இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கான கருத்தரங்கம் இன்று மதியம் 03:15 மனிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி சிதம்பரம் பிள்ளை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சேகர் அவர்களும், பேர.அப்துல் காதர் அவர்களும், மாணவ மாணவிகளின் கற்கும் திறன்வளர்ச்சி குறித்தும், இணையதளத்தின் சாதக பாதகங்களை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள்.
சிறப்புவிருந்தினராக இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் ஆயிரத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டு அரிய கருத்துக்களை கேட்டு பயன்பெற்றனர்.
(இதன் காணொளி விரைவில்)
3 பின்னூட்டங்கள்:
நமது ஊரில் உள்ள இமாம் ஷாபி பள்ளியில் இன்று பெற்றோர்கள் கூட்டம் மிக சிறப்பாகவும் நடைபெற்றது. அது போல் எல்லா மாதங்களிலும் பெற்றோர்கள் கூட்டம் நடை பெற வேண்டும்.ஆசியர்களுக்கும் பள்ளி சார்பாக கூட்டம் நடத்த வேண்டும் பெற்றோர்களுடைய கருத்துக்களை கேட்டு அதன் பின் ஆலோசனை செய்து அந்த கருத்துக்களுக்கு உரிய நடவடிக்கை பள்ளியின் சார்பாக எடுக்கவேண்டும்.
மு.செ.மு.அபூபக்கர்
"பெற்றோர்களின் கருத்தரங்கம்" பெற்றோர்களின் பெற்றோர்களுக்கு உள்ள கருத்தரங்கம்.
இப்புகைப்படம் வெளிநாட்டில் வாழும் "வாப்பா" க்கள் - தன் வாப்பா, மாமனார், மச்சினன், பிள்ளையின் தாய் மாமா போன்றோர்களின் இந்த பங்கெடுப்பு கொஞ்சம் ஆறுதல்.
அதிரையின் இன்றைய கல்வித் தந்தை MST தாஜுதீன் அவர்களின் சீரிய கல்வியின் வளர்ச்சிக்குண்டான எண்ணம் எல்லோரையும் நெகிழ வைக்கும். வாழ்த்துக்கள்.
அனைத்து முஹல்லாவின் செயலாளர், அனைத்து நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர். புலவர்கள் மேடையில் பேசினால் புலம்புவதுப் போல் மக்களுக்கு புரியாது. ஆனால் இந்த புலவர் பேசினால் புரியாதவர்களுக்கும் புரிய ஆரம்பிக்கும்.
வெளிநாட்டில் வாழும் பெற்றோர்களே !!!!...... உங்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுது வீட்டுப்பாடம் நடத்தப்போகிறீர்கள்.
அடிக்கடி நடத்தப்பட்டு,கள ஆய்வுகள் செய்யப்பட்டு,அது மாணவர்களிடையே செயல் வடிவம் பெறவேண்டும்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment