அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, October 13, 2011

வாக்கு வங்கி! - (VOTE BANK !)

பரபரப்பான உள்ளாட்சி  தேர்தல் என்றே சொல்லலாம். காரணம், எல்லாக் கட்சிகளுமே  தங்கள் பலத்தை ( STOCK TAKING)    நிருபிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.  சிறு கட்சிகள், பலமான கட்சிகளுடன் சேர்ந்து வெற்றிபெற்ற காலம் மலையேறிவிட்டது.

அதே சூழ்நிலைதான் பெரிய, பலமான கட்சிகளுக்கும் உள்ளன. ஆனால் அஇஅதிமுக மற்றும் திமுக இரு பெரும் கட்சிகளுக்கு என்றும்  தன்கென்று வாக்கு வங்கி உள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை.


கடந்த கால அனுபவத்தை பார்க்கும்போது அதிராம்பாட்டினம் பேரூராட்சி தேர்தலில்  திமுக  மற்றும் அஇஅதிமுக ஆகியவற்றின் கூட்டணியோடுதான்  காங்கிரஸ்  ஆட்சியை பெற்றுள்ளதை நாம் அறிந்த உண்மை. தற்போதைய நிலையை பார்க்கும்போது எல்லா கட்சிகளும்  தனித்து போட்டியிடுவதால் தங்கள் பலத்தை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.. தமிழ் மக்களின் மனநிலை என்றும் கூட்டணியாக சேர்ந்து போட்டியிடும் அணிக்கே தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.                           
                                                                                                                                                                                                                            T
திமுக  எப்போதும் நம் பகுதியின் செல்ல பிள்ளை. !

அஇஅதிமுக   பலமான தலைவரை கொண்ட கட்சி !

காங்கிரஸ் பாரம்பரியமிக்க கட்சி !


ஆட்சியாளரை  நியமிக்கும் முன்  10  குறிப்புகளை  பார்ப்போம் :

1 . உறவு முறை என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் ஓட்டு அளித்துவிடாதீர்கள்.

2 . புதியவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம்.

3   அரசியல் கட்ச்சிகள் முக்கிய பங்காற்றினாலும், தனி நபரின் திறமை, ஒழுக்கம், அணுகு முறை ஆகியவற்றை ஆராய்ந்து உங்கள் ஓட்டை பதியுங்கள்.

4 . பரம்பரை அரசியலிற்கு ஆதரவு தராதீர் !

5 . இந்த 5 இலக்கம் மிக முக்கியமானது. அடுத்த 5 வருடம் நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபரின் கீழ் நம் வாழ்க்கை  அமையும். நமக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேட்க தோணும். உதாரணமாக, சுகாதார  கேட்டை உண்டாக்கும் குப்பை கூளங்களை தூய்மைபடுத்தாததின் விளைவு " சிக்கன் குனியா" எத்தனை  தாய்மார்கள் பாதிக்கபட்டர்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும் ? இது ஒரு உதாரணம் தான் . கடந்த கால ஆட்சியை  குறை கூறுவதாக எண்ண வேண்டாம்.

6 . எல்லோரும்  சமம், யாவரும் நம் சகோதர்கள் என்ற மனப்பாங்குடையோரே நம் வேட்பாளர் .

7 . ஆட்சி செய்ய முன் அனுபவம் தேவையில்லை என்ற போதிலும், பெரியவர்களை மதிக்கும் குணம்  அவசியம். அவர்களின் ஆலோசனை அதைவிட மிக அவசியம் .

8 . மாற்றான் தாய் பிள்ளை போல் கருதுபவரை நிச்சயம் ஆதரிக்காதீர்.

9 . பிற மத சகோதர்களையும் அனுசரித்து ஆட்சி செய்பவர்கள் தான் நீதியுடன் ஆட்சி செய்வார்.

10 .நேர்மையானவர் ,  கறைபடியாதவர் , ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று       உறுதி கொடுத்து , வாக்குறுதியை  நிற வேற்றுபவரே நம் வெற்றி வேட்பாளர்.


அப்துல் ரஜாக்

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.