அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 18, 2011

அய்டாவின் தன்னிலை விளக்கம்,


அஸ்ஸலாமு அலைக்கும்,
 அய்டா என்பது பொது நல அமைப்பாக இருந்தாலும்ஒரு பொதுவான நல்ல தலைவரை தேர்ந்து எடுக்க எப்படிஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறதோ அதே உரிமை அய்டா மட்டும் அல்ல அய்டா போன்ற அனைத்துபொதுநல மைப்புகளுக்கும் தலையாய கடமையாகும்.
நிற்கஆரம்பத்திலிருந்து இன்றுவரை அய்டா எந்த ஒரு நிறுவனத்தின் கிளையாக இருந்ததில்லை/இருக்கவில்லை. மாறாக AYDA முழு சுதந்திரத்தோடு அனைத்து தரப்பட்ட அதிரைவாசிகளின் நலனுக்காகத்தான் இருக்க விரும்புகிறது. அது மட்டுமல்லாது கடந்த வருடங்களாக அதிரை பைத்துல்மாலுக்கு உதவி செய்ததைவிட மற்ற தொண்டு நிறுவனகளுக்குதான் பல மடங்கு அதிகமாக உதவி இருக்கிறோம்.

AYDAவின் தேர்தல் நிலைப்பாடு ஒரு சில மக்களுக்கு கவலையான மற்றும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்திவுள்ளது என்பது ஓரளவு உண்மை என்றாலும் ஒட்டு மொத்த அதிரை மக்களும் கீழ்கண்ட குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்தான், நாங்களும் இதில் கொஞ்சம் கூடுதல கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நமதூர் மக்கள் நலன் கருதி வரக்கூடிய தேர்தலில் நம்மில் ஒருவரை முன்னிறுத்தி ஒரே கோட்டில் எல்லோரையும் நிற்க வைக்கும் முயற்சியில் இறங்கிய அடுத்த கணமே போட்டா போட்டி கொண்டு தன்னிடம் உள்ள செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து எல்லா அரசியல் கட்சியின் கதவையும் தட்டி ஒரு வழியாக ஒவ்வொருவரும் மாநிலத்தின் பலம் வாய்ந்த கட்சியில் சீட்டு வாங்கி ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி செல்வாக்கு மற்றும் பண பலம் இல்லாவிட்டால் அந்த பலம் வாய்ந்த கட்சியில் சீட்டு கிடைத்திருக்குமா என்றால் அது கேள்விக்குறியே! அதோடு அல்லாமல் பலம் வாய்ந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் உட்பட்டவர்கள் என்பதால் தான் தமக்கு பெரிய கட்சிகளின் சீட்டு கிடைத்தது என்று அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
கடந்த 40 வருடமாக நமதூரை ஆட்சி செய்தவர்களும் அரசியல் வாழ்க்கை நடத்தியவர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மாறாக தேவையற்ற பிரச்சனைகளை தான் அதிகமாக கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.ஆனால் நமதூரில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான் ஏதோ வந்தோம் இருந்தோம் என்றில்லாமல் கல்விவணக்கஸ்தலம்மருத்துவமனைமின்சாரம்இன்னும் பல எத்தனையோ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மிகப்பெரும் தூணாக நின்று செய்தார்கள். அப்படியும் ஊர் நன்மைக்காக தானாக முன்வந்து செய்யகூடியவர்களை கட்சிக்காரர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்களா என்றால் அதுவும் இல்லைமாறாக எங்களை மதிக்கவில்லை என்று சொல்லி மழுப்பி விடுகிறார்கள். காரணம், கட்சிகாரர்கள்,  காண்ட்ராக்ட்காரர்கள்வட்டமாவட்ட தலைவர்மற்றும் MLA க்களுக்கு விருந்து கொடுத்து திருப்தி படுத்தவே நேரம் சரியாக இருக்கும். அவ்வழியே புதிதாக அரசியலில் நுழைந்திருக்கும் நம்மவர்களிடமும் எப்படி நாம் ஒரு புது மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.
அதனால் அந்த வகையில் சகோ. முனாப் என்று ஒருதலை பட்சமாக இல்லாமல் 40 வருடத்திற்கு பிறகாவது ஒரு சுயேச்சை வேட்பாளரை தேர்தெடுக்க ஒரு புதிய முயற்சியை கையாள்வோம் என்பது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் வரக்கூடிய தேர்தலில் 70 வருட பாரம்பரியமிக்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் இதர சங்கங்களையும் மதிப்பளிக்க கூடிய மனிதரைத்தான் பஞ்சாயத்து தலைவராக  தேர்ந்த்டுப்போம் என்பதன் தொடக்கம் தான் இது.
அதைவிட கட்சியின் சார்பாக நிற்பவர்கள் நமதூர் மக்களுக்கு பண பட்டுவாடா செய்து சுயமரியாதையுடன் வாழும் நம் ஒவ்வொருவரையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வகையில் சகோ. முனாப் அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு உட்பட்ட பணத்தை மட்டும் செலவு செய்து அவர் எளிமையாக வாக்கு சேகரிக்கிறார். அதனால் தான் ஹராம் ஹலால் பேனக்கூடியவர் என்று குறிப்பிட்டோம். அப்படி ஒரு வேலை சகோ. முனாபும் பணப்பட்டுவாடா செய்து ஆடம்பரமாக வாக்கு செகரித்திருந்தால் நாங்கள் (சுயேச்சை வேட்பாளரான) முனாபுக்காக மக்களிடம் கேட்ட வாக்கை அல்லாஹ்வின் மீது சத்தியமாக திரும்ப பெற தயாராக இருக்கிறோம்.
நிற்ககண்டிப்பாக நாம் யாராவது ஒரு வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்கத்தான் போகிறோம்ஊர் ஒற்றுமை என்ற பெயரில் இரட்டை வேடம் போடுவதில் அர்த்தமில்லை, (ஓட்டு கேட்டு வரும் அனைத்து வேட்பாளர்களிடமும்உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று சொல்லிவிட்டு ுனாபிக்தனமாக ஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுபோடப்போகிறோம்பாவம் அந்த வேட்பாளர் தான் அறியமாட்டார் ஆனால் நம்மை படைத்த இறைவன்நன்கறிவான்) எனவே உள் ஒன்று வைத்து புறம் ஒன்று சொல்வதில் அய்டாவுக்கு உடன்பாடு இல்லை.
குறிப்பு:
நாங்கள் எந்த வேட்பாளரையும் குறைகூறவில்லை. 'எல்லோரும் சிறந்தவர்களே' என்றே சொல்லியுள்ளோம்.இவரிடம் சற்று நிறை கூடுதல் தென்படவே ஒருமித்தக் கருத்து ஓங்கியது! அய்டாவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனைத்துவேட்பாளர்களும் ஏதாவது ஒரு வகையில் வேண்டியவர்களாகவும்உறவினர்களாகவுமேயிருன்தனர். எனினும் ஊர் நலனில் உண்மையான அக்கறை கொண்டு யார் முன்வந்தாலும் 'யாருக்கு பொறுப்பு தரப்பட்டாலும்அன்புடன்அய்டா பாசமிகு நேசக்கரம் நீட்டும்.
வஸ்ஸலாம்.
 AYDA

9 பின்னூட்டங்கள்:

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மின்னஞ்சல் வழி கருத்து :
AYDA வின் தன்னிலை விளக்கம் ,ஒற்றுமை எனும் ஒற்றை கருத்தை கொண்டு துவங்கப்பட்ட AYDA போன்ற அமைப்புகள் பலதரப்பட்ட கருத்துகளுக்கு இடமளிக்க கூடிய அரசியலிலிருந்து விலகி இருப்பதே சாலசிறந்தது ! ஒரு பொது அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் , அந்த அமைப்பின் மூலம் மக்களிடத்தில் பரிச்சம் ஆனவர்கள் , தேர்தல் எனும் களத்தில் இறங்கினால் , தான் பெற்ற நன்மதிப்பை, வாக்குகளாக சேகரிக்க அதிகம் வாய்ப்புள்ளது. மன சாட்சியை முன் நிறுத்தி சொல்லுங்கள் , தனக்கு வோட்டு போடாதவர்ககளின் தேவைகளை , கோரிக்கைகளை நிராகரிக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை., மனிதர்கள் யாவரும் உலக ஆசா பாசங்களுக்கு உட்பட்டவர்களே ! பைத்துல்மால் சரத்துப்படி 8 ம் பிரிவில் பொறுப்பில் உள்ளவர்கள் , அரசியலில் இடுபடக்கூடாது என்று உள்ளதை ஏன் கேள்வி கேட்கவில்லை ? ஒரு சகோ இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் என்று தன் கருத்தை பதித்திருந்தார். ஒற்றுமையை நிலய்நாட்ட எடுத்த முயர்த்சியே அன்றி வேறொன்றுமில்லை.

அப்துல் ரஜாக்(chasecom)

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//AYDA வின் தன்னிலை விளக்கம், ஒற்றுமை எனும் ஒற்றை கருத்தை கொண்டு துவங்கப்பட்ட AYDA போன்ற அமைப்புகள் பலதரப்பட்ட கருத்துகளுக்கு இடமளிக்க கூடிய அரசியலிலிருந்து விலகி இருப்பதே சாலசிறந்தது//

இப்படி எல்லோரும் ஒதுங்கி நின்றால் யார் உண்மையான தலைவரை தேர்ந்தெடுப்பது, "பூனைக்கு யார் மணி கட்டுவது". சகோ. அப்துல் ரஜாக் அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், நம் ஜனநாயக கடமையான வாக்கை நிறை வேற்றுவதும், நாம் விரும்புபவருக்கு வாக்களிக்க சொல்வதும் அரசியல் ஆகாது.

நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், இதே போன்றுதான் நம் ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் உள்ளது, ஆனால் அவர்கள் ஊர் நலன் கருதி தன் வேட்பாளர்களை நிருத்தவில்லையா (அதை நான் மனமார பாராட்டுகிறேன், அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தருவானாக ஆமீன்) சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகிய நீங்கள் ஏன் அவர்களுக்கு சொல்லவில்லை "அரசியலிலிருந்து விலகி இருப்பதே சாலசிறந்தது" என்று. நீங்கள் ஏன் அய்டா எடுத்த முடிவை மட்டும் திரும்ப பெற திரும்ப, திரும்ப வலியுறுத்துகிறீர்கள்?

//மன சாட்சியை முன் நிறுத்தி சொல்லுங்கள், தனக்கு வோட்டு போடாதவர்ககளின் தேவைகளை, கோரிக்கைகளை நிராகரிக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை//

நாம் தி. மு. க. வுக்கு ஒட்டு போட்டதினால் ஆ. தி. மு. க. அரசின் திட்டங்கள் நமக்கு கிடைக்காமலா போகப்போகிறது.

//பைத்துல்மால் சரத்துப்படி 8 ம் பிரிவில் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியலில் இடுபடக்கூடாது என்று உள்ளதை ஏன் கேள்வி கேட்கவில்லை?//

இருக்கலாம், இன்ஷா-அல்லாஹ் சகோ. முனாப் வெற்றி பெற்றால், முதல் வேலை அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

நான் எல்லோரையும் கேட்கிறேன், அதிக பணம் செலவு செய்து சீட்டு வாங்கியும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதுமாக இவ்வளவு பணம் பொருள் செலவு செய்கிறார்களே பிரதான கட்சி வேட்பாளர்கள், அவர்கள் எல்லாம் பைத்தியக்கரர்களா? போட்ட பணத்தை எப்படி எடுக்க வேண்டும் என்கிற திட்டமும் தீட்டியபிறகுதான் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை மக்களாகிய நாம் இவ்வேளையில் நன்கு அறிய வேண்டும்.

இன்ஷா-அல்லாஹ் என்னுடைய ஓட்டு பஸ் சின்னத்திற்கே, மக்களே சிந்தித்து கொள்ளுங்கள், ஐந்து வருடத்துக்கு நாம் தான் அனுபவிக்க வேண்டும்.

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மின்னஞ்சல் வழி கருத்து : சகோ.ஊர் குருவி அவர்களுக்கு சட்டத்தை படித்த வக்கீல் முனாப் அவர்களுக்கு ஒரு அமைப்பில் இருந்து கொண்டு தேர்தலில் நிற்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியாத . அவர் உண்மையானவராக இருந்தால் தேர்தலுக்கு முன்பே அவருடைய பதவியை ராஜினாமா செய்யட்டும் அதுதான் முறை அதைவிடுத்து வெற்றிபெற்றால் ராஜினாமா செய்வேன் என்பதல்லாமல் அறியாமையை தவிர வேறன்ன ?

அப்துல் ரஜாக்(chasecom)

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயாரல்....

அதிரைவாசிகளுக்கு, எல்லோருக்கும் நல்ல எண்ணம் எப்படியாவது ஒரு நல்ல தலைவரை தேர்ந்துஎடுக்க வேண்டும் என்று, இந்த முயற்சி நல் முயற்சியே, கவனிக்க வேண்டும் தாமதமான முயற்சி, அல்லாஹ்விடம் இதற்கு நற்கூலி கிடைக்கும்...

வரும் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தள்ளப்பட்டு இருக்கிறோம், அணைத்து அதிரை வாசிகளும் சேர்ந்து ஒரு தலைமையின் கீல் வர வேண்டும்.

Mohideen Syed,
emailtomohi@gmail.com
Dubai.

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயாரல்....
அதிரைவாசிகளுக்கு, எல்லோருக்கும் நல்ல எண்ணம் எப்படியாவது ஒரு நல்ல தலைவரை தேர்ந்துஎடுக்க வேண்டும் என்று, இந்த முயற்சி நல் முயற்சியே, கவனிக்க வேண்டும் தாமதமான முயற்சி, அல்லாஹ்விடம் இதற்கு நற்கூலி கிடைக்கும்...

வரும் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தள்ளப்பட்டு இருக்கிறோம், அணைத்து அதிரை வாசிகளும் சேர்ந்து ஒரு தலைமையின் கீல் வர வேண்டும்.

Mohideen Syed,
emailtomohi@gmail.com
Dubai.

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ. அப்துல் ரஜாக் அவர்களுடைய இந்த பதிலிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், அவர்கள் சகோ. முனாப் மீதும் பைத்துல்மால் மீதும் உள்ள பகை அல்லது கோபத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்.

அதுசரி, நான் சொன்னதற்கு என்ன பதில்?

//நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன், இதே போன்றுதான் நம் ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் உள்ளது, ஆனால் அவர்கள் ஊர் நலன் கருதி தன் வேட்பாளர்களை நிருத்தவில்லையா (அதை நான் மனமார பாராட்டுகிறேன், அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை தருவானாக ஆமீன்) சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகிய நீங்கள் ஏன் அவர்களுக்கு சொல்லவில்லை "அரசியலிலிருந்து விலகி இருப்பதே சாலசிறந்தது" என்று. நீங்கள் ஏன் அய்டா எடுத்த முடிவை மட்டும் திரும்ப பெற திரும்ப, திரும்ப வலியுறுத்துகிறீர்கள்? //

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயாரல்....

இரண்டு விசயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்...

ஒன்று : யார் வெற்றி பெற்று வந்தாலும், அவர்களிடம் அரசு உதவிகலை எவ்வாறு அதிரைக்கு பெற்று கொடுக்க முடியும் என்று யோசித்து வாங்கி கொடுக்க ஒரு உறுதியான குழுவை அமைக்க வேண்டும். வரும் காலதிர்க்குண்டான தீர்வு.

இரண்டு : நமக்கு (அதிரை வாசிகள் அனைவருக்கும்) ஒரு தலைமை. இது எதிர் காலத்திற்கும் உண்டான திர்வு...


Mohideen Syed,
emailtomohi@gmail.com
Dubai.

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

My suggestion same as comment No.1(Mr.Razak-Chasecom) & Appreciates AYDA's self explanatory!!!.
Pls find the below comment which was given against the Artcle (which was published in Adiraixpress dtd.17.10) of Mr.Adirai Farooq, this just for AYDA and Viewers information.
----------------------------------------
Dear Mr.Farook Assalamu Alaikum
With reference to your Article, We also opposing AYDA for their stands to support individual candidate but regret to inform you that you are not eligible person to condemning their act because you are no.1 selfish and intend to damage Adirai muslims unity/creates unnecessary rumors among us by way of giving these kinds of thoughtless comment (asper your article).

Also pls understand, AYDA not a division of "Adirai Baithulmal" and AYDA is one of Social Orgainization, so pls correct your word and think twice before you accusing any one.

Note: As a person (individual) you have full rights to support any candidate but not way of criticising others.

Let us pray Almighty Allah to give victory to any of our Muslim Candidate who act in favour of Islam and do good things for the development of Adirai Society (All Religion).

Hope all Adirai Muslims will agree the above.

Wassalam.....
K.Shafeeq Ahamed

abdul jabbar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தம்பி சபீக்கு தமிழ் நாட்டில்தானே பொரந்தது எதோ சொல்லிஉள்ளது எனக்கு விளங்கியவரை பாரூக் என்ற மாற்று மததவரின் கருத்தை எற்கவேன்டாம் என்கிறதா யாருக்காவது விளன்கினால் கொஞ்சம் சொல்லுங்களேன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.