அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 17, 2011

அதிரை பொதுமக்களுக்கு அபுஜைதின் அன்பான அவசர கோரிக்கை

முன்னாள் துணை முதலமைச்சருடன் நான்
அன்பார்ந்த அதிரை பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நாளை நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் உங்களிடம் நேரிடையாக எனது அபிலாசைகளையும், கோரிக்கையும் வைக்கிறேன்.

நான் கல்லூரியில் பயிலும் போதிலிருந்து இணையத்தில் நீந்தத் தொடங்கிய காலம் 2002 முதல் நமதூர் அதிரையின் பல்வேறு செய்திகளையும் அவலங்களையும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களுக்கும் உள்ளூரில் இருப்பவர்களுக்கும் அறியத்தரும் பொருட்டு இணையத்தில் பல்வேறு செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளேன். அதனடிப்படையில் பல்வேறு கட்டத்தில் பல சம்பவங்களையும், தகவல்களையும் தரும்போது சில நேரங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் சந்தித்துள்ளேன்.

அதிரையில் கொசுத்தொல்லையாகட்டும், சாக்கடையாகட்டும், மக்களை பாதிக்கின்ற அரசியல் நடவடிக்கைகள், சமூக விரோத செயல்கள், என பலவற்றையும் எழுதியுள்ளேன். நன்மையை கருதி செயல்பட்டதால் எனது பெயரை எங்கும் பயன்படுத்தியது இல்லை.

தமிழக, இந்திய அளவிலான அரசியல் செய்திகளையும், என் அறிவிற்குட்பட்டு அலசி எழுதியுள்ளேன். அல்லாஹ்வின் கிருபையால் நான் எழுதிய சில கட்டுரைகள் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்ததால், சில ஆண்டுகள் கழித்து என்னிடமே வந்துள்ளன. பிரபல மாத இதழ்களிலும் முதன்மை கட்டுரைகளாக வேறு பெயர்களில் வெளியாகியுள்ளது.

இவற்றையெல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான காரணம் என்னை நான் அறிமுகப்படுத்திக்கொள்வதோ, பகிரங்கப்படுத்திக்கொள்வதோ அல்ல. மாறாக, கடந்த சில ஆண்டுகளில் நமது ஊரின், தமிழகத்தின் அரசியல் நடவடிக்கைகளை நன்கு ஊர்ந்து கவனித்து வருபவன் என்று நீங்கள் அறிந்து எனது கோரிக்கையை செவி சாய்ப்பீர்கள் என்கிற நல்லெண்ணதிலேயே.

நிற்க.

நேரிடையாக விசயத்திற்கு வருகிறேன். தற்போது நாளை நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நான் அறியாத, நீங்கள் அறிந்த சிலர் போட்டியிடுகின்றனர். அவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் பரிச்சயமானவர்கள் பற்றி சில குறிப்புகளையும் எனது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். அரசியலுக்கு, சமூக வாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனம் கூடாது என்று யாரும் சொல்லப் போவதில்லை. விமர்சனங்களை தாங்காதோர் அரசியலுக்கு வருவதில்லை. அப்படி விமர்சனங்கள் எழுப்ப சக்தி பெறாவிட்டால் அரசும், ஆட்சியாளர்களும் தங்களை சர்வாதிகாரிகளாக, மன்னர் ஆட்சியாளர்களாக கருதிக்கொண்டு மக்களை அடிமைகளாக்கிவிடுவர்.

முதலாவதாக நான் எனக்கு நன்கு பரிச்சயமான முனாப் காக்கா அவர்களைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
சிறு வயது முதலே முனாப் காக்கா அவர்களை நன்கு அறிந்தவன். ஒரே தெருவில் பல ஆண்டுகள் இருந்த்தால் அவர்களை நன்கு அறிந்திருக்கிறேன். அவர்களது தன்மையான, அமைதியான பேச்சுக்கள், சேவைகள், செயல்பாடுகள், அவர்களது தகுதி அனைத்தையும் நன்கு அறிவேன். அவர்கள் பைத்துல்மாலில் தொடக்க காலம் முதல் மிக அரியதொரு சேவையினை செய்துவருவதை நன்கு அறிவேன். குறிப்பாக ஹலால், ஹராம் பேணக்கூடியவர். அந்த அடிப்பையில் நமது ஊருக்கு தலைவராக வருவதற்கு மிகவும் பொருத்தமானவர் முனாப் அவர்கள். ஆனால், அரசியல் வாழ்க்கைக்கு அவரின் தகுதி பற்றி அலசும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1995- 2000 உள்ளாட்சித் தேர்தலில் புதுமனைத்தெரு வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால் தொகுதிக்கு சரியாக செய்யவில்லை என்று பொதுமக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதால் கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை நினைவுகூறுகிறன்.

அதுமட்டுமில்லை, தற்போது அவர் சார்ந்திருக்கும் முஸ்லிம் லீக் கட்சியில் சில மாதங்களுக்கு முன் நமதூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பொதுமக்களுக்கு இனாமாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. சமூகத்தின் ஏழை எளிய மக்களை அரவணைக்கும் பைத்துல்மாலில் பொறுப்புதாரியாக இருந்துகொண்டு, மாதம் 250 ரூபாய் ஏழைகளுக்கு கொடையளித்துக்கொண்டு, வறுமையைப் பற்றி அறிந்து கொண்டே, முஸ்லிம் லீக் கட்சியினர் பல ஆயிரம் மதிப்புள்ள பணத்தை இனாமாக கொடுப்பதை எப்படி பார்த்து அந்த கட்சியில் இருக்க முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அது மட்டுமின்றி, முனாப் அவர்கள் மிகவும் சாதுவானவர். யாரையும் எதிர்த்து பேசாதவர். அந்த அடிப்படையில் அவர் பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எப்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அணுகி ஊருக்கான தேவைகளைப் பெற்றுத் தருவார் என்பது கேள்விக்குறியே.

அது மட்டுமின்றி, முஸ்லிம் லீக் கேகே ஹாஜா அவர்களை மமூசெ குடும்பத்தினர் அனுகி திமுக ஓட்டுகளை, இவர் சார்ந்த பகுதி ஓட்டுக்களைப் பிரிக்க முஸ்லிம் லீக் சார்பில் ஒருவரை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்க சூழ்ச்சிகளை செய்துள்ளதாக ஊரில் பரவலாக பேசப்படுகிறது. அதில் முனாப் பலிகடாகியுள்ளார். அதனால் முனாப் அவர்களுக்கு விழும் ஓட்டு அநாவசிய ஓட்டு என்பது எனது கருத்து. கடைசி நேரத்தில் அய்டா அமைப்பு முனாப் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தூண்டி இப்படி செய்திருக்குமோ என்று கருதுகிறேன். இதையே மூன்று மாதங்களுக்கு முன் எடுத்திருந்தால் பாராட்டியிருப்பேன்.

மமுசெ குடும்பத்தைப் பற்றி அதிகம் சொல்லத்தேவையில்லை. நன்கு பரிச்சயமான குடும்பம். நமதூரில் என்ன காரணமோ, சேது ரோட்டிற்கு பின்னால் உள்ள பகுதிகளை மறைந்த அப்துல்வகாப் அவர்கள் கண்டு கொண்டதே இல்லை. அதிரையில் அதிகாரத்திற்குட்டு வரி வசூலிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இப்பகுதி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய காலம் 20 ஆண்டு காலம் முதல் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கால்வாயாகட்டும், தெருவிளக்குகளாகட்டும், கொசுக்கடியாகட்டும் ஒன்றுமே கண்டுகொள்ளப்படவில்லை.

அல் அமீன் பள்ளி விசயத்தில், குணசேகரனை வைத்துக்கொண்டு அல்லது குணசேகரன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற விசயங்கள் வெட்டவெளிச்சம். பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு எதிர்ப்பாக கலிமா சொல்பவர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியப்படுவதை தவிர வேறு என்ன?

ஜனாப் அஸ்லம் அவர்களை சிறுவயது முதலே தெரியும். சிங்கப்பூரிலிருந்து பவுசாக வந்து நோன்புக்காலங்களில் நண்பர்களுடன் மந்தி உணவு சமைத்து மகிழ்ச்சியாக கழிப்பார். அவ்வப்போது இவர் இவ்வளவு தர்மம் செய்தார் என்று வெளிப்படையாக தெரியும் அளவில் தான தர்மங்களை
செய்துள்ளார். அந்த வரிசையில் தான் அவர் வெளிப்படையாக மமுசெ குடும்பத்தை எதிர்த்து ஒருநாள் குப்பைகள் அள்ளப்படாததை கண்டித்து ரோட்டில் எறிந்து போராட்டத்தை துவக்கினார். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் ஏதோ காரணத்தால் (மறைமுக காரணம் என்று கூறப்படுகிறது) அக்குடும்பத்தினருடன் உறவாடி கடந்த தேர்தல்களில் காங்கிரஸிற்கு ஓட்டுகளை பெற்று ரெங்கராஜனின் விசுவாசியாக மாறினார்.

கடந்த நோன்பு 27ல் நடைபெற்ற விசயங்கள் ஊரே கூடி கண்டுகளித்தது. அன்றே பலரிடம் கூறினேன், நோன்பு 27 கிழமை இரவு தனது அரசியல் வாழ்க்கையை துவங்குகிறார் என்று. அன்று கதமுல் குர்ஆனில் செய்யப்படும் விசேச துஆ இவர் ஏற்படுத்திய பிரச்சினையால் செய்யப்படவில்லை.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க தேர்தலில் இவர் ஆடிய ஆட்டங்கள் கண்கூடு. அப்போதே சங்கத்தை இரண்டாக பிரித்துவிட துடித்ததாக பேசப்பட்டது. அப்பொழுதே அவர் சங்கத்தை கைப்பற்ற நினைத்திருந்தது தற்போதைய உள்ளாட்சித் தேர்தலை பிடிப்பதற்குத்தான் என்பது மறமண்டைகள் பலருடன் எனக்கும் தெரியாமல் போய்விட்டது.

தற்போது தேர்தலில் போட்டியிடுவதுடன் நில்லாமல் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிறுத்தியுள்ள உறுப்பினர்களை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியதோடல்லாமல், திமுக பணத்தை தாராளமாக வழங்கி வருகிறது. சங்கம் சார்பில் வேட்பாளர்களை நிறுத்திய பிறகு திமுகவினருக்கு அனுப்பிய கடிதத்தில் இப்பகுதியில் கட்சி ஆட்களை நிறுத்தினால் எதிர்த்து வேலைசெய்வோம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது, தியாகங்களை பெருமையாக கருதும் திமுகவைச் சேர்ந்த பாட்சா மரைக்காயர் குடும்பத்தினர் திமுகவிற்கு எதிராக சங்கம் செயல்படுமானால் சங்கத்தை இரண்டாக பிரிப்பதற்கும் துணிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மார்க்கம் சொல்லிய வழிமுறைப்படி மசூரா செய்து குமுகாயத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை எதிர்த்து திமுகவினர் வெறித்தனமாக செயல்படுவதால் திமுகவினருக்கு எதிராக ஆலிம்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். தனது தலைவர் கருணாநிதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் அறிவித்த அறிவிப்பிற்கு மாறாக, உள்ளூர் பிரச்சினைகளை, உள்ளூர் மக்களை சுமூகமாக அனுகத்தெரியாதவர்கள் நாளை ஆட்சிக்கு வருவதை எண்ணி பயப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல வேண்டும். அஸ்லம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவர்.

அஜீஸ் அவர்கள் தேர்தல் மனுதாக்கலின் போது நடைபெற்ற சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று இஸ்லாம் வெறுத்த செயலை அவர் ஒதுக்கியது. மற்றொன்று அவரது துணிச்சல். ராகு காலம் பற்றிய அவர்களது பேச்சை கேட்காவிட்டால் தனக்கு வேலைசெய்யாமல் போய்விடுவரோ என்று அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்பட்டவிதம் பாராட்டப்படவேண்டியது.

மிக சமீபத்திலேயே அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டதோடல்லாமல், சசிகலா குடும்பத்தினர் வரை சென்று அனுக கூடியவர் நாளை ஊருக்கான தேவைகளை பெற்றுத் தருவது எளிதாகலாம். இவர் சீட் வாங்கி வந்த விதத்தை வைத்திலிங்கமே வியந்திருக்கிறார். நமதூரில் அதிகாரிகளை அதிகாரத் தோரணையுடன் வேலைவாங்க தகுதியானவராக நான் இவரை கருதுகிறேன். 

மனிதர்கள் பலர் தவறுகளிலிருந்து மீண்டு தான் புனிதர்களாக வருகின்றனர். அந்த வகையில் அஜீஸ் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், சமூகத்தை சார்ந்து வாழ்பவர்கள், அவர்கள் அந்தஸ்து கவுரவம் என்று வரும்போது காலத்தின் காரணமாகவோ, அல்லது தாங்களாகவே திருந்திக்கொள்வார்கள்.

அந்த வகையில் நாம் துடிப்பான, தைரியமான, அரசியல் செல்வாக்குடன் கூடய ஒருவரை தேர்ந்தெடுப்பது இந்த ஊருக்கு பொருத்தமானது. உங்கள் உற்றார் உறவினரை இவருக்கு வாக்களிக்க சொல்லுங்கள். உங்கள் பகுதி வார்டுகளில் சங்கம் நிறுத்தியுள்ள எட்டு நபர்களை தேர்ந்தெடுத்து சமூக ஒற்றுமை காப்பாற்றுங்கள்.

எனது கோரிக்கைக்காக நேரம் ஒதுக்கி படித்தமைக்கு நன்றி.

வஸ்ஸலாம்
அபுஜைத்

குறிப்பு :
இது சகோதரர் அபுஜைதின் தனிப்பட்ட கோரிக்கையை தவிற இது பிபிசியின் நிலைப்பாடு அல்ல. இதுபோன்ற நிங்களும் கண்ணியத்தோடு கட்டுரையை அனுப்பித் தந்தால் அதிரை பிபிசி அதை வெளியிடும் .

4 பின்னூட்டங்கள்:

skarfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஜீஸ் அவர்களைபோல் மனம் திறந்து எழுதியதர்க்கு
என்னுடைய வாழ்துக்கள்.

இரண்டு ரக்கது தொழுவிட்டு நல்ல தலைவரை எங்கள்

ஜமாஅதுக்கு கொடுபாயாக யா அல்லாஹ் என்று துஆ

செய்து ஓட்டு போட போகலாமே.

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//மனிதர்கள் பலர் தவறுகளிலிருந்து மீண்டு தான் புனிதர்களாக வருகின்றனர். அந்த வகையில் அஜீஸ் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள், சமூகத்தை சார்ந்து வாழ்பவர்கள், அவர்கள் அந்தஸ்து கவுரவம் என்று வரும்போது காலத்தின் காரணமாகவோ, அல்லது தாங்களாகவே திருந்திக்கொள்வார்கள்//

அருமை, ஆனால் எதார்த்தத்தில் இதற்கு முரணாக அதிகபேர் மாறி விடுகின்றனர், பதவி, செல்வாக்கு வரும்போது, இவரும் மாறிவிட்டால் (அல்லாஹ் பாதுகாக்கணும்), தாங்கள் மேலே குருப்பிட்டதை வாபஸ் வாங்குவீர்களா, அல்லது போட்ட ஓட்டை செல்லாததாக்க முடியுமா?

//அது மட்டுமின்றி, முனாப் அவர்கள் மிகவும் சாதுவானவர். யாரையும் எதிர்த்து பேசாதவர். அந்த அடிப்படையில் அவர் பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எப்படி அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அணுகி ஊருக்கான தேவைகளைப் பெற்றுத் தருவார் என்பது கேள்விக்குறியே//

முரட்டுத்தனமாக நடந்தால்தான் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அணுகமுடியும் என்பது உங்களுடைய புரியாமை மற்றும் உங்களுடைய சிறுபிள்ளைதனத்தை காட்டுகிறது. சமீபத்தில் அண்ணா ஹசாரே ஏற்படுத்திய புரட்சியை நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் சொல்லும் நபர் மாறினால் போச்சு மாறவில்லை என்றால் நாம் போய்விடுவோம். ஆனால் சகோ. முனாப் அவர்கள் அப்படி இல்லை, இதை உங்கள் மனசாட்சி அல்ல இதை படிக்கும் அனைவரது மனசாட்சியும் ஏற்றுக்கொள்ளும்.

//முஸ்லிம் லீக் கேகே ஹாஜா அவர்களை மமூசெ குடும்பத்தினர் அனுகி திமுக ஓட்டுகளை, இவர் சார்ந்த பகுதி ஓட்டுக்களைப் பிரிக்க முஸ்லிம் லீக் சார்பில் ஒருவரை நிறுத்தி ஓட்டுகளை பிரிக்க சூழ்ச்சிகளை செய்துள்ளதாக ஊரில் பரவலாக பேசப்படுகிறது. அதில் முனாப் பலிகடாகியுள்ளார். அதனால் முனாப் அவர்களுக்கு விழும் ஓட்டு அநாவசிய ஓட்டு என்பது எனது கருத்து. கடைசி நேரத்தில் அய்டா அமைப்பு முனாப் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது//

மேல் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கு சகோ. முனாப் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையாக நோட்டீஸ் அடித்து மறுத்துள்ளார், அப்படி சொல்லியும் நீங்கள் திரும்ப அதை குறிப்பிட்டிருப்பது உங்கள் நிலைப்பாட்டில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, நீங்கள் யார் என்பதும் எந்த வலைத்தளத்தில் அங்கம் வகிக்கிறீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும், உங்களில் ஒருதலைபட்ச கட்டுரையால் உங்கள் வலைத்தளத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

Mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

indha katturai yai munbay veli iturundhal nanraha irundhu irukkum

adirai nalan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யார் தோற்றாலும் ஜெய்த்தாலும் கட்டுரையாளருக்கு ஒரு அமெரிக்கா விசா உண்டு

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.