ஒலிப்பேழை கிழே
ஒலிப்பேழையில் கூரப்பட்வைகளின் ஆதாரங்கள்..!
1) வெற்றி பெற்றால் பாடுபடுவேன்- திமுக வேட்பாளர் S.H.அஸ்லம் அவர்களின் பேட்டியின் காணொளி
http://adiraibbc.blogspot.com/2011/10/sh.html
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7sCBYue2X0o
2) திமுக வேட்பாளர் S.H அஸ்லம் இறுதி கட்ட பிரச்சாரம் - காணொளி
http://adiraibbc.blogspot.com/2011/10/sh_17.html
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kA_J4oWsHFQ
3) அதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் இன்று காலை சகோதரர் அஸ்லம் வேட்புமனு தாக்கல்
http://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_27.html
4) துவங்கியது திமுக பேரணி
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_7044.html
5) சுகாதாரத்திற்கு முன்னுரிமை ! பேரூராட்சித் தலைவர் ஒலிப்பேட்டி !
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_2977.html
6) பதிவான இறுதி வாக்கு பட்டியல் - (வேட்ப்பாளர் மற்றும் வார்டு வாரியாக.)
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_2008.html
7) உங்கள் ஓட்டு யாருக்கு? - கருத்துக்கணிப்பு முடிவுகள்!!!
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_9861.html
பொதுமக்களாகிய அதிரை பிபிசி வாசகர்கள் எங்களின் நிலைப்பாடுகளளை அறிந்துகொள்ளவே இப்பதிவை இட்டுள்ளோம்.!
ஒலிப்பேழையில் கூரப்பட்வைகளின் ஆதாரங்கள்..!
1) வெற்றி பெற்றால் பாடுபடுவேன்- திமுக வேட்பாளர் S.H.அஸ்லம் அவர்களின் பேட்டியின் காணொளி
http://adiraibbc.blogspot.com/2011/10/sh.html
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7sCBYue2X0o
2) திமுக வேட்பாளர் S.H அஸ்லம் இறுதி கட்ட பிரச்சாரம் - காணொளி
http://adiraibbc.blogspot.com/2011/10/sh_17.html
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kA_J4oWsHFQ
3) அதிரையில் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் இன்று காலை சகோதரர் அஸ்லம் வேட்புமனு தாக்கல்
http://adiraibbc.blogspot.com/2011/09/blog-post_27.html
4) துவங்கியது திமுக பேரணி
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_7044.html
5) சுகாதாரத்திற்கு முன்னுரிமை ! பேரூராட்சித் தலைவர் ஒலிப்பேட்டி !
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_2977.html
6) பதிவான இறுதி வாக்கு பட்டியல் - (வேட்ப்பாளர் மற்றும் வார்டு வாரியாக.)
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_2008.html
7) உங்கள் ஓட்டு யாருக்கு? - கருத்துக்கணிப்பு முடிவுகள்!!!
http://adiraibbc.blogspot.com/2011/10/blog-post_9861.html
பொதுமக்களாகிய அதிரை பிபிசி வாசகர்கள் எங்களின் நிலைப்பாடுகளளை அறிந்துகொள்ளவே இப்பதிவை இட்டுள்ளோம்.!
18 பின்னூட்டங்கள்:
வெல்டன் Guys !
keep it up !
தொடருங்களப்பா !
பாதை தெளிவு, பரந்த உள்ளங்கள் சுற்றியிருக்கிறது... நேர்மையுடன் வெறியைத் தொடரவும் இன்ஷா அல்லாஹ்..
இனிவரும் காலங்களில் விமர்சனங்களை தாங்கும் பக்குவத்தையும் நிலை நிறுத்திக் கொள்வோம் !
வெள்ளி நிலா ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சகோ. நிஜார் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
// இதற்கும் முன் அபுபைஜ் என்ற பெயரில் இந்த வலைத்தள நிர்வாகி ஒருவரே அதிரை வாக்காளர்களுக்கு அபு பைஜின் அவசர வேண்டுகோள் என்ற தலைப்பில் அதிமுக வேட்பாளரை காரண காரியமின்றி புகழ்ந்து, அஸ்லாம் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் அஜீசுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். அதற்க்கு நான் இட்டிருந்த பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை.//
இந்த கருத்து முற்றிலும் தவறானது என்பது எனது கருத்து. அதே கட்டுரையின் கீழ் பகுதியிலேயே அதிரை பிபிசி சார்பாக 'குறிப்பு' என்று போட்டு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதை தாங்கள் கவனிக்க மறந்தது ஏனோ?
---- குறிப்பு :
இது சகோதரர் அபுஜைதின் தனிப்பட்ட கோரிக்கையை தவிற இது பிபிசியின் நிலைப்பாடு அல்ல. இதுபோன்ற நிங்களும் கண்ணியத்தோடு கட்டுரையை அனுப்பித் தந்தால் அதிரை பிபிசி அதை வெளியிடும் --
அதே போல் அபூஜைதின் பதிவு சம்பந்தமாக மற்றொரு விளக்கத்தையும் அதிரை பிபிசியின் வாசகன் என்ற முறையில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒரு தளத்தில் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவர் – அவர் பங்களிப்பாளராக இருக்கின்றார் என்பதற்காக, அல்லது நிர்வாகியாக இருக்கின்றார் என்பதற்காக - அவரது சொந்த விருப்பத்தை வெளியிடக்கூடாது என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. மற்றவர்கள் ஒரு கருத்து எழுதுவது போல் அவருக்கும் அவரது கருத்தை எழுதுவதற்கு முழு உரிமை உள்ளது. அது போல் தான் அபுஜைத் அவர்களும் தனது கருத்தை அனுபவத்தின் அடிப்படையில் ஒரு வேண்டுகோளாக மக்கள் முன் வைக்கின்றார். அது அவரது உரிமை. அது போல், நீங்களும் உங்களது வேண்டுகோளை நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கட்டுரை அனுப்பி இருந்தால் அதையும் ஒரு பதிவாக போட்டிருப்பார்கள். அதை விடுத்து, நான் பின்னூட்டம் போட்டேன் அதை வெளியிடவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளராகிய நீங்களே கூச்சலிடுவது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அதுவும் அதிரை பிபிசியில் அது சம்பந்தமாக 'குறிப்பும்' போட்டு, அதில் மற்ற வேட்பாளர்களின் ஆதரவு கட்டுரைகள் இருந்தால் அனுப்பித் தாருங்கள் - அதுவும் வெளியிடப்படும் என்று போட்டும் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டது உங்கள் தவறு தானே தவிர அதிரை பிபிசியின் தவறு அல்ல.
//மேலும் காக்கையார் என்ற பெயரில் அதே நிர்வாகி, அஸ்லாம் சிங்கபூர் சென்றுவிடுவார், ஆளப்போவது குணசேகரன்தான் என்றும், மேலும் போட்டி அதிமுகவிற்கும், கான்கிரசுக்கும்தான் என்றும் கதை விட்டுவிட்டு, இன்று, தனது கணிப்பு சரிதான் என்று எழுதுவது நகைப்பிக்கிடமாக உள்ளது.//
இதில் என்ன நகைப்பிற்கு இடமளிக்கின்றது என்று புரியவில்லை. அதுவும் அதிரையின் மூத்த பத்திரிக்கையாளராகிய நீங்களே இப்படி எழுதுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
நீங்கள் ஆண்லைன் ஓட்டெடுப்புக்கும் - மக்கள் பரவலாக பேசிக்கொள்ளும் கருத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதிரை பிபிசி மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் ஓட்டெடுப்பில் அதிகமான வாசகர்கள், சகோதரர் அஸ்லம் அவர்களுக்கே வாக்களித்திருந்தனர். அந்த ஒட்டெடுப்பை அதிரை பிபிசி நடத்தியது தேர்தல் பிரச்சார நேரங்களின் போது. அந்த ஒட்டெடுப்பின் முடிவை அதிரை பிபிசி வெளியிட்டது சரியாக தேர்தலுக்கு முந்தைய நாள். அந்த முடிவிற்கு ஏற்றார்போலவே தேர்தல் முடிவும் அமைந்திருப்பதையே இந்த கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டி பிபிசியின் கணிப்பு உன்மையானது என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால், 'காக்கையாரில்' சொல்லப்பட்டது மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருப்பதாக உள்ள செய்தி. அது அங்கொண்றும் இங்கொண்றுமாக பேசிக்கொள்ளும் ஒரு செய்தியாகவே அதில் பதியப்பட்டள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது போல் காங்கிரஸிற்கும் அதிமுகவுக்கும் தான் நமதூரில் போட்டி அதிகமாக இருக்கின்றது என்று ஊர் முழுவதும் பேசப்பட்டது உன்மைத்தான். அதை மாற்றுக் கட்சியினரை விட திமுகவினரே அதிகம் முனுமுனுத்துக் கொண்டனர். தேர்தல் நடந்த அன்று என்னிடம் பேசிய ஒரு திமுக அனுதாபி கூட 'யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியவில்லை' என்று கூறினார். அந்த அளவுக்குத் தான் ஊரில் திமுகவின் நிலைப் பற்றி பேசப்பட்டது. கண்டிப்பாக இது சென்னையில் ஓட்டுப்போட்டுவிட்டு - தேர்தல் சமயத்தில் கூட ஊர் பக்கமே தலைக்காட்டாத உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் உங்களைப் போன்று வெளியூரில் வசிக்கும் அதிரை வாசிகளுக்காக ஊரின் அன்றாட நடப்புகளை தெரிவிக்கும் வகையில் காக்கையார் ஜூவியின் கழுகார் பாணியில் ஊர் நடப்புகளைத் தெரிவித்திருந்தார். அதை பலரும் பாராட்டி வாழ்த்தி இருக்க நீங்கள் மட்டும் நச்சுப்பார்வையுடன் பார்ப்பது ஏன்?
மக்கள் பேசிக் கொள்வது என்பது வேறு மக்கள் ஒட்டளித்து கருத்துச் சொல்வது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துக் கொண்டு பின்னூட்டமிடுவது நல்லது.
//தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக ஒருபக்க - சார்பாக இதுவரை செயல்பட்டு வந்த அதிரை பி.பி.சி, இனியாவது தனது போக்கை மாற்றிக்கொண்டும், நேர்மையாக நடக்கும் என எதிரிபார்கிறோம்.//
இதை வெள்ளிநிலா நடத்தும் தாங்கள் சொல்வதற்கு அறவே தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஏனெனில் நீங்கள் நடத்தும் வெள்ளிநிலாவை படித்த மக்கள் பலர், இது சகோதரர் அஸ்லம் வெளியிட்ட ஆதரவு நோட்டீஸா? அல்லது வெள்ளிநிலா பத்திரிக்கையா? என்று 'நக்கலாக' கேட்கின்ற அளவுக்கு உங்கள் பத்திரிக்கையில் ஒரு பக்க சார்புடைய கட்டுரைகள் நிரம்பி வழிந்தது. அது மட்டுமல்லாமல் அவருக்கு எதிராக உங்கள் உற்ற நன்பர் அஜிஸ் போட்டியிட்ட அதிமுகவுக்கு எதிராக மோடி பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நீங்கள் நடத்தும் வெள்ளிநிலாவுக்கு இந்த ஒரு பக்க சார்பு நிலை ஏன்? நடுநிலையோடு இருக்க வேண்டிய ஒரு பத்திரிக்கை உங்கள் நன்பர்களில் இருவரில் ஒருவருக்கு ஆதரவு என்றும் மற்றவருக்கு கடும் எதிர்ப்பு என்றும் நிலைபாடு எடுத்தது ஏன்? வெள்ளி நிலாவின் எந்த பக்கத்திலாவது, அஜீஸின் ஆதரவு கட்டுரைகள் இடம்பெற்றிருந்ததாக காட்ட முடியமா? ஆனால் பிபிசி அப்படி நடந்ததாக நான் கருதவில்லை. அஸ்லம் அவர்கள் பேசிய ஒவ்வொரு பிரச்சார கானொளிகளும், அது போல் அஜீஸ் பேசிய கானொளிகளும் மற்ற மற்ற வேட்பாளர்கள் பேசிய கானொளிகளும் வெளியிட்டிருந்தனர். எந்தந்த கட்டுரைகள் வந்ததோ அவை அனைத்தும் எந்த வித ஒரு பக்க சார்பும் இல்லாமல் பதிக்கப்பட்டிருந்ததாகவே நான் கருதுகின்றேன். ஆனால் உங்கள் பத்திரிக்கை அப்படி நடந்ததாக எனக்குத் தெரியவில்லை.
உதாரனமாக உங்கள் வெள்ளிநிலா இதழில் ஜெ - மோடி நட்பு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தீர்கள். இந்த ஜெ மோடி நட்பு பற்றிய கட்டுரை இந்த உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் திடீரென வெளியிட காரணம் என்ன? அதுவும் அனைத்துப் பக்கங்களிலும் அஸ்லம் ஆதரவு கட்டுரைகள் இடம் பெற்றிருக்க அதிமுகவுக் எதிராக மட்டும் இந்த கட்டுரையை போட ஒரே காரணம் அஜீசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். இதே அஸ்லம் முதலில் அதிமுகவிடம் சீட் கேட்டு போயிருந்தாரே அப்படி சீட் கிடைத்திருந்தால் இதே கட்டுரையை வெளியிட்டிருப்பீர்களா? மாட்டீர்கள். அதற்கு மாறாக திமுக – பாஜக கூட்டு பற்றியும்;, கோவை கலவரம் - அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு பற்றியும் எழுதி திமுகவை கிழித்திருப்பீர்கள். காரணம், உங்கள் நோக்கமெல்லாம் உங்கள் ஆதரவாளர் அஸ்லம் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அவர் எந்த கட்சியில் இருந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பதவி தான். அது யாரிடமிருந்து எப்படிக் கிடைத்தால் என்ன? என்ற கொள்கையை வைத்துக்கொண்டு ஒரு பக்க சார்பை பற்றி பேசுவது வெட்கக்கேடு என்பதே என் தனிப்பட்ட கருத்து.
//இந்த பின்னூட்டத்தை வெளியிட்டு தமது நேர்மையை நிரூபித்தால் அதிரை பிபிசி வலைத்தளம் நிச்சயம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெரும் என நம்புவோம்.//
இதே நேர்மையை நாங்கள் உங்களிடமும் வெள்ளிநிலவிடமும் அதிகமதிகம் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
அரசியலில் இருப்போர் எப்படி விமர்சனத்தை தாங்ககூடிய பக்குவம் வேண்டும் என்று சொல்கிறீர்களோ,
அதே போன்று ஊடக செயல்பாட்டில் உள்ளோருக்கும் எல்லாவற்றையும் தாங்க வேண்டிய பக்குவம் வேண்டும்.
எனக்காக நேரம் ஒதுக்கியமைக்கு
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பர் அதிரை தம்பி
நீங்கள் யாரென்று தெரியவில்லை
இதற்கெல்லாம் நான் நீண்ட விளக்கம் தர தயாராக இருக்கிறேன்..டைப் பண்ணிக்கொண்டிருக்க நேரமில்லை...தங்கள் யாரென்று அறிமுகப்படுத்திக்கொண்டால் தொலைப்பெசியிலோ பேசிக்கொள்ளலாம்
நன்றி..
இன்றைய சார்புநிலை பற்றிய சர்ச்சைகளெலெல்லாம் BBV வீறுகொண்டு வெற்றிநடை போட கிடைத்த நல்ல வைட்டமின்கள்.
ஒரு சார்பு நிலை என்பெதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் நடந்தது போகட்டும் இன்று அதிரையின் முன்னேற்றத்திற்கு எதிலும் சார்பற்று, ஒன்றுபடுத்த ஒத்துழைக்கும் ஊடகமாக திகழட்டும்.
எதையும் எதிர்கொள்ள திராணி பெற்ற முகம்மதே வளர்க!
அஸ்ஸலாமு அலைகும் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு எங்கலை போல் வெளிநாட்டில் இருபவர்கலுக்கு நீங்கள் செய்த சேவை அரியும். உங்கள் மீது பலி பொடுபவர்கலுக்கு அல்லஹ் தகுந்த கூலி கொடுப்பான். நீஙகள் செய்த சேவைக்கு இம்மையில் இல்லாவிட்டாலும் மருமையில் கூலி கிடைகும். இன்ஷா அல்லஹ் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு துஆ செய்வொமாஹே. ஆமீன்
அஸ்ஸலாமு அலைகும் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு எங்கலை போல் வெளிநாட்டில் இருபவர்கலுக்கு நீங்கள் செய்த சேவை அரியும். உங்கள் மீது பலி பொடுபவர்கலுக்கு அல்லஹ் தகுந்த கூலி கொடுப்பான். நீஙகள் செய்த சேவைக்கு இம்மையில் இல்லாவிட்டாலும் மருமையில் கூலி கிடைகும். இன்ஷா அல்லஹ் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு துஆ செய்வொமாஹே. ஆமீன்
சகோ. நிஜார் அவர்களுக்கு,
இந்த தளத்தில் தொடங்கிய கருத்துப்பரிமாற்றத்தை இதே தளத்திலேயே நடத்துவது தான் எனக்கு சிறந்ததாக தெரிகின்றது. ஏனெனில் தொலைப்பேசி வாயிலாக பேசும் போது அது நம் இருவருக்கு மட்டும் தான் தெளிவைக் கொடுக்கும். ஆனால், நீங்கள் எழுப்பிய சந்தேகத்தால், அதிரை பிபிசி வாசகர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே இருந்துக்கொண்டிருப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே நமது கருத்துப் பரிமாற்றத்தை முடிந்தால், இதிலேயே தொடருவோம்.
அடுத்து, அதிரை பிபிசி குறித்து சிலர் தெர்ந்து அவதூறுகளை பரப்பி வருவது, அதன் வாசகன் என்ற முறையில் என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த மணவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், இது போன்ற ஒரு தளம் இல்லை என்றால், தேர்தல் அன்று நமதூர் செய்தியை உடனுக்கு உடன் உலகமெங்கும் உள்ள பல அதிரை வாசிகளும் தெரிந்துக்கொண்டிருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரும் வியக்கும் வகையில் நமது அதிரை பிபிசியினரின் பணிகள் மிகச் சிறப்பாக இருந்தன. அது போல் தேர்தல் நேரத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களை அதிரை பிபிசியில் மட்டுமே கானொளியாக காணமுடிந்தது. அதிரையின் மற்ற தளங்களைக் காட்டிலும் அதிரை பிபிசியில் மட்டுமே அதிரையின் ஒவ்வொறு நிகழ்வுகளும் உடனுக்குடன் கொடுக்கப்படுகின்றது. அப்டிப்பட்ட ஒரு அருமையான தளத்தை, அதிரையின் பொக்கிஷத்தை விஷமப் பிரச்சாரங்களின் மூலம் சூழ்ச்சி செய்து ஒழித்துக் கட்ட சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களில் பலர், திமுகவுக்கு ஆதரவானவர்களாகவும், 'வெற்றிபெற்றவருடன்' நெருங்கிப் பழகுபவர்களாகவும் இருப்பவர்கள். அதில் ஒருவர் பலரிடம் அதிரை பிபிசியையும் - சம்சுல் இஸ்லாம் சங்கத்தையும் ஒழித்து கட்டியே தீருவது என்று ஊர் முழுவதும் சொல்லித் திரிகின்றார். இந்த நபர் அதிரையின் மற்றொரு தளத்திலும் மிக முக்கிய பங்களிப்பாளராக இருக்கின்றார் என்பது மிகவும் வேதனைக்குறிய விஷயம். இதை எல்லாம் நான் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், அதிரை பிபிசியை பற்றி சிலர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் பெரும்பாலானவை, அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் என்பதை இங்கே நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அப்படிப்பட்ட சூழ்ச்சிகளுக்கு அதிரையின் மூத்த பத்திரிக்கையாளராகிய நீங்கள் பலியாகி விடக்கூடாது என்பதே எனது ஆவல்.
நன்றி
மிக அருமை ஆதாரத்துடன் கூடிய நிதானமான விளக்கம், இந்த ஒழிப்பேழை தக்க சமயத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஓரிரு வார்த்தைகள் உங்கள் கோபத்தை கொப்பழிக்க செய்கிறது, அதை தவிர்த்திருக்கலாம், அதையும் வேறுவிதமாக சொல்லி (Diplomatic word பயன்படுத்தி) இருக்கலாம்.
அஸ்ஸலாமு அலைகும் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு எங்கலை போல் வெளிநாட்டில் இருபவர்கலுக்கு நீங்கள் செய்த சேவை அரியும். உங்கள் மீது பலி பொடுபவர்கலுக்கு அல்லஹ் தகுந்த கூலி கொடுப்பான். நீஙகள் செய்த சேவைக்கு இம்மையில் இல்லாவிட்டாலும் மருமையில் கூலி கிடைகும். இன்ஷா அல்லஹ் அதிரை பிபிசி நண்பர்கலுக்கு துஆ செய்வொமாஹே. ஆமீன்
ஸ்ஸலாமு அலைக்கும்
தங்களது ஒலிப்பேட்டியை படித்தேன், "அழிக்க நினைக்கிறோம்" போன்ற கடின வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள்.அதற்காக வருந்துகிறேன் .அல்லாஹ்வின் மீது ஆணையாக அப்படி ஒரு எண்ணம் ஒன்றும் இல்லை..மற்றபடி உங்கள் விமர்சனம் எனக்கு எந்த விதத்திலும் பாதிப்பில்லை. உங்களது சில கட்டுரைகளுக்கு இட்ட பின்னூட்டங்களை பார்த்த நிறைய அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு நண்பர்கள் நான் குறை கூறுவதாக சொல்லி இருப்பதாக கூறவே உங்கள் தளத்தின் சில கட்டுரைகளை - உதாரணமாக காட்ட வேண்டி இருந்தது.
நான் ஒன்றும் திமுக அனுதாபி அல்ல..சென்ற சட்டமன்ற தேர்தலில், எனது சொந்த வலைத்தளத்தில் திமுக வரக்கூடாது என்றும் கருணாநிதி ஒன்றும் சிறந்த ராஜ தந்திரி அல்ல என்றும் கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தேன். அந்த வலைத்தளம் தர வரிசை அடிப்படையில் 42 வது இடத்தில் உள்ளது .
நன்றி இனி விளக்கம் கீழே..
//வெள்ளி நிலா ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சகோ. நிஜார் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,
// இதற்கும் முன் அபுபைஜ் என்ற பெயரில் இந்த வலைத்தள நிர்வாகி ஒருவரே அதிரை வாக்காளர்களுக்கு அபு பைஜின் அவசர வேண்டுகோள் என்ற தலைப்பில் அதிமுக வேட்பாளரை காரண காரியமின்றி புகழ்ந்து, அஸ்லாம் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும் அஜீசுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். அதற்க்கு நான் இட்டிருந்த பின்னூட்டத்தையும் வெளியிடவில்லை.//
இந்த கருத்து முற்றிலும் தவறானது என்பது எனது கருத்து. அதே கட்டுரையின் கீழ் பகுதியிலேயே அதிரை பிபிசி சார்பாக 'குறிப்பு' என்று போட்டு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதை தாங்கள் கவனிக்க மறந்தது ஏனோ?
---- குறிப்பு :
இது சகோதரர் அபுஜைதின் தனிப்பட்ட கோரிக்கையை தவிற இது பிபிசியின் நிலைப்பாடு அல்ல. இதுபோன்ற நிங்களும் கண்ணியத்தோடு கட்டுரையை அனுப்பித் தந்தால் அதிரை பிபிசி அதை வெளியிடும் --
அதே போல் அபூஜைதின் பதிவு சம்பந்தமாக மற்றொரு விளக்கத்தையும் அதிரை பிபிசியின் வாசகன் என்ற முறையில் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒரு தளத்தில் பங்களிப்பாளராக இருக்கும் ஒருவர் – அவர் பங்களிப்பாளராக இருக்கின்றார் என்பதற்காக, அல்லது நிர்வாகியாக இருக்கின்றார் என்பதற்காக - அவரது சொந்த விருப்பத்தை வெளியிடக்கூடாது என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. மற்றவர்கள் ஒரு கருத்து எழுதுவது போல் அவருக்கும் அவரது கருத்தை எழுதுவதற்கு முழு உரிமை உள்ளது. அது போல் தான் அபுஜைத் அவர்களும் தனது கருத்தை அனுபவத்தின் அடிப்படையில் ஒரு வேண்டுகோளாக மக்கள் முன் வைக்கின்றார். அது அவரது உரிமை. அது போல், நீங்களும் உங்களது வேண்டுகோளை நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கட்டுரை அனுப்பி இருந்தால் அதையும் ஒரு பதிவாக போட்டிருப்பார்கள். அதை விடுத்து, நான் பின்னூட்டம் போட்டேன் அதை வெளியிடவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளராகிய நீங்களே கூச்சலிடுவது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அதுவும் அதிரை பிபிசியில் அது சம்பந்தமாக 'குறிப்பும்' போட்டு, அதில் மற்ற வேட்பாளர்களின் ஆதரவு கட்டுரைகள் இருந்தால் அனுப்பித் தாருங்கள் - அதுவும் வெளியிடப்படும் என்று போட்டும் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டது உங்கள் தவறு தானே தவிர அதிரை பிபிசியின் தவறு அல்ல. //
அதேதான் நானும் கேட்கிறேன்,
கட்டுரையை தனிப்பட்ட நபரின் கருத்து என்று தப்பித்துகொள்ளும் நீங்கள், பின்னூட்டத்தையும் தனிப்பட்ட நபரின் கருத்து என்று வெளியிட வேண்டியத்டுதானே? அதை ஏன் வெளி இட மறுக்கிறீர்கள்? எனது பின்னூட்டம் ஒன்றும் மோசமான ஆபாசமான பின்னூட்டம் இல்லை..இது "நமது எம் ஜி ஆர்" பத்திரிகை மாதிரி உள்ளது என்ற ரீதியில்தான் பின்னூட்டமிட்டேன்..
//நீங்கள் ஆண்லைன் ஓட்டெடுப்புக்கும் - மக்கள் பரவலாக பேசிக்கொள்ளும் கருத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதிரை பிபிசி மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் ஓட்டெடுப்பில் அதிகமான வாசகர்கள், சகோதரர் அஸ்லம் அவர்களுக்கே வாக்களித்திருந்தனர். அந்த ஒட்டெடுப்பை அதிரை பிபிசி நடத்தியது தேர்தல் பிரச்சார நேரங்களின் போது. அந்த ஒட்டெடுப்பின் முடிவை அதிரை பிபிசி வெளியிட்டது சரியாக தேர்தலுக்கு முந்தைய நாள். அந்த முடிவிற்கு ஏற்றார்போலவே தேர்தல் முடிவும் அமைந்திருப்பதையே இந்த கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டி பிபிசியின் கணிப்பு உன்மையானது என்று எழுதப்பட்டுள்ளது.
ஆனால், 'காக்கையாரில்' சொல்லப்பட்டது மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருப்பதாக உள்ள செய்தி. அது அங்கொண்றும் இங்கொண்றுமாக பேசிக்கொள்ளும் ஒரு செய்தியாகவே அதில் பதியப்பட்டள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது போல் காங்கிரஸிற்கும் அதிமுகவுக்கும் தான் நமதூரில் போட்டி அதிகமாக இருக்கின்றது என்று ஊர் முழுவதும் பேசப்பட்டது உன்மைத்தான். அதை மாற்றுக் கட்சியினரை விட திமுகவினரே அதிகம் முனுமுனுத்துக் கொண்டனர். தேர்தல் நடந்த அன்று என்னிடம் பேசிய ஒரு திமுக அனுதாபி கூட 'யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியவில்லை' என்று கூறினார். அந்த அளவுக்குத் தான் ஊரில் திமுகவின் நிலைப் பற்றி பேசப்பட்டது. கண்டிப்பாக இது சென்னையில் ஓட்டுப்போட்டுவிட்டு - தேர்தல் சமயத்தில் கூட ஊர் பக்கமே தலைக்காட்டாத உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் உங்களைப் போன்று வெளியூரில் வசிக்கும் அதிரை வாசிகளுக்காக ஊரின் அன்றாட நடப்புகளை தெரிவிக்கும் வகையில் காக்கையார் ஜூவியின் கழுகார் பாணியில் ஊர் நடப்புகளைத் தெரிவித்திருந்தார். அதை பலரும் பாராட்டி வாழ்த்தி இருக்க நீங்கள் மட்டும் நச்சுப்பார்வையுடன் பார்ப்பது ஏன்?
மக்கள் பேசிக் கொள்வது என்பது வேறு மக்கள் ஒட்டளித்து கருத்துச் சொல்வது என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துக் கொண்டு பின்னூட்டமிடுவது நல்லது.//
ஆன்லைன் வாக்களிப்பை நீங்கள் வெளியிடவில்லை..வாசகர்களின் பார்வைக்கு அதை வைத்துவிட்டு அப்புறம் இதைப்பற்றி நீங்கள் பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நிர்வாகியாக இருப்பவர், ஏன் புனை பெயரில் மறைந்து எழுத வேண்டும்..? அதுவும் தேர்தல் இறுதிக்கட்டத்தில் ஏதோ அதிரை மக்கள் அனைவரும் ஆபத்தில் இருப்பது போலவும் அதைக்காக்க அதிமுக வேட்பாளர்தான் வரவேண்டும் எனபது போலவும் தலைப்பை போட்டு எழுதுவதின் உள்ளர்த்தம் என்ன?
//இதை வெள்ளிநிலா நடத்தும் தாங்கள் சொல்வதற்கு அறவே தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஏனெனில் நீங்கள் நடத்தும் வெள்ளிநிலாவை படித்த மக்கள் பலர், இது சகோதரர் அஸ்லம் வெளியிட்ட ஆதரவு நோட்டீஸா? அல்லது வெள்ளிநிலா பத்திரிக்கையா? என்று 'நக்கலாக' கேட்கின்ற அளவுக்கு உங்கள் பத்திரிக்கையில் ஒரு பக்க சார்புடைய கட்டுரைகள் நிரம்பி வழிந்தது. அது மட்டுமல்லாமல் அவருக்கு எதிராக உங்கள் உற்ற நன்பர் அஜிஸ் போட்டியிட்ட அதிமுகவுக்கு எதிராக மோடி பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நீங்கள் நடத்தும் வெள்ளிநிலாவுக்கு இந்த ஒரு பக்க சார்பு நிலை ஏன்? நடுநிலையோடு இருக்க வேண்டிய ஒரு பத்திரிக்கை உங்கள் நன்பர்களில் இருவரில் ஒருவருக்கு ஆதரவு என்றும் மற்றவருக்கு கடும் எதிர்ப்பு என்றும் நிலைபாடு எடுத்தது ஏன்? வெள்ளி நிலாவின் எந்த பக்கத்திலாவது, அஜீஸின் ஆதரவு கட்டுரைகள் இடம்பெற்றிருந்ததாக காட்ட முடியமா? ஆனால் பிபிசி அப்படி நடந்ததாக நான் கருதவில்லை. அஸ்லம் அவர்கள் பேசிய ஒவ்வொரு பிரச்சார கானொளிகளும், அது போல் அஜீஸ் பேசிய கானொளிகளும் மற்ற மற்ற வேட்பாளர்கள் பேசிய கானொளிகளும் வெளியிட்டிருந்தனர். எந்தந்த கட்டுரைகள் வந்ததோ அவை அனைத்தும் எந்த வித ஒரு பக்க சார்பும் இல்லாமல் பதிக்கப்பட்டிருந்ததாகவே நான் கருதுகின்றேன். ஆனால் உங்கள் பத்திரிக்கை அப்படி நடந்ததாக எனக்குத் தெரியவில்லை.//
நான் நடு நிலைமையாக இருக்கிறேன் என்று சொல்லவில்லை.நடு நிலைமை எனபது அப்பட்டமான போலித்தனம் எனபது என் கருத்து..ஊருக்கு நன்மை பயக்க எல்லாம் செய்கிறேன் என்று சொல்லும் நீங்கள், அஸ்லத்தின் மீது தனிப்பட்ட வெறுப்பு காரணமாக அவரை விமர்சிப்பது ஏன் என்றுதான் கேட்கறேன்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைவரிலும் - இதற்கும் முன்பு ஊருக்கு சேவை செய்து வந்தது - நமக்கு நாமே திட்டத்தில் நடுத்தெருவில் சாலை போட்டது, தனது சொந்த செலவில் குப்பை தொட்டிகளை வைத்தது, ஆயிஷா மகளிர் அரங்கத்தின் மூலம் வாரம் வாரம் மார்க்க அறிஞர்களை கொண்டு பயான் நடத்துவது, குறிப்பாக அல் அமீன் பள்ளிவாசலுக்கு முதன் முதலாக ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் வழங்கியது.போன்ற சேவைகளை இவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் செய்தார்களா?
அவன் நிற்கிறான் - அதனால் நான் நிற்கிறேன் என்பவர்களா ஊருக்கு நன்மை செய்யப்போகிறார்கள்?
மேலும் நீங்கள் குறிப்பிடுவதுபோல வெள்ளிநிலா பத்திரிகை அஸ்லம் சார்பாகத்தான் வந்தது..ஆனால் அஜீஸை விமர்சித்து ஏதும் வரவில்லை..அவர் என் உற்ற நண்பர்தான்..அதனால்தான் அவரைப் பற்றி உங்களைவிட எனக்கு தெரியும்.
மோடி ஜெயலலிதா பற்றிய கட்டுரை பற்றி கேட்கிறீர்கள்...நான் ஏற்கனவே -
அதிரை எச்பிரச்ஸ் வலைத்தளத்துடன் நான்கு மாதங்களுக்கு முன்பே போட்ட ஒரு ஒப்பந்தம் அனைவருக்கும் தெரியும்..அதாவது அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை நான் எப்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே அந்த ஒப்பந்தம்.கடந்த நான்கு மாதங்களாக வெளிவரும் வெள்ளிநிலாவை நீங்கள் கவனித்து வந்தீர்கலேயாயின் தெரிந்திருக்கும்
இந்த கட்டுரை சென்ற மாதம் அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் வெளிவந்தது .அதே வெள்ளிநிலாவில் குஜ்ஜார் இனமக்களுடன் முஸ்லிம்களை காவல்துறையினர் தாக்கிய செய்தி வந்துள்ளது, மேலும், யாருக்கு எனது வாக்கு என்ற அதிரை எக்ச்ப்ரச்சின் மற்றொரு கட்டுரையும் வெளி வந்துள்ளது. வெள்ளிநிலா ஒரு மாதப்பத்திரிக்கை.எனவே போன மாதம் வந்த கட்டுரையைத்தான் நான் பிரசுரித்திருக்கிறேன்.அது அஜீஸை எதிர்த்து என்று நீங்கள் கருதினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..மேலும் அந்த கட்டுரையை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன ஆதங்கம்..ஜெயலலிதா நல்லவரா?
//இதே அஸ்லம் முதலில் அதிமுகவிடம் சீட் கேட்டு போயிருந்தாரே அப்படி சீட் கிடைத்திருந்தால் இதே கட்டுரையை வெளியிட்டிருப்பீர்களா? மாட்டீர்கள். அதற்கு மாறாக திமுக – பாஜக கூட்டு பற்றியும்;, கோவை கலவரம் - அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு பற்றியும் எழுதி திமுகவை கிழித்திருப்பீர்கள். காரணம், உங்கள் நோக்கமெல்லாம் உங்கள் ஆதரவாளர் அஸ்லம் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அவர் எந்த கட்சியில் இருந்தால் என்ன? எங்களுக்குத் தேவை பதவி தான். அது யாரிடமிருந்து எப்படிக் கிடைத்தால் என்ன? என்ற கொள்கையை வைத்துக்கொண்டு ஒரு பக்க சார்பை பற்றி பேசுவது வெட்கக்கேடு என்பதே என் தனிப்பட்ட கருத்து.//
நிச்சயமாக நான் அஸ்லம் பக்கம்தான் நின்றிருப்பேன்..
காரணம் நான் அதிமுக காரனோ திமுக காரனோ அல்ல..ஊருக்கு தற்போது தலைவராக வரவேண்டிய தகுதி யாருக்கு உள்ளது என்பதுதான் முக்கியமே தவிர, கட்சி அல்ல..
நான்கு வருடங்களுக்கு முன்பு நமது ஊரில் ஒரு வார்டுக்கு மட்டும் தேர்தல் (எந்த வார்ட் எனபது மறந்துவிட்டது) அல் அமீன் பிரச்சினை மையமாகக்கொண்ட அந்த தேர்தல் நடைபெட்ட்றது. அப்போது வெளிவந்த வெள்ளிநிலா திமுக வுக்கு எதிராக, அப்போது அதிமுக வேட்பாளராக போட்டி இட்ட சகோதரர் தமீமுக்கு முற்றிலும் ஆதரவாக வெளிவந்தது.
ஒன்று மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்கிறேன் அப்போதும் ஜே . மோடி கட்டுரை நிச்சயமாக வெளிவந்திருக்கும் .ஏனென்றால் அந்த கட்டுரைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டது.அஸ்லம் அவர்களது பேட்டி கடைசி நேரத்தில் இணைக்கப்பட்டது.
நன்றி..
சகோதரர் அதிரை தம்பி யாரென்று தெரிவித்தால் நல்லது..
நான் எனது சொந்த பெயரில்தான் விமர்சனங்கள் வெளியிடுகிறேன்.
மின்னஞ்சல் வழி கருத்து :
அதிரை BBC தேர்தல் நிலைப்பாடு !
சகோதரர் முஹம்மது மிக தெளிவாக தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் .
தேர்தல் அன்று கருத்து கணிப்பில் தி மு க ஆதரவு என்று துணிச்சலாக வெளியிட்ட தகவல் ஒன்றே போதும் அதிரை BBC நடு நிலைமையோடு இருப்பதை காணலாம். நியாயமாக நடப்பவர்களை தேவை இன்றி விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.
அப்துல் ரஜாக்
நடுநிலை போலித்தனம் என்று சொல்லும் சகோதரர் நடுநிலையை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது
பொதுவாக பாகிஸ்தானியர்கள் அரபு நாடுகளில் இப்படி செய்வார்கள் அதாவது , தனக்கு ஒருவரிடம் நெருக்கம் வேண்டும் என்றால் மற்றவரை அவருக்கு விரோதியக்கி தங்களுடைய நெருக்கத்தை அதிகபடுத்தி கொள்வார்கள்
தேவை இல்லாத விதண்டாவாதம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
//நமது எம் ஜி ஆர்" பத்திரிகை மாதிரி உள்ளது என்ற ரீதியில்தான் பின்னூட்டமிட்டேன்..//
இது கருத்து அல்ல ஆபாண்டமான குற்றச்சாட்டு நிச்சயமாக தவிர்க்கபட வேண்டியவையே
//நிச்சயமாக நான் அஸ்லம் பக்கம்தான் நின்றிருப்பேன்..//
ஆதிமுக ஆதரவு வலைப்பூ அதிரை பிபிசி என்று சொல்லும் நீங்கள் உங்களுடைய இந்த வார்த்தைக்கு அங்கிகாரம் அல்லது certificate இங்கு எதிர்பார்ப்பது தவறான முகவரி என்றே கருதுகிறேன்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment