அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரை பிபிசி ஆரம்பிக்கப்பட்டு (தள்ளப்பட்டு) என்றே கூறலாம்) நான்கு மாதங்கள் ஓடி விட்டது. அல்ஹம்துலில்லாஹ். ஏற்கெனவே பெற்றிருந்த முன் அனுபவ அடிப்படையில் அதிரை பிபிசியை மிகச் சிறப்பாகவே நடத்தி வந்துள்ளோம் என்பதற்கு வாசகர்கள் காட்டிவரும் அன்புகலந்த ஆதரவே சரியான சான்றாக உள்ளது.
அதிரை பிபிசி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. பிபிசி ரேஞ்சுக்கு சர்வதேச தகவல்களை தர இயலாவிட்டாலும், பரந்து விரிந்த பூமிப்பந்தில் உலகம் முழுவதும் வாழ்கின்ற அதிரை பொதுமக்களுக்கு உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்குவதில் அதிரை பிபிசி முன்னணியில் உள்ளதை நன்கு அறிவீர்கள். முற்றிலும் உள்ளூர் பங்களிப்பாளர்களின் உதவியுடன் உங்கள் அதிரை பிபிசி பீடு நடை போட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். உள்ளூர் பங்களிப்பாளர்களின் அவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் உள்ளூர் நிகழ்வுகளையும், தகவல்களையும் அறிந்து கொள்வது இயலாத ஒன்று. தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும், உள்ளூர் நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியும் காரண காரியங்களை அலசுவதற்கும் அவர்களின் உதவியின்றி இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது.
தமிழ் வலைப்பதிவுகளில் தொழில்நுட்ப அளவில் உங்கள் அதிரை பிபிசி முன்னணியில் உள்ளதை நன்கு அறிவீர்கள். கடந்த ரமலான் மாதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவுகள் அம்மாதம் முழுவதும் தராவிஹ் தொழுகைக்குப் பின் நேரலைகளாக ஒலிபரப்பப்பட்டன. அதுமட்டுமில்லாமல் ரமலான் மாதம் சென்னை புதுக்கல்லூரி, கிரஸன்ட் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சார்பில் மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டை ஒலிபரப்பினோம். அது பலரையும் ஆச்சரியமும் இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தது. பிரபல மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது துபையில் இருந்து நோன்பு 30 நாட்கள் AIM ஏற்பாடு செய்திருந்த மௌலவி நாசர் அவர்களின் பயான் நேரலை அதிரை நிருபர் சகோ .தாஜுதீன் உதவியுடன் வெற்றிகரமாக செய்யப்பட்டது .
இன்னும் அதிரை தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மாநாட்டை நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளோம். அது தமிழக அளவில் வாசகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. தமுமுக இணையதளம் அந்நேரலையை தங்களின் இணையதளம் மூலமாக ஒளிபரப்பு செய்தது.
அதுமட்டுமில்லாமல், 'அதிரையில் கல்வி' எனும் ஆவணப்படத்தை தயாரித்து வாசகர்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர்களின் அறிவுரைகள் அடங்கிய அந்த ஆவணம் அதிரை பிபிசியில் சக்கைப் போடு போட்டது.
முஸ்லிம் தேசப்பற்றின் அடையாளமாக விளங்கும் சகோ மீரானின் கைவண்ணத்தில் உருவான கப்பலை வீடியோ பேட்டியாக பதிந்து உலகறியச்செய்துள்ளோம்.
சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலையும் சந்திப்பது என்று முடிவு செய்து குழு அமைத்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின் வேட்பாளர்களை பேட்டி எடுத்து யூடியூப்களில் வீடியோக்களை பதிவேற்றியுள்ளோம்.
பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் பேட்டி எடுத்து பதிந்துள்ளோம்.
உள்ளூர் தேர்தல் நடப்புகளை 'புலணாய்வு ரேஞ்சுக்கு' தொகுத்தளித்த காக்கையார் இத்தேர்தலில் அதிகம் படித்த கட்டுரைகளில் ஒன்றானது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி நிலவரங்கள் அலசப்பட்ட அக்கட்டுரையை பாராட்டி நமதூரின் 'பெரிய குடும்ப'த்தைசேர்ந்த சகோதரர் ஒருவரே பாராட்டி பின்னூட்டமிட்டுள்ளார். ஜஸாகல்லாஹ். (அரசியல் ரீதியான அக்கட்டுரையில் அக்குடும்பத்தினருக்கான ஓட்டுகளைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தாலும் பெருந்தன்மையுடன் பகிரங்கமாக பாராட்டியது அரசியலில் 40 ஆண்டுகால அனுபவமுள்ள அக்குடும்பத்தினர் ஊடகத்தின் மீது வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது)
நேற்று நடைபெற்ற தேர்தலில் ஓட்டு நிலவரங்களை உடனுக்குடன் வழங்கினோம். அதிரைபோஸ்ட் ஹிதாயத்துல்லாவின் உதவியுடன் படங்கள் விறுவிறுப்புடன் பதிவேற்றப்பட்டன.
அதிரை தேர்தல் பரபரப்புக்கு அதிரை பிபிசியும் ஒரு காரணமோ என்று சொல்லுவது போன்று தமிழக அளவிலான இணையதளங்களுக்கு ஒப்பாக நேற்று மட்டும் 11,170 ஹிட்ஸ்கள்(Not manipulated) பெற்று அதிரை பிபிசி பெரும் சாதனை படைத்தது. அல்ஹம்துலில்லாஹ். நேற்று மட்டும் நமது தளத்திற்கு வந்துபோன மொத்த வாசகர்கள் 1778 பேர். நேற்று ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருந்தவர்கள் மட்டும் 58 பேர்.
நேற்றுடன் அதிரை பிபிசியில் 300 பதிவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன. 54 வீடியோக்களும், முகப்புப் பக்கத்தில் (பேஸ்புக்) அதிரை பிபிசியை நேசிப்பவர்கள் 205 ஆகவும் உள்ளது அதுமட்டும் அன்றி அதிரைபிபிசியின் பெயரில் உள்ள பேஸ்புக் கணக்கில்1500 உறுப்பினர்கள் நான்கு மாதத்தில் இணைந்துள்ளனர்.
மேற்கண்ட வளர்ச்சியை அடைந்துள்ள வேளையில் வேதனையும் கலந்துள்ளது என்பதுதான் எங்களை வருத்தப்படவைக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எதிரான எதிர்ப்பலை இருந்தது. அது முன்னணி பத்திரிக்கைகளான தினமணியியில் கூட எதிரொலித்தது. அம்முறையும் திமுகவிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இம்முறையும் அதிமுக அணியிடம் பணம் பெற்று வேலை செய்வதாக சிலர் கூறி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நாம் வேறோரு வலைப்பதிவில் இருக்கும் போது நண்பர்கள் அதனை சூப்பராக போய்ட்டு இருக்கே என்று சொன்னவர்களிடம் கூறியதை இங்கும் நினைவு கூறுகிறோம். அது 'ஆமாம் எட்டு மணி நேர வேலையில் லட்சம் ரூபாய் சம்பாதிக்கக்கூடியவர்கள் 24 மணிநேரமும் முழுமூச்சாக வலைப்பதிவு என்றிருந்தால் சூப்பராக போகாமல் எப்படிப் போகும்?'
தொழில்நுட்ப அளவில் பல ஆண்டுகள் அனுபவமிக்க இளைஞர்களால் உங்கள் அதிரை பிபிசி நடத்தப்படுகிறது. முதன் முயற்சியாக தனி செர்வரை அமெரிக்காவிலிருந்து வாடகைக்குப் பெற்று உள்ளூர் நிகழ்வுகளை நேரலை செய்வதற்கு முயற்சித்தோம். அல்ஹம்துலில்லாஹ் நல்ல வெற்றியை தந்தது. ஏற்கெனவே நேரத்தையும் பொருளாதாரத்தையும், broadband இன்டர்நெட் செலவழித்திருந்த நிலையில் மேலும் சுமையாக வழங்கி (செர்வர்) செலவும் கூடி பாரத்தை ஏற்படுத்திய வேளையில் அதனை ஈடுகட்ட குறைந்த கட்டண விளம்பரங்களைப் பெற்று பதிந்தோம். இதுபோன்ற செலவினங்களையும் அறிந்த சிலர் அதனையும் கொச்சைப்படுத்தி விளம்பரங்களும் செய்துள்ளனர் என்பது தான் வேதனையிலும் வேதனை.
எது எப்படியோ அதிரை பிபிசி தமிழக அளவில் முன்னணி வலைப்பதிவுகளில் ஒன்றாய் உருவெடுத்துள்ளதற்கு அதன் வாசகர்களே காரணம். அதிரை பிபிசி மீது நன்னம்பிக்கை வைத்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆலோசனைகள் வழங்கி வரும் பெரியோர்களுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிரை பிபிசியில் இணைந்து ஊடகப் பயிற்சி பெற்று செயல்பட அதிரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை அதிரை பிபிசி அன்புடன் வரவேற்கிறது.
வஸ்ஸலாம்
அதிரை பிபிசி குழு
7 பின்னூட்டங்கள்:
All the very best and good luck.Be Neutral.
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
கடல் கடந்து வாழும் எங்கட்கு
மட்லாகவும் மருந்தாகவும்
மண்ணின் வாசனையுடன்
கண்ணுக்கு விருந்தான காணொளியுடன்
எண்ணத் தூய்மையுடன் இயங்குவதால்
ஏற்றம் பெற்றீர்
i thanks to bbc media member, who worked very hard for our community...Really BRAVE, BOLD & CHALLENGE to achieve the target....
It's tremendous development to adirai BBC, I appreciate the guys who did it.... And I also like to express my thoughts the viewers to support the team for it's survival.. With regards from A. J. Abdul Kareem
வாழ்த்துக்கள்.. பழசை கிளறாமல் புதுசா போய்ட்டு இருங்க..ஊர் செய்திகளை போட்டிப் போட்டு தந்தால் வெளிநாட்டில் இருக்கிற எங்களைப் போன்ற அதிரைவாசிகளுக்கு நன்மைதானே..நாந்தான் பர்ஸ்ட் நீந்தான் செகண்ட் என்று சொல்லி கொள்வதில் ஆரம்பிக்குது வேற்றுமையின் மையப்புள்ளி.. முற்றுப்புள்ளி வைக்க இயலாமல் தொடர்ந்து வருவது ஒற்றுமையே இல்லையென்பதை வலியுறுத்துகிறது..
//அதிரை பிபிசியில் இணைந்து ஊடகப் பயிற்சி பெற்று செயல்பட அதிரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை அதிரை பிபிசி அன்புடன் வரவேற்கிறது.//
இது அதிரை வாசிகளுக்கு மட்டும் தான? அல்லது மற்ற ஊர் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பயிற்சி அளிக்க படுமா?
மேலும் ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment