வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்குமுன்பு குடிபுகல் நடைமுறைகளை மாற்றியமைத்து பல கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வகையில் சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் சம்பளத்திற்கோ அல்லது பயிற்சி பெறும்நோக்கிலோ வேலைசெய்வதைக் கட்டுப்படுத்தியது. எனினும், அங்குள்ள சில நிறுவனங்கள் உடனடியாக நிரந்தர ஊழியர்களை நியமிப்பதைவிட சுற்றுலா விசா காலம் முடிவதற்குள் வேலைவாங்கிக்கொண்டு, அவகாசம் முடியும் தருவாயில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற ஒப்புக்கொள்ளச் செய்து பிறகு வேலைக்கான விசாவுக்கான நடைமுறையை பின்பற்றுகின்றன.
இதைத் தவிர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் குறுகியகால வேலைவாய்ப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பணியாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி குமைத் பின் டீமாஸ் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, குறுகிய காலத்திற்கு விசா தேவைப்படும் நிறுவனங்கள் 3 மாதங்கள் செல்லுபடியாகத்தக்க குறுகிய கால "குறிக்கோள் விசா" (Mission Visa) கோரி விண்ணப்பிக்கலாம்.
இது, ஏற்கனவே அந்நாட்டிலுள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கும் ,புதிதாக விசா வேண்டுபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய கால விசா வழங்கப்பட்ட 60 நாட்களுக்குள் அந்நாட்டிற்குள் வந்து செல்லவேண்டும். அதிகபட்சம் 90 நாட்கள் இந்த விசா அனுமதியுடன் வேலை செய்யலாம். புதுப்பிக்க வேண்டும் எனில் நாட்டைவிட்டு வெளியேறிய 90 நாட்கள் கழித்தே மீண்டும் புதுப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குறுகியகால விசா மூலம் வருகை தந்தவர்களுக்கு நிரந்தர வேலைகிடைக்கும் பட்சத்தில் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
4 பின்னூட்டங்கள்:
என்ன செய்து என்ன பிரியோஜனம்...? காலம் கடந்த ஞானம் எனலாம்.... சமீபத்திய global recessionil அரபுலகத்திற்கு பெரிய பாதிப்பு இல்லாத நிலையில் தன்னுடைய எதேச்சதிகார போக்கினால் அதல பாதாளத்தில் கிடக்கும் இந்த நாட்டிற்கு மேலும் சரிவு நீடிக்கும் என்பது பொருளாதார வல்லுனர்களின் கருத்து...... இதற்கு காரணம் மார்க்கத்திற்கு புறம்பான அனுமதிதான் என்பதை இனியாவது இந்த நாடு உணர்ந்தால் சரி....
அல்லாஹ்வுக்கும்,அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டால் வெற்றி அடையலாம்.எனக்கு பிசினஸ்தான் முக்கியம் என்றால்,இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் அழிவின் விளிம்பில் துபாய் .............
கட்டுப்படான இஸ்லாமிய நாட்டில் நடப்பதைவிட துபாயில் அட்டுழியங்கள் கம்மியாகதான் நடக்கின்றன....டேராவையும்,பர்துபாயும்தான் துபாயின் ஒட்டுமொத்த முகம் என்று நீங்கெல்லாம் நம்பி இருந்தால் அது அறீவினம் கிடையாது.....பல நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவத்தில் துபாய் எவ்வளவோ பெட்டர்
மக்காவில் என்ன seiya mudiyathu endru ninaikireerhal
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment