அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 18, 2011

S.O.S அறைகூவல்!

மேலே குறிப்பிட்டுள்ள SOS என்ற சொல் , கப்பல் நடு கடலில் தத்தளிக்கும் போது அவசர உதவி கேட்டு கரைக்கு அனுப்பும் தகவல்தான் SOS !

 "SAVE OUR SOUL".  அதே நிலைதான் அதிரைக்கும் பொருந்தும்.. நம் மக்கள் தற்போதுள்ள இன்னல்களிலிருந்து காப்பது என்பது நம் சமுதாயத்தின் கடமை.  நாம் அனுபவித்த சுகாதார குறைவுகள், கேடுகள்  ,  மின் கம்பங்கள் மற்றும்  மின் வயர்கள்  சீராக இல்லாத சூழ்நிலை , அகல ரயில் பாதை திட்டம் உள்ளாட்சி மன்றத்தால் நிறைவேற்ற முடியாது என்பது யாவரும் அறிந்ததே, அதே சமயம் இதற்க்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் ஒரு தீர்மானத்தையாவது இயற்றி இருக்கலாமே !  அமைச்சர்கள் பல பேர், நமதூர் ஆட்சியாளர்கள்களின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பல முறை  கலந்து கொள்ள வந்தபோதும் ஏன் கோரிக்கை வைக்க முன்வரவில்லை?
ஆலடிகுளம், மரைக்கா குளம் , செக்கடி குளம், மன்னப்பங்குளம் ஆகியவற்றிற்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் வருவதை சிறிய வயதில் இருந்து பார்த்திருக்கிறோம், ஆனால் பல காலங்களாக வாய்க்கால் வழியாக தண்ணீர் வருவதை பார்க்க இயலவில்லை , மாறாக மழை நீர் மூலமே மேற்க்கண்ட குளங்கள் நிரம்புகின்றன.. இதற்காக என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ?
புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு  முன் அனுபவம் தேவை இல்லை. அவர்களின் தகுதி என்னவெனில் ,உழல்லற்ற ஆட்சியை தரவேண்டும்  மக்களுக்காக சேவை செய்யவேண்டும் . நமது தேவை .. தனிப்பட்ட கொள்கை கோட்பாடுகள்   நல்ல நிலையில் உள்ளவரே சேர்மனாக முடியும் என்ற போதிலும், தன்னை சீர்படுத்தி வரும் காலங்களில் செம்மையான ஆட்சி தர முயற்சிப்போரை ஆதரிக்க வேண்டுகிறோம்..

இரட்டை இலையா ?   உதய சூரியனா ?  அல்லது காங்கிரஸ் ?

காங்கிரஸ்க்கு சற்று ஓய்வு கொடுப்போம் !!!

ஆளும் கட்சிக்கு வாய்ப்பு கொடுப்போம் ! 


ஆளும்கட்சி என்று சொல்வதற்கு ஒரு சுயநலம் இருக்கின்றது நமதூருக்கு 


கிடைக்கவேண்டிய அரசியல் பலன் ஏராளம் !


சிந்திப்பீர் ! செயல் படுவீர் !

நாளை நடக்க இருக்கும் தேர்தல் நம் சமுதாய ஒற்றுமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத   வகையில் அமைய வேண்டும் ! எல்லாம் வல்ல இறைவன் உதவிபுரிவானாக ஆமீன் !

நன்றி
இப்படிக்கு
அகமது முகைதின் 

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.