அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 29, 2011

பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுக பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் தலைவர் பதவிக்கு இன்று (29/10/2011) காலை 10 மணிக்கு அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் அப்துல் காதர் அவர்களும் அதிமுக சார்பாக பிச்சை அவர்களும் போட்டியிட்டனர். முன்னதாக கரையூர் தெருவை சேர்ந்த பாஞ்சாலன் என்பர் திமுக சார்பாக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது பின்னர் எதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அவர் விலக அப்துல் காதர் அவர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 21 உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவருக்கு ஒரு வாக்கு விகிதம் மொத்த வாக்குகள் 22 ஆகவே பன்னிரண்டு ஓடுக்களை யார் பெறுகின்றார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அவ்வகையில் அ.தி.மு.க.வின் அதிரைச் செயலாளர் பிச்சை அவர்கள் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பின்னூட்டங்கள்:

Adirai khalid said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வரவேற்கதக்க செய்தி,
இது அதிரை மக்களின் மத நல்லிணக்கத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் காட்டுகின்றது,
இவர் பல நல்ல திட்டங்களை சகோ அஸ்லம் அவர்களுடன் சேர்ந்து மத்திய, மாநில அரசிடமிருந்து பெற்று நம் ஊ ருக்கு கொண்டு வரவேண்டும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிச்சை அவர்களே வாழ்த்துக்கள்.இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

கட்சி பாகுபாடுகள் தேர்தலுக்கு மட்டும் இருக்கட்டும்.
இப்போது சேர்மன் அஸ்லம் அவர்களோடு ஒன்றுபட்டு ஊருக்கு ஆக வேண்டிய நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த பாடுபடுங்கள்.

skarfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள்

திமுக அதிமுக என்று பாராமல் ஊர் நலனை கருதி செயல் பட்டாள் இருவருக்கும் நல்லது ஊருக்கும் நல்லது ஒன்றுபட்டு செயல்பட்வோம்.

அதிரை விமர்சனம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

திரு. பிச்சை அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அதிரை விமர்சனம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

திரு. பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடைசியில் நேர்மை வென்றது! ஊழலுக்கு முற்றுப்புள்ளி. இதுதான் அதிரை எதிபார்த்த "மாற்றம்" வாழ்த்துக்கள் திரு. பிச்சை.

Adirai Thandi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது ஒரு நல்ல தருணம்.
இனிமேல் நல்லவர் எவர் வல்லவர் எவர் இன்று ஈசியாக அடையாளம் கண்டுவிடலாம்

imtm said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

This is Good News to Adirai People. This is good time to Mr. Aslam.

அதிரை தம்பி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

துனைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பிச்சை அவர்கள் நமதூரின் அனைத்து சமூக மக்களிடத்திலும் அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதோடு, அவர் ஊரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம் சமூகத்திற்கு பல வகையில் உதவிவருபவர் என்ற நற்பேறு அவருக்கு கூடுதல் சிறப்பு.

அல் அமீன் பள்ளி உட்பட பல பிரச்சினைகளில், நியாயத்தின் பக்கம் நின்ற ஒரு சில பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஆளும் கட்சியின் அதிரை நகரச் செயலாளர் என்பதை எல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமிக்கவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கபபட்டிருக்கின்றார் என்பது உன்மையில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஊர் நலனில் அக்கறையுள்ள - துடிப்பு மிக்க இளைஞரான நமதூர் சேர்மன் அஸ்லம் அவர்கள் கட்சி பேதம் பராமல், துணைத் தலைவரோடு சேர்ந்து ஊரின் நலனில் அதிக அக்கரைக் வேண்டும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவராக துணைத்தலைவரும் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

இரு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும் என்பதற்கேற்ப, இருவரும் சேர்ந்து ஊரின் நலனில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும், அனைத்து நலத் திட்டங்களையும் உடனே நிறைவேற்ற இருவரும் கூட்டு முயற்சியுடன் சேர்ந்து உழைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

உங்கள் இருவருக்கும் ஊர்மக்களின் ஒத்துழைப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ADIRAI TODAY அவா்கள் கடைசியில் நேர்மை வென்றது ஊழலுக்கு முற்றுப்புள்ளி என்று எதை சொல்கிறார் தேளிவாக சொல்லவும்

majfausa said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

this is not a good time to mr Aslam but very bad time.He has to face lot of forthcoming troubles.

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஏற்கனவே 13ம் வார்டு மெம்பர் நடந்த தேர்தலில் ஜெயித்தது எப்படி என்று ஊருக்கே தெரியும், கிடைத்த மெம்பர் பதவியே அதிகம் என்று சொல்லலாம், இதில் துணை சேர்மன் பதவிக்கு நிற்பது கொஞ்சம் ஓவரா தெரியலே! விளக்கம் இதுதான்..கடைசியில் நேர்மை வென்றது ஊழலுக்கு முற்றுப்புள்ளி!

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதே சமயம் திமுகவுக்கு மட்டும் துணை சேர்மன் பதவி வந்திருந்தால் ஊருக்கே தாங்காது, ராம. குணசேகரனின் தலையீடு, 13ம் வார்டு மெம்பரின் அத்துமீரல் அப்பா தாங்க முடியாது..

Doha Friends said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Adirai Today

Super Apu. Correcta Sonneenga.

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Vice President Mr. Pichchai is nice man, Christian, and also he is son of Teacher Mrs. Pushpa (in Elementary School)

KALAM SHAICK ABDUL KADER said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதைத்தான் எதிர்பார்த்தோம்.

இனிமேல், மத நல்லிணக்கம்+ ஆளும் கட்சியின் துணைத் தலைவர் = அதிரைக்கு நல்ல காலம்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.