அதிரையில் கல்வி என்ற ஆவணப்படம் முதல் பாகம் ஏற்கனவே வெளியிட்டு அனைவரின் ஆதரவை பெற்றது . நேரமின்மையால் அடுத்த பாகத்தை வெளிய்டுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. மிகச் சிறப்பாக செய்யவேண்டும் என்ற காரணத்தால் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், சமுக ஆர்வளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒரு சிலர் பேட்டி எடுத்து இதுவரை முடிக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரு சில வேலைகள் மீதமுள்ள நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கவேண்டும் என்று உங்களின் கருத்துக்களை எங்களுக்கு மடலில் மூலமாக் பின்னுட்டத்தின் மூலமாகவே தங்களின் கருத்தக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
அதிரை பிபிசி குழு
adiraibbc@gmail.com
7 பின்னூட்டங்கள்:
ஐயா !
மாணவர்களிடமிருக்கும் கருத்துக்களையும் கேடுத் தாருங்களேன் !
மாணவர்கள் சுட்டும் தவறுகள் / நல்லவைகள் ஆசிரியர்களிடம் அதற்கான பதிலையும் கேட்டுத் தாருங்கள் !
பள்ளியிலிருக்கும் சுகாதாரங்களையும் அப்படியே அலசினால் நலாமே !
நல்ல முயற்சி. பேட்டிகள் சலிப்பூட்டும் வகையில் அதிகபடியான நேரத்தை எடுத்துவிடக்கூடாது. கோர்வையான காட்சியமைப்பு, செய்திகள் என அமைவதையே அனைவரும் விரும்புவர்.
அஸ்ஸலாமு அலைக்கும் ,
10 ஆம் வகுப்பு மாணவியின் தந்தை என்ற முறையில் தக்க தருனத்தில் தகுதியுள்ளவர்களிடம் ஒரு விண்ணப்பம், காதிர் முஹிதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு (ஆங்கில வழி) மாணவிகள் பல பேர்களுக்கு இதுவரை (வகுப்பு ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகியும் ) அறிவியல் மற்றும் கணக்கு பாடபுத்தகங்கள் தரப்படவில்லை. இது மாணவிகளின் மனநிலை, படிக்கும்திறன் மற்றும் ஆர்வத்தையும் வெகுவாக பாதித்துள்ளது எனவே தயவு செய்து தகுந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம் .
தங்களின் கருத்தினை முறைப்படி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து என்ன நிலை என்று அறியத் தருகிறோம், விரைவில் இன்ஷா அல்லாஹ்."
அதிரை பிபிசி குழு
தங்களின் உடனடி கவனதிற்கு நன்றிகள்.
பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்தீர்களா என்பதை தவுசெய்து அறியத்தரவும்.
வஸ்ஸலாம்
புத்தகங்கள் கிடைத்து விட்டதாக அறிந்தேன். தங்களின் மேலான கவனத்திற்கு நன்றி.
வஸ்ஸலாம்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment