அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Saturday, October 22, 2011

சங்கத்திற்கு சம்மட்டி அடியா ???

நிச்சயமாக விசுவாசிகள் யாவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தை)யும் நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹவுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். (அல்குர்ஆன் 49:10)

அன்பிற்குரிய அதிரை மக்களே

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லும் இந்த நாட்டில் வாக்கு கொடுத்தவனின் வாக்கை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று சொல்லுவது இல்லை, வேட்பாளர்களுக்கு வக்காளத்து கேட்டு வரும் எவரும் நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என்று கேட்பதும் இல்லை இது போன்ற சூழ்நிலையில்  தமிழகம் சந்தித்த உள்ளாச்சி தேர்தலில் இதற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் அதிரை மக்களின் கொந்தளிப்பின் காரணமாக அந்த மக்களால் நடத்தப்படும் சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களின் ஆதரவுடன் வேட்பாளர்களை தாமே நிறுத்துவது என்றும் தவறுகள் செய்தால் தட்டி கேட்போம் அல்லது பதவியை விட்டு விலகசொல்வோம் என்றல்லாம் சொல்லி வேட்பாளர்களை நிறுத்தியது, அரசியல் கட்சிகளே அடி போகும் அளவுக்கு பெருபான்மையான மக்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் , அதில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்
குறிப்பாக என்னுடன் சேர்ந்து சில சகோதர்கள் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும் முறையை தவறு என்று பல முறை இணையத்தில் எடுத்து வைக்கபட்டது, பொதுவாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அவர்களுடன் நேர்காணல் வைத்து வெற்றி வாய்ப்பினை அடிப்படையாக வைத்து தேர்ந்து  எடுக்கபடுவார்கள், ஆனால் எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் சங்க தேர்வாளர்கள் வேட்பாளர்களை எதோ சங்க பதவிக்கு தேர்ந்து எடுப்பது போல் குழுக்கள் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள் முடிவில் பெருபான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்தித்தனர் குறிப்பாக வெற்றி வேட்பாளர்கள் சங்கத்தை தேடி வந்தும் தேர்ந்து எடுக்கும் முறையை காட்டி வாய்புகள் மறுக்கப்பட்டதில் பலர் வேதனை அடைந்தனர் 
ஹைர் முடிவில் தேர்ந்து எடுக்க பட்ட அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே ஆனால் அவர்கள் எல்லோரும் சங்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும் (இன்ஷா அல்லாஹ் )....,

சங்கத்திற்காக மக்களா அல்லது மக்களுக்காக சங்கமா என்று கேள்வி எழுந்தால் நிச்சயம் மக்களுக்காக சங்கம் என்பதைத்தான் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்பதற்கு இணங்க இனி வரும் காலங்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை சங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையுடன்

சங்கத்தின் வெற்றி அச்சங்கத்தின் அங்கத்தினரின் வெற்றி
சங்கத்தின் தோல்வி அச்சங்கத்தின் அங்கத்தினரின் தோல்வி
ஆக சங்கம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொல்லுபவர்கள் தங்களை தானே இழிவுபடுத்தி கொள்பவர்கள் என்று சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன் 
குறிப்பு : 

மனிதர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வெறுப்புக்குள்ளான இதயங்களுக்கிடையில் பிரியத்தை ஏற்படுத்தவும் மிகைப்படுத்திப் பேசுவது பொய்யாக கருதப்படாது, பேசுபவரும் பொய்யராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Mohamed Rafeek Taj

12 பின்னூட்டங்கள்:

அப்துல் கபூர் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

தம்பி dairy ரபீஃக் நீ சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லு.

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

நீங்கள் எதில் தெளிவடைய வில்லை என்று சொல்லுங்கள் தெளிவுபடுத்துகிறேன் ...

டைரி என்பது யார் என்று எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் நினைப்பது போல் அவர் தனிப்பட்ட நபர் அல்ல , மேலும் இப்பதிவுக்கு தொடர்பு இல்லாத விசயங்களை நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை

என்னுடைய பதிவை தங்கள் தளத்தில் இடம்பெற செய்த அதிரை பி பி சி குழுவினருக்கு நன்றிகள் பல

adirami said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அஸ்ஸலாமு அலைக்கும்

நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் அல்லாஹ்வின் அருளால் சங்கத்திற்கு கட்டுப்பட்ட 6 வார்டுகளில் சங்க வேட்பாளர்கள் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். ஏனைய நான்கு வார்டுகளிலும் வெற்றிப்பெற்றிருப்பவர்கள் தி மு க வை சார்ந்தவர்களே.

இஸ்லாமியர்களின் சிவில் விசயங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சங்கமான சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒற்றுமையை மையப்படுத்தி இந்த முறை ஆறு வார்டுகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதற்கான பிரச்சாரமும் செய்தது.

இவ்வாறிருக்க நமது சங்க வேட்பாளர்களை ஐந்து வார்டுகளிலும் தி மு க எதிர்த்தது ஒரு வார்டில் மட்டும் தி மு க உறுப்பினரான இப்ராகிம் அவர்கள் சங்க வேட்பாளரகிவிட்டதால் தி மு க என்ற எதிர்ப்பு இல்லை. இந்த ஐந்து தி மு க வேட்பாளர்களில் நால்வர் முஸ்லிம் ஒருவர் மட்டும் சம்சுல் இஸ்லாம் சங்க வரையறைகளுக்கு உட்படாத மாற்றுமத சகோதரர்.

நமது சங்க வேட்பாளர்களை இரண்டு வார்டுகளில் மட்டுமே எதிர்த்த அ இ அ தி மு க வேட்பாளர்களில் ஒருவர் முஸ்லிம் இவருடைய வார்டின் ஒரு பகுதிதான் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டதாகும். மற்றுமொருவர் சம்சுல் இஸ்லாம் சங்க வரையறைகளுக்கு உட்படாத மாற்றுமத சகோதரர் ஆவர்.

பேரூராட்சியின் துணை தலைவர் போட்டியில் சங்க ஆதரவு பெற்ற இரண்டு உறுப்பினர்களும் எந்த வித நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறிய ஆய்வு. நமது சங்க வேட்பாளர்களின் தோல்வியின் பிண்ணனியில் உள்ள சங்கத்திற்கு கட்டுப்படாத தி மு க நான்கு வேட்பாளர்களின் ஆதரவுடன் துணைத்தலைவர் தேர்ந்து எடுக்கப்படுமேயானால் சங்கத்திற்கு கட்டுப்பட்ட பிரச்சரதின்போது தம்மோடு தோள்நின்ற தோல்வியுற்ற சகோதர்களுக்கு வெற்றிப்பெற்ற சகோதரர் செய்யும் கைமாறுதான் என்ன. ஆகவே தமது சக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமான தி மு க வை ஆதரிக்கும் நிலைபாட்டை எடுக்க கூடாது.

சங்கம் தலைவர் போட்டியை கட்டுப்படுத்த முடியாதது நமதூருக்கான பொது வேட்பாளர் என்பதால் மட்டுமே. அதனை காரணம் கட்டி துணைத்தலைவர் போட்டிக்கும் இந்தநிலைப்பாடு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரே கட்சியும் கூட்டணிக் கட்சிகளுமே தலைவர் பதவியையும் துணை தலைவர் பதவியையும் தக்க வைத்துக்கொள்வது சுகாதாரமான ஜனநாயகத்திற்கு வழிகோலாது என்பதனை தூரநோக்கு பார்வையுடன் சிந்திக்க வேண்டும். அதுவே தலைவரின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும்.

தி மு க உறுப்பினரான இப்ராகிம் அவர்கள் வேண்டுமானால் நடுநிலை வகுத்துக்கொள்ளட்டும். சவ்தா அவர்கள் அ இ அ தி மு க தலைமையில் துணைத்தலைவர் போட்டியில் பங்குகொள்ளட்டும். இங்கே ஏன் அ இ அ தி மு க முன்னிலை படுத்தப்படுகிறது என்றால் அந்தக்கட்சி முதலாவதாக நமது சங்க வேட்பாளர்களை அதிக இடங்களில் எதிர்க்கவில்லை இரண்டாவது பிரதானமாக வெற்றிப்பெற்ற மாநிலக்கட்சி.

நமது சங்கம் எவ்வாறு அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்படுத்த முனைந்ததோ அதைப்போலவே துணைத்தலைவர் தேர்ந்து எடுப்பதில் அனைத்து சுயேட்சை முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பதில் முனைப்புக்காட்ட வேண்டும். இதற்கு நமது சங்கம் சார்பாக தேர்ந்து எடுக்கப்பட்ட கட்சி சாரா உறுப்பினரான சவ்தா அவர்களின் கணவரே முன்னின்று செயல்படலாம். அவருடன் ஏனைய நமது போட்டியிட்ட வேட்பாளர்களும் கலந்து செயல்படுவதே சங்கத்திற்கு பலமான எதிர்காலத்தை நல்கும்

adirai nalan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

முஹமது ரபீக் நல்ல ஆணி தரமா சொன்னிங்க சங்கத்த பத்தி.

அதிரை BBC சுதந்திரமான ஊடகம் என்பதை மீண்டும் நிருபித்துள்ளீர்கள்

U.ABOOBACKER (MK) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

//இனி வரும் காலங்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை சங்கம் நிறுத்த வேண்டும்//

பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்றவர் என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதை சகோதரர் விளக்கினால் நல்லது.
எந்த முறையில் தேர்ந்தெடுத்தாலும் அதிருப்தி வரத்தான் செய்யும். ஆதாய அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமைக்குதான் கட்டுப்படுவார்கள். புதிதாக உருவான முஸ்லிம் கட்சி, தன்னை வளர்ந்த கட்சியாக கருதி கொண்டு போட்டியிட்டு, தானும் தோற்று சங்க வேட்பாளார்களையும் தோற்கடித்து விட்டார்கள் என்பதுதான் வேதனை. (உதாரணம் 13வது வார்டு.) முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பல ஊர்களிலும் முஸ்லிம் ஓட்டுகளை பிரித்து பிற மதத்தினர் வெற்றி பெற வைத்து விட்டார்கள். எதிர்காலத்திலாவது நம் சமுதாய இயக்கங்கள் ஈகோவை விட்டு விட்டு தங்களுக்குள் இணக்கம் ஏற்படுத்தி செயல்ப்ட அல்லாஹ் அருள் புரியவேண்டும்.

மு.கி.

Diary said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

சகோ அபூபக்கர்
//பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்றவர் என்பதை எப்படி தீர்மானிப்பது//

அரசியல் கட்சிகள் எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள் என்பதை தாங்கள் அறிந்த்திருபிர்கள் என்று நம்புகிறேன் அப்படி இல்லை என்றால் உங்கள்ளுக்காக இதோ

வேட்பாளர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணலுக்கு அலைக்கபடுவார்கள்

அதில் சில பிரதான கேள்விகள் வைக்கப்படும்

வேட்பாளர்களிடம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்கப்படும் ?
மக்கள் தொடர்பு என்னன்னா ,அவர்களுக்காக எந்த வகையில் போரடியுல்லிர்கள், மக்கள் நம்பிக்கையை பெறுவதற்காக நீங்கள் என்ன செய்திர்கள் , உங்களுக்கு சீட்டு கொடுத்தால் எப்படி வெற்றி தேடி தருவிர்கள் என்பது போன்ற பல கேள்விகள் வைக்கப்பட்டு பின்பு தேர்வாளர்கள் சமந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து வெற்றி வேட்பாளர்களை தேர்ந்து எடுப்பார்கள்

( இந்து மாதிரியான கேள்விகளைத்தான் கேட்ட்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை இதைவிட தரமான கேள்விகளை கேட்கலாம் )

//எந்த முறையில் தேர்ந்தெடுத்தாலும் அதிருப்தி வரத்தான் செய்யும்//
எல்லோரும் ஏற்றுகொள்ளும் சர்வதிகரிகளை நாம் தேர்ந்து எடுக்க போவது இல்லை ... பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற மக்கள் பிரதுநிதிகளைதான் , அதிகமான அதிருப்திகளை தவிர்த்து கொண்டால் போதுமானது

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

Dear Dude Dairy

கருத்துக்களை கட்சிதமாக கக்கிவிட்டிர்கள் போங்க .....
கேள்விகளை நடையாக அமைத்திருக்கலாம் மற்றபடி நான் சொல்லுவதற்கு வேறு எதுவும் இல்லை

U.ABOOBACKER (MK) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

சகோ.ரபீக்
அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவர்களின் தோழர்கள் காட்டிய முறையைதான் நாம் பின்பற்ற வேண்டும், அரசியல் கட்சிகளை அல்ல. நேர்முக தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு கூட பணம் பெற்றுக்கொண்டோ அல்லது சிபாரிசில் சீட்டு கொடுப்பார்கள், அதுபோல் செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? சங்கம் அரசியல் கட்சியல்ல.கேள்விகளுக்கு திறமையாக பதில் சொல்வதன் மூலம் அவரின் செல்வாக்கை அறியமுடியாது.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

The title of this article is CONDEMNABLE...!
Is Adirai BBC, while closely connecting with the sangam, showing double standard...?

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

சங்கத்தைக் குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

//அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவர்களின் தோழர்கள் காட்டிய முறையைதான் நாம் பின்பற்ற வேண்டும்//
தாங்கள் பையத் முறையை சொல்லுகிறிர்களா அல்லது வேறு எதாவது... விடுங்கள் போகட்டும் அது முக்கியம்மல்ல

நபி (ஸல்) காட்டி தந்தது அல்லாஹ் மனிதனுக்கு தந்த ஆட்சி முறைக்கு ... அதையே கேடுகட்ட ஜனநாயக முறைக்கு கடைபிடிப்பது உகந்தது என்று என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.காரணம் வெறும் 23% சதவிதத்தினர் வாக்குகளை பெற்றவரை தலைவராக ஏற்று கொள்ளுகிறார்கள் ஆனால் அவருக்கு 77% சதவிதத்தினர் எதிராக (அதாவது இவர் எங்களுக்கு தலைவராக வேண்டாம்) வாக்களித்தை மறந்துவிடுகிறார்கள், ஆக ஜனநாயகத்திற்கு குழுக்கள் முறையில் தேர்ந்து எடுப்பது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஒரு முயற்சி

//நேர்முக தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு கூட பணம் பெற்றுக்கொண்டோ அல்லது சிபாரிசில் சீட்டு கொடுப்பார்கள் அதுபோல் செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? //
எனது நம்பகத்தன்மை தேர்வு முறையில்தான் தவிர உலமாக்கள் அடங்கிய தேர்வாளர்கள் மிது அல்ல

// சங்கம் அரசியல் கட்சியல்ல//
அரசியல் இயக்கம் என்று வைத்துகொள்வோம்

//கேள்விகளுக்கு திறமையாக பதில் சொல்வதன் மூலம் அவரின் செல்வாக்கை அறியமுடியாது.//
உதாரணம் ???????

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

சகோ ஒருவனின் அடிமை
//சங்கத்தைக் குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.//

இங்கு யாரும் சங்கத்தை குறைகுரவில்லை தேர்வு முறையைத்தான் ...மேலும் ஒரு முறை பதிவை படிக்க வேண்டுகிறேன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.