அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 16, 2011

அதிரை பிபிசியின் முக்கிய அறிவிப்பு .


அதிரையில் தற்பொழுது நடைபெறும் பேரூராட்சி தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதிரையின் நிலவரம் மற்றும் வேட்பாளர்களின் நேர்காணல் ஆகியவற்றை அதிரை பிபிசி செம்மையாக செய்துவருவாதாகவே நம்புகிறோம். பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் 12 வேட்பாளர்களில் முக்கிய வேட்பாளர்களின் பேட்டி அதிரைபிபிசியில் இடம்பெற்றுள்ளன.

இதில் அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் சகோ. M.M.S பஷிர் அகமது அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார். அவர்களை பேட்டி எடுப்பதற்கு பலமுறை அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் முயற்சி செய்தோம். அவர்கள் நமக்காக நேரம் ஒதுக்கி தரவில்லை பின்னர் அதிரைக்காக நடத்தப்படும் வேறு ஒருதளத்தில் அவர்களின் பேட்டி வெளியானது அல்ஹம்துலில்லாஹ்.

மற்றபடி அதிரையில் உள்ள 21 வார்டுகளில் முக்கிய வார்டுளின் வேட்பாளர்களை பேட்டி எடுப்பதற்கு அதிரைபிபிசி முயற்சி மேற்கொண்டது அதில் எங்களால் முயன்ற அளவு சிலரது பேட்டி அதிரைபிபிசியில் வெளியானது நேரமின்மை மற்றும் பணிச்சுமை, காரணமாக மீதி உள்ள வேட்பாளர்களை பேட்டிஎடுத்து வெளியிட முடியவில்லை என்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

தேர்தல் நேரத்தில் வெளிநாட்களில் வசிக்கும் நம்தூர்காரர்களுக்கு எப்படியாவது அனைத்து தகவல்களையும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பத்து பைசா ஆதாயம் இல்லாமல் இந்த பணியை செய்து வருகின்றோம். இதில் சில விமர்சனங்கள் வரத் தான் செய்கின்றது. குறைகள் இருந்தால் எங்களுக்கு மடலிட்டால் அதை திருத்திக்கொள்ள தயங்கமாட்டோம்.எங்களின் இந்த சேவையை இறைவன் பொருந்திக் கொள்வானாக.

அதிரையில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேட்டி தர விருப்பம் உள்ளவர்களை நாளைக்குள் எங்களை தொடர்புகொள்ள செய்யுமாறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நண்பர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
அதிரை பிபிசி குழு

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.