அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Sunday, November 27, 2011

கழிவுகளின் தேக்கமாய் திகழும் கடற்கரைத்தெருவிற்கு மாற்றம் கிடைக்குமா?


அதிராம்பட்டினத்தின் நுழைவாயிலாக திகழும் கடற்கரைத்தெருவில் 300க்கும் மேற்பட்ட வீடுகளும், 2000க்கும் மேற்பட்ட  மக்களும் வசித்துவருகின்றனர். இங்கு ஏழைகளும்,நடுத்தரமானவர்களும் அதிகமாக வாழ்கிறார்கள். அரசின் அடிப்படை வசதிகள் குறைவாக பெற்று சுகாதாரமின்றி ஆங்காங்கே குப்பைகளும்,கழிவுநீர் தேக்கங்களும் தெருமுழுதும் நிரம்பி அவர்களுடனே இருக்கின்றன. ஓட்டுக்கேட்டு வரும்பொழுது அழகான வார்த்தைகளை புன்முறுவலாக வீசிவிட்டு போகிறார்கள் இங்கு வரக்கூடிய வேட்பாளர்கள்.

அதன்பிறகு அதிரையில் இல்லாத தெருபோன்று நிலையாய் வைத்துவிடுகிறார். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு கேட்டு வரும்பொழுது மூக்கை பிடித்துக்கொண்டும், தட்டுதடுமாறியும்தான்  ஒட்டு கேட்டுவந்தவர்கள், ஆ.. பள்ளம், இங்கே சாக்கடை பார்த்து வாங்க.. என்று தட்டுதடுமாறியே ஓட்டு கேட்டு வந்தார்கள். அந்நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தாங்களாகவே ஆட்சிபொருப்பேற்று முதலாவதாக இந்த தெருவிற்கு முறையான பணிகள் செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என்று சென்றார்கள். சென்றவர்கள் மனநிலை தற்பொழுது எப்படி என்று தெரியவில்லை. தெருவின் நிலைபாடுகளில் சற்றே மாற்றம்வரும் என்ற எதிர்பார்ப்பு பழைய குறுடி கதவை திறடி என்ற எண்ணம்தான்.  

கடந்த 10 தினங்களுக்கு முன் இந்த தெருவில் சுகாதாரகேடுகளின் விளைவால் வைரஸ் காய்ச்சல் ஆறு மாத குழுந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. எத்தனை புகார்களை பேரூராட்சி அலுவலரிடம் தெரு பொருப்பில் இருக்கும் நாங்கள் தெருவில் உள்ள மக்கள் நலன்கருதி  புகார் மனுக்கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதற்கு முடிவில்லை.

இனிவரும் காலங்கள் மலைக்காலமே இதை தெரிந்த பேருராட்சி கடற்கரைத்தெரு மக்களுக்கு முறையான வடிகால்கள்,குப்பை அகற்றுதல் மற்றும் சுகாதார சீர்கேடுகளை அதிகமாக மக்களுக்கு கொடுக்கும் கொசுகளை ஒழித்தல், கூட்டம் கூட்டமாய் கோசமிட்டுதிரியும் வெறிநாய்களை ஒழித்து அதனை முறையாக புதைத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாற்றத்ததை எதிர்நோக்கிய வண்ணம் கடற்கரைத்தெரு இளைஞர்களும், பொதுமக்களும்

கடற்கரைத் தெருவில் இருந்து நமது செய்தியாளர்
SENA MUNA (DIGITECH)







9 பின்னூட்டங்கள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

பெரு மழையில் வீடிழந்த காக்கைக்கு உதவித்தொகை வழங்குவர் யாரோ?

அழஹாதிய மழையே....உன் மூலம் உலகை குளீரூட்டச் செய்வது யாரோ?

பெருமழையில் கரைபுரண்டு ஓடும் உள்ளம்
அடை மழை ஏழையின் அழையா விருந்தாளி...

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடருவோம்..

தனிமையில் இறைவனின் படைப்பை ரசித்தவனாய்...ருசித்தவனாய்

மு.செ.மு. முஹம்மது அபூபக்கர்

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அட சேனா மூனா நீ கூட நல்லாத்தான் எழுதுரே தெரு அவலத்தை பற்றி உன் போன்ற பொது நல வாதிகள் ஒன்று கூடி ஊர் அவலத்தை போக்க முயற்சி எடுங்கப்பா நாங்களும் உங்க முயற்சிக்கு ஒத்துளைக்கின்றோம்

ajibrahim said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இது யாரையும் குறை சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல. தெருவின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக எழுதப்பட்டது. தெருவின் மேல் உள்ள அக்கறையால் எழுதப்பட்டது. இவரின் அக்கறை என்றும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் நீண்ட ஆயுளை அருள் புரிவானாக ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

ஊரின் நுழைவாயிளுக்கே இந்த கதியா?

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

இந்த குப்ப தொட்டியத் தவிர எல்லா இடத்திலேயும் குப்பையை போடுகிறார்கள்.

சேர்மன் அய்யாவால குப்பத் தொட்டியதான் வக்க முடியும், அதுக்காக உங்க வீட்டு குப்பய, குப்பத்தொட்டில அவரா எடுத்துப் போடா முடியும்....

சேர்மன் அய்யா. நீங்க முடிந்தா நன்றி அறிவிப்புக் கூட்டத்த இங்கேயும் நடத்தப் பாருங்க...

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

குப்பையை அகற்றுவது ஒருபுறம் இருக்கட்டும்.... நம் மக்களையும் கொஞ்சம் எச்சரிக்கணும் பொது இடங்களில் குப்பைகளை போடுவதுதான் இது போன்ற தொத்துவியாதிகளுக்கும் காரணம்.... முறையாக சொல்லியும் குப்பையை எடுக்க முன் வரவில்லையா உடனே தெருவாசிகள் ஒன்று சேர்ந்து மொத்த குப்பையையும் அள்ளி சம்பத்தப்பட்ட அலுவலகத்தின் முன் போய் கொட்டுங்கள்..... சிலவை பங்கிட்டு கொள்ளுங்கள் இதுவே அவர்களை விழிக்கவைக்கும்....

ZAKIR HUSSAIN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

தெரு சுத்தமாக இல்லாததற்கு தெருவாசிகளும் காரணம்

MOHI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

முதலில், நமது மக்களுக்கு சுகதாரத்தைப் பற்றி விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்,கண்ட இடங்களில் குப்பை கூலங்களை வீசுதல், தெருவில் இருக்கும் குப்பை தொட்டி தவிர அதனை சுற்றி வீசுதல் போன்ற அநாகரிக செயல்களை முற்றிலும் தடுக்க வேண்டும். எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை எதிர்ப்பார்க்க கூடாது. தங்கள் வீட்டில் எல்லா விதமான சுத்தத்தை பற்றி சிறிய வயதிலயே பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். வீடு சுத்தமானால் தெரு சுத்தமாகும். தெரு சுத்தமானால் ஊர் சுத்தமாகும். ஊர் சுத்தமானால் நகரம் சுத்தமாகும். நகரம் சுத்தமானால் நாடு சுத்தமாகும். நாடு சுத்தமானால் நாம் அனைவரும் நோய் இன்றி நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

முன்பெல்லாம் பிள்ளையை பெத்து குப்பையில் போடுவதை கேள்வி பட்டிருரிக்கிறோம். அந்த குப்பத் தொட்டியில் குழந்தையை பல மணி நேரம் கழித்துதான் மற்றவர்கள் பார்ப்பார்கள். .... அதாவது குப்பய கொட்ட வருபவர்கள் குப்பை தொட்டியில் என்ன இருக்கிறது என்று பார்த்தப் பின்பு தான் சிந்தாமல் சிதறாமல் அந்த குப்பையை கொட்டுவார்கள்.

ஆனால் இப்பொழுது குப்பத்தொட்டிக்கு போக வேண்டிய அவசியம் இல்லாத TECHNOLEGY காலத்தில் இருப்பதால், குப்பையை எப்படி குப்பைத்தொட்டியில் போடுவது என்று மக்கள் மறந்து விட்டார்கள்.

முன்பெல்லாம் நம்மிடம் உள்ள பொருள் நாற்ற வாடை வீசினால் அதை குப்பை தொட்டியில் போடுவோம்.

இப்பொழுது நம்மிடம் உள்ள பொருளின் நாற்ற வாடையை விட குப்பத் தொட்டி வாடை அதிகமாக இருக்கிறது.

அதனால்தான் அங்கு செல்ல பயப்படுகிறார்களோ என்னவோ.....

மக்களை குறை சொல்லாதீர்கள்..... குப்பத் தொட்டி கட்டி வச்சு உதைங்க.....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.