யாசகம் கேட்டு வருபவர்களிடம் அன்பை வெளிபடுத்த வேண்டும், முகம் சுலிக்கக்கூடாது, அல்லாஹ் இவர்கள் மூலம் மலக்குமார்களை அனுப்பி முஹ்மீன்களை சோதனை செய்வான் எனற ஹதீஸை அழகான முறையில் எடுத்துரைத்தார் இளம் மவ்லவி அப்துல் ஹாதி.
நமதூரில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கம்போல் 40 நாட்கள் நடைபெறும் புகாரி சரீப் மஜ்லிஸ் இவ்வாண்டு 27 - 10 - 2011 ஆம் தேதியன்று துவங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. பெருநாள் விடுமுறையில் ஊரில் இருக்கும் போது புகாரி சரீப் மஜ்லிஸுக்கு செல்ல நேரிட்டது. இளம் மவ்லவி அப்துல் ஹாதி அவர்களின் பயான் மிக சிறப்பாக இருந்தது, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பல ஹதீஸ்களை அவர் அழகாக எடுத்துரைத்தார், குறிப்பாக வயோதிக நிலையை அடைந்த பேற்றோர்களை எவ்வாறு பேண வேண்டும், யாசகம் கேட்டு வருபவர்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றியும் விளக்கமாக பேசினார்.
யாசகம் கேட்டு வருபவர்களுக்கு உங்களிடம் உதவ ஒன்றுமில்லை என்றால் அவர்களை அன்பாக பேசி அனுப்பிவிடுங்கள், கடும் சொற்களை சொல்லி அவர்களை விரட்டாதீர்கள் எனறு பயான் செய்தார். மஹரமான ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ் செய்ய போவதை மிக கடுமையாக எச்சரித்து அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.
இறுதியில் ஆஸ்பத்திரி தெரு அப்துல்லாஹ் ஆலிம் (காத்தான்குடி இலங்கை) அவர்கள் துஆ செய்தார்கள். பிறகு தப்ரூக் வழங்கப்பட்டு அன்றைய தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
7 பின்னூட்டங்கள்:
Pls try to send the abdul hadhi moulavi speach to my gamil id rasheed3m@gmail.com
pls post abdul hadi moulavi bayan in adiraibbc as downloadble
கேட்பதற்கு மிக சந்தோசமாக இருக்கிறது... இது போன்ற இளம் ஆலிம்களை ஊக்கிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.... கடந்த கால வரலாற்றை மட்டுமே அலசாமல் நிகழ்காலத்தின் குழப்பங்களுக்கு இஸ்லாத்தின் தீர்வையும் எடுத்துரைத்தால் ஜாவியாவில் அமர இடமிருக்காது..... நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்..
அல்ஹம்துலில்லாஹ்.இன்னும் பல இளம் மௌலவிகள் இதுபோல் மார்க்க விஷயங்களை சொல்ல வேண்டும்.
மன்னிக்கவும் அன்பர்களே!. புஹாரி சரீப்-ல் மவ்லவி அப்துல் ஹாதி பயானிலிருந்து நான் செவியுற்ற சிலவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துக்கொண்டேன், அவருடைய பேச்சை ரிக்கார்டிங் செய்யவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)
இளம் மவ்லவிகள் நமது ஊரில் தற்போது கனிசமான அளவில் உள்ளனர். அவர்களுக்கு இது போன்ற சபைகளில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பணி சிறக்க நாம் எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமர்வுகளிலும் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளயும் கேட்டு செயல் படுத்திகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
அ.அஹமது தாஹா - அல்-கோபார்- சவுதி அரேபியா.அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)
இளம் மவ்லவிகள் நமது ஊரில் தற்போது கனிசமான அளவில் உள்ளனர். அவர்களுக்கு இது போன்ற சபைகளில் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் பணி சிறக்க நாம் எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அமர்வுகளிலும் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளயும் கேட்டு செயல் படுத்திகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
அ.அஹமது தாஹா - அல்-கோபார்- சவுதி அரேபியா.
பாவிகளையும் நேர்வழிப்படுத்தும் ஜாவியா நமதூர் மக்களின் வரப்பிரசாதம்.
மார்க்க வழிப்பறி தாதாக்கள் புகாமல் இருக்கும் ஒரு இரும்புக்கோட்டை.
நம்பகத்தகுந்தமான ஹதீஸ் (சஹீஹுல் புஹாரி) களுக்கும் முக்கியத்துவம் பெற்ற, மற்றும் ஆலிம்கள் அங்கம் வகிக்கும் அரங்கம்.
ஹாஜிகளை வரவேற்று அவர்களுக்கு (பொன்னாடை போற்றாமல்) உரிய இஸ்லாமிய நெறிமுறைகளைச் சொல்லி, புனித (மக்கா மதீனா) இடம் சென்றவர்களை மரியாதை நிமித்தமாக, கண்ணியமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் இந்த ஜாவியா.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment