
வங்க கடலில் புதியதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்கிறது. தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவும் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. மேலும் 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குமரி கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகி இருந்தது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
தொடர்புடையவை : தமிழ்நாடு,
புயல் சின்னம்,
வடகிழக்கு பருவமழை
1 பின்னூட்டங்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும்
மழை மேகங்களுடன் கூடிய தென்னைமரங்களின் காட்சி ரம்மியமாக உள்ளது, சுப்ஹனல்ல்லாஹ் , மழை அல்லாஹ்வின் ரஹ்மத் அளவோடு இருந்தால், அதிகமாக இருந்தால்..... அல்லாஹ் பாதுக்காக வேண்டும்,
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment