அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 29, 2011

துணைத் தலைவர் தேர்தல் -நடந்தது என்ன !?


இதுவரை என்றுமே இல்லாத அளவுக்கு, கடந்த ஒரு வாரமாக அதிரையில் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்பட்ட பேரூராட்சித் துணைத்தலைவருக்கான தேர்தல் ஒரு வழியாக இன்று (29-10-2011) நடந்து முடிந்து, அதிமுகவின் அதிரை நகரச் செயலாளர் பிச்சை துனைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவருக்கு ஆதரவு 12, எதிர்ப்பு 10.

அதிமுகவிற்கு என்று போதுமான உறுப்பினர்கள் பலம் இல்லாததால், தொடக்கம் முதல் அவ்வளவாக அக்கரை காட்டாத அதிமுகவினர், தேர்வாகியுள்ள மற்ற சில உறுப்பினர்கள் மற்றும் முக்கிய ஜமாஅத்தார்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே துணைத் தலைவர் பதவியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர்.

எதிர்தரப்பினர் குதிரை பேரத்தில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருதரப்புக்கும் இருந்தாலும், ஆளும் கட்சி என்ற ஒரு பெரும் பலத்தை வைத்தே தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக தரப்பு.

அதிமுகவின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைத்து அவர்களது வேலையை இலகுவாக்கியதில் பெரும் பங்கு அதிரை மமகவினருக்கு உண்டு என்பதையும் நன்றியுடன் நினைவுகூறுகின்றனர் அதிமுகவினர். இன்னும் சொல்லப்போனால், பிச்சை வெற்றிபெற்றதில் அதிமுகவை விட மமகவினரே அதிக முயற்சி எடுத்ததாகவும் தகவல்.

முதலில், திமுக தரப்பில், கரையூர் தெருவைச் சேர்ந்த பாஞ்சாலன், போட்டியிடுவார் என்று செய்தி வெளியானது. ஆனால், என்ன காரணத்தினாலே அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள பின்னர், அதிரை நகர திமுகவின் துணைச் செயலாளர் அப்துல் காதர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் தொடக்கம் முதலே நகரச் செயலாளர் பிச்சையே துனைத்தலைவருக்கான போட்டியில் நிறுத்தப்பட்டார்.

சில உறுப்பினர்கள் விலைபோய் விடுவார்களோ என்ற அச்சத்தில் இரு தரப்பிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, உறுப்பினர்களை பாதுகாக்கும் வழிவகைகளையும் கையாண்டதால், பல உறுபப்பினர்களை இரண்டு நாட்களாக ஊரில் காணமுடியவில்லை. இறுதியாக அனைத்து உறுப்பினர்களும் இன்று காலை பேரூராட்சி அலுவலகம் வந்து சேர்ந்தனர்.

காலை முதலே பேரூராட்சி அலுவலகம் என்றுமில்லாத வகையில் அதிக பரபரப்புடனும் - எதிர்பார்ப்புடனும் காணப்பட்டது. யார் வெற்றி பெறுவார் என்று பலரின் தொலைபேசிகளும் அலர, பலருக்கும் படபடக்க, இறுதியில் அதிமுவின் வேட்பாளர் பிச்சை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கரகோஷம் விண்னைப் பிளந்தது. சிலர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாற்று மதத்தவர் என்ற பேதம் பார்க்காமல், ஏதோ தாங்களே வெற்றி பெற்றது போல் அனைவரின் முகத்திலும் ஆனந்தத்தை காண முடிந்தது. ஊருக்கு சேவை செய்பவர்களை இந்த ஊர் என்றுமே நன்றி மறவாது என்பதை பறைசாற்றும் முகமாக, பிச்சை அவர்களின் வெற்றி அமைந்தது என்றே சொல்லவேண்டும். அது மட்டுமல்ல, பெரும்பான்மை உறுப்பினர்கள் முஸ்லீம்கள் என்றாலும், துனைத்தலைவர் பதவியை ஒரு மாற்று மதத்தவருக்கு விட்டுக்கொடுத்ததன் மூலம், அதிரை நகரம் தொடர்ந்து மதநல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருன்றது என்றே அனைவரும் கூறுகின்றனர்.

சகோ. பிச்சை அவர்களின் வெற்றி அதிரை மக்களை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். காரணம், தொடக்க காலம் முதல், அனைத்து மதத்தினரின் நன்மதிப்பை பெற்ற ஒருவர், குறிப்பாக பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்களுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் செயல்படும் ஒருவர் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிச்சையின் வெற்றியின் மூலம் நிறைவேறியுள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர். இவரின் வெற்றியை திமுகவைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தது தான் ஹைலைட்.

நடந்து முடிந்த துணைத்தலைவர் தேர்தலால், ஊரின் மற்ற ஜமாஅத்களைவிட அதிக பாதிப்புக்குள்ளானது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமே. சங்கம் சார்பில் வெற்றிபெற்ற இரு வேட்பாளர்களும் துணைத்தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் சங்க நிர்வாகிகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லவேண்டும். காரணம், இந்த சங்கத்திற்கு உட்பட்டவரான நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்கள் திமுகவிற்கே ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, சங்க நிர்வாகம் அதற்கு இசைந்து போகலாமா என்று முடிவெடுக்க இருந்த நிலையில், 19வது வார்டில் சங்கம் சார்பில் வெற்றி பெற்ற சௌதா அஹமது ஹாஜா அவர்கள், இதற்கு ஆட்சோபனைத் தெரிவித்து இருக்கின்றார். 'சங்கத்திற்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி - பல சங்க வேட்பாளர்கள் தோற்க காரணமாக இருந்த திமுகவை எப்படி ஆதரிக்கமுடியும்? என்றும் சங்கத்திற்கு எதிராக காவல் துறையிடம் புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரிக்க முன்வருவது நியாயமாகுமா? என்பது போன்ற நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், இறுதியாக உறுப்பினர்கள் முடிவுக்கே விடுவது என்று நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இதனால், திமுக தரப்பிரனர் சங்கத்திற்கு எதிராக கோபமடைந்தனராம். இறுதியாக ஒரு உறுப்பினர் திமுகவிற்கும் மற்றொரு உறுப்பினர் அதிமுகவிற்கும் வாக்களித்துள்ளனர்.

இது போல், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களும், மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஆக மூவரும் அ.தி.மு.க.வெற்றிக்கு முக்கிய கரணமாக இருந்திருக்கின்றனர்.


வரலாற்றில் இதுவரை இல்லாமல் முதன் முறையாத அதிரையில் அதிமுக துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணைத் தலைவர் தேர்தல் நடந்தது முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் அஸ்லம் அவர்கள், இந்த பதவிக்கு புதியவர் என்பதால், முன்னனுபவமுள்ள துனைத்தலைவரின் ஒத்துழைப்போடு சீரிய முறையில் வழி நடத்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். அதற்கேற்ப துணைத் தலைவரும் சேர்மன் அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைத்து கொடுத்து அனைத்து நலத்திட்டங்களும் ஊருக்கு கிடைக்க முழு முயற்சி செய்யவேண்டும்.

'ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பேதம் பாராமல் இருவரும் சேர்ந்து செயல்பட்டு ஊருக்கு நல்லது செய்தால் சரி தான்' என்று பொதுமக்கள் பேசுவதும் நமது காதுகளுக்கு விழத்தான் செய்கின்றது.

42 பின்னூட்டங்கள்:

hunaif said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒன்றுமில்லாத துணைத்தலைவர் பதவி கிடைத்ததற்கே வெடி வெடித்து அமர்களம் பண்ணிய ம.ம.க மற்றும் அ.தி.மு.க வினரைவிட, ஒரு ஆரவாரமுமின்றி தலைவர் பதவியை வென்ற சகோ.அஸ்லம் அவர்களை நினைக்கும் போது
'' நிறைகுடம் தழும்பாது
குறைகுடம் கூத்தாடும்''
என்னும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

unmaivirumbi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிச்சை அவர்கள் வெற்றி பெற முக்கி்ய காரனமாக இருந்தவர் துபாயில் இருக்கும் buisness man தான் காரனம் என்றும் அவரு்க்கு ஆளும் கட்சியிலும் DMK யிலும் செல்வாக்கு உள்ளவர் என்றும் மக்கள் பேசிக்கொல்கிறார்கள்.

abuzahraa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

any benefit for adiraibbc

adirami said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதன் மூலம் என்ன தெரிகிறது ம ம க வினர் King Makers அல்ல. தற்போது Prince Makers. ம ம க ஒரு நடுநிலையாளர்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இனிவரும் காலங்களில் ம ம க (மக்கள் மனம் கவரும்) King Makers ஆக இருப்பார்கள்.

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ம.ம.க கிங் மேக்கரும் அல்ல;பிரின்ஸ் மேக்கரும் அல்ல. அதிரையில் போட்டியிட்ட 3 வார்டுகளிலும் டெபாசிட் இழந்த பெருமைக்குரியவர்கள். தங்கள் கட்சியில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்ட வென்றவர்களை தங்கள் கட்சிக்காரர்கள் என பிதற்றியவர்கள்.
இந்த ஜனநாயக இஹ்வானி அரசியல் இயக்கங்களின் பொய்களையும் புரட்டுகளையும் பார்க்க நெஞ்சு பொறுக்குதில்லை சகோதரரே.
-அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி

shamsul huq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

700 ஆண்டுகள் பாரம்பரியமான நம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு துனைசேர்மனுக்கு ஆதரவு கோரி நம் ஊர் தலைவர் வந்தததாகவும் அதற்க்கு தக்க பதில் இல்லை என்றவுடன் நம் சங்கத்தின் தலைவரை ராஜினாமா செயய சொன்னதாகவும் சஙகத்தை தக்வா பள்ளிக்கு பிரித்து கொண்டு போகபோவதாகவும் புதுமனைதெருவுக்கு குப்பை வண்டியே அனுப்பமாட்டேன் என்று சவால்விட்டதாகவும் ஒரு தகவல் வருகிறேதே யாரவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//hunaif said...

ஒன்றுமில்லாத துணைத்தலைவர் பதவி கிடைத்ததற்கே வெடி வெடித்து அமர்களம் பண்ணிய ம.ம.க மற்றும் அ.தி.மு.க வினரைவிட, ஒரு ஆரவாரமுமின்றி தலைவர் பதவியை வென்ற சகோ.அஸ்லம் அவர்களை நினைக்கும் போது
'' நிறைகுடம் தழும்பாது
குறைகுடம் கூத்தாடும்''
என்னும் பழமொழி நினைவுக்கு வருகிறது.//


ஊரில் என்ன நடக்கின்றது என்பது கூட hunaif அவர்களுக்கு தெரியவில்லை போலும்!
நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலின் போது மமகவினர் வெடி வெடிக்கவில்லை. அதிமுகவினரும் வேறு சிலருமே வெடி வெடித்துள்ளனர். அடுத்து, திமுக தரப்பினரை தூக்கிப் பிடிப்பதற்கு பழமொழியை குறிப்பிட்டிருப்பதிலிருந்தே உங்களின் அறியாமை வெளிப்படுகின்றது. ஏனெனில், திமுக பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், நமதூர் மெயின் ரோட்டில், வெடி வெடித்துள்ளனர். அதேபோல், பதவியேற்கும் போதும் வெடி வெடித்துள்ளனர். இதை அறியாமல் தேவையில்லாமல் பழமொழியை எல்லாம் போட்டு மாட்டிக்கொள்வது ஏனோ!

சரி 'வெடி' என்றதும் மற்றொன்றும் நினைவுக்கு வருகின்றது. துணைத் தலைவர் தேர்தலின் போது யாருக்கு ஒட்டளிப்பது என்பதை உறுப்பினர்கள் முடிவுக்கே விட்டுவிடுவது என்று சம்சுல் இஸ்லாம் சங்கம் முடிவெடுத்ததால், கொதித்தெழுந்து போன சேர்மன் தரப்பு சங்கத்திற்கே 'வெடி' வைக்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கின்றார்களாம். அதையும் லைட்டா விசாரிங்க...

//hunaif said...

ஒன்றுமில்லாத துணைத்தலைவர் பதவி கிடைத்ததற்கே//

ஒன்றுமில்லாத துணைத்தலைவர் பதவியா? ஹிஹி அப்ப ஏன் திமுக தரப்பு மூனு நாளா தூங்காம ஒவ்வொறு உறுப்பினர்களையும் தேடித் தேடி அலைந்தார்களாம்? அதோடு தங்கள் தரப்புக்கே சங்க உறுப்பினர்கள் இருவரும் ஆதரவு தரவேண்டும் என்று சம்சுல் இஸ்லம் சங்கத்திற்கு டார்ச்சர் கொடுத்தார்களாம். விஷயத்தை நல்லா விசாரிச்சு தெரிஞ்சிக்கங்க ஓய்...

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//அஹ்மத் ஃபிர்தௌஸ் said...

ம.ம.க கிங் மேக்கரும் அல்ல;பிரின்ஸ் மேக்கரும் அல்ல. அதிரையில் போட்டியிட்ட 3 வார்டுகளிலும் டெபாசிட் இழந்த பெருமைக்குரியவர்கள். //

இது மமகவின் மீதான கோபத்தின் வெளிப்பாடு. அதிரையில் மமக சார்பாக அதிகாரப்பூர்வமாக போட்டியிட்டது மொத்தம் 4 இடங்களில். அதில் மூன்றில், டெபாசிட் இழக்கவில்லை. ஒரு இடத்தில் மட்டும் டெபாசிட்டை இழந்திருக்கின்றார்கள். மீதமுள்ள சில இடங்களில் ஜமாஅத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் தங்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்க வில்லை. ஆனால், மமக உறுப்பினர்கள் சிலர் ஜமாஅத் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். எனவே ஸலபி அவர்கள் ஒரு செய்தியை குறிப்பிடும் முன் அதை ஆராய்ந்து விட்டு எழுதுவது நன்று.

//தங்கள் கட்சியில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்ட வென்றவர்களை தங்கள் கட்சிக்காரர்கள் என பிதற்றியவர்கள்.//

இந்தக் கருத்தில் நானும் உடன்படுகின்றேன். என்னத்தான் வெற்றிபெற்றவர்கள் மமக உறுப்பினர்கள் என்றாலும், சுயேட்சையாக போட்டியிட்டவர்களை தங்கள் பட்டியிலில் குறிப்பிட்டது தவறு.

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// பிச்சை அவர்கள் வெற்றி பெற முக்கி்ய காரனமாக இருந்தவர் துபாயில் இருக்கும் buisness man தான் காரனம் என்றும் அவரு்க்கு ஆளும் கட்சியிலும் DMK யிலும் செல்வாக்கு உள்ளவர் என்றும் மக்கள் பேசிக்கொல்கிறார்கள்.//

உண்மை விரும்பி உண்மையை சொல்லிவிட்டீர் சுயேட்சைகளை வியாபார பொருள்களாக ஆக்கி இருக்கிறார்.அந்த பிஸ்னஸ் மேன்.நல்ல விலை கொடுத்து கை மாற்றி இருக்கிறார் போலும்.தகவலுக்கு மிக்க நன்றி.

sneyhithan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சலபி சில நேரங்களில் குழம்புகிறார், எப்படியாவது ஏதாவது கூறிக்கொண்டு தன பெயருக்கு பின்னல் சலபி என்று போட்டுக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார்!!!

ஹுனைப், பாவம் எதோ ஒரு தேசத்தில் மாட்டிக்கொண்டார் போலும், ஊர் நிலவரம் அறிய வாய்ப்பில்லாத இடத்தில் உள்ளார் போலும்!!! பேரூர் தலைவர் பதவி ஏற்ற காணொளி அனைத்து வலைப்பூக்களிலும் உண்டு தாங்களும் ஒரு தடவை பாருங்களேன் / கேளுங்களேன் வெடி சப்தத்தை!!

aa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@அதிரை தம்பி!எண்ணிக்கைப் பிழைக்கு வருந்துகிறேன். எது எப்படியோ ம.ம.க போட்டியிட்ட 4 வார்டுகளிலிம் தோல்வி. அதிலும் ஒரு இடத்தில் டெபாசிட் காலி. சரிதானே? இது இப்படியிருக்க இவர்கள் Chief Minister ரேஞ்சுக்கு பீட்டர் விடுவது சரியல்ல.

@Sneyhithan என்ன சொல்ல வருகிறீர்கள். சொல்வதை தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்.

sneyhithan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சலபி சில நேரங்களில் குழம்புகிறார், எப்படியாவது ஏதாவது கூறிக்கொண்டு தன பெயருக்கு பின்னால் சலபி என்று போட்டுக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்கிறார்!!!//

இதைவிட என்ன தெளிவு வேண்டி இருக்கிறதாம், அதான் சொல்லவந்ததை தெளிவா சொல்லியாச்சே, ஒன்றுக்கு மூன்று தடவை படியும் ஸலஃபி நண்பரே!!!

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
சம்சுல் இஸ்லாம் சங்கத்தை எப்படி தி மு கவினர் எதிர்த்து தன் வேட்பாளர்களை நிறுத்தினார்களோ அதை போல் தாஜுல் இஸ்லாம் சங்கத்தை எதிர்த்து அ தி மு வினா் தனது வேட்பாளர்களை நிறுத்தினார்கள்( அ தி மு கவினர் மற்றும்) தன்னை (சங்கத்தை) எதிர்த்த அ தி மு கவினருக்கு சங்கம் சொல்லிவிட்டது என்ற ஓரே காரணத்திற்காக மேலத்தெரு வார்ட்டு உறுப்பினர்கள் வாக்களித்தார்கள் அவர்கள் உயர்ந்தவா்கள், அவர்களுக்கு பாராட்டுக்கள்
சங்கத்திற்கு எதிராக தி மு க வேட்பாளர்களை நிறுத்தினார்கள் என்றும் சங்கத்திற்கு எதிராக மனு குடுத்தார்கள் என்றும் சொல்பவர்கள் ஒன்றை தெளிவாக செல்வவேண்டும் இது அனைத்து வாக்குபதிவிற்கு ஒரு நாளைக்கு முன்பா அல்லது பத்து நாட்களுக்கு முன்பா? கடைசிவாரை சங்கத்தின் அனைத்து நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என்று சொன்ன நீங்கள் இதை ஏன் முன்பு சொல்லவில்லை?
இவா்கள் ம ம கவினர்கள் என்று சொன்னபோது இல்லை அது அச்சுப்பிழை என்று சொல்லி மறுத்தீர்கள் நாங்கள் சமுதாயத்துக்கு கட்டுப்படுபவர்கள் என்றீர்கள், வாக்குப்பதிவிற்கு ஒரு நாட்களுக்கு முன்பு 18 தேதிவரை ஒவ்வொரு வீடாக சங்கத்தின் நிர்வாகிகளை அலைத்துசொன்று சங்கத்திற்கு வாக்களிங்கள் என்று சொன்னீர்கள் அப்பே ஏன் இதை சொல்லவில்லை.
இறைவன் உங்களின் சுழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு ஐந்தில் ஒன்றில் மட்டும் வெற்றிபெறவைத்து உங்களின் உண்மை முகத்தை காட்டினான் சங்கத்திற்கு எதிராக தி மு கவினர் நேஞ்சில் குத்தினார்கள் நீங்கள்? இந்த கேள்விகளுக்கு சம்மந்தப்பட்டவர்கள் பதில் சொல்வார்களா?
அனைத்தையும் இறைவன் நன்கு அறிவான்

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ ஜூபைரின் ஆதங்கம் புரிகின்றது. அதே சமயம் நீங்கள் சில உன்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும். இதை நான் மமக சார்பாகவோ அல்லது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாகவோ தெரிவிக்கவில்லை. நான் சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் இங்கே சில செய்திகளை குறிப்பிட விரும்புகின்றேன்.

நீங்கள் குறிப்பிடுவது போல் சம்சுல் இஸ்லாம் சங்கம் துணைத்தலைவர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளியுங்கள் என்று தனது உறுப்பினர்களுக்கு கட்டளையிடவில்லை. அதைதான் இந்த பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்கள். துணைத்தலைவர் தேர்தலுக்கு யாரை ஆதரிப்பது என்று சங்கத்தில் ஒரு பிரச்சினை வந்த போது சங்கதில் திமுக சேர்மன் அஸ்லம் அவர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று முறையிடுகின்றார். ஆனால், சங்கம் சார்பாக 19வது வார்டில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் சௌதாவின் கணவர் அஹமது ஹாஜா அவர்கள், சில கேள்விகளை முன்வைக்கும் போது சங்கம் அவரின் நியாயத்தைப் புரிந்து உறுப்பினர்கள் முடிவுக்கு விட்டுவிடுவது என்று முடிவெடுக்கின்றது. எனவே நீங்கள் குறிப்பிடுவது போல் சங்கத்தை அந்த இரண்டு உறுப்பினர்களும் மீறவில்லை. சங்கத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாக்களித்திருக்கின்றார்கள். எனவே இது சங்கத்தை மீறியதாக ஆகாது. ஒரு வேலை அவர்கள் சங்கத்திற்கு கட்டுபடாதவர்களாக இருந்தால், நியாயத்தை சங்கத்திடம் கேட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை தானே? தன் மனம் போன போக்கில் போயிருக்கலாமே. ஒருவர் வெற்றி பெற்றார் என்பதற்காக சங்கத்திடம் நியாயம் கேட்பது தவறல்லவே. எனவே நீங்கள் சொல்வது போல், சங்கத்தை ஒரு போதும் சங்க வேட்பாளர்கள் மீறவில்லை என்பதே எனது கருத்து.

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

துணைத் தலைவர் தேர்தல் குறித்து திமுகவிற்கு எதிராக பலரின் கேள்வியும் இது தான்?

* திமுக சங்கத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியபோது திமுகவை கண்டிக்காமல் சங்கத்திற்கு எதிராக மட்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஏன்?

* இன்று எந்த சங்கத்தை 'நமது சங்கம்' என்ற உரிமையுடன் வந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று அணுகிறீர்களோ அதே உரிமையுடன் தேர்தலுக்கு முன்பு வரை அந்த சங்கத்திற்கு ஆதரவு கோர இன்றை திமுக அனுதாபிகள் முன் வராதது ஏன்? எத்தனை திமுகவினர் சங்கத்திற்கு ஆதரவாக வீடு வீடாக பிரச்சாரம் செய்தார்கள்? எத்தனை திமுக அனுதாபிகள் சங்கத்திற்கு ஆதரவாக பூத்களில் உட்கார்ந்தார்கள்? யாருமே இல்லையே! எந்த மமகவை குற்றம் சுமத்துகின்றார்களோ அவர்கள் தாங்களும் சங்கத்திற்கு எதிராக நிற்காமல் சங்கத்திற்காக அத்தனை இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்கள். அலைந்து திரிந்தார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால் சங்க வேட்பாளர்கள் தோற்றதும் 'சங்கம் தேத்துச்சா –சங்கம் தோத்துச்சா – தோற்கடித்தோமா? என்று சந்தோஷப்பட்டவர்களும் இவர்கள் தான். இப்படிப்பட்ட சந்தோஷம் இவர்களுக்கு ஏன்? அப்படி சந்தோஷப்பட்டவர்கள் இப்பொழுது மட்டும் எந்த உரிமையுடன் ஆதரவு சங்கத்திடம் கோருகின்றார்கள்?

* எங்களுக்கு மேலே (தலைவருக்கு) மட்டும் ஓட்டளியுங்கள் கீழே யாருக்கு வேண்டுமானாலும் (போட்டி வேட்பாளரோ அல்லது சங்க வேட்பாளருக்கோ) வாக்களியுங்கள் - கீழே எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தேர்தலுக்கு முன்புவரை கூறிவிட்டு, இப்பொழுது கீழே சங்கம் வெற்றி பெற்றதும், அவர்களிடம் எந்த உரிமையுடன் ஆதரவு கேட்கின்றீர்கள்?

* சங்கத்திற்கு எதிராக போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட அப்துல் காதரை துணைத்தலைவராக நிறுத்தும் போது அவருக்கு ஆதரவாக வாக்களித்தால் சங்கம் சார்பாக நின்று தோற்ற வேட்பாளரை அவமதித்ததாகாதா? என்றும், இது போல் சங்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் இனி வரும் காலங்களில் சங்கத்திற்கு எதிராக பலர் கிளம்புவதற்கு வாய்ப்பாகி விடாதா என்று சிலர் கேட்கும் நியாயமான கேளிவிகளுக்கு பதில் என்ன?

இது போல் பல கேள்விகள் இருக்கின்றது. ஆனால் பதில் தான் இல்லை.

abraarhussain said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai Thambi Comment Goods - Jeddah BBC Anban

Doha Friends said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

This is the right time that all of us should be remembered. I remember Abdul Kader is the person who continuously denied Shamshul Islam Shangam not only during election time even when his son's marriage. He didn't invite Shangam members also he didn't asked them to bring marriage register. His son got married without registering shangam registration book and no one alim ready to go for nikkah.

There is an Aalim who had took part and given wedding ceremony scripts/words in order to perform nikkah. After a day there were too many notices which stick in the wall of all the street against the Aalim. Please note that Aslam is the person who gave money to print and stick the bills everwhere in the street. That time he was against Mr. ABDUL KHADER where now its vice a versa.

We dont know where it's going to be end.

Allah Kareem

unmaivirumbi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சண்டை போடாதீகள். TMMK வுக்கும், ADMK வுக்கும் vc தேர்ந்தெடுப்பதில் ஆரம்பத்தில் ஆர்வம் இல்லை. ஆனால் ஊர் நன்மையை கருதி ஜித்தா shahul காக்காதான் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி பிச்சை யை ஜெயிக்க வைத்தார்கள். மற்றபடி அவருக்கு congress ல் வாசனையும், அதிமுக வில் ஓ. பன்னீரோடும், திமுகவில் ஸ்டாலினோடும் நெருங்கிய தோழமை உடையவர்.

அபூ சுஹைமா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//வரலாற்றில் இதுவரை இல்லாமல் முதன் முறையாத அதிரையில் அதிமுக துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.//

இதற்கு முன் கரையூர் தெருவைச் சார்ந்த துரை பாஞ்சாலன் என்பவர் அதிமுகவின் சார்பில் துணை சேர்மனாக இருந்துள்ளார். தகவலைச் சரி பார்த்துக் கொள்க.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை பேரூராட்சி துணை தலைவராக அ.தி.மு.க.வில் உள்ள பிச்சை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரை அக்கட்சியில் உள்ளவர்கள் பாராட்டி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெடி வெடித்து கொண்டாடினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டியிருந்தனர் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று.ஆளுங்கட்ச்சியாக இருப்பதால் துணை தலைவர் பிச்சை அவர்கள் தலைவர் அஸ்லம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரை மக்களுக்கு நல்ல செயல்களை செய்ய வேண்டும்.இரு தலைவர்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் சாத்திக்க முடியும். நமக்குள் ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் யார் வந்தாலும் அதிரை நகருக்கு நல்லது செய்தால் மக்கள் அனைவருக்கும் சந்தோசம் தான். ஆளுங்கட்ச்சியாக இருப்பதால் தேவையானதை சாதித்துக் கொள்ளலாம்.மற்றொரு தரப்பில் பார்த்தால் ஒரு சில பேர் செய்ய நினைப்பதை செய்ய விடாமல் தடுப்பது.ஏன் என்றால் அவன் பெரியவனா,நான் பெரியவனா என்றல்லாம் பால்ட்டிக்ஸ் பார்ப்பார்கள்.அதை எல்லாம் பார்க்காமல் இரு தலைவருகளும் அதிரை மக்களுக்கு போய் சேர வேண்டிய பொருட்கள் சேர்ந்து இருக்கிறதா?என்று பார்க்க வேண்டும். பாகுபடியின்றி அவர் அவர் அவருகளுடைய பணிகலை செய்ய வேண்டும்.

Doha Friends said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கியது, சங்கத்திற்கு எதிராக போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்ட அப்துல் காதரை துணைத்தலைவராக தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று திமுக சேர்மன் அஸ்லம் அவர்கள் முறையிடுகின்றார்??????/

திமுகவை எப்படி ஆதரிக்கமுடியும்?

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நண்பர் சாகுல் ஹமீது ஊர் நலனுக்காக திரு. பிச்சை அவர்கள் உதவி தலைவராக வரவேண்டும் என்பதில் அவர் அக்கரை எடுத்தது நல்ல விஷயம், அவர் பல இடங்களில் செல்வாக்கு படைத்தவர், சஙதின் எதிரியான திமுக நபர் உதவி சேர்மனாக வருவது யாருக்குத்தான் பிடிக்கும்? சங்கத்தின் மீது போலிஸ் கேஸ் பதியப்பட்டது, சங்கத்தின் வேட்பாளர் தட்டி இரவோடு இரவாக கிழித்து எறியப்பட்டது, சங்க வேட்பாளரை தோற்கடிக்க பணம் கொடுத்தும், கள்ள ஓட்டு போட்டும் பழிவாங்கப்பட்டது,டெபாசிட்டை இழக்க வேண்டியவர் 30 ஓட்டு வித்தியாசத்தில் வென்றது போன்ற பல அநியாயங்களை கலை எடுக்க திரு. பிச்சை வர ஏன் முயலக்கூடாது? சகோ.அஸ்லம் பிரஸிடென்ட்டாக வந்ததில் யாருக்கும் வருத்த்மில்லை அவர்தான் சரியானவர் என்பதில் மாற்று கருத்தேயில்லை. ஆனாலும் இனியாவது நமது ஊர் மக்கள் திமுக ஒரு உன்னதமான கட்சி, அவர்கள் இஸ்லாமிய பாதுகாவலர்கள், நமக்கு ராத்தம் சிந்தக்கூடியவர்கள் என்ற மாயையை இன்றோடு குழி தோண்டி புதைக்கவும். அதுவும் குறிப்பாக நடுத்தெருவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பம் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டை சரமாரி குத்துவது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது! அப்படி என்ன மோகமோ?அல்லது அறிவீனமோ? இனியாவது திருந்தட்டும். இதை எழுதும் நான் ஒன்றும் திமுக அனதாபியும் அல்ல. திமுக எதிர்ப்பாளனும் அல்ல. EXCELLENT ACHIEVEMENT BY MY FRIEND SHAHUL HAMEED.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை தம்பி அவர்கள் இவற்றை தெளிவுப்படுத்த வேண்டும்
சங்கத்தை எதிர்த்த தி மு க எப்படி ஆதரவு கொடுக்க முடியும் என்று சொன்ன நீங்கள் மேலத்தெருவில் தன்னை எதிர்த்த அ தி மு கவிற்கு எப்படி ஆதரவு அளித்தார்கள்?

சங்கத்தலைவர் தி மு கவிற்கு ஆதரவு கொடுக்க சொல்லவில்லை என்று உங்களுக்கு தொியுமா?

தேர்தல் சம்மந்தமாக முதல் கூட்டத்தில் ம ம காவின் பொருளாளர் சங்கம் வார்டு உறுப்பினர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம் பல கட்சிகள் தன் தலைமைக்கு கட்டுப்பட்டு போட்டியிடுவார்கள் என்று சொன்ன செய்யது பின்னர் அமைதியானத்துக்கு ம ம காவினரை ஐந்து வார்டுகளிலும் நிருத்தியது ஒரு காரணமில்லையா? அதனால்தான் அவர்கள் ஐந்து வார்டுகளிலும் பிரசாரம் செய்தார்கள் இதை மறுக்க முடியுமா?

தேர்தலுக்கு முன்பு சங்கம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளது என்று சொன்னபொழுது (அதனால்தானே நான்கு வேட்பாளர்கள் தோற்றார்கள்) யார் வேண்டுமானாலும் நிற்கலாம் என்று சங்கம் ஏன் சொல்லவி்லலை?

சங்கத்தின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் 19 வது வேட்பாளர் வெற்றி அடைந்திருக்க முடியுமா?

மொத்தத்தில் சங்கம் ஒரு தலைபட்சமாகதான் நடந்துள்ளது என்று சந்தோகப்படாமல் இருக்க முடியவில்லை.

Saleem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

I accept the comment by Zubair

shamsul huq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேலெ நல்ல அபூபுக்கர் சொன்னது உண்மையா?

U.ABOOBACKER (MK) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nallaaboobucker said...
//700 ஆண்டுகள் பாரம்பரியமான நம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்க்கு துனைசேர்மனுக்கு ஆதரவு கோரி நம் ஊர் தலைவர் வந்தததாகவும் அதற்க்கு தக்க பதில் இல்லை என்றவுடன் நம் சங்கத்தின் தலைவரை ராஜினாமா செயய சொன்னதாகவும் சஙகத்தை தக்வா பள்ளிக்கு பிரித்து கொண்டு போகபோவதாகவும் புதுமனைதெருவுக்கு குப்பை வண்டியே அனுப்பமாட்டேன் என்று சவால்விட்டதாகவும் ஒரு தகவல் வருகிறேதே யாரவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்//

இதுபோன்ற செய்திகளும் தமுமுகவையும் சில வலைதளங்களையும் ஒழிப்பேன் என்று ஆணவமாக பேசுவதாக பரவலாக செய்திகள் வருகிறது. அவைகள் உண்மையானால் சகோ.அஸ்லம் பதவி ஏற்பின்போது பேசிய மேடை பேச்சுக்கு முரணாக இருக்கிறதே! தவறான செய்தியானால் அவரின் மறுப்பு அறிக்கையோ காணொளி பேட்டியோ வலைதளங்களில் இடம்பெற அவரின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அரசியல் என்று வந்துவிட்டால் மாற்றமான செயல்கள் நடக்கத்தான் செய்யும். அனைத்தையும் அனுசரித்துதான் செயல்படவேண்டும். அல்லாஹ்வுக்கு பயந்து நேர்மையாக மக்களுக்கு சேவை செய்தால், சுமார் 34 சதவீத வாக்குகள் பெற்று தலைவரான அஸ்லம், அவருக்கு எதிராக வாக்களித்த 66 சதவீத மக்களின் ஆதரவையும் பெற்று மேலும் பல வெற்றிகள் பெறலாம். இன்ஷா அல்லாஹ். குறிப்பாக நல்லொழுக்கமுள்ள நல்ல ஆலோசகரை வைத்துகொள்ள வேண்டும்.
"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்


"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப்
படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி

நம்முரார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சங்கத்திற்கு எதிராக போட்டியிட்ட அப்துல் காதருக்கு

சங்கத்தின் வேட்பாளர் இப்ராகிம் VC வேட்பாளர் அப்துல்

காதருக்கு வோட்டு போட்டது அவரது மனசாட்சிபடி

சரியா???

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Zubair அவர்களுக்கு...

//அதிரை தம்பி அவர்கள் இவற்றை தெளிவுப்படுத்த வேண்டும்
சங்கத்தை எதிர்த்த தி மு க எப்படி ஆதரவு கொடுக்க முடியும் என்று சொன்ன நீங்கள் மேலத்தெருவில் தன்னை எதிர்த்த அ தி மு கவிற்கு எப்படி ஆதரவு அளித்தார்கள்?//

இந்தக் கேள்வியை மேலத்தெருவாசிகளிடமோ அல்லது தாஜூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளிடமோ கேட்க வேண்டுமே தவிர அந்த சங்கத்திற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத என்னிடம் கேட்கக்கூடாது.

//சங்கத்தலைவர் தி மு கவிற்கு ஆதரவு கொடுக்க சொல்லவில்லை என்று உங்களுக்கு தொியுமா? //

சங்கத்தலைவர் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று எப்போதாவது நான் சொன்னேனா? அவருக்கு ஒரு கருத்து இருந்தது போல் மற்றவர்களுக்கும் ஒரு கருத்து இருந்துள்ளது என்பது தான் உன்மை. ஆரம்பத்தில் சங்கம் தரப்பில் துணைத்தலைவர் தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவு கொடுக்கலாமா? என்று யோசிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து இறுதி முடிவு எடுப்பதற்காக அனைத்து நிர்வாகிகளும் கூடியபோது, 19வது வார்டு உறுப்பினர் சௌதாவின் கணவர் அஹமது ஹாஜா அவர்கள் எழுப்பிய சில நியாயமான கேள்விகளின் உன்மைநிலையை புரிந்துக்கொண்ட (தலைவர் உட்பட) சங்க நிர்வாகிகள், ஓட்டுப்போடுவதை உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிட்டனர். இது தான் சங்கத்தின் இறுதி முடிவு. அதன்படியே உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி ஓட்டளித்தள்ளனர். இதில் எந்த உறுப்பினரும் சங்கத்திற்கு எதிராக செயல்படவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் அதிரை பி பி சி யின் உடனடி தகவலுக்கு நன்றி ஏறத்தாள நாங்களெல்லாம் சம்பவ இடத்தில் இருந்து கண்டுகளித்த
அனுபவத்தை கட்டுரை வாயிலாக வடித்தமைத்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி, கட்சி வேறுபாடு பார்க்காமல் பிச்சை அவர்கள் துணைதலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது, காரணம் ஆளுங்கட்சி ஆ தி மு க வாக இருந்து நம் நகர தலைவர் தி மு க வாக இருந்தால் நிச்சயம் நமதூருக்கு நலப்பணிகள் நடப்பதற்கு மிகபெரிய இடையூறுகள் இருக்கும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் நமதூருக்கு முன்னேற்றமாக அமைய பிரார்த்திக்கிறோம். - மதியழகன்

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

zubair அவர்களுக்கு...

//தேர்தல் சம்மந்தமாக முதல் கூட்டத்தில் ம ம காவின் பொருளாளர் சங்கம் வார்டு உறுப்பினர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம் பல கட்சிகள் தன் தலைமைக்கு கட்டுப்பட்டு போட்டியிடுவார்கள் என்று சொன்ன செய்யது பின்னர் அமைதியானத்துக்கு ம ம காவினரை ஐந்து வார்டுகளிலும் நிருத்தியது ஒரு காரணமில்லையா? அதனால்தான் அவர்கள் ஐந்து வார்டுகளிலும் பிரசாரம் செய்தார்கள் இதை மறுக்க முடியுமா?//

தேர்தல் சம்பந்தமாக சங்கத்தில் முதன் முதலில் கூட்டம் போட்டபோது, மமகவினர் அவர்களுக்குப் பட்ட சில நியாயங்களைக்கூறி எதிர்ப்புத் தெரிவித்தது உன்மைத்தான். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், பின்னர் தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழாவின் போது நமதூருக்கு வருகைத் தந்த தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி மற்றும் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்சாரி போன்ற மாநில நிர்வாகிகளிடம் சங்க நிர்வாகிகள் மமகவினரின் எதிர்ப்பு சம்பந்தமாக பேசியுள்ளனர். அப்போது மாநில நிர்வாகிகள் 'நாங்கள் ஜமஅத்களுடன் சேர்ந்து செயல்படவே விரும்புகின்றோம். எனவே சங்கம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு முழுவதுமாக கட்டுப்படுவோம்' என்று உறுதியளித்துள்ளனர். அதன் பின்னரே சங்கத்திற்கு மமக கட்டுப்பட்டு, மற்றவர்களுடன் இவர்களும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். விட்டுக்கெடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கேற்ப பின்னர் இவர்களில் சிலர் வேட்பாளர்களாக தேர்வாகியது அல்லாஹ் இவர்களின் நல்ல எண்ணத்திற்கு கொடுத்த வெற்றி.

அடுத்து சங்கம் மமகவினரில் சிலரை திட்டமிட்டு தேர்வு செய்தது போல் குறிப்பிடுகின்றீர்கள். அது முற்றிலும் தவறு. எல்லோரைப் போல மமகவினரும் சங்கத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர். சங்கம் நடத்திய ஓட்டெடுப்பிற்குப் பின்னரே மற்ற கட்சியினரைப் போல் அவர்களும் வேட்பாளர்களாக தேர்வானார்கள். சங்க வேட்பாளர்களில் திமுக ஆதரவாளரும் அதிமுக ஆதரவாளரும் மமக ஆதரவாளர்களும் அடங்குவர்.

அது போல், மமகவினர் ஆதரவளித்ததோடு சங்கவேட்பாளர்களுக்காக களப்பணியும் ஆற்றினர். காரணம், மமக தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே சங்கத்திற்கு முற்றிலும் கட்டுப்படுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டது. ஒரு வேலை மமகவினர் வேட்பாளர்களாக தேர்வாகாவிட்டாலும் அவர்கள் சங்கத்திற்கு கட்டுப்பட்டுத்தான் இருப்பார்கள். இதற்கு தமிழத்தில் சென்னை உட்பட மற்ற பல இடங்களில் அவர்கள் ஜமாஅத்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டதே சரியான சான்று.

ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன். 'ஆ...இவர்கள் மமக உறுப்பினர்கள்' என்று திமுக அனுதாபிகள் கூக்குரல் இடுகின்றார்களே, வேட்பாளர்களாக நின்ற அந்த மமகவினர் என்ன சங்கத்திற்கு சம்பந்தமில்லாத அன்னியர்களா? அல்லது எதிரிகளா? சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகள் யார் வேண்டுமானாலும் சங்கத்திடம் விருப்ப மனு அளிக்கலாம் என்று சங்கத்தால் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுகவினரைப்போல், அதிமுகவினரைப்போல் மமகவினரும் விருப்பமனு தாக்கல் செய்தனர். இதில் என்ன தவறு இருக்கின்றது என்று நீங்கள் எல்லாம் ஒருதலைப் பட்சமாக குற்றம் சுமத்துகின்றீர்களோ புரியவில்லை. ஒருவேலை திமுகவை சேர்ந்தவர்களை மட்டுமே வேட்பாளர்களாக தேர்வு செய்திருக்க வேண்டும் என்பது தான் உங்கள் அனைவரின் விரும்பமோ என்னவோ! அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். இப்படி செய்திருந்தால் சங்கம் நடுநிலையாக செயல்பட்டது என்று சொன்னாலும் சொல்லியிருப்பீர்கள்.

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

zubair அவர்களுக்கு...

//தேர்தலுக்கு முன்பு சங்கம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளது என்று சொன்னபொழுது (அதனால்தானே நான்கு வேட்பாளர்கள் தோற்றார்கள்) யார் வேண்டுமானாலும் நிற்கலாம் என்று சங்கம் ஏன் சொல்லவி்லலை?//

இதில் என்ன சொல்லவருகின்றீர்கள் என்றே புரியவில்லை

//சங்கத்தின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் 19 வது வேட்பாளர் வெற்றி அடைந்திருக்க முடியுமா?//

அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். ஆனால், சங்கத்திற்கு எதிராக மமக நின்றிருந்தால் கண்டிப்பாக நான் ஆதரித்திருக்க மாட்டேன்.

//மொத்தத்தில் சங்கம் ஒரு தலைபட்சமாகதான் நடந்துள்ளது என்று சந்தோகப்படாமல் இருக்க முடியவில்லை.//

உங்களின் ஒருதலைப்பட்டசமான முடிவிற்கு நான் என்ன பதில் சொல்ல. என்னைப் பொருத்தவரை சங்கம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நம்புகின்றேன். சங்கம் ஒரு நல்ல முடிவை எடுத்தது. அதை அனைவரும் சமுதாய நலன் கருதி ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால், சிலர் வேண்டும் என்றே சில சுயநலன்களுக்காக சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி வீணடித்துவிட்டார்கள். அந்த பொய்பிரச்சாரத்திற்கு சங்க முஹல்லாவாசிகள் பலரும் பலியாகிவிட்டனர். என்னைப் பொருத்தவரை சங்கத்தின் முடிவு சரியானது தான் என்பதில் தெளிவாக இருக்கின்றேன். அல்லாஹ் போதுமானவன்.

நம்முரார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஜுபைர்

சங்கத்தை எதிர்த்த தி மு க எப்படி ஆதரவு கொடுக்க முடியும் என்று சொன்ன நீங்கள் மேலத்தெருவில் தன்னை எதிர்த்த அ தி மு கவிற்கு எப்படி ஆதரவு அளித்தார்கள்?


தாஜுள் இஸ்லாம் சங்கத்திற்கு அஸ்லம் (திமுக) எதிரி என்று கருதி அவருக்கு எதிராக சங்கம் முடிவு எடுத்துள்ளார்கள்.ஆனால் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அஸ்லாம் மெம்பர் அதேசமயம் திமுக எதிரி ஆகையால் திமுகவை எதிர்க்கவேண்டும் அஸ்லம் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதால்
இரண்டு வேட்பாளர்களையும் மனசாட்சிப்படி நடந்துகொள்ளுங்கள் என்று சம்சுல் இஸ்லாம் அறிவித்துவிட்டது

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை தம்பிக்கு
நீங்கள் சொன்ன பதில் எனக்கு திருப்தியில்லை சங்கத்தலைவர் சொன்னால் அது அவாின் சொந்தக்கருத்து என்றால் துணைத்தலைவர் சொல்லும் கருத்து சங்க கருத்தா? ம ம கவினருக்கு ஆதரவான கருத்து மட்டும் சங்க கருத்தா?

சங்கத்திற்கு எதிராக 80 சதவித மக்கள் வாக்களித்த பின்பும் சங்கத்தின் முடிவை நியாப்படுத்தலாமா?
இன்னும் பல கேள்விகள்

இந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே பதில் சங்கத்தலைவாின் கருத்து ஒன்று மட்டும் தான் இதை அதிரை தம்பியும், அதிரை பி பி சியும் செய்வார்களா?

நிஸார் அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//சகோ. பிச்சை அவர்களின் வெற்றி அதிரை மக்களை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். காரணம், தொடக்க காலம் முதல், அனைத்து மதத்தினரின் நன்மதிப்பை பெற்ற ஒருவர், குறிப்பாக பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்களுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்புடன் செயல்படும் ஒருவர் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிச்சையின் வெற்றியின் மூலம் நிறைவேறியுள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர். இவரின் வெற்றியை திமுகவைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்தது தான் ஹைலைட்.//

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// அதிரை தம்பிக்கு
நீங்கள் சொன்ன பதில் எனக்கு திருப்தியில்லை//

அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

//சங்கத்தலைவர் சொன்னால் அது அவரின் சொந்தக்கருத்து என்றால் துணைத்தலைவர் சொல்லும் கருத்து சங்க கருத்தா?//

இப்படி எல்லாம் நான் எப்பொழுது சொன்னேன்? இதே பதிவிலேயே எனது அனைத்து பின்னூட்டங்களும் இடம் பெற்றுள்ளது. முதலில் அதை தெளிவாக படித்துவிட்டு கேள்விகளை எழுப்பவும். தலைவருக்கு ஒரு கருத்து இருந்தாலும் துணைத்தலைவருக்கு ஒரு கருத்து இருந்தாலும் அல்லது மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு கருத்து இருந்தாலும், இறுதியில் என்ன முடிவு எட்டப்பட்டதோ அது தான் சங்கத்தின் இறுதி முடிவு. இது இந்த சங்கத்திற்கு மட்டுமல்ல, எல்லா நிர்வாகத்திலும் நடக்கும் வழமையான ஒன்றுத்தான். எத்தனைக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் இறுதியாக என்ன முடிவு எடுக்கப்படுகின்றது என்பதை தான் நாம் கவனிக்கவேண்டும். என்னிடம் கேள்வி எழுப்பும் முன் சங்கம் என்ன சொல்கின்றது – துணைத் தலைவர் தேர்தல் சம்பந்தமாக சங்கத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு என்ன? என்பதை ஒரு முறை சங்கத்திடமோ அல்லது நீங்கள் குறிப்பிடும் சங்கத் தலைவரிடமோ கேட்டு விட்டு உங்கள் சந்தேகங்களை எழுப்புங்கள். சங்கத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாமல் கேள்வி எழுப்புவதிலிருந்தே தெரிகின்றது உங்கள் சிந்தனையும் - நியாயமும்.

// ம ம கவினருக்கு ஆதரவான கருத்து மட்டும் சங்க கருத்தா? //

அப்படி யார் சொன்னது?

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// சங்கத்திற்கு எதிராக 80 சதவித மக்கள் வாக்களித்த பின்பும் சங்கத்தின் முடிவை நியாப்படுத்தலாமா?//

உன்மை என்னவென்று தெரியாமல் அல்லது உன்மையை வேண்டும் என்றே மறைத்துவிட்டு உங்களைப் போன்ற சிலர் செய்த தவறான பிரச்சாரங்களுக்கு, மக்கள் பலியானதால் வந்த விளைவு. அதற்காக சங்கம் தவறு செய்ததாக ஆகிவிடுமா? சத்தியத்திற்கும் - நியாயத்திற்கும் எதிராக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்பதற்காக உன்மை பொய்யாகிவிடுமா? அப்படிப் பார்த்தால் மக்களால் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் நரேந்திர மோடியிலிருந்து அத்தனை அநியாயக்காரர்களும் செய்தது சரி என்று ஆகிவிடும். (நீங்கள் கொடுத்துள்ள புள்ளிவிவரத்திலும் தவறு இருக்கின்றது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.)

// இன்னும் பல கேள்விகள் //

என் கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லிவிட்டு அனைத்தையும் கேளுங்கள்.

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// இந்த அனைத்து சந்தேகங்களுக்கு ஒரே பதில் சங்கத்தலைவரின் கருத்து ஒன்று மட்டும் தான் இதை அதிரை தம்பியும், அதிரை பி பி சியும் செய்வார்களா? //

அது என்ன சங்கத் தலைவரின் கருத்து மட்டும் தான்? இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகின்றது? ஒருவருடைய கருத்தைத் தவிர யாருடைய கருத்தும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்க. உங்களது பிடிவாதம் உங்களை எந்த அளவுக்கு முட்டாளாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை இதிலிருந்தே நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது. ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், நீங்கள் குறிப்பிடும் அதே சங்கத் தலைவரும் சேர்ந்துத் தானே, நீங்கள் குற்றம் சாட்டும் மமகவினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்தார். அதை மட்டும் ஏன் ஏற்கமறுத்தீர்? அந்த சங்கத் தலைவர் தானே எந்தப் பாரபட்சமும் இல்லாமல் வேட்பாளர் தேர்வு நடந்தது என்று சொன்னார். அப்பொழுது எங்கே போனது உங்கள் சங்கத் தலைவர் ஆதரவு? அந்த சங்கத்தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவைத் தான் நீங்கள் குறிப்பிடும் 80 (?) சதவிகித மக்கள் எதிர்த்துள்ளார்கள். இப்ப சொல்லுங்க சங்கத் தலைவர் செய்தது சரியா தவறா? 'இல்லை.. இல்லை... சங்கத் தலைவருக்கு ஊருல என்ன நடக்குதுனே தெரியாது' என்று சப்பைக் கட்டு கட்டப்போகின்றீர்களா? என்னே அறிவு! என்னே வாதம். இப்படி எல்லாம் எப்படித்தான் யோசிக்கிறீங்களோ புரியல!

(குறிப்பு: சங்கத்தலைவர் குறித்து நான் குறிப்பிட்டது நீங்கள் சொல்லும் முரண்பாடான கருத்திற்கு பதில் தான். அந்த சங்கத்தலைவரும் சேர்ந்து எடுத்த – அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்ட - இறுதி முடிவை அனைவரும் ஏற்கவேண்டும் என்பதே எனது கருத்து. சங்கத்லைவரை அதிரை தம்பி ஏதிர்க்கின்றான் என்று பிரச்சாரம் செய்து விடாதீர்கள்)

நம்முரார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரைதம்பி

பாவம் சுபைர் அவர்களுக்கு நேரம்போகவில்லை சங்கத்தை எதிர்பதிலேயே குறியாக இருக்கிறார்


சங்கத்தின் நிர்வாகிகளும் தன் பொருளையும்

நேரத்தையும் energyயும் செலவு செய்வதால் சுபைர்

போன்றவர்கள்ளுக்கு பதில் கொடுப்பதால் நாம்

முட்டாளகிவிடுவோம்

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nirai kudamum thazhumbaadhu,adhae vaelai kuraikudamum thazhumbaadhu.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிறை குடமும் தளும்பாது அதே வேளையில் குறை குடமும் தளும்பாது - இது என்னே புது பழமொழி - என்ன சொல்ல வருகிறீர் "majfausa"

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

mannikkavum mr.Madhi,Niraikudamum thazhumbaadhu adhae vaelai verum kudamum thazhumbaadhu,

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

majfausa அவர்களுக்கு - ஹ்ம் நல்ல அவர்களுக்கு - ஹ்ம் நல்ல குடக்கதை விளக்கம் தான்....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.