தஞ்சை மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2011 & 2012 முதல் 2015 & 2020 வரை 5 ஆண்டுகளுக்கான திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கரன் பேசுகையில்:-
பேரூராட்சிகளில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வறிக்கையை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் பாதாளச் சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், தெரு விளக்குகள், பூங்கா அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வளாகம், மயான மேம்பாடு, பஸ் நிலையம் அமைத்தல், வணிக வளாகம் கட்டுதல், மழை நீர் சேமிப்பு, வாகனங்கள் நிற்குமிடம், நீர்நிலை மேம்பாடு மற்றும் இதர அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், பணிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான திட்ட அறிக்கையும் உடனடியாக தயார் செய்யப்பட வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் 22 பேரூராட்சிகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
இதில் முதல்கட்டமாக தாராசுரம் பேரூராட்சியில் ₹.24 கோடியிலும், ஒரத்தநாட்டில் ₹.12.21 கோடியிலும், திருநாகேஸ்வரத்தில் ₹.23 கோடியிலும், அதிராம்பட்டினத்தில் ₹.23.73 கோடியிலும், பாபநாசத்தில் ₹.21.12 கோடியிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான கழிவுநீர் தேக்க நிலையம் அமைக்க வேண்டும். அதற்கான திட்டத்தை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட செயல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், சமூக பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 22 பேரூராட்சிகளிலும் டிசம்பர் மாதம் முதல் தேதி தொடங்கப்பட வேண்டும். கூட்டத்தில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சின்னசாமி, ஆர்.டி.ஓ. காளிதாஸ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
3 பின்னூட்டங்கள்:
கலெக்டர் அய்யா, நீங்க பாட்டுக்கும் ஒவ்வொருதிட்டமா அறிவிக்கிறீங்க,
நாங்களும் ரொம்ப ஆர்வமா இருக்கோம், எங்களுக்கும் ஏகப்பட்ட சிலவாயிடுச்சி, சரி ஏதோ சிலவு பன்னுனோம்னு இருந்தாக்க ஆங்காங்கே பிரட்சன, எவ்ளோ நாளைக்குத்தான் கைகாச போடுறது.... பெரிய பெரிய படிப்பல்லாம் படிச்சிரிக்கீங்க, "விரலுக்கேத்த வீக்கம்னு" உங்களுக்கு தெரியாதா..? என்ன.
அதுமட்டுகிள்ளங்கய்யா.....
எத்தன நாளைக்கித்தான் நாங்க குப்பையும் கூளத்தையும் வச்சி ஆட்சி பண்ணுறது, அரசியல் நடத்துறது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஏதாவது பார்த்து செய்ங்கய்யா... மக்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க....
முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊர்களில் அதிரையும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.... இது அதிரை மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்..... ஹ்ம் எத்தனை நாளைக்குதான் வீட்டுக்குள்ளேயே குழிவெட்டி கழிவை தேக்குவது ? சீக்கிரம் செயல்படுத்துங்கையா....
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அரிமாசங்க கூட்டத்தில் பேசியதுபோல் பாதாள சாக்கடை திட்டம் முதலாவதாக ஒரத்தநாடு நகருக்கு சான்க்சன் ஆகிவிட்டதால் தொய்வடைந்துவிடவேண்டாம். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல், சரியான பாதையில் முயற்சித்தால், பாதாள சாக்கடை திட்டத்தை நமதூருக்குக் கொண்டுவரலாம்.
MOHAMED THAMEEM
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment