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்திகள் வந்த வண்ணமாக உள்ளதுஏன் நமதூரை விட்டு தாமரங்கோட்டைக்கு போகவேண்டும்? 2ஆம் நம்பர் ஸ்கூலுக்கும் ஹாஜாமுகைதீன் டாக்டர் அவர்களின் மருத்துவமனைக்கு பின்புறத்தில் இருக்கும் குளம் தற்பொழுது நல்ல ஒரு மைதானமாக காட்சி அளிக்கிறது எனவே அந்த இடத்தில் நமதூர் பத்திர பதிவு அலுவலகம் கட்டினால் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் பொதுவான இடமும் கூட வாகனங்கள் நிறுத்துவதற்கும் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் எனவே பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகள்இ அரசியல் கட்சி தலைவர்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசிடமிருந்து இருந்து கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் பெற்று அந்தந்த வார்டுகளில் முறையாக கொடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரியான ஊராக அதிரையை தாங்கள் அனைவரும் மாற்றி காட்ட வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் இந்த விசயத்தில் பொது மக்களான நாமும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலத்தெருவில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்கில் 500000 லிட்டரும் பட்டுக்கோட்டை ரோட்டில் அமைந்திருக்கும் வாட்டர் டேங்கின் கொள்ளளவு 10,0000 லிட்டர் மொத்ததில் 15,0000 லட்சம் லிட்டர் தண்ணீர் இருந்தும் போதிய அளவில் தண்ணீர் வரதா காரணத்தால் பொது மக்கள் மிக சிரமத்திற்குள்ளாகிறார்கள் எனவே பொது மக்களின் நலனில் அக்கரை எடுத்துக்கொண்டு அதிரைக்கு இரண்டு நேரத்திற்க்கு அதாவது (காலை ரூ மாலை ) ஆகிய இரண்டு நேரங்களிலும் தண்ணீர் சப்ளை செய்யப்பட வேண்டும் எந்த ஊரிலும் இல்லாத தண்ணீர் வரி கட்டணம் ரூபாய் 50 அதிரை வாசிகள் செலுத்திவருகிறாகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் அதே சமயம் தோல்வி கண்ட அனைவரும் நாம் தோல்வி கண்டுவிட்டோம் என்று கருதாமல் தாங்கள் சமூதாயசேவையில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வரவும் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் உங்கள் தொண்டை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வரவும் வெற்றி தோல்வி வீரனுக்கு அழகே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

இப்படிக்கு
தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம்

மத நல்லினக்கதிற்கு ஏற்ற தேர்வு !

  மத நல்லினக்கதிற்கு ஏற்ற தேர்வு !
 
துணை தலைவர் பதவிக்கு  தேர்ந்துடுக்கபட்டுள்ள திரு பிச்சை அ தி மு க வேட்பாளராக முன்னிறுதபட்டார், கடுமையான போட்டிகளுக்கிடையில் மாற்று மத சகோதரர் தேர்ந்து எடுத்தது மத நல்லினத்க்கதிர்க்கு ஏற்ற சிறந்த முடிவு.   கடந்த காலங்களை பின்னோக்கி பார்க்கையில் துணை தலைவர்  பதவிக்கு மாற்று மத வேட்பாலரேயே .தேர்ந்துடுத்து வந்துள்ளோம்                     பேருராச்சி தலைவராக தி மு க வேட்பாளர் வெற்றிபெற்றுக்கும் இந்த சூழ்நிலையில், அ தி மு க வேட்பாளர் துணை தலவராக வெற்றி பெற்றது அரசியல் ரீதியாக அணுகினால் சற்று கருத்து வேற்றுமை தெரியலாம். ஆனால் ஊர்  நலனை முதன்மை படுத்தி தூர நோக்குடன்  பார்த்தால் இது நன்மை பயக்க கூடியதே !
 
காலத்தின் கட்டயாம் என்ற சூழ்நிலை வரும்போது தலைமை பதவிற்க்கு தேர்ந்துடுக்க்பட்டவர்கள் சில விஷயங்களை விட்டு கொடுத்து, மற்றவர்களுடன் இணக்கமாக தன்   பணியை  தொடர்வதே சாலச்சிறந்தது. மத்திய ஆட்சியை பாருங்கள் பலதரப்பட்ட கருத்துகள் நிரம்பிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி  புரிவதை    ஓர் உதாரணமாக எடுத்து செயல்படலாம் !         பஞ்சாயத் நல்ல கட்டமைப்புகளுடன் செயல்பட்டால்தான் நமதூர்க்கு வந்து சேர வேண்டிய நல திட்டங்கள் நம்மை வந்து சேரும்.  நமது பிரதான நோக்கம் நல்ல சுகாதாரம், சாலை விரிவாக்கம் , சமீபத்தில் மத்திய அரசு, அணைத்து பஞ்சாயத் பகுதிகளுக்கும் அதி விரைவு பிராட் பேண்ட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர் , இது போன்ற வசதிகளை ஏற்படுத்த மத்தியில் ஆளும் தி மு க ஆதரவு பெற்ற கட்சியுடனும் , மாநில அளவில் நம் தேவைகளை பெற துணை தலைவராக வந்துள்ள திரு பிச்சை அவர்களையும் அரவணைத்து செம்மையான ஆட்சியை அனுபவிக்க வாக்களித்த வாக்காளர்களர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுருகின்ற்றனர்.
 
அப்துல் ரஜாக்

பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுக பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் தலைவர் பதவிக்கு இன்று (29/10/2011) காலை 10 மணிக்கு அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அப்துல் காதர் அவர்களும் அதிமுக சார்பாக பிச்சை அவர்களும் போட்டியிட்டனர். முன்னதாக கரையூர் தெருவை சேர்ந்த பாஞ்சாலன் என்பர் திமுக சார்பாக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது பின்னர் எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அவர் விலக அப்துல் காதர் அவர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 21 உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவருக்கு ஒரு வாக்கு விகிதம் மொத்த வாக்குகள் 22 ஆகவே பன்னிரண்டு ஓடுக்களை யார் பெறுகின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அவ்வகையில் அ.தி.மு.க.வின் அதிரைச் செயலாளர் பிச்சை அவர்கள் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி துணைத்தலைவர் யார் ? பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் மக்கள்


Friday, October 28, 2011

துணைத் தலைவர் யார் ? - நாளை ஓட்டெடுப்பு !

அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏற்கனவே அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் நாளை துணைத் தலைவர் பதவிக்கு காலை (29-OCT-2011) 10:00 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. திமுக சார்பாக கரையூர் தெருவை சேர்ந்த பாஞ்சாலன் என்பவரும் அதிமுக சார்பாக அதன் அதிரை செயலாளர் பிச்சை அவர்களும் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாளை காலை 12 மணிக்குள் அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் யார் என்று தெரிந்துவிடும்.

இதுவரை மொத்தமாக 21 உறுப்பினர்களில் சேர்த்து சேர்மனுடைய வாக்கும் இணைந்தால் மொத்தம் 22 வாக்குகளில் தலா 11 உறுப்பினர்களின் ஆதரவு இரண்டு கட்சிகளுக்கும்  இருப்பதனால், தேர்தல் முடிவு ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரையில் நடுரோட்டில் படுகொலை !


அதிரையில் இன்று மாலை 3:30 மணியளவில் கரையூர் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது 57 ECR சாலையில்  படுகொலை செய்யப் பட்டிருக்கிறார், முன்னதாக நேற்று நடைபெற்ற சிறு தகராறில் இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேதபரிசோதனை செய்யப்படுவதற்கு அதிரை அரசு பொது மருத்துவமனையில் எடுத்துச் செல்லப்பட்டு பிரேதபரிசோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது . அதிரை காவல்துறை ஆய்வாளர் செங்கமலைக் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Thursday, October 27, 2011

மழை கற்றுத்தரும் பாடம்

மழை கற்றுத்தரும் பாடம் !

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக….
நாம் இந்த பதிவில் எடுத்திருக்கும் தலைப்பு மழை, வெய்யிலில் தெரியும் நிழலின் அருமை அது போன்று வானம் பார்த்த பூமியை கேட்டால் தெரியும் மழையின் அருமை.

சரி முதலில் மழை  எவ்வாறு உருவாகிறது என்று நாம் பாப்போம்.
வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையிலிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று பின்பு மேகங்களை உருவாக்குகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது. அது அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவி ஆகி இப்படி ஒரு சுழற்சியாக நடைபெறும் இந்த நிகழ்வை நீர் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுவர்.
மழை பெய்வதினால் உயிரினங்களுக்கு பலவகையான நன்மைகள் உள்ளன, மழை உயிர் வாழ்வதற்கான ஆதாரம், ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லையெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம். மழை என்பதே இல்லையெனில் அதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று சொல்லதேவை இல்லை அனைவரும் அறிந்ததே உயிரினங்கள் வாழவே முடியாத அளவிற்கு பூமியின் வெப்பம் அதிகமாகிவிடும். ஒரு பக்கம் முழுவதும் வெப்பமாகவும் ஒரு பக்கம் முழுவதும் கடல் நீராகவும் இருக்கும், அதாவது தற்போது இருக்கும் படியான சமநிலை படுத்தப்பட்ட பூமி இருக்கவே இருக்காது.
      உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நீரில் மூழ்கி அழியவும் கூடாது ஆனால் அவை அனைத்திற்கும் இன்றி அமையாத தேவைக்காக நீரும் தரப்படவேண்டும் என்ற நிலையில் இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம். இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.
இது உண்மையில் மாபெரும் சக்தியின் உன்னதமான அருட்கொடை என்பதை சந்தேகமின்றி எனறு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலே செல்வோம்.
கடவுள் மறுப்பாளர்கள் கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்கவேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி பின் ஒவ்வொரு நீர்துளியாக அதிகமாகி கடல் உருவாகி இருக்க பிறகு பூமியிலுள்ள வெப்பத்தின் காரணமாக அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.
இவை அனைத்தும் தானாக உருவாகி இருக்குமானால் எப்படி இருக்கும் தெரியுமா? மேகம் எங்கு நீர் எடுக்கிறதோ அங்கு மட்டும் தான் மழை உருவாக வேண்டும், கடல், ஏரி, ஆறு போன்று நீர் உள்ள இடங்களிலிருந்து மேகம் நீர் எடுக்கிறது, உதாரணமாக கடல் நீர் மேகமாக மாருமானால் மழை கடலில் மட்டும் தான் பெய்யவேண்டும், அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல்,எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது, நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது, இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார், இந்த அமைப்பு எதற்காக நடக்கிறது அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக.
      மேகத்தின் வேகம் என்பது இந்த பூமி சுழற்சியின் வேகத்தைவிட அதிகம் என்று கூட கூறலாம், ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலிமண்டலதையும் இழுத்துக்கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலிமண்டலத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள், இதை இங்கு நாம் குருப்பிடுவதற்கான காரணம் பூமிதான் சுற்றுகிறதே மேகம் எதற்காக நகர வேண்டும், அப்படி நகராமல் ஒரே இடத்தில் இருந்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே மழை கிடைக்கும், அப்படியெனில் உயிரினங்கள் இருக்குமா, நாம் தற்போது இருப்பது போன்ற எந்த குறையும் இல்லாமல் வாழ முடியுமா? இந்த தத்துவத்தை பார்க்கும், சிந்திக்கும் ஒரு மனிதன் என்ன உணருவான் இப்பூமியில் உயிரினங்களை வாழவைக்க மறைமுகமாகவோ அல்லது நேராகவோ ஒரு சக்தி உதவுகிறது என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகரவேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும், இது போன்ற நாம் உணரவே முடியாத இவ்வுலகையும் இந்த தத்துவங்களையும் செயல்படுத்தி கொண்டிருக்கும் அந்த மாபெரும் சக்தியை அரைகுறையாக கூட உணரமட்டோம்.
இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை பெய்ய மேகம் உருவானால் மட்டுமல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம். உயிர்களை வாழவைக்க உதவுவது நுண்ணுயிரிகள், பூமியில் நீர் இல்லையெனில் உயிரினங்கள் இல்லை, நீர் இல்லையெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லையெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லையெனில் மழை இல்லை. சுருங்க சொல்வதென்றால் ஒன்றில்லையேல் ஒன்றில்லை என்ற மிகவும் சிக்கலான ஆயிரக்கணக்கான அமைப்பை வைத்து கொண்டு இதுதான் முதலில் வந்தது அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும், குளோரோ ப்லோரோ கார்பன் அதிகமாக வெளியிடும் பொழுது, ஒரே இடத்தில் சுரங்கம் தண்டவாளம் போன்றவைகளுக்காக குண்டு வெடிப்புகளால் தொண்டபடுதல் போன்ற இயற்கை அமைப்பை சிதைக்கும் போதுதான் நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது. தானாக உருவான ஒன்று அதன் அமைப்பை மாற்றும் போது எதற்காக எதிர்மறை விளைவை ஏற்படுத்த வேண்டும். சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும். இவைகள் அனைத்தும் நடப்பது ஒரு காரணம் இல்லாமலா? இதை பார்க்கும் போதே தெரியவில்லையா ஒரு சக்தி தான் இதை இயக்குகிறது என்று.
மழை எதற்காக பெய்கிறது என்று யாரிடமாவது கேட்டால் அதற்கு பதில் உயிரினங்களுக்காக என்றுதான் கூறுவார்கள், இது உலகில் அனைவரும் அறிந்த நியதி என்று கூட கூறலாம், இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது, என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்னுடைய கேள்வி:
மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.
“அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”

அதிரையில் கல்வி ஆவணப்படம் பாகம் 2 விரைவில் ...

அதிரையில் கல்வி என்ற ஆவணப்படம் முதல் பாகம் ஏற்கனவே வெளியிட்டு அனைவரின் ஆதரவை பெற்றது . நேரமின்மையால் அடுத்த பாகத்தை வெளிய்டுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. மிகச் சிறப்பாக செய்யவேண்டும் என்ற காரணத்தால் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், சமுக ஆர்வளர்கள்  மற்றும் பெற்றோர்கள் ஒரு சிலர் பேட்டி எடுத்து இதுவரை முடிக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரு சில வேலைகள் மீதமுள்ள நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கவேண்டும் என்று உங்களின் கருத்துக்களை எங்களுக்கு மடலில் மூலமாக் பின்னுட்டத்தின் மூலமாகவே தங்களின் கருத்தக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு 

அதிரை பிபிசி குழு 
adiraibbc@gmail.com

சகபங்களிப்பாளரின் உள்ளத்திலிருந்து


அன்பார்ந்த அதிரை வலைப்பூ நடத்துனர்களே !
 
நடந்து முடிந்த நமதூர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் நமதூர் அணைத்து வலைப்பூ தளங்களும் அயராது பாடுபட்டு நமதூரில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட அனைத்து கட்சியினற்கும் நாம் படுபட்டுள்ளோம். ஆனால் சில நிகழ்வுகளால் ஒவ்வொரு வலைப்பூக்களும் ஒரு வகையான முட்கள் நடத்துனர்களை காயப்படுத்தியுள்ளன.

அதிலும் குறிப்பாக மிகவும் அரும்பாடுபட்ட நமது அதிரை BBC தினமும் ஒருவகையான முட்களும் குத்தி கொண்டே இருந்தன அதுவும் அந்த முட்கள் வேறு யாருமில்லை நமது சக வலைப்பூ பங்களிப்பார்களில் ஒருவகையான தீயநோக்குடன் நமது வலைப்பூவை காயப்படுத்தி கொண்டே இருந்தனர். இக்கட்டுரை எழுதுகிற நான் நமது வலைப்பூவில் ஒரு பங்களிப்பாளர் என்று கூட தெரியாமல் என்னிடமே ஒரு சில சகோதரர்கள் நமது வலைப்பூவை பற்றி அவதூறை கூறினார்கள். அதிலும் குறிப்பாக அதிரை புதி(கொடி)யவன் என்பவர் நமது வலைப்பூவை இல்லாமல் செய்து விடுகிறோம் என்று சவால் விட்டார்.

ஒவ்வொரு வலைபூவினருகும் தமது வலைப்பூவை முன்னோக்கி செல்ல ஆசைகளும் ஆர்வமும் இருக்கும் அது மற்ற வலைப்பூவை தவறாக மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு தமது வலைப்பூக்களை முன்னோக்கி செல்லகூடாது.

ஒற்றுமைக்கு கட்டுங்கள் பரிவட்டம் .

குறுகிய உள்ளங்கள்இதனை அறியட்டும்.
இதனால் உலகே நம்மை போற்றும்.
வலைப்பூக்கள் இணையட்டும்'
ஊரின் பிரிவினை கோடுகள் மறையட்டும்.
சுகதரம்மின்மை ஒழியட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்
.

அதிரையில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை!

அதிரையில் கனமழை (கோப்பு படம்)
தஞ்சை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (27-10-2011) மாவட்டம் முழுவதும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு செய்துள்ளது மாவட்ட நிருவாகம்.
அதிரையில் இமாம் ஷாஃபி பள்ளி, காதர் முகைதீன் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் விடுமுறையை அறிவிப்பு செய்துள்ளது.

Tuesday, October 25, 2011

சகோ . அஸ்லம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அய்டா நிர்வாகி !இந்த காணொளி ஜித்தா அய்டா வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பதியப்பட்டுள்ளது

நன்றி
சகோ.ஜபருல்லாஹ்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. 
                                                                                                                                      

பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது. 

மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது.

தாய்ச்சபை ஊழியர்களின் மன உறுதியினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை காப்பாற்ற வேண்டும், தாய்ச்சபையின் தனித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்திட தேர்தலை சந்தித்தனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பண பலம், படை பலத்தோடு தேர்தலை சந்தித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் சமு தாயத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர். 

போட்டியிட்ட 394 இடங்களில் 119 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது.

வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு:


-- நகர்மன்ற உறுப்பினர்கள்

கடையநல்லுhர்
1) சுலைஹாபீவி 12 வது வார்டு
2) முபாரக் 13 ,, ,,
3) கே.எம்.அப்துல் லத்தீப் 14 ,, ,,
4) முகைதீன் பாத்து 15 ,, ,,
5) முஹம்மது இபுராஹிம் 19 ,, ,,
6) கே.எம்.செய்யது மசூது 20 ,, ,,

தென்காசி
7) எம்.செய்யது ஆபில் 25 ,, ,,

புளியங்குடி
8) ஏ.முகைதீன் பிச்சை 20 ,, ,,
9) எஸ்.அல்மஹதி 22 ,, ,,

இராமநாதபுரம்
10) கே.ஷேக் தாவூது 19 ,, ,,

நாகப்பட்டினம்
11) ஏ.சகாபுதீன் 34 ,, ,,

ஆம்பூர்
12) பிலால் பாஷா 17 ,, ,,
13) அத்தீகுல்லாஹ் 22 ,, ,,
14) இக்பால் அஹமது 24 ,, ,,
15) சிராஜுன் நிஷா 25 ,, ,,

குடியாத்தம்
16) அம்ரின் முக்தியார் 6 ,, ,,

குளச்சல்
17) ஏ.சாதிக் 18 ,, ,,

பேர்ணாம்பட்
18) வி. அப்துல் பாட்சா 19 `` ``
19) எஸ். பர்வீன் அப்துல் மாலிக் 21 `` ``

காயல்பட்டினம்
20) கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா 4 `` ``ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்

கானை
1) அமீர் அப்பாஸ்  

நீலகிரி நீலக்கோட்டை
2) பசீர்

ஜாப்ராபாத்
3) நஜ்முன்னிசா 15

தேன்பொத்தை ரஹ்மத் நகர் (எ) மீனாட்சிபுரம்
3) நூர்ஜஹான்ஊராட்சி மன்ற தலைவர்

1) தஞ்சை வழுத்தூர் - தமிழ்ச் செல்வன்
2) நெல்லை வல்லம் - திவான் ஒலி
3) குர்னிகுளத்துப்பட்டி தேவர்மலை -அப்துல் மஜித் 
4) திருச்சி இனாம்குளத்தூர் - மும்தாஜ் பேகம்
5) விழுப்புரம் கானை - ஏ. பரீதா பேகம்
6) நெல்லை பத்தமடை - அல்லாபிச்சை
7) இராமநாதபுரம் செம்பட்டையார்குளம் - எஸ். பிலாலுதீன்
8) இராமநாதபுரம் பெருநாழி - அப்துல் ரஜாக்
9) நெல்லை சம்மன்குளம் - டி.பி.எம். ரெசவு முஹம்மது 
10) நெல்லை பொட்டல்புதூர் - ஏ. ஹஸன் பக்கீர்

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

பெருநாழி
1) கப்பார் கான் - 5

பண்டாரவாடை
2) வி.ஆர். குர்ஷித் பஷீர் - 8 ’’

வழுத்தூர்
3) ஷாஜஹான் என்ற கமாலுதீன் -3’’
4) சபீனா பேகம் -4’’
5) ஹபீப் கனி -5’’
6) முஹம்மது ஷெரிப் -6’’

சக்கராபள்ளி
7) அபுதாஹிர் -3’’
8) முஹம்மது இப்ராஹிம் பைசல் - 4
9) ஜுபைதா கனி - 8 ’’
10) உம்மு ஹானி - 9 ’’
11) ஜெய்னுல் ஆபிதீன் - 12’’
12) ஜி. முஹம்மது இஸ்மாயில் - 5

புலிவலம்
 13) எம். சாதுல்லாஹ் - 7 ’’

மங்கலம்
14) எச். ரபீயுதீன் - 4 ’’
15) ஆயிஷாமா - 9 ’’

பெருநாழி
16) சீனி செய்யது இப்ராஹிம் - 3 ’’

தரைக்குடி
17) ஆர் சேட் - 1

நரிப்பையூர்
18) கே. சிக்கந்தர் - 11

செல்வனூர்
19) ஹசீனா பேகம் - 5

வாலாந்தரவை
20) உம்மத் நிஷா - 7

ரகுநாதபுரம்
21) ராஜன் பேகம் - 6

அரிகேசவநல்லூர்
22) பி.கே. புகாரி - 9
23) ஏ. பாத்திமா - 10

பாம்புகோயில்சந்தை
24) சே.த. தீன் ஒலி - 5
25) அ. இப்ராஹிம் மூசா - 3

சம்பன்குளம்
26) காசி - 1
27) பாத்திமா - 9
28) சாகுல் ஹமீது - 5

ரவணசமுத்திரம்
29) பீர் முஹம்மது பி.ஏ.வி.எல் - 2
30) கே.எம். அமான் அலி - 4
31) முஹம்மது அன்சாரி - 5
32) நாகூர் அம்மாள் செய்யதலி பாத்திமா - 8

கனகராம்பட்டு
33) அப்துல் ஹாதி - 3

ஈசநத்தம்
34) இளம்பிறை சித்தீக் அலி

ஜமீன் ஆத்தூர் அம்மாபேட்டை
35) அன்வர் அலி - 2

பழவேற்காடு
36) அப்துல் வஹாப் 

நிலாக்கோட்டா விலாங்கூர்
37) கே.பி. ஹம்சா -5
38) கே.கே. நாசவர் - 13

பிதர்காடு
39) ஜீஹரா பீவி -3

சேரன்கோடு
40) உமர் - 2

சேரம்கோடு
41) செய்யது அலி மௌலவி -

எருமாடு
42) உமர்

அலுன்டு வலங்கூர்
43) கே.வி. ஹம்சா
பாக்காலா

44) நாசர்

முதலியார்பட்டி
45) ஷேக் முகைதீன் - 7

மாலிக் நகர்
46) திவான் பக்கீர் மைதீன் - 5

மேட்டூர் ரஹ்மானியாபுரம்
47) ஹமீதாள் பீவி - 6
48) வி. அப்துல் காசிம் - 12

வி.கே. புதூர்
49) டி. காதர் முகைதீன் - 4

அருளாட்சி
50) அக்பர் - 5

வீராணம்
51) எம். அப்துல் முத்தலிப் - 3
52) எம். அமானுல்லாஹ் - 4
53) எஸ். முஹம்மது இப்ராஹிம்- 5
54) பாத்தி முத்து - 8

கலிநீர் குளம்
55) அனிஷா பேகம் - 2

குத்துக்கல் வலசை
56) எம்.பி. கௌஸ் கனி - 6

தேன்பொத்தை
57) முஹம்மது உசேன் - 2

சாம்பவர் வடகரை
58) பி. பக்ருதீன்

பத்தமடை
59) ஹஸன் காதர் - 4
60) மானிஸ்டர் முஹம்மது -5
61) செய்யா முஹம்மது - 6
62) சாஜிதாள் - 7
63) மலிகாமலி - 8
64) தர்ம கபீர் - 9
65) ஏ.எம். தமீம் அன்சாரி

தென்களம்
66) லுஹையா பானு - 6

வல்லம்
67)  திவான் மைதீன் பிச்சை - 6
68) ஷம்சுதீன் - 8


பேரூராட்சி உறுப்பினர்கள்

லெப்பைக் குடிக்காடு
1) தாவூத் அலி 1 வது வார்டு

தேவர் சோலை
2) வி.கே. ஹனீபா 7 வது வார்டு

கோட்டகுப்பம்
3) ஆமினா பானு 10 ,, ,,
4) ஜரீனா பேகம் 11 `` ``

பள்ளிகொண்டா
5) சி.எஸ்.கதிர் அஹமது 1 ,, ``
6) தாகிரா முகைதீன் 2 ,, ,,

லால்பேட்டை
7) மிஸ்பாஹுன்னிசா 6 ,, ,,
8) ஷேக் தாவூது 7 ,, ,,

சாத்தான்குளம்
9) முஹம்மது இஸ்மாயில் 10 ,, ,,

வாசுதேவநல்லுhர்
10) ஆயிஷா பீவி 5 ,, ,,

ஜாப்ராபாத்
11) தாஜீன் நிசா 4 `` ``

முத்துப்பேட்டை
12) கோல்டன் தம்பி மரைக்காயர் 15 `` ``

ஆர்.எஸ். மங்கலம்
13) மத்லூப் ஜஹன் 12 `` ``

சேரன்மாதேவி
14) பி.எம். கமால் பாட்சா 11 `` ``

நெல்லை ஏர்வாடி
15) எம். பீர் முஹம்மது 9 `` ``

மேலச் சேவல்
16) ஜன்னத் மீரம்மாள் 8 `` ``
17) நெய்னா முஹம்மது 9 `` ``


நன்றி: A.Muhammed Usman
www.niduronline.com

                                                               
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.