அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, November 26, 2011

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விண்கலம் இன்று பயணம்


செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய புதிய விண்கலத்தை அமெரிக்காவின் நாசா இன்று இரவு இந்திய நேரப்படி 8:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.


செவ்வாயில் தண்ணீர்


பூமியை தவிர, வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா என்பது குறித்த ஆய்வு நீண்டகாலமாக நடைபெறுகிறது. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் (பனிக்கட்டி) இருப்பதாக கருதப்படுகிறது. இது தொடர்பாக, 1970-ம் ஆண்டிலேயே வைகிங், வோயகர் போன்ற விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் `நாசா' அனுப்பியது.


இது தவிர, 2004-ம் ஆண்டில் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தும் வண்டி அளவிலான ரோவர் இயந்திரத்துடன் ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது. பூமத்திய ரேகைக்கு எதிர்ப்புறத்தில் செவ்வாய் கிரகத்தில் அந்த விண்கலம் தரை இறங்கியது. மூன்று மாதங்கள் அங்கு ஆய்வு நடந்தது. அப்போது தண்ணீர் படலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.


9 மாத பயணம்


இந்த சூழ்நிலையில், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக புதிய `ரோவர்' கருவியுடன் கூடிய விண்கலத்தை நாசா அனுப்புகிறது. கென்னடி விண்வெளி ஆய்வு மையம் அருகேயுள்ள கேப் கார்னிவெல் விமானப்படை தளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 10 மணி (அமெரிக்க நேரப்படி) அளவில் அந்த விண்கலம் புறப்படுகிறது.


இந்த திட்டத்துக்காக ரூ.12 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. விண்கலத்தில் பொருத்தப்பட்ட ரோவர் கருவியானது, ஒரு சிறிய கார் அளவுக்கு உள்ளது. அணுசக்தியால் இயங்கக் கூடியது. விண்வெளியில் 9 மாத காலம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அது சென்றடையும். டிசம்பர் 18-ந் தேதி வரையிலும் விண்கலம் ஏவுவதற்கு சாதகமான பருவநிலை நிலவுகிறது. எனவே, தட்பவெப்ப நிலையால் விண்கலம் புறப்படுவதில் தாமதம் ஏற்படாது.


ரோவர் கருவியின் சிறப்பு


ஏற்கனவே, நிலாவுக்கு அனுப்பிய அப்பல்லோ விண்கலம், சனி கிரகத்துக்கு அனுப்பிய காசினி விண்கலம், புளுட்டோவுக்கு அனுப்பிய நியு ஹரிசான் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த விண்கலத்தையும் நாசா விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். விண்கலத்தில் உள்ள ரோவர் கருவியை இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.


செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி ஆராய்ச்சி செய்ய உள்ள இந்த ரோவர் கருவியில் ரோபாட் கைகள் உள்ளன. 10 கருவிகள் இருக்கின்றன. மலைப்பாங்கான பகுதியில் கூட 154 கி.மீட்டர் அளவுக்கு விசாலமாக பயணம் செய்யக் கூடியது. மேலும், தரை தளத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரம் வரை மேலெழும்பும் சக்தி கொண்டது.


செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழும் சூழ்நிலை இருக்கிறதா? எவ்வளவு காலம் வரை மனிதர்கள் வாழ முடியும்? என்பது போன்ற ஆராய்ச்சியை இந்த ரோவர் மேற்கொள்ளும்.



நன்றி: தினத்தந்தி

8 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும்......
சந்திர மண்டலம் போய், இப்பொழுது செவ்வாய் கிரகம்.

நாசா நிறுவனம் எப்பொழுதும் நாச வேலையைத்தான் செய்யும்.

இதில் வேடிக்கை என்னவெனில்.........

அணுசக்தியால் பயணிக்கும் இந்த ராக்கெட், எப்படி மனிதனை ஏற்றிச் செல்லும்.?

பூமிலிருந்து மனிதனை ஏற்றி செல்லும் ராக்கெட் செவ்வாயில் கிரகத்தில் தரை இறங்கும்போது அணுசக்தியால் வெளியாகும் எரிபொருள் மூலம் வரும் சுவாசத்தை எப்படி மனிதன் நுகர்ந்து கொள்ள முடியும். (பார்க்க ராக்கெட் தளத்தில் எவரையும் காண முடியாது)??

பூமியில் எத்தனையோ மதம், ஜாதி. ஆனால் செவ்வாயில் எந்த மதம் அதிகமாக காணப்படும்.

அந்த கிரகத்தில் எத்தனை அவதாரங்கள் எடுப்பார்கள்.

அல்லது அது ஒரு சுற்றுலா மையமா.

அப்படியிருந்தால் ஏன் இன்னும் மனிதனை அனுப்பவில்லை. அப்படி மனிதனை அனுப்ப அவன் உயிரோடு திரும்பாவிட்டால், மறுபடியும் எந்த பிதற்றலை வைத்து இன்னொரு மனிதனை அனுப்புவார்கள்.

செவ்வாய் கிரகத்திர்கேன்று தனி ஆடையா... (ஒரு வேலை நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, போத்தீசுக்கு உரிமம் கொடுப்பார்களோ....)

அந்த செவ்வாய் கிரகத்தை படைத்தது, உருவாக்கியது யார் என்று சொல்லமுடியுமா.

அது இயற்கையின் சீற்றமா. யார் அந்த இயற்க்கை, இயற்கையை உருவாக்கியது யார்.. அல்லது இயற்க்கைக்கு இயற்க்கை இருக்கா...

செவ்வாய் கிரகத்தை கண்டு பிடித்தவர்கள். ஏன் இன்னும் இயற்கையை யார் என்று இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

அல்லாஹ்வின் மீத சத்தியமாக இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கலாம்...............

நஊதுபில்லாஹ்....... அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.

இயற்க்கையின் சீற்றம் என்பது இறை மறுப்புக்கு மற்றொரு சொல். நீங்கள் ஆழமாக சிந்தித்தால் இந்த சந்திரன், செவ்வாய் என்று சொல்வதெல்லாம் வெறும் பிதற்றல். அதற்க்கு ஆதாயமுள்ள வேற ஒரு காரணம். அதை "துக்ளக் நியூஸ் குழுமம்" வெகு விரைவில் மக்கள் மன்றத்தில் சொல்லும்.

உங்களையும் எங்களையும் படைத்த இறைவன் சொல்கிறான். "நீங்கள் எந்த கோலங்களுக்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். ஆனால் அதற்குரிய சுல்தானை (சக்தியை - POWER ) நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறதென்றால் 1433 வருடங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்ட இந்த இறைவசனம், அதே வசனம் ஏன் அங்கு வாழ்ந்து விடலாம் என்று சொல்லி இருக்கக்கூடாது. (சாதாரணமாக மரத்தின் நிழலில் நின்றால் கூட அதற்கும் உள்ள கேள்வி கணக்குக்கு வழிமுறை சொல்லிக்கொடுக்கும் இறைவன், செவ்வாய் கிரகத்துக்கு போய் இருந்து வர இருக்காதா என்ன.?)

இந்த பூமியில் எத்தனையோ மனிதன் காணாத இடங்கள் உள்ளது. அதை பார்ப்பதற்கே எத்தனையோ வருடம், அங்கு வாழ்வதை நினைத்துப்பாருங்கள்.

செவ்வாய் கிழமை வந்தால் முடி திருத்தகமே மூடிக்கிடக்கும். நம்ம எப்படி செவ்வாய் கிரகத்துக்கு.......

கல்யாண கூப்பட்டுக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் இல்லாம கஷ்ட்டப்ப்ற நாம, நம்ம சொந்தன்காரவங்க எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு போனா என்ன ஆவுறது.

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//விண்கலத்தில் பொருத்தப்பட்ட ரோவர் கருவியானது, ஒரு சிறிய கார் அளவுக்கு உள்ளது. அணுசக்தியால் இயங்கக் கூடியது.//

இதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ?

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
எங்கே சென்றார்கள் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் ஏன் எனில் முன்பு சந்திர மண்டலத்துக்கு சென்றதாக சொன்ன போட்டோ வில் அவர்களின் கொடியை கவனித்து பார்த்தால் அது அசையாமல் அட்டை போன்று இருப்பதை காணலாம் -, உண்மை என்னவென்று இறைவன் தான் அறிவான்,

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இயற்க்கையின் சீற்றம் என்பது இறை மறுப்புக்கு மற்றொரு சொல்.//

Well said

Moinudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

///விண்கலத்தில் பொருத்தப்பட்ட ரோவர் கருவியானது, ஒரு சிறிய கார் அளவுக்கு உள்ளது. அணுசக்தியால் இயங்கக் கூடியது.///

// இதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? //

மிக மிக குறைந்த அளவிலான அணுசக்தியால் இயங்கக் கூடியது அந்த விண்கலம் ரோவர் 'Curiosity Rover'. அது ப்ளுடோனியம் என்கின்ற அணு எரி பொருளைக் கொண்டு இயங்கும். இதனால் எவ்வித கதிர்வீச்சு அதிகம் ஏற்படப்போவதில்லை என்றபோதிலும் அணு சக்தியின் பயன்பாடு விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிய பிறகுதான் உபயோகிக்கப்படும்.

அந்த விண்கலம் செவ்வாயின் தரையில் மிக குறைவான வேகத்தில் (வினாடிக்கு சுமார் 4cm தூரம்) பயணம் செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 4 கிலோ அணு எரி பொருளை மட்டுமே வைத்து ஏறத்தாள 14 வருடம் அந்த ரோவர் இயங்க முடியும், இருந்தபோதிலும் அனைத்து அறிவியல் சாதனங்கள் அவ்வளவு காலம் நீடித்து இருக்க சாத்தியம் குறைவு, ஆகையால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலம் குறைந்தது 600 பூமி நாட்கள் செயல்பட்டு தான் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் என்று விஞ்ஞானிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

முதலில் செவ்வாயை சென்றடைந்தாலே அது ஒரு வெற்றி, பிறகு இயங்கி ஆராய்ச்சிக்கான தகவல்களை
அனுப்புவது என்பதுதான் விண்கலம் அனுப்பப்பட்ட நோக்கத்தின் முழு வெற்றி அடங்கியுள்ளது.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நாசகரத்தின் மறுபெயர் தான் நாசா.... இந்த விஞ்ஞான துறையை வைத்து ஒருவழியில் விண்கல ஆய்வும் மறுவழியில் உலகில் அனைத்து மூளையும் அறிந்து எந்த நாட்டையும் தாக்கும் வல்லமையை உருவாக்கி வருகின்றனர் இந்த அயோக்கியர்கள்..... அமெரிக்காவின் இந்த அணுகுமுறை அனைவராலும் கண்டிக்கபடவேண்டியது..... இது போன்ற ஆய்வுகளை அல்லாஹ்வின் கிருபையால் ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டும் என்பது என் அவா..... இருண்ட அறியாமை காலத்தில் இஸ்லாத்தை போதித்தத திருமறை விஞ்ஞான முன்னேற்றத்தில் வாழும் நமக்கு ஏன் வழிவகுக்க வில்லை காரணம்...... நம்முடைய பாராமுகம்... இன்ஷா அல்லாஹ் நமதூரில் கல்வி வழிகாட்டுதெளுக்கென்று தனித்துறை உருவாக்கி நம் இளம் தலைமுறையை சீரிய தலைமுறையாக உருவாக்க முயற்ச்சிக்க வேண்டும்..... அவர்கள் மார்க்க நெரிமுரக்குட்பட்டு விளங்கும் வகையில் மார்க்க கல்வியோடு சேர்த்து உருவாக்க வேண்டும்..... முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாதிரி அல்ல....

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாதிரி அல்ல....//

நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க பிரதர். எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் கொடுப்பானாக

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மன்னிக்கவும் "இருண்ட அறியாமை காலத்தில் - இஸ்லாத்தை போதித்த என்பதற்கு பதிலாக..... "விஞ்ஞானத்தை போதித்த" என்று மாற்றி வாசிக்கவும்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.