என்னதான் அரசியல் கட்சிகள் நமக்கு நெருக்கமாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுங்குள் மாச்சரியங்கள் ஒளிந்து இருப்பது அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன. அதிரை பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் தவிர சில சங்கங்கள் தங்கள் ஆதரவுபெற்ற வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இவர்களில் சம்சுல் இஸ்லாம் சங்கமும் தனது எல்லைக்குட்பட்ட வார்டுகளில் ஆறு வேட்பாளர்களை ஆதரிக்கிறது. இந்த அறுவரையும் எதிர்த்து அதிமுக, திமுக மற்றும் பல கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களாட்சியில் யாரும் யாரையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிடலாம். எனினும் முஸ்லிம்கள் தங்களுக்குள் புரிந்துணர்வும்,விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையும் இல்லாத காரணத்தால் பலவார்டுகளில் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள வார்டுகளில் கட்சிகளின் வேட்பாளர்களை நிறுத்திய அவர்கள், தங்கள் பகுதிகளில் பஞ்சாயத்து முடிவுக்குக் கட்டுப்பட்டு யாரையும் நிறுத்தவில்லை என்பதிலிருந்து இவர்களின் கட்சிவேடம் பொய்யானது என்பது தெளிவாகிறது. சில புள்ளிவிபரங்களைப் பார்ப்போம்:
திமுக போட்டியிடும் வார்டுகள்
அதிமுக-திமுக நேரடி போட்டி
அதிமுக போட்டியிடாத வார்டுகளில் திமுக = 04
திமுக போட்டியிடாத வார்டுகளில் அதிமுக = 03
சங்க வேட்பாளர்களுக்கு எதிராக திமுக = 04
சங்க வேட்பாளர்களுக்கு எதிராக அதிமுக = 02
வார்டுகள் 5 மற்றும் 6 ஆம் எண்களில் எத்தகைய போட்டியுமின்றி ஏற்கனவே இருவர் தேர்வாகி விட்டனர். இந்த வார்டுகளில் எந்த அரசியல் கட்சியும் தங்கள் சார்பில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை? என்பது கவனிக்கத் தக்கது.
துணைசேர்மன் பதவிக்குத் தேவையான ஒவ்வொரு உறுப்பினரின் ஆதரவும் அவசியம் என்பதைஅறியாதவர்களா? அந்த வார்டுகளிலிருக்கும் அரசியல் கட்சிக்காரர்கள்.எனினும், அவர்களது சங்க/பஞ்சாயத்து முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தாமல்,போட்டியின்றி தங்கள் உறுப்பினரை தேர்ந்து எடுத்துள்ளனர். சங்க/பஞ்சாயத்துக்கு கிடைத்த வெற்றி என்றாலும், இதை முஸ்லிம்களால் மட்டும் ஏன் அடைய முடியவில்லை?
இத்தகைய போட்டியில்லா வெற்றியை நமது சங்கத்திற்கு உட்பட்ட வார்டுகளில் பெறுவதற்கு சிலர் தடையாக, அரசியல் ஆதரவுடன் சங்க நிர்வாகிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர்.சம்சுல் இஸ்லாம் சங்க எல்லைக்குட்பட்ட ஆறு வார்டுகளில் மட்டும்,சங்கத்தின் நியாயமான கோரிக்கைக்கு உட்பட்ட வேட்பாளர்களை ஆதரிக்கமுன்வந்தது. உலமாக்களின் வழிகாட்டலுடன் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக, நம்மவர்கள் சிலரே எதிர்த்து போட்டியிட்டிருப்பது ஒற்றுமைக்கான ஆரோக்கியமான அறிகுறி அல்ல.ஆட்சி அதிகாரத்திற்காக உலமாக்களின் முடிவுகளைப் புறந்தள்ளி,ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளோரை முஹல்லாவாசிகள் அடையாளம் கண்டு, சங்க ஆதரவு பெற்ற வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்வதே இவர்களுக்கு சரியான படிப்பினையாக இருக்கும்.
1 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் CHASECOM கூறிய அனைத்து விஷயங்களும் முற்றிலும் உண்மையே, எற்றுக்கொள்ள்த்தக்கதே. இதன் மூலம் சஙத்திற்க்கும் ஜமாத்திற்க்கும் கட்டுப்படாத கட்சிகளை மக்கள் இத்தேர்தல் மூலம் புறக்கணிக்க வேண்டும். இந்நேரத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூற விரும்புகிறேன்; பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முஸ்லிம்களிடயே போட்டிகள் கடுமையாக இருந்த நேரத்தில், ஆலிம்களின் வேண்டுகோளை ஏற்று போட்டியிலுருந்து விலகிய மூவரில் பல தரப்பு மக்களின் அமோக ஆதரவை பெற்ற தமுமுகவின் வேட்பாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அத்தோடு நில்லாமல் சஙகம் நிறுத்தியுள்ள வார்டு உறுப்பினர்களுக்கு எதிராக போட்டியிடாமல் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டியுள்ளது. சமூதயாத்தின் ஒற்றுமையையும் ஒறுமைப்பாட்டையும் நிலைநாட்டியுள்ள தமுமுகவை பேரூராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது நம் அனைத்து சங்கங்களின் கடமையாகும். இவண் அஹ்மத் தௌஃபீக்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment