அதிரையில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் வேலையில் இன்று பல இடங்களில் ஆளும் கட்சியை எதிர்க்கும் விதமாக குஜராத் கலவரம் சம்பந்தமான நோட்டீஸ் விநியாக்கிப்பட்டு வருகின்றது.
ஆதிரையின் கடைசி நேரத் தகவலின் படி ஆளும் கட்சியே வெற்றிபெரும் என்ற நிலையில் இருக்க, அதை முறியடிக்கும் விதமாகவே திமுகவினர் இந்த கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டள்ளதாக தெரிகின்றது.
ஆனால் இப்படிப்பட்ட மோடி எதிர்ப்பு பிரச்சாரம், ஆளும் அதிமுகவிற்கு சரிவை ஏற்படுத்துமா என்பதை விட அந்த கலவரம் நடைபெற்ற போது பாஜகவோட கூட்டனி வைத்துக்கொண்டு - அவர்களின் ஆட்சிக்கு எல்லாவகையிலும் உதவிக்கொண்டிருந்த திமுகவிற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏனோ மறந்து விட்டு இப்படிப்பட்ட நோட்டீஸை விநியோகித்து வருகின்றனர்.
அன்று நரமாமிச நரேந்திர மோடி கலவரம் நடத்தி பல முஸ்லீம் உயிர்களை கொன்று குவித்துக்கொண்டிருந்த போது, மத்தியில் ஆளும் பாஜக எல்லாவகையிலும் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் அவருடைய ஆட்சி எந்த வகையிலும் கலைந்து விடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அப்படிப்பட்ட பாஜகவோடு அன்று கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களுக்கு எல்லாவகையிலும் ஆதரவு கரம் நீட்டியது கருனாநிதியின் தலைமையில் இயங்கிய திமுகதானே தவிர அதிமுக அல்ல. அது மட்டுமல்ல, மோடிக்கு எதிராக பல்வேறு கட்சிகளும் சேர்ந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரித்து வாக்களிக்காமல், தனது பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து மோடிக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து ஒட்டளித்து தனது மோடி விசுவாசத்தை காட்டிக்கொண்ட கட்சித்தான் திமுக. அப்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை கொண்று குவித்து நரவேட்டையாடிய நரேந்திர மோடியை கண்டிக்க திராணி இல்லாத திமுகவும் அதன் தொண்டர்களும்;, இப்போது ஓட்டுக்காக மட்டும் நாடகமாடுவது ஏனே?
அது போல், 1998ம் ஆண்டு கோவையில் முஸ்லீம்களுக்கு எதிராக மிகப்பெரும் கலவரம் நடைபெற்றபோது, 19 போது அப்பாவி முஸ்லீம்கள் காவல் துறையினரால் கொண்றுவிக்கப்பட்டனர். அப்போது முஸ்லீம்களின் கடைகளும் - சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி, காவல்துறையினரின் இந்த அநியாயங்களை கண்டித்து அவர்களை தண்டிக்க முன் வராததுடன், 'காவல்துறையினர் கருப்பு பேட்ச் அணிந்து கண்டனம் மட்டும் தான் தெரிவித்தனர்' என்று கூறி அன்று நடந்த தவறுகளை நியாயப்படுத்தினார். அதன் பிறகு சில முஸ்லீம்கள் குண்டுவைத்தல் என்ற ஒரு தவறான செயல்களில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்டவர்களை மட்டும் கைது செய்யாமல், மேலும் பல அப்பாவி முஸ்லீம்களையும் கைது செய்து, அவர்கள் 10 ஆண்டகளுக்கும் மேலாக ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு சிறைவைக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்? அதன் காரணமாக இன்றளவும் பாதிக்கப்பட்ட கோவை சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஜகாத் கேட்டு கையேந்தும் அவளநிலைக்கு தள்ளியதற்கு முக்கிய காரணம் யார்? என்பதை இப்போது நோட்டீஸ் விநியோகித்து வரும் திமுகவினர் மறந்து விட்டார்களா? அல்லது மறைக்கப்பார்க்கின்றார்களா?
எனவே இது போன்ற திடீர் துண்டு பிரசுரங்கள் கண்டிப்பாக ஆளும் ஆதிமுகவை விட திமுகவிற்குத் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்பதை தேர்தல் தோழ்விக்குப் பிறகு திமுகவினர் உணரத்தான் போகின்றார்கள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
0 பின்னூட்டங்கள்:
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment