அதிராம்பட்டினம் மேலத்தெருவில் உள்ள செல்லியன் குளம் சுமார் பரப்பளவு 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் அளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது.
இவ்வாறு பெருமைசேர்க்கும் இக்குளம் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ( ஏற்க்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கியுள்ளது ) இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது.
ஆகவே சம்பத்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் இக்குளத்தை ஆய்வு செய்து முறையான பாதுகாப்பை ஏற்ப்படுத்தி, குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை முறையாக அகற்றி தூர்வாரி சிராகச்செல்ல ஏற்பாடு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் சார்பாக,
M. நிஜாமுதீன் B.sc.
( 9442038961 )
2 பின்னூட்டங்கள்:
குளம் உடையாமல் இருக்க சில சீரியசான யோசனை.
நிலம் வியாபாரம் செய்பவர்கள் இதுபோன்ற குளத்தை தூர்வார்கிறோம் என்று குத்துகைக்கு எடுத்து அதில் உள்ள "மணலை" உங்கள் வியாபார நிலத்திற்கு மணலடித்துவிடலாம். தூர்வாரி மணலை எடுத்தப் பிறகு மீன் வளர்க்கவும் குத்தகைக்கு எடுங்கள். மீனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், பத்திரப்பதிவு முடிந்தப்பின் மீன் பிரியாணி போடலாம்.
நிலம் வியாபாரிகளே ......... அம்மாவின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்கு நீங்கள்தான் அதிகமாக பாடுபடுகிறீர்கள். அதனால் தான் உங்களின் புண்ணியத்தால் நம்மூரில் நூற்றுக்கணக்கான சிறிய குளங்கள் உருவாகி இருக்கிறது.
மழை நீர் சேகரிப்புத்திட்டம் அம்மாவின் திட்டம்.
சுயநலம் கலந்த பொதுநலம் என்பது கலைஞரின் மேல்மட்டம்.
எதற்கும் நம்ம துணைத் தலைவரிடம் இந்த போட்டாவை காண்பித்து, நம் அம்மாவிற்கு ஒரு ஈமெயில் அனுப்பச் சொல்லுங்கள். "நாங்கள்தான் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் முதலிடம்" என்று.
அஸ்ஸலாமு அழைக்கும்,
அதிரை எக்ஸ்பிரஸ்க்கு கீழத்தெரு முஹல்லா வாசிகளின் சார்பாக ஓர் வேண்டுகோள். சமீபத்தில் உங்களது இணைய தளத்தில் நமதூர் செல்லியன் குளத்தை பற்றிய செய்தியை தெரிவிக்கும்பொழுதும், அன்சாரி லெப்பை அவர்களின் மரண அறிவிப்பு செய்தியிலும் மேலதெரு செல்லியன் குளம், மேலத்தெரு ஜும்மா பள்ளி என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். பெரிய ஜும்மா பள்ளி, காட்டுப்பள்ளி மற்றும் செல்லியன் குளம் ஆகிய இவைகள் இரு தெருக்களுக்கும் சொந்தமானது. ஆதலால் தயவு கூர்ந்து இது போன்ற இரு தெருக்களின் பொது இடங்களின் பெயர்களை குறிப்பிடும் பொழுது தெரு பெயர்களை பயன்படுத்தவேண்டாம்.
இப்படிக்கு
கீழத்தெரு முஹல்லா வாசிகள்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment